Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

Thursday, February 24, 2011

ரசித்தது - பட்டிமன்ற காட்சி

இப்படியும் யோசிக்க முடியும் என்ற உதரணத்துக்கு கவிஞர் இனியவன். அவரின் பேச்சுக்கும் மற்றும் கற்பனை திறனுக்கும் வாழ்த்துக்கள்



Thursday, September 09, 2010

அஞ்சலி - நடிகர் முரளி


நேற்று இரவு நடிகர் முரளி மாரடைப்பால் சென்னையில் காலமானார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்து, என்னுடைய இரங்கலை அவரது குடும்பத்துக்கு தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் திரையுலகில் குறிப்பிடத்தக்க நடிகர் ஒருவரில் முரளிக்கு நிச்சய இடம் உண்டு. இவரது மறைவு, கண்டிப்பாக திரையுலகிற்கு மிக பெரிய இழப்பு.

என்றும் நினைவில் இருக்கும் முரளியின் திரைப்படங்கள்:

  • பூவிலங்கு
  • பகல்நிலவு
  • புது வசந்தம்
  • இதயம் 
  • அதர்மம்
  • காலமெல்லாம் காதல் வாழ்க
  • பொற்காலம்
  • காதலே நிம்மதி
  • தினந்தோறும்
  • பூந்தோட்டம்
  • உன்னுடன்
  • தேசியகீதம்
  • வெற்றி கொடி கட்டு
  • ஆனந்தம்
  • அள்ளி தந்த வானம்

Tuesday, August 24, 2010

மோசமான வாரம்

இந்த வாரம் என்னாச்சு தெரியலே, மோசமான படமா பாத்து தலைவலி வந்துதது தான் மிச்சம். இந்த மாதிரியான படங்களை வேறு மாநில மக்களோ அல்லது வெளிநாட்டினரோ பார்த்தால் தமிழ் சினிமாவ பத்தி என்ன நினைப்பாங்க.

ஆதவன்
குரு சிஷியன்
சிங்கம் (இது பரவாவில்லை)

தெய்வமே, மோசமான இயக்குனர்கள் இடம் இருந்து நம்ம தமிழ் திரையுலகை காப்பாத்துப்ப...

Monday, August 23, 2010

அஞ்சலி - வீராசாமி


முதல் மரியாதை படம் என்றாலே நினைவில் நிற்பது நடிகர் திலகம் சிவாஜி மற்றும்  இளையராஜாவின் இசை தான். ஆனால் அதையும் தாண்டி மனதில் நிற்கும் மற்றொரு விஷயம் "எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும்" என்ற வசனம். அதை இயல்பாக பேசியவர் நம்ம வீராசாமி. அவர் இன்று இறைவனடி சேர்ந்தார் என்பதை ஆழ்ந்த இரங்கலுடன் தெரிவித்து கொள்கிறேன். தமிழ் திரைவுலகம் மற்றொரு நல்ல நடிகரை இழந்தது.

Tuesday, March 16, 2010

நெஞ்சம் மறப்பதில்லை

1963ம் ஆண்டு வெளிவந்த  திகிலூட்டும் சம்பவங்கள் மற்றும் அருமையான பாடல்கள் நிறைந்த அற்புதத் திரையோவியம். முற்பிறவியில் ஒன்று சேர முடியாத இளம் காதல் ஜோடிகள் மறுபிறவியில் இணைகின்றதை எடுத்துச் சொல்லும் அற்புதமான காதல் கதை.

அக்காலத்தில் திகில் படம் என்றாலே இப்படம் “நெஞ்சம் மறப்பதில்லை" தான். அதிலும் வில்லனாக வாழ்ந்து காட்டிய உயர்திரு நம்பியாரின் நடிப்பு ஈடு இணையற்றது. இப்படத்தில் நடித்ததற்க்ககவே கல்யாணகுமார், தேவிகா, நாகேஷ், மனோரமா, எம்.என்.நம்பியார், மாலி, கரிக்கோல்ராஜ், எஸ்.வி.சகஸ்ரநாமம், ஜெமினி பாலகிருஷ்ணன், மகாலிங்கம், பத்மினி பிரியதர்சினி, சீதாலட்சுமி ஆகியோர் பெருமை பட்டனர் என்பது வரலாறு. பாராட்டப்பட்ட வேண்டிய இருவர் ஸ்ரீதர் மற்றும் மெல்லிசைமன்னர்கள் விஸ்வநாதன் & ராமமூர்த்தி..

இப்படத்தில் வரும் முக்கிய காட்சி 109 வயதில் தன் மகனை அதுவும் மகனின் அடுத்த ஜென்மத்தில் பார்க்கும் போது, நான் தன் அந்த "ஜாமீன்தார்" என்று கூறும் காட்சியில் பலர் பயந்து மயக்கம் அடைந்ததுண்டு. அக்காட்சி இதோ.




இப்படத்தை நான் இணையத்தில் தேடி இக்காட்சியை மட்டும் எடுக்க மூன்று  மணிநேரம் மேல் ஆனது.

Tuesday, December 29, 2009

தமிழ் திரையுலகம் - 2009



* 45 அறிமுக கதாநாயகர்கள், 50 அறிமுக கதாநாயகிகள் உட்பட 2009 ம் ஆண்டு 124 திரைப்படங்களை தமிழ் திரைப்பட உலகம் நமக்கு கொடுத்து உள்ளது.

* வெளியான 124 படங்களில் மக்கள் மனதில் இடம் பிடித்தது என்னவோ மிக மிக குறைவான படங்களே.

* சுந்தர் சி. இந்த ஆண்டு மசாலா மன்னன் என்ற பட்டமும் மற்றும் அதிக படங்களில் நடித்த நாயகன் ( தீ, ஐந்தாம் படை, பெருமாள்) என்ற பெருமையும் சேர்க்கிறது. அதே போல தமன்னா (படிக்காதவன், ஆனந்த தாண்டவம், அயன், கண்டேன் காதலை) அதிக படங்களில் நடித்த நாயகி என்ற பெருமையை பெறுகிறார்.

*  2009 ம் ஆண்டு 36 மொழி மாற்று படங்கள் வெளிவந்துள்ளன. அதிக பட்சமாக ஆங்கிலத்திருந்து 17 படங்களும், தெலுங்கிலிருந்து 20  படங்களும்,மலையாளத்திலிருந்து 5 படங்களும், இந்தியிலிருந்து 4 படங்களும்,மொழி மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

வெற்றி படங்கள்
  1. வெண்ணிலா கபடி குழு (மக்கள் மனதில்)
  2. அயன்
  3. பசங்க (மக்கள் மனதில்)
  4. சிவா மனசுல சக்தி
  5. நாடோடிகள் (மக்கள் மனதில்)
  6. பொக்கிஷம்
  7. ஈரம் (மக்கள் மனதில்) 
  8. உன்னை போல் ஒருவன்
  9. பேராண்மை(மக்கள் மனதில்)
  10. கண்டேன் காதலை

எதிர் பாராமல் வெற்றி பெற்ற படங்கள்
  1. மாயாண்டி குடும்பத்தார் 
  2. பசங்க
  3. வெண்ணிலா கபடி குழு
  4. யாவரும் நலம்
  5. குங்கும பூவும் கொஞ்சம் புறாவும்
  6. சிந்தனை செய்
  7. அழகர் மலை
  8. மதுரை சம்பவம்
  9. ரேணிகுண்டா

எதிர் பார்த்து தோல்வி அடைந்த படங்கள்
  1. வில்லு
  2. சர்வம்
  3. வால்மீகி
  4. மோதி விளையாடு
  5. ஆதவன்
  6. யோகி
  7. கந்தசாமி
  8. மெய்பொருள்
  9. வேட்டைக்காரன்



2009 ம் வெளியான மொத்த திரைப்படங்கள்
வரிசை
 எண்
திரைப்படம்
1 அ ஆ இ ஈ
2 படிக்காதவன்
3 வில்லு
4 காதல்னா சும்மா இல்ல
5 பஞ்சாமிர்தம்
6 என்னை தெரியுமா
7 வெண்ணிலா கபடி குழு
8 க
9 சற்று முன் கிடைத்த தகவல்
10 குடியரசு
11 பெருமாள்
12 சிவா மனசுல சக்தி
13 த. நா. 07 அல 4777
14 1977
15 தீ
16 இன்னொருவன்
17 யாவரும் நலம்
18 ஆறுபடை
19 அடடா என்ன அழகு
20 நேசிக்கிறேன்
21 பட்டாளம்
22 அயன்
23 நாளை நமதே
24 கார்த்திக் அனிதா
25 ஆனந்த தாண்டவம்
26 நாள் நட்சத்திரம்
27 மரியாதை
28 குறு என் ஆளு
29 குங்கும பூவும் கொஞ்சம் புறாவும்
30 இளம்புயல்
31 பசங்க
32 நியூட்டனின் 3ம் விதி
33 குளிர் 100 டிகிரி
34 பிரம்மா தேவா
35 சர்வம்
36 ராஜாதி ராஜா
37 தேரானை
38 மாயாண்டி குடும்பத்தார்
39 மஞ்சள் வெயில்
40 ராகவன்
41 மாசிலாமணி
42 முத்திரை
43 வால்மீகி
44 நாடோடிகள்
45 ஒலியும் ஒளியும்
46 புதிய பயணம்
47 நீ உன்னை அறிந்தால்
48 சிரித்தல் ரசிப்பேன்
49 உன்னை கண் தேடுதே
50 தொட்டு செல்லும் தென்றல்
51 வாமணன்
52 தலையெழுத்து
53 இந்திரவிழா
54 வைகை
55 வெடிகுண்டு முருகேசன்
56 அச்சமுண்டு அச்சமுண்டு
57 மோதி விளையாடு
58 மலையன்
59 ஐந்தாம் படை
60 அந்தோணி-யார்
61 ஆறுமனமே
62 மலை மலை
63 சிந்தனை செய்
64 ஞாபகங்கள்
65 எங்கள் ஆசான்
66 நேற்று போல் இன்று இல்லை
67 மாதவி
68 ஈசா
69 வண்ணத்துப் பூச்சி
70 அழகர் மலை
71 நேசி
72 சிவகிரி
73 பொக்கிஷம்
74 நினைத்தாலே இனிக்கும்
75 மதுரை சம்பவம்
76 ஈரம்
77 உன்னை போல் ஒருவன்
78 சொல்ல சொல்ல இனிக்கும்
79 ஆறுமுகம்
80 திரு திரு தூறு தூறு
81 மதுரை டூ தேனீ
82 சூரியன் சட்டக் கல்லூரி
83 கண்ணுக்குள்ளே
84 மூணார்
85 வேடப்பன்
86 பேராண்மை
87 கண்டேன் காதலை
88 ஆதவன்
89 ஜெகன் மோகினி
90 சா.பூ..த்ரி
91 கரகம்
92 அதே நேரம் அதே இடம்
93 வைதேகி
94 கண்ணா நீ எனக்குத் தாண்டா
95 பாலைவனச்சோலை
96 தம்பிவுடையான்
97 ஸ்வேதா
98 விழியிலே மலர்ந்தது
99 தழிழகம்
100 மத்திய சென்னை
101 யோகி
102 பிஞ்சு மனசு
103 எதுவும் நடக்கும்
104 வெட்டாட்டம்
105 பச்சையாபுரம்
106 ரேணிகுண்டா
107 கந்தசாமி
108 பேட்டராசு
109 லாடம்
110 இரு நதிகள்
111 எங்கராசி நல்ல ராசி
112 மெய்பொருள்
113 புதிய பயணம்
114 சாமி சொன்ன சரிதான்
115 ஒரே மனசு
116 இரு விழிகள்
117 நான் அவன் இல்லை -
118 தோழி
119 வேட்டைக்காரன்
120 கந்தக்கோட்டை
121 நாய்க்குட்டி
122 ஓடிப்போலாமா
123 காதல் கதை
124 புதிய பார்வை

 

Sunday, April 12, 2009

திரைவிமர்சனம்:

படிக்காதவன்

சன் தயாரிப்பில் நான் பார்த்த முதல் திரைப்படம். மேசமான விமர்சனங்கள் இருந்தும் தைரியமாக திரைப்படத்தை ஆரம்பித்த முதல் பத்து நிமிடத்திலே...
(முழுவதும் தூங்கி விட்டேன்)...

விமர்சனம் இப்படத்திற்கு தேவை இல்லை.... படுகேவலமான திரைப்படம்.

ரெட்டி (தெலுங்கு)

தெலுங்கு படசாயல் இருந்தும் குடும்பத்துடன் பர்ர்க்க கூடிய நகைச்சுவை திரைப்படம்.

தோஸ்தான (ஹிந்தி)

ஹிந்தி சினிமாவில் மட்டும் தான் இம்மாதிரியான திரைப்படத்தை எடுப்பார்கள். நல்ல பெயர் உள்ள இரண்டு நடிகர்கள் எப்படி இதில் நடிக்க ஒத்து கொண்டார்கள் என்பதே ஒரு ஆச்சிரியமான கேள்வி. பொழுதே போகாமல் வீட்டில் இருக்கும் சுவற்றை பார்ப்பதைவிட இப்படம் காணலாம்.


வேன்நஷ்டே (ஹிந்தி)

தீவிரவாதத்தைப் பற்றி இந்தியாவின் உள்ள ஒவ்வொரு சாதாரண பொது மனிதனின் மன கேள்விக்கு பதில் சொல்லும் அற்புதமான திரைப்படம். மற்ற விபரங்கள் இதே திரைப்படம் தமிழில் வரும் போது.

அயன்

சன் தயாரிப்பில் மீண்டும் வந்து உள்ள மோசமான திரைப்படம். நடிகர்கள சூர்யா, பிரபு தவிர படத்தில் ஒன்றும் இல்லை.

எனக்கு ஒரு உண்ம தெரின்சுஅகனும்?
எனக்கு ஒரு உண்ம தெரின்சுஅகனும்?

ஏன் நடிகை தமன்னா சன்னின் எல்லா தயாரிப்பிலும்???

Friday, March 20, 2009

யாவரும் நலம்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் கதையே இல்லாமல் ஆவிகளுடன் மிரட்டிய படம். வெளிநாடுகளில் 13 என்ற எண் ராசி இல்லாததால் இத்திரைப்படத்தில் எங்கு பார்த்தாலும் 13 மாயம். இதே திரைப்படம் ஹிந்தி மொழியில் 13பி என்ற பெயரில் வெளிவந்து உள்ளது.வழக்கமாக வெளிநாடு திரைப்படங்கள் தான் தமிழில் வெளிவரும், ஆனால் முதலில் தமிழில் ஓடிக்கொண்டு இருக்கும் இத்திரைப்படத்தை அங்கு உள்ள இயக்குனர்கள் பார்த்து, ஆங்கிலத்தில் எடுக்க உள்ளனர் என்பது இதன் சிறப்பு.

மாதவன் - உலகநாயகன் கமல்ஹாசன் உடன் நடித்த அன்பே சிவத்திற்கு பிறகு சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்திய நடிகர்.

என்னதான் ஆவிகளின் படமாக இருந்தாலும் சில சமயம், தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கெடுத்து விழுக்கின்ற இயக்குனர்கள் மத்தியில் வெறும் சாதாரண சின்னதிரை தொடரை பயன்படுத்தி திரைப்படம் முடியும் வரை நாற்காலியின் நுனியில் உட்காரவைத்தது தான் இவருக்கு வெற்றி.

ஒலி மற்றும் ஒளி - இல்லையேல் இத்திரைப்படம் இல்லை. இத்திரைப்படத்தை தொலைக்காட்சிலே, கணிப்பொறியிலே பார்த்தல் ஒன்றும் இல்லை. ஒலி மற்றும் ஒளி நன்றாக உள்ள திரைஅரங்கில் பார்த்தல் மட்டுமே பார்த்த மாதரி இருக்கும் என்பது என் கருத்து.

Saturday, March 07, 2009

அபியும் நானும்

இவ்வாழ்வில் உள்ள உறவுகள் நிரந்தரம் இல்லை. அந்த உறவுகள் தந்த நினைவுகள் மட்டும் தான் நிரந்தரம்

உறவுகளை உயிராக எடுத்து கொள்ளும் மனம், அந்த உறவுகள் பிரியும் போது மட்டும் பக்குவப்பட்ட மனது தேவைப்படுகிறது.

மனதளவில் ஒரு புன்னைகை/ ஒரு கணம் கொடுத்த இயக்குனர் திரு. ராதா மோகனுக்கும், நடிகர்/தயாரிப்பாளர் திரு. பிரகாஷ்ராஜ் அவர்களுக்கும் மனம் திறந்த பாராட்டு.

Monday, February 09, 2009

நான் கடவுள் (அஹம் பிரம்மாஸ்மி)

மிகுந்த எதிர்பார்ப்புக்களுடன் நான் ஞாயிறுக்கிழமை அன்று அதிகாலை மணி அளவில் நண்பர்களுடன் ஐநாக்ஸ் திரைஅரங்கில் அமர்ந்தோம். திரைப்படத்தை பார்த்துவிட்டு வெளியில் வரும் போது எதோ ஒரு வித ஏமாற்றம். இது கமர்சியல் படமல்ல என்பது பாடல் கேட்கும் போதே தெரிந்து விட்டது, எனவே எதிர்பார்ப்புகளும் அதை ஒட்டியே வைத்து இருந்தேன், அதையும் மீறி சில காரணத்தால் மனதில் நிற்க மறுக்கிறது.

விளிம்பு நிலை மனிதர்களை பற்றிய கதை இது. நாம் இருக்கும் தொழில்நுட்ப உலகில் இருந்து சற்றும் நாம் எதிர்ப்பார்க்காத இரண்டு உலகத்திற்கு நம்மை கூட்டி செல்லும் இத்திரைப்படம். காசியில் பிணத்திற்கு நடுவில் வாழ்ந்து தன்னை தானே கடவுள் சொல்லும் மக்களும், உடல், மன நலம் குன்றியவர்களை அல்லது நன்றாக இருப்பவர்களை ஊனமாக்கி அவர்களை வைத்து பிச்சை எடுக்க வைத்து மிரட்டி பிழைப்பு நடத்தும் பிறவிகளும் ஒருசேர கதையில் கொண்டு வந்து மிரட்டி இருப்பது பாலாவின் தனித்திறமை.

பலரும் காசியில் எடுக்கப்பட்ட காட்சிகளின் நேரம் மிகக்குறைவு என்று குறைப்பட்டு இருந்தனர். உண்மையில் காசியில் எடுக்கப்பட்ட காட்சிகள் அரை மணி நேரம் வெட்டப்பட்டுள்ளதாக ஊடக நண்பர் ஒருவர் கூறினார்.

