Monday, September 21, 2009

ஓடுமா நம்ம ஊரில்

மதுரையில் சமீபகாலமாக திறக்கப் பட்ட சில பெரிய துணி மற்றும் நகை கடைகள்

  • எஸ்.எம்.டி.எம்
  • லலிதா
  • போத்திஸ்
  • பீமாஷ்
  • ஆலுக்கஸ்
  • ஜாய் ஆலுக்கஸ்

மதுரை வரலாறு சிறப்பு மிக்க ஊரக இருந்தாலும், வளர்ச்சி பெற்று கொண்டு இருக்கின்ற நவீனத்துவமான ஒரு கிராமம்.. ஒரே பிரமிப்பு.. எல்லா கடைகளிலும் அதி பயங்கர ஒரு கூட்டம்... ரூ. 400 பதிப்பு மிக்க ஒரு சட்டை ரூ. 750

எனக்கு தெரிய என்ன நம்ம மக்களை பற்றி... எல்லாம் வேடிக்கை பார்க்க மட்டும் தான்..

சின்ன உதாரணம்: மரியாதையை திரைப்படத்திற்கு நானும் என் நண்பர் சரவணனும் சென்று இருந்தோம். சரவணன் அவரது நண்பர்கள் வருவதாக கூறினார். அவர்கள் வர நேரம் ஆகும் என்பதால் நாங்கள் இருவரும் திரை அரங்கத்திற்கு உள்ளே சென்று விட்டோம். டிக்கெட்டின் விலை ரூ. 40 இடைவெளி வரும் போது தான் அவர்களின் நியாபகம் வந்தது. சரவணிடன் விசாரித்த போது தான் உண்மை தெரிந்தது. டிக்கெட்டின் விலை ரூ.40 என்பதால் வந்தவர்கள் திரும்பி சென்று விட்டனர் என்று. அவர்கள் எதிர்பார்த்தது டிக்கெட்டின் விலை ரூ. 20 மட்டுமே.

இப்படிப் பட்ட மக்கள் இருக்கும் நம்ம மதுரையில் இந்த கடைகள் ஓடுமா என்பது மிக பெரிய கேள்விகுறி...

உ. த. மா?

முதல் உலகத் தமிழ் மாநாடு 1966 ஏப்ரலில், மலேசியத் தலைநர் கோலாலம்பூரில் கோலாகலமாக நடந்தது. இந்த மாநாட்டுக்கு தனிநாயகம் அடிகளார் முன்னின்று ஏற்பாடு செய்தார். சர்வதேச தமிழ் அறிஞர்கள் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர். இரண்டாவது மாநாடு, சென்னையில் 1968ல் நடந்தது. அப்போது தமிழக முதல்வராக இருந்த அண்ணாதுரை முன்னின்று மாநாட்டை சிறப்பாக நடத்தினார். இந்த மாநாட்டின் முதல் நாளில் சென்னை கடற்கரையில் 9 தமிழ் அறிஞர்களின் சிலைகள் எடுக்கப்பட்டன. திருவள்ளுவர், அவ்வையார், கம்பர், ஜி.யு.போப், கால்டுவெல், பாரதியார், பாரதிதாசன், வ.உ.சி., வீரமாமுனிவர் ஆகியோருடன் தமிழ் இலக்கிய சிலப்பதிகாரத்தில் நாயகி கண்ணகிக்கும் சிலை எடுக்கப்பட்டது.

