Wednesday, December 31, 2008

புத்தாண்டு வாழ்த்துகள்

ஒரு புத்தகத்தை திறப்போம். பக்கங்கள் காலியாக உள்ளன. நாம் அதனை வார்த்தைகளால் நிரப்புவோம். அந்த புத்தகத்தின் பெயர் வாய்ப்பு. அதன் முதல் அத்தியாயம் புத்தாண்டின் முதல் நாள்.

-- இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

Tuesday, December 30, 2008

இட மாற்றம்

நேற்று முதல் வேலை செய்யும் இடம் கந்தன்சாவடியில் இருந்து தாம்பரம் சானிடோரியத்திற்கு மாற்றப்பட்டது. சைதையில் இருந்து நான் வேலை செய்யும் கட்டிடத்திற்கு வர அய்யோ! என்னவென்று நான் சொல்ல.

சைதை முதல் தாம்பரம் சானிடோரியம் - உள்ளூர் புகை வண்டி.
தாம்பரம் சானிடோரியம் முதல் தொழிற்பேட்டை நுழைவாயில் – நடந்து .5 கி.மீ.
தொழிற்பேட்டை நுழைவாயில் முதல் நான் வேலை செய்யும் கட்டிடம் - பேருந்து வண்டி.

வடிவேலு வடிவில் "இப்பவே கண்ண கட்டுதே!". எப்படி சமாளிக்க போகிறேன் என்று தெரியவில்லை.

Friday, December 26, 2008

சுனாமி

தமிழ்நாட்டையே உலுக்கி எடுத்த சம்பவம்... லட்சக்கணக்கில் மக்கள் உயிரை கடல் அன்னை எடுத்த நாள்.. நான்காம் நினைவு ஆண்டு இன்று.

இதே தினத்தன்று எனக்கும் ஏற்பட்ட அறிய ஒரு அனுபவம் இது...மழை பெய்யும் நேரத்தில்,மழை வெள்ளத்தில், மக்கள் வெள்ளத்தில் பொதுவாக நண்பர்கள் யாரும் போக விரும்ப படமாட்டர்கள். ஆனால் விதிவிலக்காக நான் மட்டும் அவ்விடத்திற்கு சென்று ஒரு அனுபவத்தை பெற்று கொள்ள விரும்புவேன். ஏன்னொன்றால் இது போன்ற பிரச்சினைகள் வந்தால் எப்படி சமாளிக்க வேண்டும் என்று தெரியும் என்ற எண்ணம் எனக்கு. அப்படிப்பட்ட சிந்தனைகளை கொண்ட நான், இதே நாள் 4ம் ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட நிகழ்ச்சியை மீண்டும் நான் சந்திக்க விருப்பவில்லை.

சென்னையில் முதல் முதலாக நான் தங்கிய இடம், வில்லிவாக்கத்தில் உள்ள ஆண்கள் விடுதி. அன்றைய தினத்தன்று இன்றைய புதுமாப்பிள்ளை கார்த்திக் ஷந்த், புதிய வீட்டின் முதலாளி ராஜேஷ் (50), மற்றும் நான் அதிகாலையில் நன்றாக உறக்கி கொண்டு இருந்தோம்...நேரம் சரியாக தெரியவில்லை என்றாலும் காலை 6:30 மணி அளவில் எனது கட்டில் குலுங்கியது. கட்டில் அருகில் சற்று குண்டான புதுமாப்பிள்ளை படுத்து இருந்ததால் நான் அரை உறக்கத்தில் அவர் கால் பட்டு தான் ஒருவேளை கட்டில் ஆடியதோ(வடிவேலுவை போன்று என்ன சின்னப்புள்ள தனமா இருக்கு, ரஷ்கல்) என்று நினைத்து மீண்டும் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றேன்.

சுமார் காலை 7:15மணி அளவில் எனது வீட்டிலிருந்து கைதொலைப்பேசியில் அழைத்து சென்னையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை பற்றி கூறி, பாதுகாப்பாக உள்ளமா என்று உறுதி செய்து கொண்டார்கள். அப்போது தான் தெரிந்தது கட்டில் ஆடியது புதுமாப்பிள்ளை உதைத்ததால் அல்ல உண்மையில் நிலநடுக்கத்தால் என்று. மற்ற இருவரும் தரையில் உறங்கி கொண்டு இருந்ததால் அவர்களுக்கு நிலநடுக்கத்தை பற்றி தெரியவில்லை. எங்களுக்கு தெரிந்து நிலநடுக்கம் என்றால் வீடுகள் இடிந்து, தரையில் பிளவு இருக்கும் என்று மூவரும் உடனடியாக வெளியில் சென்று பார்த்தோம். ஆனால் அப்படி எதுவும் இல்லை. அதனால் கவுண்டமணி போல் அரசியல்ல இதுஎல்லாம் சதாரணம் அப்ப என்று நினைத்து அன்று வேலைக்கு சென்ற போது சுமார் மதியம் 12:30 மணி அளவில் சுனாமியின் கொடூரதண்டவத்தையும், லட்சக்கணக்கில் மக்கள் உயிர் விட்டதையும் அறிந்து கொண்டேன். அதனுடைய தீவிரத்தை புரிந்து கொண்டேன்.

