Sunday, September 13, 2009

ஈரம் – திரைவிமர்சனம்


நடிகர், இயக்குனர், இசை அமைப்பாளர், மற்றும் நடிகை ஆகியோரை வைத்து மட்டுமே மக்கள் நம்பி திரைப்படம் பார்த்து கொண்டு இருந்த காலம் சென்று தயாரிப்பாளரையும் வைத்து திரைப்படம் காணலாம் என்ற எண்ணத்தை முதலில் கொண்டு வந்தவர் இயக்குனர் சங்கர் என்பது நிதர்சன உண்மை. அந்த நம்பிக்கை மீண்டும் காப்பற்றி இருக்கிறார். ஆதி, நந்தா, சிந்துமேனன், சரண்யா மோகன் என்று பிரபல நட்சித்திரங்கள் யாரும் இல்லாமல் படத்தை காண தூண்டிய விஷயம் இயக்குனர் சங்கர் மட்டுமே
முதல் காட்சியில் சிந்துமேனன் தண்ணீரில் இறந்து கிடக்கிறார். காவல்துறை புலன் விசாரணைக்கு வருகிறது. ஆதீ காவல்துறையில் பணிபுரியும் உயர் அதிகாரி மற்றும் சிந்துமேனனின் முன்னாள் காதலர். அதனால் சிந்துமேனனின் இறப்பை ஆராய்கிறார். இதை தொடர்ந்து சிந்துமேனனின் பக்கத்து வீட்டில் இருக்கும் பலர் ஒன்றின் பின் ஒன்றாக தண்ணீரின் காரணமாகவே இறக்கின்றனர். ஏன், எதற்காக இறக்கின்றனர் என்பதே கதை.

ஆதி: காவல்துறை அதிகாரியாக மிரட்டி இருக்கிறார். தமிழ் திரைப்பட உலகத்துக்கு மற்றொரு நல்ல நாயகன் கிடைத்து விட்டார் என்றே கூற வேண்டும்.

நந்தா: அச்சாதேயில் நடிகர் பிரசன்னா வில்லன் நடிப்பில் மிரட்டி இருப்பார். அதே போல் இவருக்கு வலுவான கதாபத்திரம். மனைவின் மீது சந்தேகம் படும் பொது, கொலை செய்யும் போது அவருடைய நடிப்பு பளிச்

சிந்துமேனன்: துணை நடிகையாக  இருந்த இவருக்கு இப்படிப்பட்ட வாய்ப்பு அமையும் என்று அவரே எதிர்ப் பார்த்து இருக்க மாட்டார் என்பது உண்மை. காதலியாகவும், மனைவியாகவும் நடிப்பதற்கு நல்ல வாய்ப்பை பயன்படுத்தி இருக்கிறார்.

சரண்யா மோகன்: மறுபடியம் தங்கை வேடம். ஏன் என்று தெரியவில்லை. ஆனால் நடிப்பிலும் குறைவில்லை குறிப்பாக ஆவி அவர் மேல் வந்த உடன் முகபாவனை அசத்தல்.

தமன்: இவர் இல்லை எனில் படம் இல்லை. பின்னணி இசை பார்த்தல் கண்டிப்பாக புரியம்.

இன்னொரு முக்கிய நபர் இயக்குனர் அறிவழகன். திரைக்கதையை லாஜிக் அடி படாமல், அடுத்தது என்ன என்பதை இருக்கையின் நுனிக்கு கொண்டு வந்து விடுகிறார். கொலைக்கு காரணமாக இருந்தவர்களை கொலையலின் ஆத்மா பழி வாங்கும் கதை பழைய மாவு என்றாலும் இயக்குனர் புது வடிவத்தில் கொடுத்து, நான் தனியாக இருக்கும் போது தண்ணீரை பார்த்தால் பயம் ஏற்படுத்தியதே இயக்குனரின் வெற்றி.

படத்தொகுப்பில் தனி கவனம் செலுத்தப் பட்டு இருக்கிறது என்பது திரையில் காணலாம்.

ஆக மொத்தத்தில் கடந்த சில மாதங்களாக வரும் குப்பை, சாக்கடை திரைப்படங்களுக்கு மத்தியில் மீண்டும் இயக்குனர் சங்கர் தயாரிப்பில் தரமான படம்.

No comments: