Showing posts with label 2011. Show all posts
Showing posts with label 2011. Show all posts

Wednesday, February 08, 2012

டெல்லி பெல்லி - திரைவிமர்சனம் – 2011 – Delhi Belly


 
இன்னுமும் தமிழில் அருவாள், மண்வாசனை, அம்மா/அப்ப/தங்கை பாசம் போன்ற படங்கள் மற்றும் தினசரி வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை காட்டும் படமே எடுக்கபடுகிறது மற்றும் ஓட்டவும் படுகிறது. அதை மீறி படங்கள் எடுத்தால் கஷ்டம் தான். மக்களின் ரசனை அவ்வளவு தானா? அல்லது ரசனையை வெளிபடுத்த மறுக்க படுகிறதா அல்லது தமிழ் என்ற உணர்வின் காரணமா என்ற கேள்வி இன்னும் தமிழ் திரைஉலகத்தில் இருக்கிறது.  இதை அனைத்தையும் உடைத்து விட்டு, மக்களின் வேறு ரசனையை தட்டி எழுப்பிய படம் என்று இத்திரைப்படத்தை கூறலாம். வெறுமனே  ஜாலியான திரைக்கதை மற்றும் இளசுகளை கட்டி போடும் காட்சி மற்றும் வசன அமைப்புகள் வைத்து கொண்டு இரண்டு மணி நேரம் ஒரு திரைப்படம் என்றால் இது தான். அனைத்து காட்சிகளும் மற்றும் வசனங்களும் தமிழ் நாட்டை பொறுத்த வரை கெட்ட காட்சிகள் மற்றும் கெட்ட வார்த்தைகள் என்றால் யூகித்து கொள்ளுங்கள்.


இம்ரான்கான் ஒரு செய்திமைப்பாளர். அவரின் காதலி விமானத்தில் பணிபுரியும் ஒரு நங்கை. இம்ரான் உடன் குன்னால் மற்றும் அருப் தங்கி இருப்பார்கள். கள்ள கடத்தல் செய்யும் கும்பல், காதலி வழியாக ஒரு பார்சலை கொண்டு வந்து இருப்பார்கள். அவள் அந்த பார்சலை அனுப்புவதற்கு இம்ரானை கேட்க, இம்ரான் குன்னலை கேட்க, குன்னால் அருப்பை கேட்க, கடைசியில் பார்சல் மாறி சென்று விடுகிறது. அதனால் ஏற்படும் விளைவுகள் மற்றும் காதல் என்ன ஆனது என்று எல்லா கேள்விகளுக்கும் முடிவில் பதில்.


இம்ரான் உடன் வேலை பார்க்கும் பூர்ணவின் மறுவாழ்க்கை, குன்னலின் குறுக்கு புத்தி, அருப்பின் காதல், கள்ள கடத்தல் கும்பல் என்று பல கிளைகள். இத்தனையும் இரண்டு மணி நேரத்தில் வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறார்கள் அதுவும் தமிழ் உள்ள அனைத்து கெட்ட வார்த்தைகளுடன். உச்ச கட்டமாக, குன்னால் தன்னுடைய வீட்டு சொந்தகாரரை மிரட்ட, அவர் போட்டோ எடுக்க செல்லும் இடமும், காசு கொடுத்த பின் கை வைக்கும் இடமும், முடியல. அதே போல் இம்ரான் தன் காதலி உடன் இருக்கும் காட்சிகள் படத்தின் வரம்புக்கு உச்சகட்டம். அருப் தன் காதலில்லை பற்றி குறை சொல்வதாக காட்டும் காட்சிகள் வசனத்தின் வரம்பு. இதற்கு மேல் கெட்ட வார்த்தைகளுடன் எழுத முடியாது.  இதே போன்ற காட்சிகளை தமிழில் கற்பனை செய்ய முடியவில்லை.


வறச்சி இல்லாமல் கண்கள் முழுவதும் பல வண்ணங்கள். காரணம் அதற்கு காரணம் ஒளிபதிவாளர் ஜசோன். அருமையான காட்சி அமைப்புகள். பாடல்கள் தான் ஏனோ மனதில் நிற்க மறுக்கிறது. அதே போல் பின்னணி இசை சுமார் ரகம் தான். மொத்தத்தில் டெல்லி பெல்லி வயது வந்தவர்களுக்கு ஒரு அருமையான படம். தமிழில் இதே படத்தை எடுத்தால், கண்டிப்பாக மெகா ஹிட் தான்.