நிலநடுக்கம் என்ற அனுபவம் எனக்கு புதியதாக இருந்தாலும், இதை மீண்டும் ஏற்கும் எண்ணம் எனக்கு இல்லை. இது போன்ற அகோர சம்பவம் மீண்டும் நடக்காமல் இருக்க, உயிர் மாண்டவரின் ஆத்மாவுக்கும் சேர்த்து இறைவனை வணங்குகிறேன்.

Wednesday, December 24, 2008

மார்கழி

சென்ற ஞாயிறுக்கிழமை திடீரென அதிகாலை 5:30 மணிக்கு தூக்கம் கலைந்து. மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலின் பிப்ரவரி மாத குளிர் அப்போது என்னை வருடி கொண்டு இருந்தது. ஏதோ ஒரு பாட்டு சத்தம் மட்டும் கேட்டது. நானும் அச்சத்தம் என்னவென்று பார்க்க வெளியில் சென்று பார்த்த போது தான் மார்கழி மாதம் என்றே நினைவுக்கு வந்தது. கோவிலில் ஆண்டாள் திருப்பாவை பாடுவதும், வெளியில் பஜனை பாடுவதும் மார்கழி மாத சிறப்பு அம்சம். ஒரே ஒரு வருடம் நான் மார்கழி மாதத்தில் கோவிலுக்கு சென்று உள்ளேன். இப்போது அதை நினைத்தால் நகைப்பு தான் வருகிறது, என்னென்றால் அது பத்தாவது படிக்கும் பருவம். நான் ஏன் சென்றேன் என்று இப்போது தெரியவில்லை. ஒருவேளை அதிக மதிப்பெண் வரவேண்டும் என்பதனாலோ அல்லது அங்கு தரப்படும் பொங்கலுக்குகாவோ அல்லது ஒரு அனுபவம் வேண்டும் என்பதற்க்குகாவோ அல்லது உண்மையிலே கோவிலுக்கு சென்றேனோ. வருடாவருடம் மிக சிறப்பாக இது நடக்கிறது. இந்த விழாவை ஆன்மிக வாதத்தில் மூலம் என்னால் அதன் பலன்களை விளக்க தெரியாது. ஆனால் கண்டிப்பாக பலன் மட்டும் இருக்கும் என்பது உறுதி. சந்தேகம் இருந்தால் நீங்களும் ஒரு மார்கழி மாதத்தில் விடியற்கால பொழுதில் கோவிலுக்கு சென்று பாருங்களேன்

Tuesday, December 16, 2008

மீண்டும் ஒரு கலாச்சார அழிவு

தொழில் நுட்ப கல்லூரியில் நெருங்கிய நண்பர்களில் ஒருவர், நல்ல பண்புடைய, அதி புத்திசாலியான அவர் தன் கலாச்சாரத்திற்கு தொடர்பு அல்லாத ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருப்பதை அறிந்து மனம் எரிமலை போல் வெடித்து விட்டது. எனது நெருங்கிய சுற்று வட்டாரத்தில் இப்படி நடப்பது இரண்டாவது கலாச்சார அழிவு. முதலாவது நபர் கூட அதி புத்திசாலி தான். இருத்தாலும் எனது தோழர்க்கு மனமார்ந்த திருமண நல்வாழ்த்துக்கள்.

நல்ல வேலை நான் அதி புத்திசாலியாக பிறக்கவில்லை. கடவுளுக்கு இதற்க்காக நன்றி கூறுகிறேன்.

Thursday, December 11, 2008

சர்வதேச...

இரவு பத்து மணி அளவில் செய்தியை பார்க்க தொலைகாட்சியை சுற்றும் போது வின் அலைவரிசையில் ஓடி கொண்டிருந்த சர்வதேச செய்தியை பார்த்தேன். வளைகுடா நாடுகளில் நடைபெறும் பனி போர்கள், ராணுவ நடவடிக்கைகள், இன படுகொலைகள், ஆக்கிரமுப்புகள் மற்றும் மேலாதிக்க நாடுகளில் உள்ள பிரச்சனைகளை பார்க்கும் போது நமது நாடு சொர்க்கம் தான் என்று புரிந்து கொண்டேன். அதே போல் சர்வதேச அரசியல் பார்த்து வியந்தும் போனேன். இயற்கையாக உலகம் அழிகிறதே இல்லையோ கண்டிப்பாக வளைகுடா மற்றும் மேலாதிக்க நாடுகளின் காரணமாக கூடிய விரைவில் அழியும் என்றும் அறிந்து கொண்டேன். நேரம் இருந்தால் நீங்களும் அச்செய்தியை பாருங்கள்.