இதில் அவலட்சணமான முகம் கொண்டவர்களை காட்டி இருப்பார், மிகையாக இல்லை உண்மையில் இதை போல இருப்பவர்கள் தான். ஆனால் என் மனதிற்கு படுவது இவர்களை காட்சிகளில் அதிகம் காட்டி விட்டார், இவர்கள் கஷ்டப்படுவது உண்மை என்றாலும் அந்த பகுதியை இன்னும் கொஞ்சம் குறைத்து இருக்கலாம், அவர்களை அடிக்கடி அருகில் காட்டுவதையும் தவிர்த்து இருக்கலாம். ஒரு சிலருக்கு பரிதாபத்திற்கு பதில் சலிப்பு வர வாய்ப்புண்டு.

ஆர்யா இதில் வீணடிக்கப்பட்டு விட்டார் அல்லது அவர் நடித்து இருந்த காட்சிகள் வெட்டப்பட்டு இருக்கலாம். கோபமாக நடப்பதையும் பேசுவதையும் நடிப்பாக கருத முடியாது. இந்த படத்தில் நடிக்க அதிக வாய்ப்பு பூஜாவிற்கு, அவரும் தன் பங்கை சிறப்பாக செய்துள்ளார் அதுவும் கடைசி காட்சியில் நம் கண்களில் கண்ணீர் வர வைத்து விடுக்கிறார். கண் தெரியாதவர் போல வருவதால் காண்டாக்ட் லென்ஸ் பொருத்தி இருக்கிறார், சிரமமான நடிப்பு தான்.

படம் முழுவதும் சீரியஸ் ஆக இருக்கும் என்று நினைத்து விடவேண்டாம், படத்தில் நடு நடுவே கதையோடு ஒட்டிய நகைச்சுவை வசனங்களும் உண்டு, சிரிக்காமல் இருக்கவே முடியாது, இயல்பான வசனங்கள். அதுவும் உடல் ஊனமுற்ற நபரில் ஒரு சிறுவன் அடிக்கும் லூட்டிக்கு அளவே இல்லை, அதே போல பலர். ஒரு காட்சியில் ஆர்யாவை அங்கே உள்ள போலி சாமியார்கள், சாமி! வாயில இருந்து லிங்கம் வருமா? என்று கேட்டதும் ..ம்ம் உன் வாயில அடிச்சா ரத்தம் வேணா வரும் என்று கூற அவர் கப் என்று இருப்பது செம காமெடி:-)) இதில் பல டைமிங் காமெடி என்பதால் அதை பார்த்தால் மட்டுமே உணர முடியும், வெறுமனே கூறுவதால் அந்த காட்சியின் அமைப்பு புரியாது.

படத்தில் சில குறைகள் இருந்தாலும் குத்து பாட்டு, வெளிநாட்டில் படமாக்கப்பட்ட காட்சிகள், ஒன்றுக்கும் உதவாத கதை, ஹீரோயிசம் என்று சம்பாதிக்க படம் எடுக்கும் மற்றவர்களிடையே இருந்து விலகி, கவனிக்கப்படாத மக்களை பற்றி அவர்கள் படும் துன்பங்கள்,அவர்களின் ஏக்கங்கள் பற்றி படம் எடுக்க பாலா ஒருவரால் தான் முடியும் என்பதை நிரூபித்து இருக்கிறார். அதற்காக அவரை கண்டிப்பாக பாராட்ட வேண்டும். விமசர்னம் என்ற பெயரில் அவரை குறை கூறாமல் இருக்க வேண்டும்.

Monday, February 02, 2009

வெண்ணிலா கபடிக்குழு

பழனியின் கரிசல்மண்ணும், மதுரையின் வீரமும், வீரவிளையாட்டும் மற்றும் தென்றல் காற்றில் ஆடும் மல்லிகை போன்ற மெல்லிய காதலும் ஒருசேர இத்திரை படத்தில் காணலாம். லகான், சக் தே இந்தியா போன்ற இந்தி திரைப்படமும், சென்னை 600028 தமிழ் திரைப்படமும் சேர்ந்த கதை கலவை எடுத்து கொண்டு தமிழர்களின் வீர விளையாட்டான கபடியை கலக்கலாக காட்டி இருக்கும் குழு தான் வெண்ணிலா கபடிக்குழு. படத்தின் கதையோடும், காட்சிகளோடும் மெலிதாக இழையோடி மெல்ல... மெல்ல... புன்னகை வரவழைக்கும் காமெடிகமும், வசனக் காட்சிகளும் சுசீந்திரனை இயக்குனர் என்று ஏற்று கொள்ள வைக்கும். இத்திரைப்படத்தை பார்த்து விட்டு வெளியில் வரும் போது கண்டிப்பாக ஒரு மனதிருப்தி இருக்கும் என்பதில் ஐயம் இல்லை.

மதுரை மண்ணில் எடுத்த எந்த திரைப்படமும் தோற்காது என்பதை நிருபிக்கும் படம்

இருண்டது அக்கால சிரிப்பு

மாபெரும் நடிகர் திரு. எம்.என்.நம்பியார் மறைந்த சோகத்தை மறப்பதற்குள் மற்றொரு உயர்திரு நகைச்சுவை திலகம் திரு. நாகேஷ் மறைந்தது என்னை சோகக்கடலில் ஆழ்த்தியது.

நாகேஷின் இயற்பெயர் குண்டுராவ். கன்னட பிராமண குடும்பத்தில் 1933-செப்டம்பர் 27-ம் தேதி பிறந்தவர். வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்ற வெறியுடன், சாதிக்காமல் வீடு திரும்ப மாட்டேன் என்று கூறி சென்னைக்கு வந்த நாகேஷ் துவக்க காலத்தில் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்துள்ளார்.

சென்னையில் மேற்கு மாம்பலத்தில் ஒரே அறையில் வாலி மற்றும் நடிகர் ஸ்ரீகாந்த் ஆகியோருடன் தங்கியிருந்தார். சிறிது காலம் ரெயில்வேயில் பணியாற்றினார். ஆனால் அவருக்கு அதில் திருப்தி ஏற்படவில்லை. இளம்வயதிலேயே வீட்டை விட்டு வெளியேறிய நாகேஷ், ரயில்வேயில் வேலைக்கு சேர்ந்தார். சென்னை மேற்கு மாம்பலம் பகுதியில், ஒரு சிறிய அறையில் கவிஞர் வாலி, நடிகர் ஸ்ரீகாந்த் ஆகியோருடன் நாகேஷ் தங்கியிருந்தார். ஒருமுறை "கம்ப ராமாயணம்' நாடகத்தை பார்த்த நாகேஷ், தன்னாலும் சிறப்பாக நடிக்க முடியும் என நினைத்தார். தன்னையும் சேர்த்துக் கொள்ளும்படி நாடகம் நடத்துபவர்களிடம் போராடி முதல் வாய்ப்பை பெற்றார். ரயில்வேயில் பணிபுரிந்து கொண்டிருந்த நாகேஷுக்கு முதலில் நாடகத்தில் கிடைத்தது "வயிற்று வலி நோயாளி' வேடம். அந்த நாடகத்தில் நாகேஷ் சில நிமிடங்களே மேடையில் தோன்றுவார். ஆனால், அவர் இதை நன்றாக பயன்படுத்திக் கொண்டார். "டாக்டர்...' என அலறியபடி மேடையில் நுழையும் நாகேஷ், நிஜமாகவே வயிற்று வலியால் துடிப்பது போல உடலை வளைத்து, நெளித்து, கைகளால் வயிற்றை பிடித்துக் கொண்டே சிறப்பாக நடித்தார். இதை சற்றும் எதிர்பார்க்காத பார்வையாளர்களுக்கு ஆச்சரியம். அவர்களின் கைதட்டலால் அரங்கமே அதிர்ந்தது. அன்றைக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆரும், நாகேஷின் நடிப்பை ரசித்தார். நாடகம் முடிந்த பின், மேடை ஏறிய எம்.ஜி.ஆர்., "நாடகம் நன்றாக இருந்தது. ஒரே ஒரு சீனில் வந்தாலும் அபாரமாய் நடித்து, அனைவரையும் கவர்ந்து விட்டார் ஒருவர். தீக்குச்சி போன்ற ஒல்லியான உருவில் வயிற்று வலிக்காரராக வந்தாரே, அவரைத் தான் சொல்கிறேன். நாகேஸ்வரன் என்ற பெயர் கொண்ட அவருக்கு நடிப்புக்கான முதல் பரிசை கொடுக்கிறேன்' என முதல் பரிசுக்குரிய கோப்பையை நாகேஷிடம் வழங்கினார்."மேக்அப்' போட்டு மேடையேறிய முதல் நாளிலேயே நாகேஷுக்கு கைதட்டலும், பரிசும், பாராட்டும் கிடைத்தது.

தயாரிப்பாளர் பாலாஜி மூலமாக இவருக்கு சினிமா வாய்ப்பும் கிடைத்தது. "தாமரைக்குளம்” இவரது முதல் படம். அதன் பின், ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து விட்டார்."திருவிளையாடல்" படத்தில் ஏழ்மையில் வாடும் புலவர் தருமியாக நாகேஷ் நடித்தது, எல்லார் மனதிலும் நீங்கா இடம் பெற்றுவிட்டது. "காதலிக்க நேரமில்லை" படத்தில் பாலையாவிடம் நாகேஷ் கதை சொல்லும் காட்சி, ரசிகர்களின் வயிற்றை இன்றும் புண்ணாக்கும். நாகேஷின் திறமையை நன்கு பயன்படுத்திக்கொண்ட பெருமை, இயக்குனர்கள் ஸ்ரீதர் மற்றும் பாலச்சந்தர் ஆகியோரையே சேரும்.அபூர்வ ராகங்கள் படத்தில் குடிகாரனாக நடித்த நாகேஷ், தன்னுடைய நிழலை பார்த்து பேசி, "சியர்ஸ்' சொல்லி சுவற்றில் கோப்பையை எறிவார். இடைவேளையின் போது, ரசிகர்களும் சுவாரஸ்யமாக அவரைப் போலவே சுவரில் கோப்பையை எறிந்து அவரைப் போல் நடந்து கொண்டனர். சர்வர் சுந்தரம் படத்தில் ஒரு நடிகனின் வாழ்க்கையை நாகேஷ் பிரதிபலித்த அளவுக்கு வேறு யாராவது செய்திருப்பார்களா என்பது சந்தேகமே. அந்த அளவு பிரமாதமாக நடித்திருப்பார் நாகேஷ்.

