Thursday, September 16, 2010

திருமண வாழ்த்துக்கள் - மீனா ராஜேந்திரன்

எனது பழைய அலுவலக தோழி பாண்டிச்சேரி இராணி, திரு. மீனா அவர்களின் திருமணம் இன்று கூடுவாஞ்சேரில் நடைபெறுவதை தெரிவித்துக் கொண்டு, என்னுடைய திருமண வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்

Friday, September 10, 2010

திருமண வாழ்த்துக்கள் - சிவா பிரசாத்

என்னுடைய பொறியியல் கல்லூரி நண்பர் சிவா பிரசாத்தின் திருமணம் மதுரையில் நடைபெறுவதை தெரிவித்துக் கொண்டு, என்னுடைய திருமண வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்

Thursday, September 09, 2010

அஞ்சலி - நடிகர் முரளி


நேற்று இரவு நடிகர் முரளி மாரடைப்பால் சென்னையில் காலமானார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்து, என்னுடைய இரங்கலை அவரது குடும்பத்துக்கு தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் திரையுலகில் குறிப்பிடத்தக்க நடிகர் ஒருவரில் முரளிக்கு நிச்சய இடம் உண்டு. இவரது மறைவு, கண்டிப்பாக திரையுலகிற்கு மிக பெரிய இழப்பு.

என்றும் நினைவில் இருக்கும் முரளியின் திரைப்படங்கள்:

  • பூவிலங்கு
  • பகல்நிலவு
  • புது வசந்தம்
  • இதயம் 
  • அதர்மம்
  • காலமெல்லாம் காதல் வாழ்க
  • பொற்காலம்
  • காதலே நிம்மதி
  • தினந்தோறும்
  • பூந்தோட்டம்
  • உன்னுடன்
  • தேசியகீதம்
  • வெற்றி கொடி கட்டு
  • ஆனந்தம்
  • அள்ளி தந்த வானம்

Wednesday, September 08, 2010

காதல் சொல்ல வந்தேன் - திரைவிமர்சனம்


முதலாம் ஆண்டு படிக்கும் மாணவன் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவியை காதலிப்பது தான் படத்தின் ஒருவரி கதை. அவர்கள் இணைந்தார்களா இல்லையா என்பதே முடிவு. இதே மாதிரியான கதைகள் பல இருந்தாலும், இதை கொடுத்த விதம் தான் நம்மை அமரசெய்கிறது. முதலாம் ஆண்டு மாணவனாக கான காணும் காலங்கள் பாலாஜி. சின்ன பையன் என்றாலும் அதே மாதிரி கதை என்பதால் அமைந்து விட்டது. பரவில்லை என்றே கூறலாம். ஆனால் என்ன நடிப்பில் இன்னும் தேற வேண்டும். இவனுடன் நண்பனாக வரும் சபேஷ் கார்த்திக் தான் கலக்கல். அதுவும் கஜினி இசையுடன் வரும் அந்த இடம் கலக்கல் தான். காமெடி என்று தனியாக இல்லாமல், கதையின் வசனத்திலேயே வைத்து, அதையும் படம் முழுவதும் செய்து உள்ளனர். 



நாயகியாக மேக்னா. கதைக்கு ஏற்ற நாயகி என்று கூறுவதை விட, கதைக்கு ஏற்ற முதிர்ந்த முகமும் மற்றும் தேறிய உடல் அமைப்பும்  உள்ள பெண் தான். என்ன தான் நாயகன் ஜூனியர் பையன் என்றாலும், பழக்கமே இல்லாத ஒரு பெண் தீடிர் என்று நெருக்கமாக பழகினால், காதல் வர தான் செய்யும். நன்றாக பழகி விட்டு, அக்கா கூப்பிட சொன்னால், கஷ்டம் தான்.


படத்தின் இன்னொரு முக்கிய நபர் என்று கூறினால், அது இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தான். பாடல்கள் கேட்கும் ரகம் தான் என்றாலும், பின்னணி இசை கூட நன்றாக அமைத்து இருக்கிறார்.

மொத்தத்தில் இப்படம் டைம் பாஸ் படம். ஒரு முறை சின்ன திரையில் பார்க்கலாம்.