மூன்றாவது உலகத் தமிழ் மாநாடு 1970ம் ஆண்டில் பாரிசில் நடைபெற்றது. முதல் மாநாட்டைப் போல் அது ஆய்வுகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்தது. நான்காவது தமிழ் மாநாடு, 1974ல் இலங்கையிலுள்ள யாழ்ப்பாணத்தில் நடந்தது. இம்மாநாட்டுக்கும் தனிநாயகம் அடிகள்தான் ஏற்பாடுகளை செய்தார். யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் ஆய்வு அமர்வுகளும், தமிழர் பண்பாட்டு பொருட்காட்சி சுண்டிக்குளி பெண்கள் கல்லூரி மண்டபடத்திலும் நடைபெற்றன. முதல் மூன்று மாநாடுகளைப் போல் இம்மாநாடு எளிதாக நடைபெறவில்லை. யாழ்ப்பாண நகர மேயர் ஆல்பிரட் துரையப்பா ஒரு தமிழராக இருந்தும், இந்த மாநாட்டு நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டை போட்டார். யாழ்ப்பாணம் விழாக்கோலம் பூண்டது. தமிழ்ப் பகுதியிலிருந்து பொதுமக்கள் மாநாட்டைப் பார்க்க திரண்டு வந்தனர். அப்போது, பருத்தித்துறை வழியாக வந்தவர்கள் சிங்களர்களால் மறிக்கப்பட்டனர். அவர்கள் மண்டபம் வந்தடைந்த பின்னர், யாழ் வீரசிங்கம் மண்டபம் நிறைந்து வழிந்தது. காவல்துறையினர் சென்று வர பாதையில்லை என்றுகூறி, தடியடி கண்ணீர் புகை குண்டு ஆகியவற்றை வீசினர். இதனால் மக்கள் கலைந்து செல்லும்போது துப்பாக்கி சூடு நடத்தியதில் 9 பேர் பலியானார்கள்.

ஐந்தாவது மாநாடு, 1981ல் மதுரையில் நடந்தது. அப்போது முதல்வராக எம்.ஜி.ஆர்., இருந்தார். மதுரையில் உலகத் தமிழ் சங்கம் துவங்கவும், தஞ்சாவூரில் தமிழ்ப் பல்கலைக்கழகம் துவங்கவும் அப்போது எம்.ஜி.ஆர்., முடிவு செய்தார். ஆறாவது மாநாடு, 1987ல் கோலாலம்பூரில் நடந்தது. இந்த மாநாட்டில் கருணாநிதி துவக்க நாள் சிறப்புரையாற்றினார். ஏழாவது மாநாடு, 1989ல் மொரிஷியசில் நடந்தது. எட்டாது மாநாடு 1995ல் தஞ்சாவூரில் நடந்தது. அப்போது தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தார்


ஹிட்லரை செய்த படுகொலைகளை விட ஈழ தமிழ் மக்களுக்கு இலங்கை அரசு செய்த, செய்துக் கொண்டு இருக்கின்ற வன்முறைகள், படுகொலைகள், மற்றும் பறிக்க படுகின்ற குறைந்த பட்ச மனித உரிமைகள் என்று இருக்கும் வேளையில், தமிழ் நாட்டில் தூக்கத்தை கடைபிடிக்க வேண்டிய வேளையில்.. பதவிக்காக, குடும்பத்துக்காக மட்டும் உழைக்கும் இன்றைய ... , ஈழ தமிழ் மக்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்யும் இன்றைய ... என்னவென்று சொல்ல.

இன்றைய ... நினைத்து இருந்தால் கண்டிப்பாக ஈழ போரை நிறைவுக்கு கொண்டு வந்து இருக்கும். ஆனால் பதவி மோகம் பிடித்து அலையும் இந்த ...கண்டிப்பாக பதில் சொல்லி தான் ஆக வேண்டும். ஈழ மக்களின் பிணங்கள் எரிந்து முடியாமல் இருக்கும் தருவாயில் தமிழ் மக்களின் ஒற்றுமையை காட்டி என்ன செய்ய போகிறோம் என்று தெரியவில்லை.

கண்ணீருடன் நான் கேட்கும் ஒரே ஒரு கேள்வி: ஈழத்தில் வாழும் அப்பாவி தமிழ் மக்கள், தமிழ் மொழியை பேசுவதை தவிர என்ன பாவம் செய்தார்கள்?

தவறாக ஏதாவது இந்த பதிவில் இருந்தால் மன்னிக்க :(

குறிப்பு: மகாபாரதத்தில் பதவி மோகம் பிடித்து அலைந்த திருதுரஷ்டன் என்ற மன்னனுக்கு கிருஷ்ணன் என்ற அவதாரம் பாடம் புகட்டியது போல்... இன்று கிருஷ்ணன் இல்லையா?