எம்ஜிஆருடன்...


புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் அன்புக்குப் பாத்திரமாகி, அவரது பெரும்பாலான படங்களில் நடித்தவர் நாகேஷ். குறிப்பாக வேட்டைக்காரன், எங்க வீட்டுப் பிள்ளை, அன்பே வா, ஆயிரத்தில் ஒருவன் என அவர் எம்ஜிஆருடன் நடித்த படங்களின் பட்டியல் மிகப் பெரியது. இடையில் சில காலம் இருவருக்கும் ஒரு பிரிவு வந்தாலும், மீண்டும் நாகேஷை அரவணைத்துக் கொண்டார் எம்ஜிஆர். உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் நாகேஷுக்காகவே ஒரு பாத்திரத்தை உருவாக்கினார் அப்படத்தின் இயக்குநரான எம்ஜிஆர். குடிப் பழக்கத்துக்கு அடிமையாகி மிகவும் உடல் பாதித்த நிலையில் அவர் அதிலிருந்து மீண்டு வர உதவியவர் எம்ஜிஆர். 'அடுத்த ஏழு ஜென்மத்துக்கும் சேர்த்து இப்பவே குடிச்சேன். அதனால நான் பிழைப்பேனான்னே தெரியாத நிலை. ஆனால் மருத்துவர்களும் அண்ணன் எம்ஜிஆரும் எனக்கு புதுப்பிறவி கொடுத்துட்டாங்க' என்று ஒரு முறை கூறியிருந்தார் நாகேஷ். திரையுலகில் தாம் சம்பாதித்த செல்வத்தை ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்தார். ஆனால் பின்னர் பெரும் நஷ்டத்தை அவர் சந்திக்க நேர்ந்தது. தி.நகர் அவரது நாகேஷ் தியேட்டர் பிரச்சனையில் சிக்கிய போது பகையை மறந்து எம்ஜிஆர் அவருக்கு உதவி செய்தார்.

ரஜினி-கமல் யுகத்திலும்...


ரஜினியின் ஆரம்பகாலப் படங்களில் மிகச் சிறந்த நகைச்சுவைப் படமான தில்லுமுல்லுவில், நடிகர் நாகேஷாகவே வந்து அசத்தியிருப்பார். பின்னர் படிக்காதவன் படத்தில் ரஜினியின் வளர்ப்புத் தந்தையாக நடித்து நெகிழ்ச்சி தந்தார்.ஆனால் கலைஞானி கமலுடன் அவருக்கு ஒரு ஸ்பெஷல் நெருக்கம் இருந்தது, கடைசி வரை. கமல் ஹாசனின் பிற்காலப் படங்கள் அனைத்திலுமே நாகேஷுக்கு மறக்க முடியாத பாத்திரங்கள். அபூர்வ சகோதரர்கள் மூலம் ஒரு விதத்தில் நாகேஷின் பைனல் இன்னிங்ஸை ஆரம்பித்து வைத்தவரே கமல்தான் என்றாலும் மிகையில்லை. மைக்கேல் மதனகாமராஜன், நம்மவர் என அந்தப் பட்டியல் தசாவதாரம் வரை தொடர்ந்தது. குறிப்பாக மகளிர் மட்டும் படத்தில் பிணமாக அவர் 'நடித்த' ஒரு காட்சியைப் பார்த்து ஹாலிவுட் நடிகர்களே வியந்துபோனதாக கமல்ஹாசன் குறிப்பிட்டிருந்தார். நம்மவர் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தேசிய அளவில் சிறந்த துணை நடிகருக்கா விருது நாகேஷுக்குக் கிடைத்தது. இதோடு இல்லாமல் விஜயுடன் "பூவே உனக்காக", மாதவன் உடன் "மின்னலே" என தற்போது உள்ள நடிகர்களுடன் நடித்து திறமையை காட்டினர். இப்படிப்பட்ட மாபெரும் நகைச்சுவை நடிகரின் மறைவு திரைஉலகத்துகே, தமிழ் நாட்டுக்கே பெரும் இழப்பு. இப்படிபட்ட உலகமனிதர் இவ்வுலகை விட்டு பிரிந்து, சொர்க்கத்தை அடைந்து இருப்பார் என்று நம்பி, என் இரத்த கண்ணீரை துடைத்து கொள்கிறேன்.

Saturday, January 03, 2009

2008 நிகழ்வுகள்

2008ல் பல நிகழ்வுகள்/ நினைவுகள் இருந்தாலும் எனக்கு சொல்லும்படியாக இருந்தது, வேலை செய்யும் இடமாற்றம் மட்டும் தான்.

இதோ என்னுடைய மறவா 2008:

* வேளங்கண்ணி கோவில்

* நந்து திருமணம்.

* கட்டுமர பயணம்.

* எச்.சி.ல். வேலை தொடர் முடிவு மற்றும் எச்.சி.ல். நண்பர்கள் வீடு வரை வந்து அனுப்பிவைத்தது.

* பாலாஜி திருமணம் (எச்.சி.ல். நண்பர்)

* சி.டி.எஸ் வேலை ஆரம்பம்.

* வடபழனியிலிருந்து சைதை

* நவாஸ் திருமணம் (தொழில் நூட்ப கல்லூரி நண்பர்)

* வினோத் கண்ணன் திருமணம் (பொறியிரர் கல்லூரி நண்பர்)

* பெங்களூர் பயணம் (பொறியிரர் கல்லூரி நண்பர்கள் இணைந்து)

* காஸ்கேடு விருந்து (சி.டி.எஸ் - ஹே.இ. பி நண்பர்கள்)

* மெரீனா கடற்கரை புத்தாண்டு விழா.

* மனித சங்கிலி என்ற பெயரில் போக்குவரத்து நெரிசல்

* நிசா புயல்

இதோடு மட்டும் இல்லாமல் உலகில் நடந்த சில முக்கிய நினைவுகளை கொடுக்க விரும்பினேன். இதற்க்காக பல்வேறு வலைதளத்தில் இருந்து எடுத்த சில பதிப்புகள்...

தமிழ்நாடு

பெட்ரோல், டீசல் பஞ்சம்

கே.பாலச்சந்தரின் தண்ணீர் தண்ணீர் படம் பார்த்தவர்கள், தண்ணீருக்கு இப்படியெல்லாமா கஷ்டப்படுவார்கள் என அதிசயித்துப் போய் அதிர்ச்சியும் அடைந்தனர். ஆனால் போர்க்காலத்தில் ஏற்படுவதைப் போன்ற ஒரு பேரவல நிலை ஆகஸ்ட் 25ம் தேதியன்று தமிழகத்தில் ஏற்பட்டது. ஆனால் இது தண்ணீருக்கல்ல. வாகனங்களின் ஆதாரமான பெட்ரோல், டீசலுக்குத்தான் இந்தப் பஞ்சம். தலைநகர் சென்னையில் பெட்ரோல், டீசல் இல்லாமல் பங்குகள் மூடப்பட்டன. இந்த திடீர் பஞ்சத்தால் மக்கள் பேரவதிக்குள்ளானார்கள்.
விடிய விடிய பெட்ரோல், டீசலைத் தேடி வாகனங்களை தள்ளிக் கொண்டும், திறந்திருந்த ஓரிரு பெட்ரோல் பங்குகள் முன்பு நீண்ட வரிசையில் காத்துக் கிடந்தும், கேன்களோடு அலைந்து திரிந்தும் மக்கள் பட்ட அவதி சாமானியத்திற்கு மறக்க முடியாதது. 2 நாட்களுக்கும் மேலாக நீடித்த இந்த பெட்ரோல், டீசல் பஞ்சத்தால், தமிழக மக்கள் சொல்லொணா துயரத்தை சந்தித்து விட்டனர். 2008ம் ஆண்டில் தமிழக மக்களால் மறக்க முடியாத துயரங்களில் இதுவும் ஒன்று.

உலுக்கிய மின்வெட்டு

தமிழகத்தை இதுவரை இல்லாத அளவுக்கு இருளில் மூழ்கடித்த ஆண்டு 2008. எங்கு பார்த்தாலும் கரண்ட் இல்லை என்பதே கரண்ட் பிரச்சினையாக இருந்தது. பெய்ய வேண்டிய மழை பெய்யத் தவறியதால் மின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் மின் பற்றாக்குறை விஸ்வரூபம் எடுத்தது. நகர்ப்புறங்கள் நரகமாகிப் போகும் அளவுக்கு மின்தடை வாட்டி எடுத்தது. தினசரி இத்தனை மணி நேரத்திற்கு மின்சாரம் கிடையாது என்று அரசு பகிரங்கமாக பட்டியலிட்டு அறிவிக்கும் அளவுக்கு நிலைமை போனது. கிராமப்புறங்களில் விவசாயம் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டது. நகர்ப்புறங்களிலோ தொழில் உற்பத்தி அடி வாங்கியது.

