Sunday, June 28, 2009

மூன்று விரல்

மென்பொருள் துறையில் பணியாற்றுபவர்கள் மீது மற்றவர்களுக்கு என்ன பொறாமை? பெரியளவிலான உடலுழைப்பின்றி தகுதிக்கு அதிகமாக சம்பளம் வாங்குகிறார்கள். சைக்கிளுக்கே லாட்டரி அடித்தவர்கள் காரில் பறக்கிறார்கள். பிளாட் வாங்குகிறார்கள். விலைவாசியை ஏற்றுகிறார்கள். வாடகை இவர்களால் உயர்ந்துவிட்டது. ஆட்டோக்காரன் கூட இப்போதெல்லாம் நூறு ரூபாய்க்கு சில்லறை தரமாட்டேன் என்கிறான். பூமியில் கால்படாவண்ணம் ஒரு அடி அந்தரத்திலேயே நிற்கிறார்கள். அர்த்தராத்திரியிலும் வெய்யிலுக்கு குடைபிடிக்கிறார்கள். கிட்டத்தட்ட என் நினைப்பும் இதேதான், இரா.முருகனின் ‘மூன்று விரல்’ வாசிக்கும் வரை.

"மென்பொருள் துறை சார்ந்து தமிழில் வெளிவரும் முதல் நாவல்" என்ற துணை தலைப்பில் வந்த இந்த நாவலை பார்த்த உடன் எனக்கு படிக்க வேண்டும் என்ற ஆவலுடன் தொடங்கிய போது, கீழாம்பூர் ரங்கநாதன் சுதர்சன் என்ற ஒரு கதாப்பாத்திரத்தை வைத்து மென்பொருள் துறையில் பணியாற்றுபவர்களுக்கும் குடும்பம் உண்டு, காதல் உண்டு, பிரச்சனைகள் உண்டு என இங்கிலாந்து, இந்தியா, மற்றும் தாய்லாந்து என பல நாடுகளுக்கு நம்மை கூட்டி சென்று இவர்கள் படும் கஷ்டம் வித்தியாசமானது, படு பயங்கரமானது என்று நெத்தி அடித்தார் போல் கூறிய விதம் மிகவும் அருமை.

என்ன தான் நல்ல நாவலாக இருந்தாலும் எனது பார்வையில் சில கருத்துகள்

* இதில் பயன்படுத்திய ஆங்கில மற்றும் மென்பொருள் துறை வார்த்தைகள் அத்துறையை சார்ந்தவர்களுக்கே புரியும்.

* வெளிநாடுகளுக்கு சென்று வேலை பார்கிறவர்கள் அவர்களின் அனுமதி கடிதம் தேதி முடியும் போது ஏற்படும் கஷ்டம் மிக அதிகமாக சொல்ல பட்டதாக நினைக்க தோன்றுகிறது. ஆனால் உண்மை நிலவரம் அங்கு சென்று பார்த்தல் தான் தெரியும். இப்புத்தகத்தை படித்த பின்பு, வெளிநாடு சென்று வேலை பர்ர்க்க சொன்னால் கொஞ்சம் பயமாக தான் இருக்கிறது.

* கடைசியில் மென்பொருள் துறை படித்த என்ற ஒரே காரணத்திற்கு, சாம்பார் வாழி தூக்க வைத்தது கொஞ்சம் கொடுமை தான்

பெங்களூர்/மோசமான போக்குவரத்துக் கழகம்

மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருநெல்வேலி மற்றும் பெங்களூர் ஆகிய போக்குவரத்துக் கழகத்தை பார்த்து, சென்னை பேருந்துகள் தான் மிக மிக மட்டம் என்று நினைத்து இருந்தேன். ஒக்கனேகல் சனிக்கிழமை சென்றதால், அடுத்த நாளை பெங்களூர் நகரத்தை சுற்றிப் பார்க்க கிளம்பினோம். பெங்களூர் பேருந்தும், நடத்துனர் பழக்கமும் நன்றாக இருக்கும் என்று நினைத்து பேருந்ததில் பயணத்தை தொடங்கினோம்.

நாங்கள் ஏறிய நிறுத்தமும், இறங்க வேண்டிய நிறுத்தமும் வித்தியாசம் இரண்டு தான். நான் பணத்தை கொடுத்து பயன் சீட்டை கேட்டேன். பணத்தை எடுத்து கொண்டு சீட்டை தரவில்லை. இரண்டாவது முறை கேட்டேன், நடத்துனர் என்னை முறைத்து கொண்டே பேருந்தின் பின்புறத்திற்கு சென்றார். எனக்கு என்றுமே புரியவில்லை. என்னுடன் வந்த பெங்களூரில் வசிக்கும் நண்பனிடத்தில் விசாரித்தேன். அவர் சென்ன விஷயம் எனக்கு அதிர்ச்சியையும், ஆச்சிரியத்தையும் கொடுத்தது.


இறங்க வேண்டிய இடம் இரண்டு, மூன்று நிறுத்தங்கள் இருந்தால் அதற்குரிய பயண சீட்டிற்கு இருக்கும் தொகையை விட ரூபாய் ஒன்று/ இரண்டு குறைவாக பணத்தை பெற்றுக் கொண்டு பயண சீட்டை தராமல் சென்று விடுவது. ஆக மொத்தத்தில் அப்பணம் அந்த நடத்துனருக்கே போகும். "எப்படி எல்லாம் கொள்ள அடிக்கிறாங்க அப்ப" என்று பேரு மூச்சு விட்டு கொண்டே எனக்கும், இன்னொரு நண்பருக்கும் கோபம் வந்து விட்டது.