உன்னை போல் ஒருவன் - திரைவிமர்சனம்

மும்பை போலீஸ் கமிஷனருக்கு ஒரு தொலைபேசியில்,  6  இடத்தில் வெடிக்குண்டு வைத்து இருப்பதாகவும், அதை வெடிக்க வைக்காமல் இருக்க  4 தீவிரவாதிகளை விடுவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்க படுகிறது. அரசு இதற்கு சம்மதிக்க இரண்டு போலீஸ் துணையுடன் அனுப்பி வைக்க படுகின்றனர். குறிப்பிட்ட இடத்திற்கு சென்ற உடன் போலீஸ் ஒரு தீவிரவாதியை மட்டும் வைத்து கொண்டு மூன்று தீவிரவாதிகளை மட்டும் அனுப்பி வைக்க மூவரும் கொல்ல படுகின்றனர். அந்த தொலைபேசி குரல் இதை தெரிந்து கொண்டு, கடைசி தீவிரவாதியையும் போலீஸே கொலை பண்ண சொல்ல அவர்கள் என்ன செய்தார்கள், ஏன் மற்ற மூன்று பேரும் கொலை செய்ய பட்டனர் என்பதும், கடைசி தீவிரவாதிக்கு என்ன கதி என்பதும் முடிவு.

இக்கதை ஹிந்தி திரைப்படமான "வேட்நேஸ்டே" கதை. இதையே கமல் மிக சில மாற்றங்கள் செய்து தனது பாணியில், தனது எழுத்தையும் சேர்த்து கொடுத்து உள்ள படம். இதற்காக இந்தியாவின் மிக சிறந்த நடிப்பு சிகரங்கள் ஆனா கமல்ஹசன், மோகன்லால் இணைந்து உள்ளனர்.

கமல்:

தசாவதாரம் படத்திற்கு பிறகு, தன்னுடைய சமூக எண்ணத்தை கதையின் மூலமாக சொல்வது மட்டும் இல்லாமல், வசனமாகவும் வைத்து அரசாங்கத்திற்கு தீவிரவாதத்தை பற்றி நெற்றியில் அடித்தார் போல் கூறி இருக்கிறார்.  தக்காளி வாங்குவதும், மடிக்கணினியை வைத்து போலீஸ் மிரட்டுவதும், ஓட்டு பதிவில் தன் பெயர் இல்லாத ஒரு சாதரண தனிநபர் என்று கூறுவதும், தீவிரவாதத்தை அழிக்க அவர் கடைசி நிமிட வசன காட்சிகள் ஆகட்டும் கமலுக்கு நிகர் கமல் மட்டும் தான் என்பதை மறுபடியும் காட்டி விடுகிறார்.

மோகன்லால்:

மீண்டும் ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்து, கமலுக்கு நானும் குறைந்தவன் இல்லை என்பதை நிரூபிக்கிறார். முடிவு காட்சியில் ஒரு சாதரண மனிதர் ஆக கமலை பார்த்து, வீட்டிற்கு போக உதவ வேண்டுமா என்று கூறும் போது மனதில் நிற்கிறார். இருவர் படத்திற்கு பிறகு இவர் இத்திரைப்படத்தில் என்பது தனி சிறப்பு தான்.. தமிழ் நாட்டு தாயரிப்பாளர்கள்/ இயக்குனர்கள் இவரை பயன்படுத்தி கொள்ளவில்லை என்று தான் கூற வேண்டும்.

தீவிரவாதம், பெண் கொடுமை, மதவெறி என்று பல விஷயங்களை யார் மனதும் புண் படாமல், எந்த ஒரு சமூகத்தையும் குறிப்பிடாமல் வசனத்தால் புரியவைத்து, ஒரு தனி மனித கோபம் என்பது எவ்வளவு அதிபயங்கர ஆனது என்பதை காட்டி  யோசிக்கவும் வைக்கிறார்...

படத்தோடு ஐயக்கியம் ஆகி விட்டதால் இசை வந்ததும்/ போவதும் தெரியவில்லை. படத்தின் இன்னொரு முக்கிய அம்சம் ஒளிப்பதிவு.