Wednesday, February 01, 2012

திரைவிமர்சனம் - The Train – மலையாளம் - 2011




11 ஜூலை 2006ம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற வெடிகுண்டு நிகழ்வில் மலையாள மக்கள் எப்படி பாதிப்பு ஆனார்கள் என்பதை எடுத்து காட்டும் திரைப்படம். தெலுங்கில் வெளிவந்த வேதம் திரைப்படத்தில், வெவ்வேறு சூழ்நிலையில் இருக்கும் ஐந்து கதாபத்திரங்கள் முடிவில் வெடிகுண்டு வைக்கபடும் அரசு மருத்துவமனையில் ஒன்று சேரும் போது, அவர்கள் என்ன ஆனார்கள் என்பதை காட்டி இருப்பார்கள். இதே போல் இந்த மலையாள படத்தில்  பல்வேறு சூழ்நிலையில் இருக்கும் சில மலையாள கதாப்பாத்திரங்கள், இந்த ரயில் வெடிகுண்டு நிகழ்வில் என்ன ஆனார்கள் என்பதை திரில்லாக காட்டி இருக்கும் படம்.

இந்த படத்தை எடுத்து பார்க்க வைத்ததே Best Actor மம்மூட்டிக்கா. கதாபாத்திரம் என்று பார்த்தால், மம்மூட்டி எப்போதும் போல் அவர் மும்பையில் வேலை பார்க்கும் காவல் அதிகாரி (வடிவேலு போல் ஒரு உயர் அதிகாரி அல்ல). எல்லோரையும்  தீவிரவாதி என்று சந்தேகத்தால், பல அப்பாவிகளையும் கொடுமை படுத்தியவர் என்று பேருடன் இருக்கும் நபர். இதனால் இவர் உண்மையாக ஒரு தீவிரவாதியை பிடிக்கும் சமயம், உயர் அதிகாரிகளால் உதவி கிடைக்காமல் போக, தீவிரவாதி தப்பி விடுகிறான்.


ஜெயசூர்யா, இசை அமைப்பாளர் ரஹ்மான் குழுவில் பட இடம் கிடைத்து, மும்பையில் இருந்து சென்னைக்கு செல்ல தயார் ஆகும் ஒரு நபர். காலையில் இருந்து மாலையில் சென்னை ரயிலை பிடிக்கும் முன், அவருக்கு ஏற்படும் அனுபவங்கள்.


இன்னொரு கதையின் பாத்திரம், தந்தை மெக்கா செல்ல, ஒரு மகள் பணத்தை ஏற்பாடு செய்யும் போது அவள்படும் கஷ்டம். பணம் கிடைத்த மகிழ்ச்சியில், வேகமாக வீட்டிற்கு செல்ல ரயில்வேக்கு செல்ல

பேரனை காண, ஒரு தாத்தா படும் கஷ்டங்கள். அவர் முடிவில் பேரனை காண ரயில் ஸ்டேஷன் செல்ல

இப்படி பல்வேறு மனிதர்கள், எப்படி இந்த மாதிரியான வெடிகுண்டு நிகழ்வுக்கு சம்பந்தமே இல்லாமல் பலி ஆனார்கள் என்பதை மிக துல்லியமாக காட்டி இருக்கும் படம்.

