Showing posts with label கலவைகள். Show all posts
Showing posts with label கலவைகள். Show all posts

Thursday, March 29, 2012

கலவைகள் - மார்ச் 2012


கடந்த சில மாதங்களாகவே வாழ்க்கையில் சுவாரஸ்யங்கள் இல்லாமலும், எந்தவித உப்பு மற்றும் இனிப்பு செய்தி இல்லாமலும், எங்கும் செல்லாத காரணத்தாலும், பதிவு உலகில் வருவதற்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. நண்பர்களின் சுப காரியங்கள் கூட ஏதும் நடக்கவில்லை. இருந்தாலும், வாரத்தில் பத்து முதல் பதினைந்து பேர் வரை எந்தன் வலை தளத்தை பார்க்கிறர்கள் என்றால் என்னால் கூட நம்ம முடியவில்லை. வலை தளத்தை பார்த்த அனைவருக்கும் முதலில் நன்றி தெரிவித்து கொள்கிறேன். பதிவு போட கூடிய விஷயங்கள் சில நடக்க இருப்பதால் தான் இந்த முன்னுரை.

சென்னைக்கு வந்த பிறகு, நான் செல்ல நினைத்த இடங்களில் முதலில் இருந்தது அதிகாலையில் கடற்கரையில் நடப்பது. இரண்டு வாரத்திற்கு முன்பு தான் அந்த எண்ணம் அரைகுறையாக நிறைவேறியது. ஆம் நானும் நண்பர் ஒருவரும் அதிகாலை செல்ல திட்டமிட்ட இந்த நடை, அதிகாலை தூக்கத்தினால், ஒரு மணிநேரம் தடையானது. அதனால் இளம் வெயிலில் நடக்கும் வாய்ப்பு மட்டுமே கிடைத்தது.  அதிகாலையில் கடற்கரையில் நடப்பது ஒரு சுகம் தான். அந்த சுகத்தை மீண்டும் ஒரு வாரத்தில் கண்டிப்பாக கிடைக்கும் என்று நம்புகின்றேன்.

இன்னொரு இடம் எக்ஸ்பிரஸ் அவன்யு. அங்கு சென்ற பிறகு தான் இனி மேல் அந்த இடத்திக்கு செல்ல கூடாது என்ற முடிவு எடுக்க முடிந்தது. ஆம் இரண்டு சக்கர வாகனத்திற்கு ஒரு மணி நேரம் நிறுத்த ரூ. 20 கட்ட வேண்டி உள்ளது. ஒரு திரைப்படம் பார்க்க போனாலே, குறைந்தது ரூ. 60 கூடுதல் செலவு செய்ய வேண்டி இருக்கும். செலவு எவ்வாறு செய்வது என்று தெரியாமல் இருக்கும் மக்கள் மட்டுமே, அங்கு செல்ல முடியும் என்பது என் எண்ணம் ஆகி விட்டது. அதே போல் தாம்பரத்தில் இருந்து அங்கு சென்று படம் பார்க்கும் நிலைமை இல்லை. அதனால் இனிமேல் எக்ஸ்பிரஸ் அவன்யுக்கு என் வாழ்வில் இடம் இல்லை.


 சமீபத்தில் ரசித்தது/படித்தது

உன்னை யாரும் காதலிகவில்லை
என்று கவலைபடாதே அது
உன் வருங்கால மனைவியன்
வேண்டுதலாக கூட இருக்கலாம்.

மதுரையில் இருக்கும் மில்லேனியும் மால் செல்ல ஒரு வாய்ப்பு கிடைத்தது. மதுரையில் இருக்கும் வடபழனி ராகத் பிலாசா என்று கூறலாம். மதுரை மக்களுக்கு இந்த மால் நிச்சயமாக ஒரு புது அனுபவம் தான். நான் சென்று பார்க்கும் போது கூட, வடநாட்டில் இருந்து மதுரையில் இருக்கும் மக்கள் தான், பொருட்களை வாங்கி செல்கிறார்கள் என்ற நிலைமையை பார்க்க முடிந்தது. கண்டிப்பாக மதுரை மக்கள் அனைவரும் ஒரு முறை சென்று பார்க்க வேண்டிய விஷயம்.

