Thursday, November 29, 2012

ஆர்கோ - ARGO - 2012 - ஆங்கிலம் - திரைவிமர்சனம்


திரைவிமர்சனங்கள் எழுதி பல நாட்கள் ஆகி விட்ட நிலையில், என்னை சமீபத்தில் வியப்பூட்டிய சில திரைப்படங்களை பற்றி எழுதிய ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் இப்போது நான் இருக்கிறேன். அதில் முதலாவது படம் ARGO.



ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டின் உள்ளே போவதற்கு மற்றும் வெளியே வருவதற்கும் பல வழிமுறைகள் இருக்கின்றன. அதற்கு முதலில் வருவது விசா. வெளிநாடுகளில் வேலை செய்யும் மக்களுக்கு விசா பற்றி தெரிந்து இருக்கும். விசா அல்லது அதற்கு சமமான பத்திரங்கள் கையில் இல்லாமல் போனால், அந்த நாட்டின் படி நாம் ஒரு குற்றவாளி. நாம் நாட்டில் சிறையில் சென்றாலே, படு கஷ்டம். வெளி நாட்டு சிறை என்பதால் கேட்டவே வேண்டாம். நரகத்தில் என்ன செய்வார்களோ, அதை உயிருடன் இருக்கும் போது அதை அனுபவிக்க நேரிடும். சில சமயங்களில் தீவிரவாதி என்று நினைத்து முதலில் கொன்று விட்டு, அதன் பிறகு தான் இவன் யார் என்று கேள்வியே கேட்பார்கள்.  வெளிநாட்டில் வசிக்கும் வேறு நாடு மக்களுக்கு உள்ளே செல்ல மற்றும் வெளியே வர இருக்கும் பிரச்சனைகள் நன்கு தெரிந்து இருக்கும். நானும் அந்த பார்வையில் தான் பார்த்தேன். அதனால் தான் என்னவோ, திரைகதை முடிந்தும் என்னில் பல கேள்விகள். ஆனால் விசா நடை முறை பற்றி தெரியாத மக்களுக்கும் இப்படம் பிடித்து போகும். ஏனென்றால் திரைகதை அமைத்த விதம் அப்படி. சரி படத்திற்கு செல்வோம்.



1979ம்  ஆண்டு டேஹ்ரன், ஈரான் மாநிலத்தில் இருக்கும் அமெரிக்கா தூதரகத்தில் 50க்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் வேலை செய்து கொண்டு இருக்கின்றனர். எப்போதும் போல் அமெரிக்கா மற்றும் ஈரான் அரசியல் பிரச்சனை காரணமாக, ஈரான் மக்கள் அமெரிக்கா தூதரகத்தில் நுழைத்து பல அமெரிக்கர்களை சிறை பிடிக்கின்றனர். அப்போது அங்கு இருந்து 6 பேர் தப்பிக்கின்றனர். சிறை பிடிக்கபட்ட அனைவரும் பல கொடுமைகளை அனுபவிக்கின்றனர்ஈரான் முழுவதும் பல இடங்களில் கலவரங்கள். எங்கு பார்த்தாலும் இராணுவம் கையில் தூப்பாக்கி உடன். மக்கள் அனைவரும் அமெரிக்காவினர் மீது கோபமாக இருக்கின்றனர். தப்பித்த ஆறு பேர் எங்கே என்றனர் என்ற கேள்வி வேறு? அமெரிக்கா அரசாங்கத்திற்கு ஒரு செய்தி வருகிறது. தப்பித்த ஆறு பேர் உயிருடன் இருக்கின்றனர் என்றும் அவர்கள் வேறு நாடான கனடாவின் உதவியுடன் பத்திரமாக அதே ஊரில் உள்ளனர் என்றும் தெரிய வருகிறது. ஈரானின் இருக்கும் கனடா தூதரகத்தின் ஒரு தலைமை அதிகாரியின் வீட்டில் இருப்பார்கள். அங்கு வேலை பார்க்கும் ஒரு பெண் ஒரு ஈரான் மக்களில் ஒருவர். இப்போது அமெரிக்கா அரசு அவர்களை காப்பற்ற என்ன செய்ய போகிறது? எப்படி 6 பேரும் தப்பித்து அமெரிக்கா திருப்பி வந்தனர். அவர்களுக்கு உதவி செய்தது யார்? இப்படி பல கேள்விகளுக்கு அற்புதமான திரைக்கதை அமைத்து இருக்கிறார் இயக்குனர், கதையின் நாயகன்  மற்றும் தயாரிப்பாளர் Ben Affleck.