இப்படத்தில் ஏதோ ஒரு குறை. அதன் காரணமாக பலி ஆகும் மக்கள் மீது வர வேண்டிய வருத்தம் முடிவில் வர மறுக்கிறது. ஆனால் கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம்

Thursday, December 01, 2011

மீண்டும்...மீண்டும்...II



சென்னையில் நடந்த ஒரு வீபரீதத்தை பார்க்கும் முன், நான் டாலர் தேசத்தில் தங்கி இருந்த கிராமத்துக்கு அருகில் ஒரு விமான நிலையம் உள்ளது. மொத்தமே சில விமானங்கள் தான் வந்து செல்லும் இடம். அது போலேவே சிறியவகை விமானங்களே மட்டுமே கையாளும் நிலையம். மதுரையில் இருந்து எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் அங்கு வரவே, அவரை வரவேற்க நான் சென்று இருந்தேன். அவர் சென்னை விமான நிலையத்தில் கொடுத்து இருந்த அவருடைய கை பெட்டிகள் மட்டும் அவருடன் வந்து சேர வில்லை. உடனடியாக அங்கு உள்ள அதிகாரியை தொடர்பு கொண்ட போது, மிக பொறுமையாக பெட்டிகளின் எண்ணை எடுத்து, கணிப்பொறியில் இருந்து பெட்டிகளின் நிலையை என்னவென்று கூறினார். அந்த பெட்டிகள் இப்போது எங்கு உள்ளது மற்றும் எப்போது இந்த விமான நிலையத்திற்கு வந்து அடைவதற்கு வாய்ப்புகள் உள்ளது என்று பொறுமையாக எடுத்து கூறினார். நண்பர் டாலர் தேசத்திற்கு புதியவர் என்பதால், தொடர்பு கொள்ள என்னுடைய முகவரி மற்றும் தொலைபேசி எண்ணும் கொடுத்தேன். இரவு எட்டு மணிக்குள் அனைத்து காட்சிகளும் நடைபெறுகிறது.

அதே தினத்தில் நடுஇரவு தொடங்கும் முன் தொலைபேசி அடித்தது. ஒரு வெள்ளைகார மனிதர் பேசினார். உங்களது முகவரியை தேடி கொண்டு இருக்கிறேன். அருகாமையில் உள்ள இடத்தை கூறவும் என்றார். நான் நீங்கள் யார் என்று கேட்டும் போது தான், அவர் எனது நண்பர் வந்து இறங்கிய விமானத்தை சேர்ந்தவர் என்றும், தொலைந்து போன பெட்டிகள் கொண்டு வந்து இருப்பதாவும் கூற, எனக்கு மகிழ்ச்சி. இது தான் விமானத்தில் பயணம் செய்யும் சந்ததர்களை மதிக்கும் விமானத்தை நடத்துவோரின் பண்பு. சுமார் 55 வயது உள்ள மனிதர். அவரே 23 கி.லோ எடை உள்ள பெட்டியை இரண்டாவது மாடிக்கு கொண்டு வருவதை பார்த்து, நானும் உதவி செய்தேன். ஆக மொத்தம் தொலைந்து போன போட்டிகள் வீடு தேடி வந்த கதை.

இப்போது சென்னையில்...


9 மாதங்களுக்கு பிறகு சென்னையில் வந்து இறங்கிய உடன், நானும் எனது பெட்டிகளுக்காக காத்து இருந்தேன். கடைசியாக எனது பெட்டிகள் தொலைந்து போனது தெரிந்தது. ஆம் தொலைந்து போனது எனது இரண்டு பெட்டிகள் மற்றும் நான் டாலர் தேசத்தில் வாங்கிய பெரிய தொலைக்காட்சி பெட்டி. தொலைந்து போன இரண்டு பெட்டிகளுக்கு கூட நான் கவலைப்படவில்லை. ஆனால் தொலைகாட்சி பெட்டி காணமல் போனது தான் என்னை பயமுரித்தியது. ஏற்கனவே நான் தொலைகாட்சி பெட்டி உடைந்து போய் வந்து இருக்குமோ என்ற பயத்தில் இருந்த நான், காணமல் போனது என்னை மேலும் பலவீனம் ஆக்கியது. நானும் இதே மாதிரியான பிரச்சனை எனது நண்பர்களுக்கு பார்த்து உள்ளத்தால், சிறிது தைரியம் இருந்தது. நானும் அமெரிக்காவில் இருப்பது போல், பெட்டிகளின் என்னை கொடுத்தால், அவர்கள் பெட்டிகள் எங்கு இருக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம் என்ற எண்ணத்தில், நான் வந்து இறங்கிய விமான நிலைய அதிகாரியை தொடர்பு கொண்ட போது தான் எனக்கு மயக்கம் மற்றும் பயமும் வந்தது. ஆம் அவர்கள் ஒரு வெள்ளை தாளை எடுத்து கொடுத்து, அதில் பிரச்சனையை எழுத கூறினார். நான் இருக்கும் இடத்தை மீண்டும் நினைவு படுத்தி பார்த்தேன். ஆம் நான் நிற்கும் இடம் சென்னையில் உள்ள வெளிநாட்டு பயணிகள் வந்து சேரும் இடம் தான். அங்கேயே வெள்ளை தாள் என்றால், இந்தியாவில் உள்ள மற்ற விமான நிலையங்களின் நிலைமை??? டாலர் தேசத்தில் உள்ள ஒரு கிராமத்தில் விமான நிலையத்தில் தொலைந்து போன பெட்டிகளை கண்டு பிடிக்கும் போது, மிக பெரிய விமான நிலையமான சென்னையில் பெட்டிகளை கண்டு பிடிக்க முடியவில்லை. எனது பிரச்சனையை வாங்கி கொண்டு, அவர்கள் கூறிய பதில், நாளை காலை உங்களுக்கு தொலைபேசி மூலம் விஷயத்தை விளக்குவார்கள் என்று கூறி விட்டு அவர்கள் சென்று விட்டனர்.

