Wednesday, February 01, 2012

திரைவிமர்சனம் - The Train – மலையாளம் - 2011




11 ஜூலை 2006ம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற வெடிகுண்டு நிகழ்வில் மலையாள மக்கள் எப்படி பாதிப்பு ஆனார்கள் என்பதை எடுத்து காட்டும் திரைப்படம். தெலுங்கில் வெளிவந்த வேதம் திரைப்படத்தில், வெவ்வேறு சூழ்நிலையில் இருக்கும் ஐந்து கதாபத்திரங்கள் முடிவில் வெடிகுண்டு வைக்கபடும் அரசு மருத்துவமனையில் ஒன்று சேரும் போது, அவர்கள் என்ன ஆனார்கள் என்பதை காட்டி இருப்பார்கள். இதே போல் இந்த மலையாள படத்தில்  பல்வேறு சூழ்நிலையில் இருக்கும் சில மலையாள கதாப்பாத்திரங்கள், இந்த ரயில் வெடிகுண்டு நிகழ்வில் என்ன ஆனார்கள் என்பதை திரில்லாக காட்டி இருக்கும் படம்.

இந்த படத்தை எடுத்து பார்க்க வைத்ததே Best Actor மம்மூட்டிக்கா. கதாபாத்திரம் என்று பார்த்தால், மம்மூட்டி எப்போதும் போல் அவர் மும்பையில் வேலை பார்க்கும் காவல் அதிகாரி (வடிவேலு போல் ஒரு உயர் அதிகாரி அல்ல). எல்லோரையும்  தீவிரவாதி என்று சந்தேகத்தால், பல அப்பாவிகளையும் கொடுமை படுத்தியவர் என்று பேருடன் இருக்கும் நபர். இதனால் இவர் உண்மையாக ஒரு தீவிரவாதியை பிடிக்கும் சமயம், உயர் அதிகாரிகளால் உதவி கிடைக்காமல் போக, தீவிரவாதி தப்பி விடுகிறான்.


ஜெயசூர்யா, இசை அமைப்பாளர் ரஹ்மான் குழுவில் பட இடம் கிடைத்து, மும்பையில் இருந்து சென்னைக்கு செல்ல தயார் ஆகும் ஒரு நபர். காலையில் இருந்து மாலையில் சென்னை ரயிலை பிடிக்கும் முன், அவருக்கு ஏற்படும் அனுபவங்கள்.


இன்னொரு கதையின் பாத்திரம், தந்தை மெக்கா செல்ல, ஒரு மகள் பணத்தை ஏற்பாடு செய்யும் போது அவள்படும் கஷ்டம். பணம் கிடைத்த மகிழ்ச்சியில், வேகமாக வீட்டிற்கு செல்ல ரயில்வேக்கு செல்ல

பேரனை காண, ஒரு தாத்தா படும் கஷ்டங்கள். அவர் முடிவில் பேரனை காண ரயில் ஸ்டேஷன் செல்ல

இப்படி பல்வேறு மனிதர்கள், எப்படி இந்த மாதிரியான வெடிகுண்டு நிகழ்வுக்கு சம்பந்தமே இல்லாமல் பலி ஆனார்கள் என்பதை மிக துல்லியமாக காட்டி இருக்கும் படம்.

இப்படத்தில் ஏதோ ஒரு குறை. அதன் காரணமாக பலி ஆகும் மக்கள் மீது வர வேண்டிய வருத்தம் முடிவில் வர மறுக்கிறது. ஆனால் கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம்

1 comment:

Kumaran said...

என் இனிய இரவு வணக்கம்,
நான் மலையாள படங்களை எல்லாம் பார்ப்பது இல்லை சகோ..ஆனால் வாய்ப்பு கிடைத்தால் பார்க்கிறேன்.காரணம், பார்க்க ஆவலை தூண்டும் விமர்சனம் தங்களது நன்றி.