Wednesday, December 10, 2008

தமிழ் கலாச்சாரம்


ஒரு வாரத்திற்கு முன்பு, நடிகர் கமல் விருமாண்டி திரைப்படம் தொடங்குவதற்கு முன்னால் அரசியல்வாதிகளால் ஏற்பட்ட துயரங்களை பற்றி விளக்கும் ஒரு சிறு படத்தை பார்த்தேன். அதில் தமிழ் கலாச்சாரம், ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை கலாச்சாரம் மாறுகிறது என்று கூறிகிறார். அது உண்மையா? அக்கருத்துகளை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை கலாச்சாரம் மாறுகிறது என்று சொன்னால் அத்தகைய கலாச்சாரத்தை ஒரு கலாச்சாரமாக எடுத்துக்கொள்ள முடியாது. ஆனால் நாம் நமது கலாச்சாரத்தை, பரம்பரியத்தை உலகின் முதலாவது என்று கூறி கொள்ளும் வேளையில், உலக புகழ் பெற்ற நடிகர் அதுவும் தமிழ் கலாச்சாரத்தை புரியவைக்கும் திரைப்படங்களை (16 வயதினிலே, அபூர்வ ராகங்கள், தேவர் மகன், விருமாண்டி, ஹேராம் ) எடுத்தவர் கூறுவது சரியா?

இவ்விசயத்தை பல்வேறு கோணங்களில் ஆராயந்து பார்த்து, முடிவில் தமிழ் கலாச்சாரம் என்னவென்று நானே கேட்டு கொண்டது தான் மீதம்.

Tuesday, December 09, 2008

பூ

மீண்டும் ஒரு கிராமத்து உணர்ச்சிமிகுந்த மெல்லிய காதல் கதை. பொறுமையுடன் இத்திரைப்படத்தை பாரத்தால், முடிவில் நல்ல உணர்வுமிக்க குடும்பதிரைப்படத்தை பார்த்த ஒரு மனநிம்மதி. மதுரை மாவட்டம் வளையபட்டி மற்றும் சுற்றுப்புற கிராமங்களின் வறண்டு போன கரிசல் மண்ணும், கதையின் நாயகியின் குழந்தை பருவம் முதல் படத்தின் முடிவு வரை அக்கதாபாத்திரத்தின் நடிப்பும் கண்டிப்பாக ஒரு சிறு மனவலியுடன் நிற்பது உறுதி.

Sunday, December 07, 2008

ஆர்.ஆர்.ஆர். இல்லம்

கல்லூரி வாழ்க்கை என்பது மாணவர்களின் கனவுகள் நிறைந்த சொர்க்கம். படிப்பு அறிவு, சில அனுபவ அறிவு பெற்றாலும், கிடைக்க கூடிய மற்றொரு மிக பெரிய சொத்து நண்பர்கள். பொதுவாக கல்லூரி வாழ்க்கை என்பது சிலருக்கு மூன்று வருடமும், மற்றும் சிலருக்கு நான்கு வருடமும் இருக்கும். இதில் எனக்கு விதிவிலக்காக மூன்று விதமான கல்லூரி வாழ்க்கை கண்டேன். முதலாவதாக தொழில்நூட்ப கல்லூரி, இரண்டவதாக பொறியியல் கல்லூரி. மூன்றவதாக நான் குறிப்பிடவது ஆர்.ஆர்.ஆர். இல்லத்தில் வாழ்ந்த வாழ்க்கை. எனது 2ம் பணியின் காரணமாக இருப்பிடத்தை வில்லிவாக்கத்தில் இருந்து மாற்ற வேண்டிய சூழ்நிலை ஆனது. தொழில்முறையாக நட்பு கிடைத்த "யோக ஆனந்த" மூலமாக ஆர்.ஆர்.ஆர். இல்லத்தில் ஐயக்கியமானேன். அதன் பிறகு அவரின் மூலமாக ஒன்றின் பின் ஒன்றாக “அலி”, “சக்திவேல்”, “செந்தில்”, “பிரபு”, “ஜெகரீன்” ஆகிய பறவைகள் ஒரே கூட்டில் வாழ தொடங்கினோம். சென்னையில் தனியாக பிழைக்க வந்த போது எனது குடும்பத்தை பிரிந்த ஆழ்ந்த சோகம் இக்கூட்டு பறவைகளால் காணமால் போனது. ஒவ்வொரு பறவைக்கும் ஒவ்வொரு பிரச்சினைகள் இருந்தாலும் வெளியில் காட்டி கொள்ளும் சந்தர்பம் கிடைக்கவில்லை. கல்லூரி வாழ்க்கை போல சந்தோஷமாக இளமையுடன் அனுபவித்து வாழ்ந்தோம். 3.5 ஆண்டுகளுக்கு (26-டிசம்-2004 to 30-மே-2008) பிறகு, சில பறவைகள் தனது வாழ்க்கையின் மூன்னேற்ற படிகளை கண்டு இக்கூட்டில் இருந்து பறந்து சென்றதை போல நானும் எனது 3ம் பணியின் நிமித்தமாக அக்கூட்டில் இருந்து பறந்து தனி இல்லத்தில் வாழ தொடங்கினேன். இந்த இல்ல நட்பு பயணம் 3.5 ஆண்டுகள் இருந்தாலும் எனது தொடரில் காலத்தில் மறக்க முடியாத நாட்கள்.