பெட்டிகள் மீண்டும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நானும் இந்த பளைபோன சென்னை விமான நிலையத்தை விட்டு போகும் போது, அடுத்து நடக்க இருக்கும் ஒரு விளையாட்டு தெரியாமல்....தொடரும்

Tuesday, November 29, 2011

மீண்டும்... மீண்டும்... – I

நீண்ட நாட்களுக்கு பிறகு, மீண்டும் என் வலை பதிவில். நான் அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு திரும்பி இரண்டு மாதத்திற்கு மேல் ஆகி விட்டது. அமெரிக்காவில் கடைசி மூன்று மாதத்தில், மனதில் ஒரு தடுமாற்றம். ஏதோ ஒரு சிந்தனை. யோசிக்க முடியாமல் ஒருவித எண்ணம். எடுத்த, எடுக்கின்ற மற்றும் எடுக்க போகும் முடிவுகள் சரியா என்ற என்ன ஓட்டம். இந்த மன ஓட்டங்கள், என்னை தொழில் வழியாகவோ அல்லது தனிபட்ட முறையிலோ என்னை கொல்லாமல் இருந்தாலும், பாதிக்கபட்டதாக நான் நினைத்து இந்த வலை பதிவு தான். என்னால் இந்த பகுதியே வர இயலாமல் போனது. மீண்டும் நம்பிக்கையுடன் கடந்த சில மாதத்தில் நடந்த என் அனுபவங்கள் இங்கே.

இந்தியா கிளம்புவதற்கு நான் தயாரான போது தான், இரண்டு விஷயங்கள் என் கண் வந்து ஓடின. அமெரிக்காவில் பல பகுதிகளுக்கு நான் சென்று இருந்தாலும், நயாகரா நீர்வீழ்ச்சி போகவில்லை என்ற மனக்குறையும், சென்னைக்கு செல்லும் போது எந்த பொருளை வாங்கி செல்ல வேண்டும் என்ற குழப்ப நிலையம் தான் அதிகமாக இருந்தது.

இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் நான் பார்த்த வரையில் மின்சாதன சந்தையில் எந்த விதமான மாற்றம் இல்லை (இரண்டு/மூன்று பொருட்களை தவிர). 2 மாதத்தில் அனைத்து பொருட்களையும் அலசி, கடைசியாக தொலைகாட்சி தான் எடுத்து செல்ல சரியான பொருள் என்று அறிந்து, முடிவு செய்யலாம் என்ற நேரத்தில் தான், எப்படி அதை இந்திய வரை கொண்டு செல்வது என்ற கேள்வி என் முன் வந்தது. நான் திரும்ப வருவதற்கு என் கம்பெனி பயணசீட்டு வழங்குவதால், என் இடத்தில் இருந்து கிளம்பும் அனைத்து விமான கம்பெனியிலும் கேட்டு, அது போக யார் யார் இதுவரை தொலைகாட்சியை இந்தியாவிற்கு கொண்டு சென்று உள்ளனர் என்பதை கண்டுபிடித்து, அனைவரிடமும் கேட்டு தெரிந்து கொண்டு, அதேபோல் எனது நண்பர்கள் மூலமாக இந்த பெட்டி இந்தியாவில் பிரச்சனை இல்லாமல் ஓடுமா என்ற விடைக்கு பதில் கிடைத்தபிறகு, ஒருவழியாக தொலைகாட்சியை வாங்கி விட்டேன். எனது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீட்டில் இல்லாததை தான் வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில், பெரிய தொலைகாட்சியை வாங்கினேன். சுமார் ஒரு மாதகாலமாக அதை உபயோகபடுத்தி, பிறகு தான் இந்த பெட்டி இந்தியாவிற்கு சரியாக இருக்கும் என்ற எண்ணம் வந்தது. விமான நிலையத்தில் கூறியவாறு, தொலைகாட்சியை பெட்டியில் பத்திரபடுத்தி, விமான நிலையம் சென்று கொடுத்தேன். அவர்கள் "உடையும் பொருள்" என்ற வாசகத்தை அதில் ஒட்டி, சாதாரணமாக எடுத்து சென்று விட்டனர். இங்கு முக்கியமான விஷயம் என்னவென்றால், தொலைகாட்சியை விமானத்தில் எடுத்து கொண்டுவர தனியாக பணம் கொடுக்க தேவையில்லை. விமான நிலையத்தினர் தொலைகாட்சியை கூட சாதாரண பெட்டி போல் கருதி, எடுத்து கொள்கின்றனர். ஆனால் விமானத்தில் எத்தனை பெட்டிகளை எடுத்து செல்வது என்பதற்கு ஒரு வரைமுறை உள்ளது. அந்த வரைமுறை இதற்கும் அடங்கும்.

அமெரிக்காவில் நடந்ததை விட சென்னையில் தான்... தொடரும்

Sunday, July 10, 2011

கலவைகள் - அமெரிக்காவை பற்றி

இந்த மாதம் ஐந்தாம் தேதி, நான் அமெரிக்காவில் சுற்றிய இடமான பினிக்ஸ், அரிசோனாவில் புழுதி புயல். இதை நான் எப்படி சொல்ல? ஆம், ஹாலிவுட் படமான மம்மி படத்தில், ஒரு காட்சியில் பாலைவனத்தில் புழுதி புயல் வரும். அதே போல் இன்று ஒரு புழுதி புயல், பினிக்ஸ் இடத்தை தாக்கி இருக்கிறது. சொல்ல போனால் அந்த காட்சியை பார்க்கும் போது, எதிர்பாரா ஒரு வித பயம் தானாகவே வந்து விடுகிறது. இந்த மாதிரியான நிலையிலும் ஒரு நல்ல செய்தி, மக்கள் யாரும் இந்த புயலால் பாதிக்கப்பட வில்லை.




***********************************************************************************
அமெரிக்காவில் கடந்த ஒன்றரை வருடமாக, என்னை சுற்றி பல இந்தியர்கள் இருக்கின்றனர். சுற்றுலா சென்ற இடத்திலும், பல தரபட்ட (ஜெர்மன், சீனா, ஜப்பான், தாய்லாந்து, தென் அமெரிக்கர்கள், மெக்ஸிகோ, அரபு) மக்களை கண்டு இருக்கிறேன். இருந்தாலும் அமெரிக்கா வெள்ளை இன மக்கள் மட்டும் ஒன்று கூடும் இடம் இல்லையா? என்று கேள்வி என் மனதில் இருந்து கொண்டே தான் இருந்தது. தற்போது அதற்கு விடை கிடைத்து விட்டது. வட அமெரிக்கா மக்களால் விரும்பி பார்க்கப்படும் விளையாட்டுகள் என்று சில உண்டு (rodeo இதில் முக்கியமானது). இந்த மாதிரியான போட்டிகள் நடப்பது வெளி உலக மக்களுக்கு தெரியாது.  அதாவது அமெரிக்கா வெள்ளை இன மக்களுக்கு தெரியவாரது. என் நண்பர்களில் ஒருவர் அமெரிக்கா இளைஞரின் நண்பர் என்பதால் இதை பற்றி கேள்வி பட்டு, கண்டிப்பாக செல்லலாம் என்று முடிவெடுத்து, நுழைவு சீட்டை வாங்கி, சென்ற போது நான் ஆச்சிரியம் அடைத்தேன். அனைத்து மக்களும் "குதிரை மனிதன்" (கவ் பாய்) உடையில். அந்த அழகு பதுமைகளை/தேவதைகளை பார்க்க ஆயிரம் கண் இருந்தாலும் போதாது. நீங்களே அந்த மகிழ்ச்சியை பெற, உங்களுக்காக நான் எடுத்த காட்சி  