இக்கதை உண்மையில் நடந்தது என்பது தான் வியப்பூட்டிய விஷயம். திரைப்படம் ஆரம்பிக்கும் போதும் முடியும் போதும் அதற்க்கான ஆதாரங்களை திரையில் பார்க்க முடியும். சில விஷயங்கள் யோசிக்கவே முடியாத போது, அதே விஷயத்தை கண் முன் பார்க்கும் போது சில நேரத்தில் நம்பாமல் இருக்க முடியவில்லை.திரைகதை தான் இப்படத்தின் பலமே. சில நிகழ்ச்சிகள்  என்னை நுனி நாற்காலிக்கு கொண்டு வந்து விட்டது அதுவும் என்னை அறியாமல். விமான நிலையத்தில் இராணுவ அதிகாரி அவர்களை கேள்வி கேட்கும் நேரத்தை இதற்கு சொல்ல முடியும்அதேபோல் திரைக்கதை  நடக்கும் நேரம் 1979. அந்த நேரத்தில் இருந்த தொலைபேசி மற்றும் தந்தி முறைகளை அப்படியே காண முடிந்தது. ஈரான் மக்களின் கோபம், அக்காலத்தின் வீடு என்று சில நூணக்கமான விஷயங்களை காணலாம்


மொத்தத்தில் இப்படம் சிறந்த, தரமான திரைக்கதையுடன் அமைந்த ஒரு நிஜ சம்பவம்

Monday, November 26, 2012

திருமண வாழ்த்துக்கள் - அங்கூர் தேசாய்



என்னுடைய முன்னால் அர்கன்சாஸ் தோழர் அங்கூர் தேசாய் அவர்களின் திருமணம் இன்று அகமதாபாத், குஜராத்தில் நடைபெறுவதை தெரிவித்துக் கொண்டு, என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் பழகிய முதல் மேற்கு இந்தியா நபர். காரம் என்றாலே என்னவென்று தெரியாத நபர்/மக்கள். வடஇந்திய மக்களின் வாழ்க்கை முறையை கேள்வி தான் பட்டு இருக்கிறேன். ஆனால் கண் கூடாக பார்த்தது இவரை வைத்து தான். வித்தியாசமான பல எண்ணங்களை காண முடிந்ததுநான் ஒரு இந்து மதத்தை சேர்ந்தவன் என்பதில் ஒரு மகிழ்ச்சி அவருக்கு.

தீடிர் என்று நான்கு அல்லது ஐந்து பேர் வருவார்கள். என்னை அறிமுக படுத்திய நிமிடத்தில் இருந்து, அனைவரும் என்னுடன் இருவது வருடம் பழகியது போல் பேச்சு. அதுவும் ஆண், பெண் என்ற பேதம் இல்லாமல்இரவு மூன்று வரை ஆட்டம் மற்றும் விளையாட்டு. ஒரு முழுவருடம் நான் டெல்லியில் இருந்ததாக ஒரு நினைப்பு. என்னால் மறக்க முடியாத நண்பர்கள். நான் கண்டிப்பாக நேரில் சென்று வாழ்த்த வேண்டும் என்ற ஆசை இருந்தது. இப்போது முடியாவிட்டாலும், கண்டிப்பாக ஒரு நாள் மற்றொரு வடஇந்திய திருமணத்தை காண்பேன் என்பது உறுதி.