தமிழ் திரையுலகத்திற்கு: அல்டிமேட் ஸ்டார் அஜித் நடித்த 'வில்லன்' திரைப்படத்தின் முதல் காட்சிக்கான டிக்கெட் கையில் இருந்ததால் பார்க்க போனோம். அப்போது ரசிகர் மன்றத்தில் இருந்து வந்த நபர்கள், கிட்டதட்ட ஐந்து லிட்டர் பாலை, திரைஅரங்கத்தின் முன்னால் இருந்த அஜித்தின் அட்டையில் ஊற்றினார்.  இதை விட, படையப்பா வெளிவந்த பொழுதில், இரண்டாம் நாள் காலையில் திரை அரங்கில் முன்னால் மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு படத்தை காண வரிசை. இடையில் நிற்கும் ஒரு நபருக்கு கையில் அடிபட்டு ரத்தம் வருகிறது. ஆனால் ரத்தத்தை துடைத்துக் கொண்டே, படத்தினை காண வரிசையில் நின்றான். 

இப்படி பட்ட ரசிகர் மக்கள் கொண்ட தமிழ் நாட்டில், இந்த மாதிரியான வயதுக்கு மீறிய காதல் என்று வந்தால், தமிழ் நாடு சீரழிந்து போவதை யாராலும் தடுக்க முடியாது. இந்த படத்தை, நம்ம தலைவர்களின் படத்துடன் ஒப்பிடவில்லை. ஆனால் நம் ரசிகர்கள் திரை படத்தை அவர்களின் நண்பராக, உயிராக நினைப்பார்கள். திரைப்படத்தில் வரும் நடிப்பை/கதையை/கருத்தை அப்படியே சில பேர் எடுத்து கொள்ளுபவர்கள். சிலநாட்களுக்கு முன் வெளியான இனிது இனிது திரைப்படத்திலும் இதே மாதிரியான ஒரு காதல் உண்டு.  இந்த மாதிரியான படத்தை பார்த்தல், கண்டிப்பாக கல்லூரி மாணவர்கள் மட்டும் இல்லாமல், பொதுவாகவே இளவயதினர் தவறாக இதை எடுத்து கொள்ள நிறைய வாய்ப்புகள் உண்டு. இயக்குனர்கள் மற்றும் தாயரிப்பளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து நல்ல திரைப்படத்தை கொடுத்தல் சரி.

Tuesday, September 07, 2010

இனிது இனிது - திரைவிமர்சனம்


சாதாரண கல்லூரி வாழ்க்கை திரைப்படம் தானே என்று நினைத்து மாலைபொழுதில் பார்த்துவிட்டு சொந்த வேலைகளை பார்க்க சென்று விட்டேன். ஆனால் தூங்கும் போது மனதில் அந்த படத்தின் காட்சிகளும், நண்பர்களிடையே ஏற்படும் சின்ன சின்ன சந்தோஷங்கள் மற்றும் சண்டைகள் வரும் போது, அதே விதத்தில் உள்ள என்னுடைய நிஜ கல்லூரி வாழ்க்கை நினைவுகள் வந்து சிறு சிரிப்பை உதட்டில் கொண்டு வந்தது தான் இப்படத்தின் வெற்றி. 

பதிவுலகில் தெலுகு படம் இதை விட நன்றாக இருக்கும் என்று பல பேர் கூறி இருந்தனர். ஆம் அது உண்மை தான்.  தெலுகுகில் இப்படம் பாதி படம் தான் பார்த்து இருந்தேன். அந்த பாதி படமும் தமிழில் பார்க்கும் போது தெலுகு படத்தின் காட்சிகள் மனதில் வருவதை தடுக்க முடியவில்லை. 


இதில் உள்ள எந்த கதாப்பாத்திரமும், மற்ற கதாப்பாத்திரத்திற்கு குறை இல்லை. சித்தார்த், மது, சங்கர், சங்கீதா, அப்பு, டைசன், ஸ்ர்ப்ஷ் என்று பல பேர் இருந்தாலும், ஒவ்வொருவரும் இப்படத்தின் நாடி துடிப்பு. பல பேர் அறிமுகங்கள் என்றாலும், அதை திரையில் கண்டுபிடிப்பது கஷ்டம் தான். 