சொல்லப்பட வேண்டிய முக்கிய விஷயம், iPhoneனை பற்றியது. நான் வைத்து இருக்கும் இந்த கை தொலைபேசி, அமெரிக்காவில் ஒரு ஒப்பந்தம் போட்டு வாங்கியது. அதனால் இந்தியாவில் பயன்படுத்த முடியாத சூழ்நிலை. நண்பர் ஒருவர் இந்த iPhone விஷயத்தில் புலி போல் இருந்தாலும், எனக்கு வந்த பிரச்சனையை அவரால் சரி செய்ய முடியவில்லை. அவரும் தன்னால் முடிந்த வரையில் உதவி செய்து பார்த்தார். ஆனால் முடிவு கிடைக்கவில்லை. சென்னையில் iPhone வைத்து இருக்கும் நண்பர் இடம் கேட்கும் போது அவரும் இதே போல, பிரச்சனைகளை சந்தித்ததாகவும், ஒரு கடைக்கு சென்ற போது அவர்கள் சரி செய்து விட்டதாகவும் கூற, நானும் அதே கடைக்கு சென்றேன். என் தொலைபேசியை பார்த்த பின்னர், ரூ. 500 செலவு ஆகும் என்றும் கூற, நான் சம்மதித்தேன். ஒரு மணி நேரத்தில் என்னுடைய கைதொலைபேசி சரி செய்து கொடுக்க பட்டது. ஆச்சிரியமான விஷயம் தான். இதே போல், வலை தளத்தில் பார்த்து எனக்கு உதவி செய்த நண்பருக்கும், இரண்டு வாரத்தில் அவருடைய தொலைபேசியில் பிரச்சனை ஏற்பட்டது. அவரும் நான் சென்ற கடைக்கே சென்று பிரச்சனையை கூறினார். அவருடையதும் 30 நிமிடத்தில் சரி செய்ய பட்டது. இந்த பிரச்சனையை பற்றி வலை தளத்தில் இரண்டு வாரங்களாக தேடியும் கிடைக்காத தீர்வு, சென்னையில் உள்ள ஒரு சாதாரண கடையில் கிடைக்கிறது. நண்பர் அந்த கடை நபரிடம் எங்கு இதை பற்றி பழகுகிர்கள் என்ற கேட்டதற்கு, இதற்காகவே தனியாக பயிற்சி அளிக்க படுகிறதாம். நான் iPhone வைத்து பார்த்த வரை, உலக அளவில் பல தீராத பிரச்சனைக்கு, எளிய முறையில் இங்கு தீர்வு கிடைக்கிறது. கடை விவரங்களை பற்றி அறிய என்னை தொடர்பு கொள்ளலாம்.

Sunday, July 10, 2011

கலவைகள் - அமெரிக்காவை பற்றி

இந்த மாதம் ஐந்தாம் தேதி, நான் அமெரிக்காவில் சுற்றிய இடமான பினிக்ஸ், அரிசோனாவில் புழுதி புயல். இதை நான் எப்படி சொல்ல? ஆம், ஹாலிவுட் படமான மம்மி படத்தில், ஒரு காட்சியில் பாலைவனத்தில் புழுதி புயல் வரும். அதே போல் இன்று ஒரு புழுதி புயல், பினிக்ஸ் இடத்தை தாக்கி இருக்கிறது. சொல்ல போனால் அந்த காட்சியை பார்க்கும் போது, எதிர்பாரா ஒரு வித பயம் தானாகவே வந்து விடுகிறது. இந்த மாதிரியான நிலையிலும் ஒரு நல்ல செய்தி, மக்கள் யாரும் இந்த புயலால் பாதிக்கப்பட வில்லை.