குறை இல்லாமல் நிறைவு இருக்காது என்பதற்காக, ஹிந்தி மொழியில் ரசித்து பார்த்து விட்டு இப்படத்தை காணும் போது, ஹிந்தி படத்தின் ஒரு சில காட்சிகள் மனதில் ஓடுவது நிதர்சன உண்மை.

ஓர குறிப்பு: சில வருடங்களுக்கு முன்பாக ஸ்ரீ மாணிக்க விநாயகர், ஸ்ரீ மாப்பிள்ளை விநாயகர் திரைஅரங்குகள் மதுரை மக்களின் மனதில் முதல் இடத்தில் இருந்தது. ஆனால் இன்றோ குப்பை கூளமாக தான் காண முடிகிறது.

பசி - ஒரு கதை இரு முடிவு - சிறுகதை

இரவு 7 மணி, மேகம் பனி மூட்டத்துடனும், வானவில் உடனும் இருள் சூளும் நேரம் இரண்டு வயது குழந்தை அதன் கையில் இருக்கும் சிறிய பந்துடன் புகைவண்டி வழித்தடம் அருகில் இருக்கும் மின் அரைக்கம்பம் வெளிச்சத்தில் எந்த வித பயமும் இல்லாமல் விளையாடிக் கொண்டு இருந்தது. அவ்விடம் மதுரை சோழவந்தான் அருகில் என்பதால் கண்ணுக்கு எட்டும் தூரம் வரை ஒருவரும் இல்லை. மிக அமைதியான சூழலில் குழந்தையின் மழலை சிரிப்பு மட்டுமே காதுக்கு எட்டியது

அக்குழந்தைக்கு பசி ஏற்பட்டதும் பந்தை தள்ளிவிட்டு மெதுவாக அழ தொடங்கியது. யாருக்கும் தெரியாமல் அருகில் படுத்து இருக்கும் அக்குழந்தையின் அம்மா மெதுவாக எழுந்து குழந்தையை அனைத்து கொண்டாள். அந்த அணைப்பு குழந்தையின் மீதான பரிசுத்தமான வெள்ளை பாசத்தை காட்டியது. பசி தீர தன் உயிரை பாலாக ஊட்டினால். மீண்டும் குழந்தையை விளையாடும் இடத்தில் விட்டு விட்டு, கையில் பந்தை கொடுத்து விட்டு ரசித்து கொண்டே படுத்துக் கொண்டாள்.

இரவு 9 மணி... பல்வேறு தரப்பட்ட மக்களை,  வாழ்வில் முன்னேற அவர் அவர்களின் கற்பனை நதிகளோடு இருக்கும் அவர்களை கொண்டு மாநிலத்தின் தலைநகரை நோக்கி பாண்டியன் புகைவண்டி வேகமாக பயணித்து கொண்டு இருந்தது.  புகைவண்டியின் சத்தத்தை குழந்தை கேட்டு பயந்து அழ தொடங்கியது. ஆனால் அக்குழந்தையின் அம்மா மட்டும் இப்போது வரவில்லை.

முடிவு: ஒன்று

சிறிது நேரம் ஆகியும் தாய் வராததால், தாய் இருக்கும் இடத்தை நோக்கி குழந்தை ஊர்ந்தது. புகைவண்டி வெகு தூரம் போய் விட்டதால், குழந்தையின் அழு குரல் நெஞ்சை உலுக்கும் அளவுக்கு இருந்தது... குழந்தையின் கையில் அம்மாவின் தலைமுடி கிடைக்க மெதுவாக இழுக்க ஆரம்பித்தது. ஆனால் அந்த இழுப்புக்கே தாயின் தலை மட்டும் குழந்தையின் கைக்கு வர உடல் தண்டவாளத்தில்...

முடிவு: இரண்டு

குடிபோதையில் அவ்வழியில் செல்லும் காமகொடுரனால் சீரழிக்கப்பட்டு கொண்டு இருந்தாள். அவளின் முதல் சத்தம் புகைவண்டியின் சத்தத்தில் காணமல் போயிற்று.  சீரழிக்கப்படும் போது, அடுத்த வண்டியில் தற்கொலையை  நினைத்து கொண்டே குழந்தையை பார்க்க அவள் கண்ணில் கண்ணீர் வருது நின்று இரத்தம் வர தொடங்கியது...