ஜல்லிக்கட்டை 'தடுத்த' உச்சநீதிமன்றம்

தமிழர்களின் வீர விளையாட்டோடு சட்டம் சீ்ண்டிப் பார்த்த ஆண்டு இது.

பொங்கல் பண்டிகையின்போது தமிழகத்தின் தென் மாவட்டங்களில் நடைபெறும் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து தென் மாவட்ட மக்களுக்கு கசப்பு பொங்கலைக் கொடுத்த ஆண்டு இது. ஜல்லிக்கட்டு நடத்தக் கூடாது என உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவால் அதிர்ச்சி அடைந்த அலங்காநல்லூர், பாலமேடு உள்ளிட்ட பகுதி மக்கள் துக்க பொங்கல் அனுஷ்டித்தனர். மேலும், உண்ணாவிரதப் போராட்டத்திலும் குதித்தனர். தமிழக அரசும், மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரும் எடுத்த கடும் முயற்சிகளின் விளைவாக சில நிபந்தனைகளின் அடிப்படையில், ஜல்லிக்கட்டை நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது. உற்சாகத்தோடு பொங்கலைக் கொண்டாடி முடித்தனர் தென் மாவட்ட மக்கள்.

நெகிழ வைத்த உறுப்பு தானம்

தமிழக மக்களை நெகிழ வைத்தனர் ஹிதேந்திரனின் பெற்றோர். அவர்கள் செய்தது சாதாரணமானதல்ல, தங்களது ஒரே மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்து உயரிய இடத்தைப் பிடித்தனர். இதுபோன்ற தானங்களுக்கு பிள்ளையார் சுழியும் போட்டு வைத்தனர்.


சென்னை அருகே உள்ள திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த டாக்டர் அசோகன், புஷ்பாஞ்சலி தம்பதியின் ஒரே மகன்தான் ஹிதேந்திரன். செப்டம்பர் 20ம் தேதி சாலை விபத்தில் சிக்கினார் ஹிதேந்திரன். மூளை செயலிழந்தது. இனியும் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என்று டாக்டர்கள் கூறி விடவே, சட்டென சுதாரித்த அசோகன், புஷ்பாஞ்சலி தம்பதிகள், தங்களது மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவெடுக்கின்றனர்.

இருதயம், சிறுநீரகம், கல்லீரல், கணையம் முதலியவற்ற செப்டம்பர் 21ம் தேதி தானமாக வழங்கினர். இதற்காக அவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகளுக்கு, காவல்துறையும், மருத்துவமனைகளகும் பேருதவி புரிந்தன. ஹிதேந்திரனின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட உடல் உறுப்புகளால் ஐந்து பேருக்கு மறு வாழ்வு கிடைத்தது. இந்த உறுப்பு தானம் தமிழகத்தையே உலுக்கி விட்டது. முதல்வர் கருணாநிதி முதல் அத்தனை தலைவர்களும் ஹிதேந்திரனின் பெற்றோரை பாராட்டிப் புகழ்ந்தனர். ஹிதேந்திரனின் பெற்றோர் ஏற்படுத்தி வைத்த இந்த அருமையான செயல், தமிழகத்தில் பேரலையை ஏற்படுத்தி இன்று பலரும் மூளைச்சாவை சந்திக்கும் தங்களது குழந்தைகள், குடும்ப உறுப்பினர்களின் உடல் உறுப்புகளை தானம் செய்யத் தொடங்கியுள்ளனர். இந்த ஆண்டின் சிறந்த மனிதர்கள் விருது கொடுப்பதாக இருந்தால் அதற்கு முழுத் தகுதியும் படைத்தவர்கள் டாக்டர்கள் அசோகன் மற்றும் புஷ்பாஞ்சலி என்பதில் சந்தேகமில்லை.

சென்னை சட்டக் கல்லூரி மோதல்:

ஸ்காட்லாந்து யார்டுக்கு அடுத்து நம்ம போலீஸ்தான் என்று தமிழக போலீஸார் காலரை தூக்கி விட்டுக் கொண்டு லத்தியுடன் ராயலாக திரிந்த காலமெல்லாம் போய் விட்டது. நவம்பர் 12ம் தேதி சென்னை சட்டக் கல்லூரியில் நடந்த மாணவர்கள் வன்முறை காவல்துறையின் பெருமையை தூக்கிப் போட்டு துவம்சம் செய்து விட்டது. தங்களது கண் முன்பாக சக மாணவனை மற்ற மாணவர்கள் மாட்டை, ஆட்டை அடிப்பது போல போட்டு அடித்தபோது அதை சத்தமே போடாமல், கல் மனதோடு கண்டு களித்துக் கொண்டிருந்த காவல்துறையைப் பார்த்து நாடே வெட்கிப் போனது.

இந்தியா

டாடாவின் நானோ

வருமா, வராதா என்று பலரும் பெட் கட்டிக் கொண்டிருந்த நிலையில், காரைக் கொண்டு வந்து நிறுத்தி அனைவரையும் ரத்தன் டாடா வியப்பில் ஆழ்த்திய தினம் ஜனவரி 10. வசதியான இருக்கைகள், அழகிய டிசைன், ரூ. 1 லட்சம் விலை என அட்டகாசமான அம்சங்களுடன் கூடிய டாடா நானோ காரை, டெல்லியில் நடந்த கண்கவர் நிகழ்ச்சியி்ல் ரத்தன் டாடா அறிமுகப்படுத்தினார். இந்தியாவி்ல் உள்ள நடுத்தர மக்களின் விருப்ப வாகனமாக இனி நானோ விளங்கும் என்று கூறிய டாடா, ஒரு பைக் வாங்குவதை விட சற்றே கூடுதலான விலை என்பதால் மத்திய வர்க்கத்து மக்களுக்கான கார், மக்களின் கார் என்றும் நானோவை அறிமுகப்படுத்தினார் டாடா. ஆனால் சிங்கூரில் மமதா பானர்ஜி கொடுத்த முட்டுக்கட்டையால் மேற்கு வங்கத்தை விட்டே காலி செய்து இப்போது குஜராத்துக்குள் நுழைந்துள்ளது நானோ.

நானோவின் வருகையை நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது..

மும்பை இன வெறி தாக்குதல்:

இந்தியா, இந்தியர்கள் என்ற பதத்திற்கே பெரும் ஆப்பு வைத்தார் ராஜ் தாக்கரே இந்த ஆண்டு.

மும்பை மராத்தியர்களுக்கே, இங்கு ஒரு வட இந்தியரும் இருக்கக் கூடாது என்ற வெறி முழக்கத்தோடு, பிப்ரவரி 4ம் தேதி ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிர நவ நிர்மான் சேனா கட்சியினர் வன்முறையில் குதித்து மும்பையை ரத்தக்களறியாக்கினர். அப்பாவி வட இந்தியர்களை விரட்டி விரட்டித் தாக்கினர். பழ வியாபாரிகள், சாலையோர வியாபாரிகள், ராஜ் தாக்கரே கட்சியினரின் வெறிக்கு இலக்காகினர். ஆயிரக்கணக்கான வட இந்தியர்கள் மும்பையை விட்டு தங்களது சொந்த மாநிலங்களுக்கு கிளம்பினர். நடிகர் அமிதாப் பச்சனின் வீடும் தாக்கப்பட்டது. ராஜ் தாக்கரேவின் இந்த அட்டூழியத்திற்கு எதிராக வட இந்திய அரசியல் தலைவர்கள் திரண்டனர். சாதாரண தெருச் சண்டையில் ஈடுபட்டாலே கைது செய்யும் போலீஸார், ராஜ் தாக்கரே விஷயத்தில் படா அமைதி காத்தனர். சரத்பவார் உள்ளிட்டோர் மண்ணின் மைந்தரான தாக்கரேவைக் காக்க முயன்றனர். ஆனால் எதிர்ப்புகள் வலுத்ததால் ஒரு வழியாக 13ம் தேதி கைது செய்யப்பட்டார் ராஜ் தாக்கரே. ஆனால் உடனடியாக ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டு விட்டார். இப்போதைக்கு கலவரம் அடங்கியுள்ள நிலையிலும், இன்னும் நீரு பூத்த நெருப்பாக வட இந்தியர்களுக்கு எதிரான துவேஷம் மும்பையில் இருந்து கொண்டுதான் உள்ளது. அதை நிரூபிக்கும் விதமாக, மும்பை தீவிரவாதத் தாக்குதலில் எத்தனையோ பேர் இறந்த நிலையில் உயிரிழந்த மராத்திய காவல்துறையினருக்கு தான் அஞ்சலி செலுத்துவதாக இன வெறியுடன் பேசினார் ராஜ் தாக்கரே.

காந்தமால் கலவரம்

விஸ்வ இந்து பரிஷத்தைச் சேர்ந்த துறவி லட்சுமாணந்த சரஸ்வதி சுவாமிகள் ஆகஸ்ட் 24ம் தேதி கொல்லப்பட, ஒரிசாவில் வெடித்தது கலவரம். காந்தமால் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ மக்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள், பள்ளிக் கூடங்கள் என கண்ணில் பட்டதையெல்லாம் வெறித்தனமாக தாக்கினர் சங் பரிவார் அமைப்பினர். மாவட்டமே பற்றி எரிந்தது. மதச் சார்பின்மையை கேள்விக்குறியாக்கி, அப்பாவி மக்களின் உயிர்களை வேள்வியாக்கிய வேதனை தினம். 30க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் இந்த கலவரத்தில் உயிரிழந்தனர். கன்னியாஸ்திரி ஒருவரும் கற்பழிக்கப்பட்ட கொடூரமும் நடந்தது.