***********************************************************************************
அமெரிக்காவில் கடந்த ஒன்றரை வருடமாக, என்னை சுற்றி பல இந்தியர்கள் இருக்கின்றனர். சுற்றுலா சென்ற இடத்திலும், பல தரபட்ட (ஜெர்மன், சீனா, ஜப்பான், தாய்லாந்து, தென் அமெரிக்கர்கள், மெக்ஸிகோ, அரபு) மக்களை கண்டு இருக்கிறேன். இருந்தாலும் அமெரிக்கா வெள்ளை இன மக்கள் மட்டும் ஒன்று கூடும் இடம் இல்லையா? என்று கேள்வி என் மனதில் இருந்து கொண்டே தான் இருந்தது. தற்போது அதற்கு விடை கிடைத்து விட்டது. வட அமெரிக்கா மக்களால் விரும்பி பார்க்கப்படும் விளையாட்டுகள் என்று சில உண்டு (rodeo இதில் முக்கியமானது). இந்த மாதிரியான போட்டிகள் நடப்பது வெளி உலக மக்களுக்கு தெரியாது.  அதாவது அமெரிக்கா வெள்ளை இன மக்களுக்கு தெரியவாரது. என் நண்பர்களில் ஒருவர் அமெரிக்கா இளைஞரின் நண்பர் என்பதால் இதை பற்றி கேள்வி பட்டு, கண்டிப்பாக செல்லலாம் என்று முடிவெடுத்து, நுழைவு சீட்டை வாங்கி, சென்ற போது நான் ஆச்சிரியம் அடைத்தேன். அனைத்து மக்களும் "குதிரை மனிதன்" (கவ் பாய்) உடையில். அந்த அழகு பதுமைகளை/தேவதைகளை பார்க்க ஆயிரம் கண் இருந்தாலும் போதாது. நீங்களே அந்த மகிழ்ச்சியை பெற, உங்களுக்காக நான் எடுத்த காட்சி  


Rodeo பற்றி சிறு குறிப்பு:
நான் சென்ற இடம் "Rodeo of the Ozark". ஓசார்க் (Ozark) என்பது மத்திய அமெரிக்காவில் உள்ள ஒரு மலை தொடர்ச்சி. இந்த இடத்தில் நடை பெறுவதால் தான் இந்த பெயர். அமெரிக்கா முழுவதும் இருந்து இந்த போட்டி விளையாட்டுகளை காண மக்கள் வருவார்கள். குதிரை மற்றும் காட்டு காளை மாடுகளை கொண்டு நடைபெறும் போட்டிகளை தான் என்பார்கள். அமெரிக்காவை தவிர ஆஸ்திரேலியா, மெக்ஸிகோ, பிரேசில், அர்கேன்டினா, சிலி, கனடா போன்ற நாடுகளில் இந்த விளையாட்டு போட்டிகள் நடைபெறும். நான் சென்ற இடம் அமெரிக்காவில் ஐந்தாவது இடத்தில் உள்ளது.

நான் சொல்லி அந்த விளையாட்டுகளை அறிவதை விட, நீங்களே சில போட்டிகளை காணுங்கள். இதே போல் பல போட்டிகள் இருந்தன.









அங்கு இருந்த கூட்டம் 600+ பேரை கொண்டது. அமெரிக்கா வெள்ளை இன மக்களை தவிர, வெளி உலக மக்கள் என்றால் நானும், என்னுடன் இருந்த நண்பர்கள் மட்டும் தான். இதை விட முக்கிய விஷயம், அமெரிக்காவில் உள்ள கறுப்பின மக்கள் ஒருவர் கூட இல்லாதது தான் மிக பெரிய அதிசயம்.

*********************************************************************************************
அமெரிக்காவின் சுதந்திர விழா நிகழ்ச்சிகளை நேரடியாக காண எனக்கு இந்த வருடம் வாய்ப்பு கிடைத்தது. அமெரிக்காவில் உள்ள எல்லா ஊர்களிலும் அந்த இடத்தின் சார்பாக அந்தந்த ஊர்களில் விழா கொண்டபடுகிறது. நான் இருப்பதே சிறு ஊர் தான் சொல்ல போனால் என் ஊர் ஒரு கிராமம். ஆனால் நான் இந்த விழாவில் கண்ட உற்சாகம், மதுரையில் என்ன, சென்னையில் கூட பார்த்து இல்லை. என் இடம் சிறிது என்றாலும், விழாவை காண வந்த கூட்டம் மதுரையில் திருகல்யாணம் முடிந்த அடுத்த நாள் காலையில் தேர் வெளியே வரும் போது இருக்கும் கூட்டத்தை போல் இருந்தது தான் ஆச்சிரியம். முப்பது நிமிட வான வேடிக்கை காண அவ்வளவு கூட்டமா என்ற நினைத்து போது, வான வேடிக்கை கண்ட உடன் பிரம்மித்து போனது நிஜம் தான். இந்தியாவில் இந்த மாதிரியான நிகழ்ச்சிகளை என்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை. வாழ்க அமெரிக்காவின் ஒற்றுமை மற்றும் புகழ்.