கமலும் தமிழும்

மதுரையை தாய் வீடாக கொண்ட எழுத்தாளர்கள்,  இயக்குனர்கள்,  நடிகர்கள், கவிஞர்கள்,  இலக்கியவாதிகள், பாடலாசிரியர்கள் மற்றும் படைப்பாளிகள் என்று பலதரப் பட்ட துறைகளை சார்ந்த மக்கள், உலகப் புகழ் பெற்ற திருமலை நாயக்கர் மகாலில் உலக நாயகன் கமலைப் பற்றி, அவர் தன் திரைப்படத்தில் காட்டிய நடிப்பு, சமூக அக்கறை, வசனம், இசை மற்றும் பல்வேறு பரிமாணங்களை அலசி ஆராய்ந்தது நன்றாக தான் இருந்தது. விஜய் தொலைக்காட்சியில் இதை பார்க்கும் போது தான் மதுரையில் இருந்து பல பிரபலங்கள் இருப்பது தெரியவந்தது.. இப்பதிவை எழுதும் போது மனதில் தோன்றிய சில பிரபலங்கள்


எழுத்தாளர்கள் - எஸ். ராமகிருஷ்ணன், இந்துமதி, இரா. முருகன்,
இயக்குனர்கள் - சசி, சசிகுமார், சேரன், இராச. அழகப்பன்
நடிகர் - சண்முக ராஜா (விருமாண்டி - காவல் துறை அதிகாரி, இராமநாதபுரம்)
இலக்கியவாதிகள் - ஞானசம்பந்தன்
திரைப்பாடல் விமர்சகர் - ஷாஜி
பாடலாசிரியர் - கபிலன்
புத்தக ஆசிரியர் - மனுஷ்யபுத்திரன் (உயிர்மை பதிப்பு)
நாடகத்துறை - பிரயளன்


இன்றைய சிந்தனை

பிறக்கும் போது ஏழையாக இருக்கலாம் ஆனால் செல்வந்தனாக தான் இறக்க வேண்டும்

Sunday, September 13, 2009

ஈரம் – திரைவிமர்சனம்


நடிகர், இயக்குனர், இசை அமைப்பாளர், மற்றும் நடிகை ஆகியோரை வைத்து மட்டுமே மக்கள் நம்பி திரைப்படம் பார்த்து கொண்டு இருந்த காலம் சென்று தயாரிப்பாளரையும் வைத்து திரைப்படம் காணலாம் என்ற எண்ணத்தை முதலில் கொண்டு வந்தவர் இயக்குனர் சங்கர் என்பது நிதர்சன உண்மை. அந்த நம்பிக்கை மீண்டும் காப்பற்றி இருக்கிறார். ஆதி, நந்தா, சிந்துமேனன், சரண்யா மோகன் என்று பிரபல நட்சித்திரங்கள் யாரும் இல்லாமல் படத்தை காண தூண்டிய விஷயம் இயக்குனர் சங்கர் மட்டுமே
முதல் காட்சியில் சிந்துமேனன் தண்ணீரில் இறந்து கிடக்கிறார். காவல்துறை புலன் விசாரணைக்கு வருகிறது. ஆதீ காவல்துறையில் பணிபுரியும் உயர் அதிகாரி மற்றும் சிந்துமேனனின் முன்னாள் காதலர். அதனால் சிந்துமேனனின் இறப்பை ஆராய்கிறார். இதை தொடர்ந்து சிந்துமேனனின் பக்கத்து வீட்டில் இருக்கும் பலர் ஒன்றின் பின் ஒன்றாக தண்ணீரின் காரணமாகவே இறக்கின்றனர். ஏன், எதற்காக இறக்கின்றனர் என்பதே கதை.

ஆதி: காவல்துறை அதிகாரியாக மிரட்டி இருக்கிறார். தமிழ் திரைப்பட உலகத்துக்கு மற்றொரு நல்ல நாயகன் கிடைத்து விட்டார் என்றே கூற வேண்டும்.