இயக்குனரை பல இடங்களில் பாராட்டியே ஆகவேண்டும்.நடிகர்களை தேர்வு செய்த விதம், காட்சி அமைப்புகள்மற்றும் நடிகர்களின் உடை. எங்குமே ஒரு வறண்ட மற்றும் அழுக்கு காட்சியை காட்டாமல்எல்லா இடத்திலும் வண்ணங்கள் . நகைச்சுவை என்று தனியாக இல்லாமல், வசனங்களிடையே வைத்து தான் பலம். 

மொத்தத்தில் இனிமையான பயணம்

Friday, September 03, 2010

The Tournament – 2009 – ஆங்கிலம் - திரைவிமர்சனம்


2008ம் வெளிவந்த "Death Race" படத்தின் கதை: சிறைச்சாலையில் கைதிகளிடையே நடக்கும் கார் ரேஸ்ஷை, உலகுக்கு ஒளிபரப்பி பணம் சம்பாதிக்கும் சிறைஅதிகாரி. மக்கள் இதில் அதிக பணம் கட்டி ஆட வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு கைதிகளை கொல்வது. ஆனால் வெளியில் இருந்து பார்க்கும் போது விபத்து போல தெரியும். கடந்த வருடத்தில் முதல் நிலை வகிக்கும் நபரை சிறை அதிகாரி கொன்று விட, அந்த இடத்திற்கு நாயகனை கொண்டு வருகிறார். அதுவும் நாயகனுக்கே தெரியாமல், அவனது மனைவியை கொன்று, அந்த பலியை அவன் மேல் செலுத்தி, சிறை சாலைக்கு கொண்டு வர படுகிறான். கார் ரேஸ் துவங்க, சிறை அதிகாரிக்கு பணம் கொட்டுகிறது. இந்த ரேசில் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு வர, கண்டிப்பாக அடுத்தவனை கொல்ல வேண்டும். ஜெய்த்து வந்தால் அவனுக்கு பரிசு மற்றம் விடுதலை. முடிவில் நாயகனுக்கு உண்மை தெரிந்து விளையாட்டில் எப்படி வென்றார் மற்றும் சிறை அதிகாரியை எப்படி பழி வாங்கினர் என்பதே மீதி கதை.


அதே வடிவில் இன்னொரு உயிர் விளையாட்டு படம்: எழு வருடங்களுக்கு ஒரு முறை, ஊரில் வசிக்கும் பணக்காரர்கள் இரத்த விளையாட்டை ஆடுகின்றார். பத்து பேர் தேர்வு செய்யப்பட்டு, மணி நேரத்தில் அனைவரையும் கொன்று முதலில் வர வேண்டும். வென்று வந்தவர்களுக்கு பண மழை பரிசு. கடந்த வருடத்தில் வென்ற ஒருவனை இந்த வருடத்திலும் விளையாட வைக்க, அவனது மனைவியை அவர்களே கொன்று மீண்டும் இந்த போட்டிக்கு அவனை வர வைக்கின்றனர். அவன் மேல் பணத்தை கட்ட பல பேர் முன் வருவார்கள் என்ற காரணம். இதிலும் விளையாட்டு ஆரம்பிக்கிறது. உண்மை விஷயம் அவனுக்கு தெரிய வர, அதே மீதி கதை. 


கதைப்படி பார்த்தல் அதே தான். ஆனால் இங்கு ஒரு பாதரியார் தெரியாமல் இந்த விளையாட்டில் மாட்டி கொள்கிறார். அதே போல் நாயகியாக வரும் பெண், அப்பாவிகளை கொல்லாமல் விடுவது மற்றும் இன்னொரு நபர் விளையாட்டில் இருந்து தப்பித்து, ஆனால் மற்றவர்களை கொல்வது என்று பல திருப்பங்களை இயக்குனர் வைத்து உள்ளார். உயிர் விளையாட்டு ஆரம்பிக்கும் போது, நாம் சீட்டின் முனியில் வருவது உண்மை தான். கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம்.