Rodeo பற்றி சிறு குறிப்பு:
நான் சென்ற இடம் "Rodeo of the Ozark". ஓசார்க் (Ozark) என்பது மத்திய அமெரிக்காவில் உள்ள ஒரு மலை தொடர்ச்சி. இந்த இடத்தில் நடை பெறுவதால் தான் இந்த பெயர். அமெரிக்கா முழுவதும் இருந்து இந்த போட்டி விளையாட்டுகளை காண மக்கள் வருவார்கள். குதிரை மற்றும் காட்டு காளை மாடுகளை கொண்டு நடைபெறும் போட்டிகளை தான் என்பார்கள். அமெரிக்காவை தவிர ஆஸ்திரேலியா, மெக்ஸிகோ, பிரேசில், அர்கேன்டினா, சிலி, கனடா போன்ற நாடுகளில் இந்த விளையாட்டு போட்டிகள் நடைபெறும். நான் சென்ற இடம் அமெரிக்காவில் ஐந்தாவது இடத்தில் உள்ளது.

நான் சொல்லி அந்த விளையாட்டுகளை அறிவதை விட, நீங்களே சில போட்டிகளை காணுங்கள். இதே போல் பல போட்டிகள் இருந்தன.









அங்கு இருந்த கூட்டம் 600+ பேரை கொண்டது. அமெரிக்கா வெள்ளை இன மக்களை தவிர, வெளி உலக மக்கள் என்றால் நானும், என்னுடன் இருந்த நண்பர்கள் மட்டும் தான். இதை விட முக்கிய விஷயம், அமெரிக்காவில் உள்ள கறுப்பின மக்கள் ஒருவர் கூட இல்லாதது தான் மிக பெரிய அதிசயம்.

*********************************************************************************************
அமெரிக்காவின் சுதந்திர விழா நிகழ்ச்சிகளை நேரடியாக காண எனக்கு இந்த வருடம் வாய்ப்பு கிடைத்தது. அமெரிக்காவில் உள்ள எல்லா ஊர்களிலும் அந்த இடத்தின் சார்பாக அந்தந்த ஊர்களில் விழா கொண்டபடுகிறது. நான் இருப்பதே சிறு ஊர் தான் சொல்ல போனால் என் ஊர் ஒரு கிராமம். ஆனால் நான் இந்த விழாவில் கண்ட உற்சாகம், மதுரையில் என்ன, சென்னையில் கூட பார்த்து இல்லை. என் இடம் சிறிது என்றாலும், விழாவை காண வந்த கூட்டம் மதுரையில் திருகல்யாணம் முடிந்த அடுத்த நாள் காலையில் தேர் வெளியே வரும் போது இருக்கும் கூட்டத்தை போல் இருந்தது தான் ஆச்சிரியம். முப்பது நிமிட வான வேடிக்கை காண அவ்வளவு கூட்டமா என்ற நினைத்து போது, வான வேடிக்கை கண்ட உடன் பிரம்மித்து போனது நிஜம் தான். இந்தியாவில் இந்த மாதிரியான நிகழ்ச்சிகளை என்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை. வாழ்க அமெரிக்காவின் ஒற்றுமை மற்றும் புகழ்.


இந்த வகையிலான பலதரப்பட்ட அமெரிக்கா வெள்ளை இன மக்களின் வாழ்க்கையை பார்க்க ஆரம்பித்ததே கடந்த ஒரு மாதமாக தான் என்பதை இப்போது தான் உணர்கிறேன்.