நந்தா: அச்சாதேயில் நடிகர் பிரசன்னா வில்லன் நடிப்பில் மிரட்டி இருப்பார். அதே போல் இவருக்கு வலுவான கதாபத்திரம். மனைவின் மீது சந்தேகம் படும் பொது, கொலை செய்யும் போது அவருடைய நடிப்பு பளிச்

சிந்துமேனன்: துணை நடிகையாக  இருந்த இவருக்கு இப்படிப்பட்ட வாய்ப்பு அமையும் என்று அவரே எதிர்ப் பார்த்து இருக்க மாட்டார் என்பது உண்மை. காதலியாகவும், மனைவியாகவும் நடிப்பதற்கு நல்ல வாய்ப்பை பயன்படுத்தி இருக்கிறார்.

சரண்யா மோகன்: மறுபடியம் தங்கை வேடம். ஏன் என்று தெரியவில்லை. ஆனால் நடிப்பிலும் குறைவில்லை குறிப்பாக ஆவி அவர் மேல் வந்த உடன் முகபாவனை அசத்தல்.

தமன்: இவர் இல்லை எனில் படம் இல்லை. பின்னணி இசை பார்த்தல் கண்டிப்பாக புரியம்.

இன்னொரு முக்கிய நபர் இயக்குனர் அறிவழகன். திரைக்கதையை லாஜிக் அடி படாமல், அடுத்தது என்ன என்பதை இருக்கையின் நுனிக்கு கொண்டு வந்து விடுகிறார். கொலைக்கு காரணமாக இருந்தவர்களை கொலையலின் ஆத்மா பழி வாங்கும் கதை பழைய மாவு என்றாலும் இயக்குனர் புது வடிவத்தில் கொடுத்து, நான் தனியாக இருக்கும் போது தண்ணீரை பார்த்தால் பயம் ஏற்படுத்தியதே இயக்குனரின் வெற்றி.

படத்தொகுப்பில் தனி கவனம் செலுத்தப் பட்டு இருக்கிறது என்பது திரையில் காணலாம்.

ஆக மொத்தத்தில் கடந்த சில மாதங்களாக வரும் குப்பை, சாக்கடை திரைப்படங்களுக்கு மத்தியில் மீண்டும் இயக்குனர் சங்கர் தயாரிப்பில் தரமான படம்.

முகபாவனை


சமீபத்தில் ஒரு வழிகாட்டிற்கு சென்று இருந்தேன்.அதில் நடத்துனர் ஆக இருந்தது ஒரு பெண். நான் கால் மேல் போட்டு அமர்வது, நகத்தை கடிப்பது, கால் உரையின் மேல் கையை மாட்டி கொண்டு நடப்பது என நம் சிறு சிறு தவறுகளை அப்பெண் நடித்துக் காட்டி எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று கூறும் போது.. அப்பெண்ணின் முகபாவனைகள், நடிப்பு, குழந்தை தனம் என்று பல, அங்கு இருந்த அனைவரையுன் இழுத்து கட்டி போட்டது. அதில் நானும் ஒருவன் என்பதில் மறுப்பதற்கு இல்லை. இப்படி அழகாக முகபாவனைகள் செய்ய முடியும் என்பதை நம்மூர் நடிகைகள் அவரிடம் பிச்சை எடுத்து தான் கற்று கொள்ள வேண்டும்.. மீண்டும் அதே வழிகாட்டிற்கு காத்து கொண்டு இருக்கும் சாதாரண வாலிபன் :)

Saturday, September 12, 2009

முன்னோருக்கு முன்னோர்கள்


ஒரு மனிதன் எவ்வாறு வாழ வேண்டும், அரசன் எவ்வாறு ஆள வேண்டும், எது அதர்மம் எது தர்மம் என்பதை சொல்ல பல அறநெறிகள் இருந்தாலும், முக்கியமாக நான் கருதுவது வரலாறு/காவியம் ஆன ஒன்றே ஒன்று "மகாபாரதம்" மட்டும் தான். இராமாயணம், திருக்குறள் என்று பல இருந்தாலும் 4 முதல் 5 தலைமுறைகள், அரசியல், பண்பாடு, நாகரீகம், குரு மரியாதை, படிக்கும் முறை, வாழ்க்கை, கோவில் வழிபாடு முறைகள், யுத்த முறைகள், 64 கலைகள்  என அனைத்தும் அடங்கிய ஒரே பொக்கிஷம் இந்த மகாபாரதம்.