ஒரிசாவில் தொடங்கிய இந்த கலவரம் கர்நாடகத்திலும் பரவியது. மங்களூர் உள்ளிட்ட இடங்களில் சர்ச்சுகள் தாக்கப்பட்டன. தமிழகத்தையும் இந்த மதவாதம் தொட்டுப் பார்த்தது. ஆனால் காவல்துறையின் கடும் நடவடிக்கையால் சத்தமின்றி ஓய்ந்து போனது.

மும்பை தீவிரவாத தாக்குதல்

டிவியில் லைவ் ஒளிபரப்பு செய்யப்பட்ட ஒரே தீவிரவாதத் தாக்குதல் மும்பை தீவிரவாதத் தாக்குதலாகத்தான் இருக்க முடியும். அதுவும் 3 நாட்களுக்கு நேரடியாக ஒளிபரப்பி உலகம் முழுவதும் நம் பக்கம் ஈர்க்க வைத்து விட்டன இந்திய தொலைக்காட்சிகள். நியூயார்க் உலக வர்த்தக மையம், தீவிரவாதிகளால் விமானம் மூலம் தகர்க்கப்பட்டபோது எப்படி உலகம் அதிர்ந்ததோ அதே அளவிலான அதிர்ச்சியை, நவம்பர் 26ம் தேதி மும்பையில் நடந்த தீவிரவாதத் தாக்குதலும் ஏற்படுத்தியது. கடல் மார்க்கமாக ஊடுறுவிய தீவிரவாதிகள், படு சாவாதனமாக மும்பைக்குள் நுழைந்து, கண்மூடித்தனமாக சுட்டு அப்பாவி மக்களை வீழ்த்திய கொடூரம் உலக மக்களை உறைய வைத்தது. தாஜ், டிரைடென்ட், ஓபராய் ஹோட்டல்கள் மற்றும் நாரிமன் ஹவுஸைப் பிடித்துக் கொண்டு அப்பாவிகளை குருவி சுடுவது போல சுட்டும், கையெறி குண்டுகளை வீசி ரணகளப்படுத்தியும் துவம்சம் செய்து விட்டனர் எதிரிகள்.
இந்திய கமாண்டோ படையினர் உள்ளே புகுந்த தீவிரவாதிகளுடன் உயிரைப் பணயம் வைத்து கடுமையாக போராடி, 9 தீவிரவாதிகளை சுட்டு வீழ்த்தினர். முகம்மது அஜ்மல் அமீன் கஸாப் மட்டும் சிக்கினான்.

அப்பாவி மக்களுக்கு எதிராக நடந்த இந்த கொடூரத் தாக்குதல் நாட்டு மக்கள் கொந்தளித்தனர், நமது அரசியல்வாதிகளின் அலட்சியப் போக்கை காறித் துப்பி குமுறினர். நாட்டு மக்களின் வேதனையில் வெண்ணீர் ஊற்றுவது போல, இதெல்லாம் சாதாரண தாக்குதல்தான் என்று கூறி வெறுப்பை வாரிக் கட்டிக் கொண்டார் மகாராஷ்டிர துணை முதல்வர் ஆர்.ஆர்.பாட்டீல். மக்களின் வெறுப்பு அரசியல்வாதிகள் பக்கம் திரும்பியதாலும், எதிர்க்கட்சிகளின் கடும் கண்டனைக் கணைகள் காய்ச்சி எடுத்ததாலும், உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், மகாராஷ்டிர முதல்வர் விலாஸ் ராவ் தேஷ்முக், துணை முதல்வர் ஆர்.ஆர்.பாட்டீல் ஆகியோர் அடுத்தடுத்து பதவி விலகினார்.

இது மட்டுமா?


பெங்களூரில் 7 இடங்களில், அகமதாபாத்தில் 14 இடங்களில், தொடர்ந்து ஜெய்ப்பூரில், மாலேகானில், அஸ்ஸாமில் என தொடர் குண்டுவெடிப்புகள் நாட்டை உலுக்கின. சூரத்தில் குவியல் குவியலாக அடுத்தடுத்து வெடிக்காத வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
மென்மையான இந்தியாவுக்கு 2008ம் ஆண்டு கண்டிப்பாக ஒரு தீவிரவாத ஆண்டு என்பதில் சந்தேகம் இல்லை.

உலகம்

இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம்

இந்தியாவிலும், அமெரிக்காவிலும் பெரும் அலைகளை ஏற்படுத்திய ஒப்பந்தம்.

மன்மோகன் சிங் அரசுக்கு எமனாக அமையும் என எதிர்பார்க்கப்பட்ட பரபரப்பு ஒப்பந்தம்.

அமெரிக்காவுடன் அணு சக்தி ஒப்பந்தம் செய்து கொள்வது குறித்த அறிவிப்பு வெளியானதுமே இடதுசாரிகள் அதற்கு 'ரெட் கார்டு' போடத் தொடங்கினர். ஆனாலும் அவர்களிடம் பேசி சமாதானப்படுத்தி விடலாம் என ஐக்கிய முற்போக்குக் கூட்டணி நினைத்தது. ஆனால் இடதுசாரிகளோ படு வீம்பாக இருந்ததால், அவர்களை மீறி ஒப்பந்தத்தை நிறைவேற்றத் துணிந்தது மன்மோகன் சிங் அரசு. இதனால் கடுப்பான இடதுசாரிகள், ஜூலை 9ம் தேதி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டனர். ஆனால் தக்க சமயத்தி்ல கை கொடுத்தனர் சமாஜ்வாடியின் முலாயம் சிங் யாதவும், அவரது அடிப்பொடி அமர்சிங்கும். கூடவே சிபு சோரனும் சேர, இடதுசாரிகள் வைத்த புள்ளியை, கமாவாக்கி ஜூலை 22ம் தேதி நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது மன்மோகன் சிங் அரசு. ஆனால் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது லோக்சபாவில் பாஜக எம்.பிக்கள் பணக்கட்டுக்களை கொண்டு வந்து கொட்டியபோது நாடே பதறிப் போனது. அந்த விசாரணையும் இப்போது முடிந்து, குற்றம் சாட்டப்பட்ட அமர்சிங்கும், அகமது படேலும் அப்பாவிகள் என கூறி விட்டனர்.

இந்திய அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தைப் பரிசீலித்துப் பார்த்த சர்வதேச அணு சக்தி ஏஜென்சியும், என்.எஸ்.ஜி. அமைப்பும், இந்தியாவுக்குப் பச்சைக் கொடி காட்ட அணுத் தனிமையிலிருந்தும் விடுபட்டது இந்தியா. இப்படியாக பல்வேறு தடைகளைத் தாண்டி ஒரு வழியாக, இந்திய, அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது.

புஷ் மீது ஷூ வீச்சு

2008ம் ஆண்டின் முடிவில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷுக்கு ஈராக்கில் கொடுக்கப்பட்ட மரியாதையைப் பார்த்து உலகமே அரண்டு போனது. பதவிக் காலத்தை முடிக்கும் புஷ், அதற்கு முன்பு கடைசி முறையாக ஈராக் செல்ல விரும்பினார். அதன்படி டிசம்பர் 15ம் தேதி பாக்தாத்துக்கும் சென்றார். பாக்தாத் அதிபர் அப்பாஸை சந்தித்த புஷ், அவருடன் இணைந்து செய்தியாளர்களையும் சந்தித்தார். அங்குதான் புஷ்ஷுக்கு அவமரியாதை நேர்ந்தது. நிருபர்களுடன் அமர்ந்திருந்த ஈராக் டிவி நிருபர் முன்டாசர் அல் ஜெய்தி, தனது ஷூக்களை எடுத்து ஆவேசமாக கத்தியபடி புஷ் மீது எறிய, படு லாவகமாக குனிந்து ஷூ வீச்சிலிருந்து தப்பினார் புஷ். மெரிக்கா உள்பட உலகமே இதைப் பார்த்து அதிர்ந்து போனது. ஆனால் ஷூவை வீசிய முன்டாசரோ, அரபு நாடுகளின் நாயகனாகி விட்டார். அவருக்கு உலகின் பல்வேறு முஸ்லீம் நாடுகளிலிருந்தும் பரிசுகள் குவிந்தன. லிபிய அதிபர் கடாபியின் மகள், முன்டாசரை மாவீரன் என்று புகழ்ந்தார். முன்டாசர் வீசிய ஷூவைத் தயாரித்த எகிப்து நிறுவனத்திற்கு லட்சக்கணக்கில் அதே டைப் ஷூக்களைக் கேட்டு ஆர்டர்கள் குவி்ந்தன. முன்டாசரின் குடும்பத்துக்கு வாழ்நாள் முழுவதும் ஷூக்களை இலவசமாக சப்ளை செய்வதாக பல நிறுவனங்கள் அறிவித்தன. பதவியிலிருந்து விலகும் நேரத்தில் கிடைத்த இந்த வரவேற்பை நிச்சயம் புஷ் தனது வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டார் என்பது நிச்சயம்.