இந்த வகையிலான பலதரப்பட்ட அமெரிக்கா வெள்ளை இன மக்களின் வாழ்க்கையை பார்க்க ஆரம்பித்ததே கடந்த ஒரு மாதமாக தான் என்பதை இப்போது தான் உணர்கிறேன்.

Sunday, May 15, 2011

கலவைகள்


அரசியல்:

மக்கள் சந்தோஷ படுவதற்கு காரணம், தி.மு.க தோற்றது தான். அ.தி.மு.க வென்றதற்கு அல்ல. ஒட்டு போட்ட மக்கள், தி.மு.க.வின் தோல்வியை காண, மிகவும் ஆர்வம் கொண்டார்கள் என்பதை, தேர்தல் முடிவை வெளியிட்ட இணைய தளங்கள் செயல் படாமல் போனதில் இருந்தே தெரிந்துக் கொள்ள முடிகிறது.காங்கிரஸ் கட்சியை தோற்கடித்து தமிழக மக்கள், மத்திய அரசிற்கு தமிழன் இன்னும் உயிரோடு தான் இருக்கிறான் என்பதை காட்டி, இரண்டு கன்னத்திலும் அறைந்து வெளியே அனுப்பி உள்ளனர். இருந்தாலும் அவர்கள் எப்படி ஐந்து தொகுதிகளை வென்றனர் என்று ஒரு கேள்வி மிச்சம் உள்ளது. வெற்றி பெற்ற அம்மாவிற்கு வாழ்த்துக்கள். அம்மாவிடம் இருந்து எதிர்பார்ப்பது உடனடியாக அன்றாடும் பயன்படுத்தும் பொருட்களின் விலைவாசி குறைவு மற்றும் ஈழதமிழனுக்கு ஒரு நம்பிக்கை.

============================

சமீபத்தில் படித்தது:

பொன்னியின் செல்வன் மற்றும் சிவகாமியின் சபதம் என்று இரண்டு காவியங்கள் படித்து இருந்தாலும், பார்த்திபன் கனவு என்ற இன்னொரு காவியம் மிச்சம் இருக்கிறதே என்ற எண்ணம் உள்மனதில் இருந்து கொண்டே தான் இருந்தது. இப்போது தான் அதை படித்து முடித்தேன். பா.கவும் மிக அருமையான கதை மற்றும் விவரித்த விதம் நம்மை கட்டி போட்டுவிடும். 

ஒரு கதை எப்படி எல்லாம் சொல்ல முடியும் என்பதற்கு ஒரு படலத்தை படித்தாலே போதும். அதே போல் சில கதைகள் படிக்கும் போது, அக்கதையில் வரும் கதாபத்திரங்களாகவே நம்மை மாற்றி, நாமும் கதையுடன் பயணிப்போம். அந்த மாதிரியான கதைகள் தான் இம்மூன்றும். பா.கவில் இருக்கும் முதல் சாரம். இதை படிக்கும் போது, கதை விவரித்த விதம் தெரிந்து விடும். படிக்காதவர்கள் கண்டிப்பாக ஒரு முறையேனும் படிக்க வேண்டிய புத்தகங்கள் இவை.