உலக அளவில் இந்த வகையான வரலாறு/காவியங்களைப் பற்றி பார்த்தால், கிடைப்பது கிரேக்கர்களின் 'இலியத்'. இதை பற்றி எனக்கு தெரிந்திர விட்டாலும் போற்றப்பட  வேண்டியது என்பது என் செவிஅறிவு. ஆனால் இப்போது ஒரு ஆச்சிரியப்பட்ட விஷயம் இராமாயணம், மகாபாரதம் மற்றும் இலியத் போன்ற வரலாறு/காவியங்களுக்கு எல்லாம் கொள்ளுத்தாத்தாவாக  ஒரு காப்பியம்  இருப்பதாக படித்தது. அக்காவியத்தின் பெயர் 'கில்கெமெஷ்' காப்பியம். பாபிலோனியாவில் 5000 ஆண்டுகளுக்கு முன்பு (குறிப்பாக கி.மு.2700 ) வாழ்ந்த நிஜ கதாபாத்திரம் கில்கெமெஷ் என்பது உண்மையான ஆச்சிரியம். இந்த காப்பியத்திலும் மக்களை காப்பாற்ற கடவுள் தனிபிறவிகளை படைத்தது, மங்கையை வைத்து ஞானத்தை அழிப்பது, யுத்த தந்திரம் என அனைத்தும் அடங்கிய ஒரு காப்பியம். இதைப் பற்றி தெரிந்து கொள்ள வரலாற்றை புரட்டுங்கள்..

வைகை – திரைவிமர்சனம்


எண்ணங்களை பயிரிடும் இந்த பதிவு எனது 100 பதிவு என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
சிறுப்பண செலவில் வரும் படங்கள் கூட நல்ல படம் என்பதை சமீபகாலமாக பல படங்கள் நிரூபித்துக் கொண்டு இருக்கின்றன. அப்பட்டியலில் இத்திரைப்படத்தை கண்டிப்பாக சேர்க்கலாம். நல்ல விளம்பரங்கள் இல்லாததாலும் மற்றும் வந்ததும்/போவதும் என  இருப்பதால் படம் ஓடாமல் போய் விட்டது..
கதை: தன் காதலுக்காக உயிரை விடும் காதலன்..
ஒரு வரி கதை என்று கூறினாலும், எடுக்கப் பட்ட எதார்த்தம் கதையை உயர்த்தி விடுகிறது.மதுரை திருமங்கலத்தை சுற்றி கதைக்களம் ஓடுகிறது. கதாநாயகன் பாலா மற்றும் கதாநாயகி விஷாகா இருவருக்கும் நல்ல அறிமுகத்தை இப்படம் கொடுக்கிறது. மற்ற மண்ணின் மைந்தர்கள் அனைவரும் பார்த்த முகங்கள் தான். "ஆயிரம் தாமரை மொட்டுகளே" பாடல் கேட்டும் போது இளையராஜாவின் அருமை இங்கு தெரிகிறது. இப்பாடலை தவிர மற்றொருப் பாடல் கேட்டும் ரகம்.
மொத்தத்தில் மதுரையை மையப்படுத்தி எடுக்கப் படும் படங்கள் கண்டிப்பாக நன்றாக இருக்கும் என்பதை நிரூபிக்கும் திரைப்படம் வைகை.