வெள்ளை மாளிகையில் கருப்புப் புயல்

நவம்பர் 5 - வெள்ளை மாளிகையில் கருப்புப் புயல் குடி புகுந்த தினம். ஹாலிவுட் படங்களில் மட்டுமே கருப்பர் இன அதிபரை கண்டு ரசித்து வந்த அமெரிக்கா, நிஜமாகவே ஒரு கருப்பர் இனத்தவரை அதிபராகத் தேர்வு செய்து பெருமைப்பட்டுக் கொண்ட தினம். உலகெங்கிலும் உள்ள ஒட்டுமொத்த கருப்பர் இனத்தவருக்கும் பெருமை தேடித் தரும் வகையில் அதிபர் தேர்தலில் வென்றார் பாரக் ஓபாமா.

விளையாட்டுத் துறை

வாராது வந்த மாமணியாக ஒலிம்பிக்கில் நமக்கு தங்கப் பதக்க கிடைத்த ஆண்டாச்சே, சும்மாவா!

ஒலிம்பிக்கில் இந்தியா அசத்திய ஆண்டு, ஐபிஎல் டுவென்டி20 போட்டி மூலம் கிரிக்கெட் உலகை இந்தியா பிரமிக்க வைத்த ஆண்டு, பேட்மிண்டனில் சாய்னா நேஹ்வால் உலக அரங்கில் முதல் பத்து இடங்களுக்குள் முன்னேறிய ஆண்டு, கும்ப்ளே, கங்குலி ஆகிய ஜாம்பவான்ள் ஓய்வு பெற்ற ஆண்டு, சச்சின் டெண்டுல்கர் 12 ஆயிரம் ரன்களைத் தொட்ட ஆண்டு என 2008ம் ஆண்டு இந்திய விளையாட்டுத் துறைக்கு பெருமிதம் தந்த ஆண்டு.

ஒலிம்பிக்கில் முத்திரை ..

ஆகஸ்ட் 7ம் தேதி முதல் 24ம் தேதி வரை நடந்த பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில், இந்தியா ஒரு தங்கம், 2 வெண்கலப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தது.

இந்திய துப்பாக்கிச் சுடும் வீரர் அபினவ் பிந்த்ரா, 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில், தங்கம் வென்று இந்தியாவின் நூற்றாண்டு கால கனவை நனவாக்கினார். மேலும் மல்யுத்தத்தில் சுஷில்குமார், குத்துச்சண்டையில் விஜேந்தர் குமார் ஆகியோர் ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றனர். இதுவரை இந்தியாவுக்குக் கிடைத்திராத கெளரவ சாதனை இது என்பதால் ஒட்டு மொத்த இந்தியாவும் குதூகளித்து சந்தோஷப்பட்டது.

சாய்னாவின் ரேங்க் சாதனை ...

இந்திய பேட்மிண்டன் துறைக்கும் 2008ம் ஆண்டு மிகப் பெரிய ஆண்டாக அமைந்தது. ஒலிம்பிக்கில் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேஹ்வால், காலிறுதி வரை தகுதி பெற்று இந்தியாவுக்கு புது உற்சாகத்தை ஏற்படுத்தினார். பதக்க வாய்ப்பு நழுவினாலும் கூட சாய்னாவின் திறமையான ஆட்டம் அத்தனை இந்தியர்களையும் கவர்ந்து விட்டது. ஒலி்ம்பிக்கி்ல் பதக்கம் போனாலும் கூட, சைனீஸ் தைபே கிரான்ட்பிரி, ஜூனியர் காமன்வெல்த், உலக பேட்மிண்டன் சாம்பியன் போட்டிகளில் சாம்பியன் பட்டத்தை வென்றார் சாய்னா.

இதற்கெல்லாம் உச்சமாக, உலக தரவரிசைப் பட்டியலில் 10வது இடத்தைப் பிடித்து புதிய வரலாறும் படைத்தார். இந்திய வீராங்கனை ஒருவர் தர வரிசைப் பட்டியலில் இந்த அளவுக்கு உயர்வு பெற்றது இதுவே முதல் முறையாகும். சாய்னாவின் தொடர் சாதனைகளால் சிறந்த வளரும் வீராங்கனையாக உலக பேட்மிண்டன் சம்மேளனம், சாய்னாவை தேர்வு செய்தது.

ஐபிஎல் திருவிழா ..

கிரிக்கெட் உலகை மட்டுமல்லாமல், உலக விளையாட்டு அரங்கிலும் பெரும் சலசலப்பையும், பிரமிப்பையும் ஏற்படுத்தியது இந்தியன் பிரீமியர் லீக்கின் ஐபிஎல் டுவென்டி 20 போட்டித் தொடர். கோடிக்கணக்கில் பணத்தை வாரியிறைத்து வீரர்களை ஏலம் எடுத்த 8 இந்திய அணிகள், இந்தப் போட்டித் தொடரில் பங்கேற்றன. அதிகபட்சமாக இந்திய கேப்டன் டோணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ. 6 கோடிக்கு ஏலம் எடுத்தது. உலக அளவில் ஜாம்பவான் வீரர்கள் பல்வேறு அணிகளில் இடம் பெற்றனர். இறுதிப் போட்டியில் சென்னை அணியும், ஷான் வார்னே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இதில் வார்னே அணி வெற்றி பெற்று கோப்பையை தட்டிச் சென்றது. உலகிலேயே மிகப் பணக்கார அமைப்பு என்பதை இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்திய இந்தப் போட்டித் தொடரின் ஆடம்பரம், பிரமாண்டம் நிரூபித்தது.

சச்சின் 12,000 ...

சாதனை நாயகன் சச்சின் டெண்டுல்கருக்கு 2008ம் ஆண்டு மறக்க முடியாத ஆண்டு. காரணம், இந்த ஆண்டில்தான் அவர் லாராவின் உலக சாதனையை ஒரு வழியாக முறியடித்தார். அக்டோபர் 17ம் தேதி நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின்போது லாரா வைத்திருந்த டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன் சாதனையை (11,953) கடந்தார் சச்சின். 12 ஆயிரம் ரன்களைத் தற்போது தாண்டி தொடர்ந்து சாதனை தாகத்துடன் கிரிக்கெட் ஆடிக் கொண்டிருக்கிறார் சச்சின். உலக அளவில் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் சச்சின் குவித்து வைத்துள்ள சாதனை ரன்களை தாண்ட மற்ற வீரர்களுக்கு ரொம்ப காலமாகும்.

ஜாம்பவான்களுக்கு டாடா ...

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான்களான அனில் கும்ப்ளேவும், செளரவ் கங்குலியும் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றனர். இந்திய பந்து வீச்சாளர்களிலேயே அதிக அளவிலான விக்கெட்களை வீழ்த்திய சாதனைக்குரியவர் கும்ப்ளே. 619 விக்கெட்களை வீழ்த்திய சாதனைக்குரியவர் கும்ப்ளே. நவம்பர் மாதம் நடந்த இந்திய - ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான டெல்லி டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெற்றுக் கொண்டார் கும்ப்ளே. அருமையான கிரிக்கெட் வீரர், நிஜமான ஜென்டில்மேன் என சக கிரிக்கெட் வீரர்களால் பாராட்டப்பட்டவர் கும்ப்ளே. அவரது நிழலுக்கு அருகில் கூட இன்னொரு இந்திய சுழற்பந்து வீச்சாளர் யாரும் இல்லை.

கும்ப்ளேவைப் போலவே பல்வேறு சாதனைகளுக்குச் சொந்தக்காரரான கங்குலியும் இதே ஆண்டில்தான் ஓய்வு பெற்றார். தனது கடைசிக்கால கிரிக்கெட்டின்போது பல கசப்பான அனுபவங்களை சந்தித்திருந்தாலும், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக கங்குலி இருந்தபோது நிஜமாகவே இந்திய அணியைப் பார்த்த மற்ற அணிகள் மிரண்டது நிஜம். டோணிக்கு முன்பே உலக கிரிக்கெட் அணிகளின் சிம்ம சொப்பனமாக விளங்கியவர் கங்குலி. 12 ஆண்டு காலம் கிரிக்கெட் ஆடிய கங்குலி, நவம்பர் 10ம் தேதி நடந்த நாக்பூர் டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெற்றார்.

சரிந்த சானியா ..

இந்திய டென்னிஸின் இளம் புயல் சானியா மிர்ஸாவுக்கு இந்த ஆண்டு நிச்சயம் நல்ல ஆண்டு இல்லை. தொடர் காயத்தால் 31வது இடத்திலிருந்து 100வது ரேங்குக்கு இறங்கிப் போய் விட்டார் சானியா. வருடத்தின் ஆரம்பத்தில் கலந்து கொண்ட ஆஸ்திரேலிய ஒபன் போட்டியில் 3வது சுற்று வரை முன்னேறியதே அவர் செய்த ஒரே சாதனை. அதன் பின்னர் தொடர்ந்து அவர் காயத்தால் அவதிப்பட்டு வந்ததால், போட்டிகள் எதிலும் பங்கேற்கவில்லை. இப்படி காயத்தால் தேக்க நிலையைக் கண்ட சானியா 2009ம் ஆண்டில்தான் தனது வெற்றிக் கணக்கை துவக்குவார் எனத் தெரிகிறது.

அடித்த சிங் .. அழுத சாந்த் ...