காவேரி தீரம் அமைதி கொண்டு விளங்கிற்று. உதயசூரியனின் செம்பொற்கிரணங்களால் நதியின் செந்நீர்ப் பிரவாகம் பொன்னிறம் பெற்றுத் திகழ்ந்தது. அந்தப் புண்ணிய நதிக்குப் 'பொன்னி' என்னும் பெயர் அந்த வேளையில் மிகப் பொருத்தமாய்த் தோன்றியது. சுழிகள் - சுழல்களுடனே விரைந்து சென்றுகொண்டிருந்த அந்தப் பிரவா கத்தின் மீது காலை இளங்காற்று தவழ்ந்து விளையாடி இந்திர ஜால வித்தைகள் காட்டிக் கொண்டிருந்தது. சின்னஞ்சிறு அலைகள் ஒன்றோ டொன்று லேசாக மோதிய போது சிதறி விழுந்த ஆயிரமாயிரம் நீர்த்துளிகள் ஜாஜ்வல்யமான ரத்தினங்களாகவும், கோமேதகங்களாகவும், வைரங்களாகவும், மரகதங்களாகவும் பிரகாசித்துக் காவேரி நதியை ஒரு மாயாபுரியாக ஆக்கிக் கொண்டிருந்தன.

ஆற்றங்கரையில் ஆலமரங்கள் நெடுந்தூரத்துக்கு நெடுந்தூரம் விழுதுகள் விட்டு விசாலமாய்ப் படர்ந்திருந்தன. மரங்களின் பழைய இலைகள் எல்லாம் உதிர்ந்து புதிதாய்த் தளிர்விட்டிருந்த காலம். அந்த இளந் தளிர்களின் மீது காலைக் கதிரவனின் பொற் கிரணங்கள் படிந்து அவற்றைத் தங்கத் தகடுகளாகச் செய்து கொண்டிருந்தன.

கண்ணுக் கெட்டிய தூரம் தண்ணீர் மயமாய்த் தோன்றிய அந்த நதியின் மத்தியில் வடகிழக்குத் திசையிலே ஒரு பசுமையான தீவு காணப்பட்டது. தீவின் நடுவில் பச்சை மரங்களுக்கு மேலே கம்பீரமாகத் தலை தூக்கி நின்ற மாளிகையின் தங்கக் கலசம் தகதகவென்று ஒளிமயமாய் விளங்கிற்று

==========================

சித்த மருத்துவம்:

காரணமே இல்லாமல் இதில் ஒரு ஆர்வம்



=====================

அனுபவம்:

ஐந்து அல்லது பத்து வருடங்களுக்கு முன்னால், வெளிநாட்டில் இருந்து ஒருவர் இந்தியா/தமிழ்நாடு வருகிறார் என்றால், அவரிடம் மளிகை கடை சீட்டு போல், அனைவரும் ஏதாவது ஒரு பொருளை வாங்கிவர சொல்வார்கள். ஆனால் இன்றைய நிலைமை வேறு. வெளிநாட்டில் கிடைக்கும் அனைத்து பொருட்களும், நம்மூரில் கிடைக்கிறது. இது 90 சதவீதம் உண்மை. அது என்ன மீதம் உள்ள பத்து சதவீதம் என்று கேட்டால் தொலைக்காட்சி பெட்டி போன்ற சாதனங்கள். இங்கு கிடைக்கும் தொலைக்காட்சி நம்மூரில் விலை என்ன வென்று கேட்டால், மூன்று மடங்கு அதிகமாக இருக்கும். அதாவது அமெரிக்காவில் Sony Bravia 40 Inch Led 3D தொலைக்காட்சி சுமார் $750 - $950 இருக்கும். ஆனால் இந்தியாவிலே 1.2 லட்சம். ஏன் இந்த வித்தியாசம் என்று இன்றும் என்னால் புரிந்துக் கொள்ளவில்லை. நான் கண்ட காட்சி இது தான். அமெரிக்கா மக்கள், தக்காளி மற்றும் வெங்காயம் வாங்கும் அதே இடத்தில், அதே நேரத்தில் இந்த தொலைக்காட்சியும் சேர்த்து வாங்கி கொண்டு செல்கிறார்கள். ஆனால் நம்மூரிலோ வேறு விதம். தீபாவளி, பொங்கல் என்று எதாவது ஒரு விஷேச காலத்தில் மட்டுமே தொலைக்காட்சி வாங்கும் பழக்கும் உடையவர்கள். இந்த வித்தியாசம் தான் காரணமா என்று கேட்டால் இல்லை. என்ன வென்று தெரிந்தது கொள்ள முயற்சிக்கிறேன். சரி விசயத்திற்கு வருவோம்.