Sunday, September 06, 2009

மதுரை புத்தகத் திருவிழா

"நல்ல பத்தகங்கள் நல்ல நண்பர்கள்" என்பதை மதுரை மக்கள் 4வது முறையாக நிருபித்துக் கொண்டே உள்ளனர். மதுரையில் புத்தக திருவிழா - தமிழ் நாடு அளவில் இந்த விழா மதுரை தமுக்கும் மைதானத்தில் நடைப் பெறுகிறது. எழுத்தாளர்களின் உயிர், கவிஞர்களின் கற்பனை நதிகள் என பார்த்தால் எண்ணில் அடங்கா புத்தங்கள். கண்கள் மலைத்தது...மனம் அலைபாய்ந்தது. 150 பதிப்பகங்கள் மேலாக இருந்தும் ஆனந்த விகடன், உயிர்மை, கிழக்கு, கண்ணதாசன், மல்லிகை மற்றும் நக்கீரன் என சில பகுதிகளில் மட்டுமே நம்மை இழுத்தது. கல்கியின் "பொன்னியின் செல்வன்" புத்தகம் ரூ.210 என்பது நல்ல தள்ளுபடிக்கு உதாரணம். நான் விரும்பும் எழுத்தாளர்கள் உடன் படிக்க வாங்கிய புத்தகங்கள்..

பொன்னியின் செல்வன்
கி.மு. கி.பி - மதன்
ப்ளீஸ், இந்த புத்தகத்தை வாங்கதிங்க - கோபிநாத்
சரியான முடிவெடுக்க- ராபர்ட் ஈ. குந்தர்

நினைத்தாலே இனிக்கும் - திரைவிமர்சனம்

கல்லூரி வாழ்க்கை முடித்து 8 வருடங்களுக்கு பிறகு நண்பனின் ஆத்மா சாந்திக்காக வரும் நண்பர்களில் ஒருவரை கொலை செய்ய முயற்சி நடக்கிறது. கொலையை யார் செய்ய முயற்சித்தது மற்றும் அதன் பின்னணி என்ன என்பதே கதை..

மலையாள திரைப்படம் ஆனா "கிளாஸ்மேட்" சற்று திரைக்கதையை மாற்றி இத்திரைப்படத்தை எடுத்து உள்ளனர். ஆனால் அந்த திரைப்படத்தின் வெற்றி ரசசியம் இதில் இல்லை.

காதல், சண்டை, கல்லூரி தேர்தல், மற்றும் வகுப்பறைகள் என காட்டினாலும் உண்மையான கல்லூரி அனுபவம் இல்லை என்பதே உண்மை. பிரித்திவிராஜ் நாயகனை கல்லூரியில் பார்ப்பது சிரமம் தான் என்றாலும், அதுவும் அதிரடி நாயகனாக இப்படத்தில் உடனடியாக ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. நடிகை பிரியாமணி பற்றி சொல்ல எதுவும் இல்லை. டம்மி பிஷ்சாக பிரபுவை பயன்படுத்துவது போல் இம்முறை திரு. பாக்கியராஜ் அவர்களை பயன்படுத்தி உள்ளனர். ஆனால் அவர் பகுதிக்கு நன்கு தான் நடித்து உள்ளார் என்பதை ஒப்புக் கொள்ள தான் வேண்டும். இரண்டு பாடல்கள் கேட்கும் விதம்.

மொத்தத்தில் நினைத்தாலே இனிக்கும் என்பது நினைத்தாலே கசக்கும்.

Tuesday, September 01, 2009

திருமண வாழ்த்துகள் - ராகேஷ்

எனது பழைய அலுவலக நண்பர் திரு. ராகேஷ் அவர்களுக்கு நாளை 2ம் தேதி திருமணம் நடைப் பெறுவதை தெரிவித்து கொண்டு, என்னுடைய திருமண வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்...

இவரது திருமணம் திருத்தங்கல், விருதுநகரில் நடைப்பெறுகிறது. எனது தனிப்பட்ட வேலையின் காரணமாக திருமணத்திற்கு செல்ல முடியாததை நினைத்து வருந்துகிறேன்.

திருமண வாழ்த்துகள் - சுதேஷனா

எனது தற்போதைய அலுவலக நண்பர் சுதேஷனா அவர்களுக்கு இன்று திருமணம் புவனேஷ்வரில் நடைப் பெறுவதை தெரிவித்து கொண்டு, என்னுடைய திருமண வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்...