டிரவுசர் போட்ட நர்சரி பள்ளிச் சிறார்கள் அடித்துக் கொண்டு அழுவதைப் பார்த்திருக்கிறோம். ஆனால் ஹர்பஜன் சிங் அடிக்க, ஸ்ரீசாந்த் தேம்பித் தேம்பி அழுததை டிவியில் பார்த்தபோது இந்தியாவே 'கலங்கித்தான்' போனது. ஐபிஎல் லீக் போட்டியில் மும்பை அணிக்காக ஆடினார் ஹர்பஜன் சிங். பஞ்சாப் அணியில் இடம் பெற்றிருந்தார் ஸ்ரீசாந்த். லீக் போட்டியின்போது மும்பை அணியை பஞ்சாப் தோற்கடித்தது. அப்போது அணிக்குத் தலைமை தாங்கிய ஹர்பஜன் சிங், ஸ்ரீசாந்த் ஜாலியாக வார, கடுப்பான சிங், சாந்த்துக்கு விட்டார் ஒரு பளார் அறை. இதை சற்றும் எதிர்பாராத ஸ்ரீசாந்த், மைதானத்தில் நின்றபிட தேம்பித் தேம்பி அழ ஒட்டு மொத்த ஸ்டேடியமும் உச் கொட்டியது. சக வீரர்கள் தேற்றிப் பார்த்தும், அடக்க முடியாமல் ஸ்ரீசாந்த் அழுததுதான், விளையாட்டு உலகில் இந்த ஆண்டின் உருக்கமான சம்பவம் எனலாம். ஆனால் அதன் பின்னர் அவர் அண்ணன், நான் தம்பி, அவர் அடிக்கலாம் என்ற ரேஞ்சுக்கு ஸ்ரீசாந்த் பேசி சமாதானமாகிக் கொண்டார்.

'குப்புறடித்த' ஹாக்கி ...

இந்திய ஹாக்கி அணிக்கு 2008ம் ஆண்டு ஏழரை சனிக் காலம்.

இதுவரை இல்லாத பெரும் கேவலமாக, ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெறத் தவறியது இந்திய ஹாக்கி அணி. ஒலிம்பிக்கில் எட்டு முறை தங்கம் வென்ற பெருமைக்குரியது நமது ஹாக்கி அணி. ஆனால் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற தவறியபோது அதைக் கண்டு வேதனைப்பட்டனர் இந்திய ஹாக்கி ரசிகர்கள். இதை விட மோசமான சம்பவம் ஒன்றையும் இந்திய ஹாக்கி சம்மேளனம் சந்தித்தது. அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கிப் போட்டிக்கான அணியில் இடம் பெறுவற்காக இந்திய ஹாக்கி சம்மேளன செயலாளர் ஜோதிகுமரனிடம், டெல்லி வீரர் ஒருவர் லஞ்சம் கொடுத்தது ஸ்டிங் ஆபரேஷன் மூலம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து ஜோதிகுமரன் ராஜினாமா செய்தார். இந்திய ஹாக்கி சம்மேளனத்தை இந்திய ஒலிம்பிக் சங்கம் கலைத்து விட்டது. இதற்கு மேல் இந்திய ஹாக்கி அணியின் 2008ம் ஆண்டு செயல்பாடு குறித்து விசேஷமாக கூற எதுவும் இல்லை.

சினிமா

தமிழ் சினிமா உலகத்தை பொறுத்தவரை 2008ம் ஆண்டு சிறப்பான ஆண்டாகவே இருந்திருக்கிறது. 2007ம் ஆண்டில் வெளியான மொத்த படங்களின் எண்ணிக்கை 137. இது 2008ம் ஆண்டில் 180 ஆக அதிகரித்திருந்தது. இதில் நேரடி படங்களின் எண்ணிக்கை 2007ல் 107. இது 2008ல் 119ஆக உயர்ந்துள்ளது. இதேபோல 2007ல் 30 மொழிமாற்ற படங்கள் மட்டுமே ரசிகர்களுக்கு விருந்து படைத்தன. ஆனால் 2008ல் 61 மொழிமாற்ற படங்கள் வந்துள்ளன.

2008ல் வெளியான படங்கள்

1. அஞ்சாதே

2. அசோகா

3. அபியும் நானும்

4. அய்யா வழி

5. அரசாங்கம்

6. அலிபாபா

7. அழகு நிலையம்

8. அழைப்பிதழ்

9. அறை எண் 305ல் கடவுள்

10. ஆடும் கூத்து

11. ஆயுதம் செய்வோம்

12. இந்திரலோகத்தில் நா.அழகப்பன்

13. இயக்கம்

14. இன்பா

15. இனி வரும் காலம்

16. உத்தரவின்றி உள்ளே வா

17. உருகுதே

18. உளியின் ஓசை

19. உனக்காக

20. உன்னை நான்

21. எல்லாம் அவன் செயல்

22. எழுதிய தாரடி

23. ஏகன்

24. ஃஅக்கு

25. கட்டுவிரியன்

26. கண்ணும் கண்ணும்

27. கத்திக்கப்பல்

28. காசிமேடு கோவிந்தன்

29. காதல் என்றால் என்ன

30. காதல் கடிதம்

31. காதல் வானிலே

32. காத்தவராயன்

33. காலைப்பனி

34. காளை

35. கி.மு.,

36. குசேலன்

37. குருவி

38. கொடைக்கானல்

39. சக்கரகட்டி

40. சக்ரவியூகம்

41. சண்டை

42. சத்யம்

43. சந்தோஷ் சுப்ரமணியம்

44. சரோஜா

45. சாதுமிரண்டா

46. சாமிடா

47. சிங்கக்குட்டி

48. சில நேரங்களில்

49. சிலம்பாட்டம்

50. சுட்டபழம்

51. சுப்ரமணியபுரம்

52. சூர்யா

53. சேவல்

54. தங்கம்

55. தசாவதாரம்

56. தரகு

57. தனம்

58. தாம்துõம்

59. தித்திக்கும் இளமை

60. திருதிருடா

61. திருவண்ணாமலை

62. தீக்குச்சி

63. தீயவன்

64. துரை

65. துõண்டில்

66. தொடக்கம்

67. தோட்டா

68. தோழா

69. நடிகை

70. நாயகன்

71. நெஞ்சத்தை கிள்ளாதே

72. நேபாளி

73. நேற்று இன்று நாளை

74. பஞ்சாமிர்தம்

75. பச்சை நிறமே

76. பத்து பத்து

77. பந்தயம்

78. பழனி

79. பட்டைய கிளப்பு

80. பாண்டி

81. பிடிச்சிருக்கு

82. பிரிவோம் சந்திப்போம்

83. பீமா

84. புதுசு கண்ணா புதுசு

85. புதுப்பாண்டி

86. பூ

87. பூச்சி

88. பொம்மலாட்டம்

89. பொய் சொல்ல போறோம்

90. பொன் மகள் வந்தாள்

91. மகேஷ் சரண்யா மற்றும் பலர்

92. மதுரை பொண்ணு சென்னை பையன்

93. மலரினும் மெல்லிய

94. மாணவ மாணவிகள்

95. மாணவன் நினைத்தால்

96. முதல் முதல் முதல் வரை

97. முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு

98. மோகம்

99. யாரடி நீ மோகினி

100. ரகசிய சினேகிதனே

101. ராமன் தேடிய சீதை

102. வசூல்

103. வம்புச்சண்டை

104. வல்லமை தாராயோ

105. வழக்கறிஞர் அர்ச்சனா

106. வள்ளுவன் வாசுகி

107. வாரணம் ஆயிரம்

108. வாழ்த்துகள்

109. வாழ்வெல்லாம் வசந்தம்

110. விளையாட்டு

111. வெள்ளித்திரை

112. வேதா

113. வேள்வி

114. வைத்தீஸ்வரன்

115. ஜெயங்கொண்டான்

மறைந்த பிரபலங்கள்..:

தமிழ் சினிமாவின் ஜாம்பவான் கலைஞர்கள் சிலர் இந்த ஆண்டில் மறைந்து திரையுலகை மட்டுமல்லாமல், ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தினர்.

பழம்பெரும் வில்லன் நடிகர் எம்.என்.நம்பியாரின் மறைவு அனைத்து திரை ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. 1000 படங்களுக்கு மேல் நடித்த அற்புதமான நடிகரான நம்பியார் உடல் நலக்குறைவு மற்றும் வயோதிகத்தால், நவம்பர் 19ம் தேதி மரணமடைந்தார்.

மிகப் பெரிய இயக்குநர்களில் ஒருவரான ஸ்ரீதர், அக்டோபர் 20ம் தேதி மரணமடைந்தார். நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த ஸ்ரீதர் காதலுக்குப் புது மொழியும், புது வடிவும் கொடுத்த சிறந்த இயக்குநர் ஆவார்.

எழுத்தாளர், அறிவாளி, அறிவியலாளர், தமிழார்வலர், திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா என பன்முகம் கொண்டா சுஜாதாவும் இந்த ஆண்டுதான் மறைந்தார். பிப்ரவரி 27ம் தேதி சுஜாதா இறந்தபோது, எழுத்துலகும், இலக்கிய உலகும், திரையுலகும் சேர்ந்து வருந்தின.

வித்தியாசமான வில்லனாகவும், சிறந்த குணச்சித்திர நடிகராகவும் அறியப்பட்ட ரகுவரன் மார்ச் 19ம் தேதி மாரடைப்பால் காலமானார்.

அதேபோல ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான ஜீவா, ரஷ்யாவுக்கு தாம் தூம் படத்தின் ஷூட்டிங்குக்காக போன இடத்தில் உயிரிழந்தார்.

நடிகர் பாண்டியன், குணால், குன்னக்குடி வைத்தியநாதன், பூரணம் விஸ்வநாதன், தேனி குஞ்சரம்மாள், தியாகராஜ பாகவதரின் மனைவி ராஜாம்பாள், பிரபு தேவாவின் மகன் விஷால், பழம்பெரும் தெலுங்கு நடிகர் சோபன்பாபு ஆகியோரும் 2008ல் மறைந்த திரையுலகினர்.