நண்பர் ஒருவர், இந்தியா செல்லும் போது இங்கிருந்து தொலைக்காட்சி பெட்டியை, FedEx மூலமாக இந்தியாவிற்கு அனுப்பி இருக்கிறார். அவர் வீட்டில் இருக்கும் போது தொலைக்காட்சியும் வர, அதை எடுத்து படம் பார்க்கும் போது தான், தொலைக்காட்சி உள்ளே உடைந்து இருப்பது தெரிய வந்து இருக்கிறது. உடனே அழைத்து கேட்டால் சரி செய்ய 34 ஆயிரம் ஆகும் என்று கூற மிரண்டு போய் இருக்கிறார். இந்தியாவில் அவர் வாங்கின தொலைக்காட்சியின் விலை 1.2 லட்சம். ஆனால் அமெரிக்காவில் வாங்கின விலையோ 40+ ஆயிரம். அவர் செய்த நல்ல காரியம், FedEx போடும் போது இன்சூரன்ஸ் எடுத்தது தான். தொலைக்காட்சி உடைந்தது வரும் வழியில் என்பதால், இன்சூரன்ஸ் பணம் கொடுப்பதற்கு வழி இருக்கிறது. நண்பர் இன்சூரன்ஸ் நபரை அழைத்து பேசி, விளக்கி இருக்கிறார். பணம் கிடைக்க வேண்டும் என்ற நம்பிக்கையில் நண்பரும், நானும்.

============================

நான் ரசித்த காட்சி:

இந்த ஒரு காட்சியில் இயக்குனரின் திரைக்கதை உத்தி, இசை, ஒளிபதிவு மற்றும் காட்சி அமைப்பு என்று அனைத்துமே தெரிந்துவிடும். 


======================

பயணம்:

அமெரிக்காவின் பெரிய நகரமான நியூயார்க் மற்றும் அமெரிக்காவின் ஆட்சி நடைபெறுகின்ற வாஷிங்டன் டி.சி ஆகிய நகரங்களுக்கு ஒருவழியாக பயணம் முடிந்தது.  சொல்லும்படியாக அவ்வூரின் முக்கிய நினைவுகள் என்று பார்த்தால் நியூயார்க்கில் பலதரப்பட்ட (உலக மக்களின்) வாழ்க்கை, புதிதாக கட்டப்படும் இரட்டை கோபுரம்,சுதந்திர தேவி மற்றும் இரவு உல்லாச வாழ்க்கை. இதே போல் வாஷிங்டனில் வெள்ளை மளிகை, அனைத்து மத்திய அரசின் அலுவலகங்களின் ரோமானிய அமைப்பு படி மற்றும் அவர்களின் சாதனையை விளக்ககூடிய நினைவு ஆலயங்கள். மிச்சம் இருப்பது மேற்கு பகுதி தான். நேரம் கிடைக்காமல் சென்று விடுமா என்ன அதற்கு.

புதிதாக கட்டப்படும் இரட்டை கோபுரம்

இரவு வாழ்க்கையின் ஒரு பகுதி

சுதந்திர தேவி

வெள்ளை மளிகை

குறிப்பாக வெள்ளை மளிகை பார்க்கும் போதும், இந்தியாவில் இருக்க கூடிய பாராளுமன்றத்தை பார்த்தது கிடையாது. ஏன் தென்இந்தியாவை தாண்டுனதே கிடையாது.  நான் இருப்பதோ மத்திய அமெரிக்காவில். அமெரிக்க வந்த உடனே வெள்ளை மளிகை. இது உனக்கு தேவையா? என்ற உள் மனது கேள்வி எழாமல் இல்லை. இந்த நாட்டிற்கு வந்த உடன், இந்த ஊரின் மக்கள் நிலை நமக்கு வந்து விடுவதால் தான், நாமும் இந்த மாதிரியான வாழ்க்கை வாழ்கிறோம் என்ற வரிகளுக்கு நான் ஒத்துக் கொள்ள போவதில்லை. நம்மூரிலும் மக்கள் பல இடங்களுக்கு சென்று பலவற்றை காண்கின்றனர் என்று சென்று பார்த்தால் தான் தெரியுமே தவிர, பேசினால் வேலைக்கு ஆகாது என்பது நிதர்சனம்.