புன்னகை - சிறுகதை

குமார், நேரத்தை பார்க்கும் போது காலை மணி 8:30. இன்னும் ஒரு நாள் தான் இந்த அமெரிக்கா வாழ்க்கை. நாளைக்கு மதியம் விமானம் அதுவும் நேராக சென்னைக்கு. அமெரிக்காவிற்கு வந்து ஒரு வருடம் மற்றும் மூன்று மாதம் ஆகிறது. செய்த வேலை போதும் என்று நிறுவனம் சொன்னதால், வேலை பார்க்கும் கம்பெனி அவனை சென்னைக்கே வர சொல்லி விட்டது. குமாருக்கோ இந்த அமெரிக்கா வாழ்க்கையை விட, இன்னும் ஒரு வருடம் இருந்தால் ஓரளவு காசு பார்த்து இருக்கலாமே என்ற எண்ணம் மேல்லொங்கி இருந்தது. ஆனால் இப்போது ஒன்றும் செய்ய முடியாது. கண்டிப்பாக போய் தீர வேண்டும் என்ற கட்டாயம். குமார் வேலை செய்த இடத்தில் அவனையும் சேர்த்து பத்து பேர் வேலை செய்து கொண்டு இருந்தனர். அனைவரும் அவன் வயது ஒத்தவர்கள் மற்றும் யாருக்கும் கல்யாணம் ஆகவில்லை. அதனால் எப்போதுமே ஒரே ஆட்டம், பாட்டம் தான். 

கணேஷ், குமாரின் நெருங்கி நண்பன். இந்தியாவில் இருந்து வந்து ஆறு மாதம் ஆகிறது. ஆனால் என்ன காரணமோ இருவரும் சில வாரத்திலேயே நெருங்கி பழக ஆரம்பித்து விட்டனர். ஏற்கனவே அமெரிக்காவில் வேலை பார்த்து இருந்த அனுபவம் இவனிடத்தில் இருந்தது. இரண்டு பேரும் சேர்ந்து எல்லா இடத்திற்கும் சென்று வந்தனர். 

பத்து மணிக்கு கணேஷ், குமாரின் வீட்டிற்கு வர இரண்டு பேரும் பெரிய பெரிய கடைக்கு சென்று வீட்டிற்கு வாங்க வேண்டிய மீதம் உள்ள பொருட்களை வாங்கி கொண்டு மாலை ஏழு மணிக்கு பார்ட்டிக்கு வந்தனர். குமார் கொடுக்க போகும் பார்ட்டி. வேலை பார்க்கும் அனைத்து நண்பர்களும் வர, பார்ட்டி ஆரம்பம் ஆகி, இரவு பதினோரு மணி வரை சென்றது. குமார் மகிழ்ச்சியுடன் இருந்தாலும், மனதில் ஒரு சோகம் இருந்து கொண்டு தான் இருந்தது. 

அடுத்த நாள் காலையிலே குமாரின் வீட்டிற்கு அனைவரும் வர, மதிய நேரம் வரை பேசி கொண்டு இருந்து விட்டு விமான நிலையத்திற்கு புறப்பட்டனர். விமான நேரத்தில்  கணேஷ் தனியாக குமாரை அழைத்து, "நானும் இதற்கு முன்னால் அமெரிக்காவில் இருந்து உள்ளேன் உனக்கு தெரியும். என்னுடன் மொத்தம் இருவது பேர் வேலை பார்த்தனர். அதுவும் நான் கிளம்பியது சனிக்கிழமை தான். ஆனால் என்னை வழி அனுப்ப ஒருவரும் வரவில்லை. அந்த வேதனை உனக்கு தெரியாது.  நான் மட்டும் தனியாக வீட்டில் இருந்து புறப்பட்டு சென்னைக்கு கிளம்பினேன். நானும் உன்னை போல் கவலை பட்டவன் தான். காசு பார்க்காமல் செல்கிறோமே என்று. ஆனால் அதுவல்ல நிஜம். மீண்டும் எனக்கு அமெரிக்கா வாய்ப்பு கிடைத்து வந்து விட்டேன். அதே போல் உனக்கும் இன்னொரு வாய்ப்பு கிடைக்கும். ஆனால் உன்னை மதித்து, உன்னை வழியனுப்ப வந்த நண்பர்களை மறந்து, நீ சோகமாக இருப்பது தப்பு. காசு இன்னைக்கு வரும், நாளைக்கு போகும். அதனால் நண்பர்களை/உறவினர்களை/மனிதர்களை முதலில் நினை" என்று கூற, குமாரின் மனதிற்கு உண்மை என தோன்றி, முள்ளால் குத்தியது போல் இருந்தது. விமான சோதனை அறைக்கு செல்லும் முன் அனைத்து நண்பர்களையும் பார்த்து, முதல் முதலில் உண்மையான புன்னகை.