இறக்கும் முன் பயண சீட்டை கேட்டோம். நடத்துனரே சீட்டு தேவை இல்லை என்று கூறியும் நாங்கள் மீண்டும் பயண சீட்டை கேட்டோம். நடத்துனர் எங்கள் மீது கோபம் கொண்டு எங்களுடைய உண்மையான பயண சீட்டு ரூ.5 பதிலாக ரூ.7 சீட்டை கொடுத்தார். இப்படி பட்ட நடத்துனருக்கு பணத்தை கொடுப்பதை விட அரசாங்கத்திற்கு கொடுக்கலாம் என்று நினைத்து சீட்டை வாங்கி கொண்டோம்.

இரண்டு/ மூன்று இடத்திற்கு சென்று விட்டு மீண்டும் திரும்பி வரும் வழியில் வேண்டாம் பிரச்சினை என்று நினைத்து விட்டு ஆட்டோவில் வந்து சேர்ந்தோம். இதை பார்க்கும் போது சென்னையே பரவ இல்லை என்ற எண்ணம் வந்து விடும் போல் இருந்தது.

நடத்துனர்கள் செய்யும் இப்படிப் பட்ட மிக கேவலமான/ மோசமான விஷயத்தை கர்நாடக அரசு சரி செய்ய வில்லை சென்றால் சுற்றுல பயணிகளால் வரும் வருமானம் குறையும் என்பதில் ஐயம் இல்லை. அதே போல் அரசுக்கு கூடிய விரைவில் கேட்ட பெயர் வரும் என்பதிலும் ஐயம் இல்லை.

ஒக்கனேகல்

எனது தொழில் நூட்ப நண்பர்களுடன் பயணம் மேற்கொள்ள விரும்பிய போது எங்களுக்கு ஒக்கனேகல் நினைவுக்கு வந்தது. எங்களில் யாரும் ஒக்கனேகல் போனதில்லை. அதனால் அதே பகுதிக்கு போகலாம் என்று முடிவு செய்து, பெங்களூர்-> தருமபுரி -> பாலக்கோடு-> பொன்னகரம்-> வழியாக ஒக்கனேகல்லை அடைந்தோம்.

மலைகளில் புயல் அருவியாக விழும் தண்ணீரை பார்ப்பதற்கும், பரிசலில் சென்று தண்ணீரால் உடம்பு நனைவதற்கும், அருவியில் குளிப்பதற்கும் கொடுத்து வைத்து இருக்க வேண்டும். "அனுபிவிக்கனும், ஆராய கூடாது" என்பது போல, சொன்னால் தெரியாது அங்கு செல்ல வேண்டும்.

ஒக்கனேகளில் முக்கியமானது பரிசல் பயணம் தான். நாங்கள் சென்ற மாதம், நாள் ஆகியவை நன்றாக இருந்ததால் பரிசல் பயணத்தை அனுபவிக்க முடிந்தது. இல்லை என்றால் தண்ணீரின் அதிக அளவு காரணமாக பரிசல் ரத்து செய்ய பட்டு விடுமாம். அப்பயணத்தில் தான் கர்நாடக எல்லையை நன்றாக காண முடியும். எல்லையை கண்டவுடன் எனக்கு கர்நாடக அரசு வீணாக தான் சண்டை போடுகிறது என்று புரிந்தது.

மீண்டும் ஒக்கனேகல்-> தருமபுரி -> பெங்களூர் வந்து அடைந்தோம்.

அங்கு சென்ற புகைப்படத்தை எனது வலைத்தளத்தில் நீங்கள் பார்க்கலாம்.

திருமண வாழ்த்துகள்

எனது கல்லூரி நண்பர் திரு. கார்த்திக் சந்து அவர்களுக்கும், இப்போது திருமதியான அமுதா அவர்களுக்கும் இம்மாதம் திருமணம் நடைப்பெற்றது. அப்புதிய திருமண தம்பதியர்களுக்கு என்னுடைய திருமண வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்

சைதைக்கு பெரிய கும்பிடு

சைதை, சென்னையில் தியாகராஜர் நகருக்கு அடுத்த படியாக மத்தியில் உள்ள ஒரு பகுதி. சைதையில் இருந்து நகரத்தின் எந்த பகுதிக்கும் மிக எளிதாக செல்லலாம் என்ற தகுதியும், வீட்டு வாடகை சற்று குறைவாக இருப்பது என்ற தகுதியும் தவிர பார்த்தல், அது ஒரு சேரி பகுதியாகவே எனக்கு படுகிறது.

எப்படியோ ஒரு ஆண்டு அங்கு சகித்துக் கொண்டு வசித்து, முடியாமல் அந்த இடத்தை காலி செய்து தாம்பரம் சானிடோரியம் பகுதிக்கு இடமாற்றம் செய்து விட்டேன்.

ஒரு ஆண்டு வரை எனக்கு உதவியாக இருந்த நண்பன் பாலா அவர்களுக்கும், அவருடைய நண்பர்கள் சரவணன், மாரியப்பன், சித்தப்பா (பெயர் நினைவுக்கு வரவில்லை, அதனால் அவருடைய இன்னொரு பெயர்) ஆகியோருக்கும் எனது நன்றி.

வந்துட்டோம்ல (Am Back)

வலைத் தொடர்பு இல்லாத காரணத்தினால் சென்ற ஒரு மாத காலமாக பதிவுகளை போட முடியவில்லை. நானும் என்னுடைய புதிய வீட்டில் வலைத் தொடர்பை ஏற்படுத்த முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன். கிடைத்த உடன் புயல் கிளம்பும்.