Sunday, June 28, 2009

மூன்று விரல்

மென்பொருள் துறையில் பணியாற்றுபவர்கள் மீது மற்றவர்களுக்கு என்ன பொறாமை? பெரியளவிலான உடலுழைப்பின்றி தகுதிக்கு அதிகமாக சம்பளம் வாங்குகிறார்கள். சைக்கிளுக்கே லாட்டரி அடித்தவர்கள் காரில் பறக்கிறார்கள். பிளாட் வாங்குகிறார்கள். விலைவாசியை ஏற்றுகிறார்கள். வாடகை இவர்களால் உயர்ந்துவிட்டது. ஆட்டோக்காரன் கூட இப்போதெல்லாம் நூறு ரூபாய்க்கு சில்லறை தரமாட்டேன் என்கிறான். பூமியில் கால்படாவண்ணம் ஒரு அடி அந்தரத்திலேயே நிற்கிறார்கள். அர்த்தராத்திரியிலும் வெய்யிலுக்கு குடைபிடிக்கிறார்கள். கிட்டத்தட்ட என் நினைப்பும் இதேதான், இரா.முருகனின் ‘மூன்று விரல்’ வாசிக்கும் வரை.

"மென்பொருள் துறை சார்ந்து தமிழில் வெளிவரும் முதல் நாவல்" என்ற துணை தலைப்பில் வந்த இந்த நாவலை பார்த்த உடன் எனக்கு படிக்க வேண்டும் என்ற ஆவலுடன் தொடங்கிய போது, கீழாம்பூர் ரங்கநாதன் சுதர்சன் என்ற ஒரு கதாப்பாத்திரத்தை வைத்து மென்பொருள் துறையில் பணியாற்றுபவர்களுக்கும் குடும்பம் உண்டு, காதல் உண்டு, பிரச்சனைகள் உண்டு என இங்கிலாந்து, இந்தியா, மற்றும் தாய்லாந்து என பல நாடுகளுக்கு நம்மை கூட்டி சென்று இவர்கள் படும் கஷ்டம் வித்தியாசமானது, படு பயங்கரமானது என்று நெத்தி அடித்தார் போல் கூறிய விதம் மிகவும் அருமை.

என்ன தான் நல்ல நாவலாக இருந்தாலும் எனது பார்வையில் சில கருத்துகள்

* இதில் பயன்படுத்திய ஆங்கில மற்றும் மென்பொருள் துறை வார்த்தைகள் அத்துறையை சார்ந்தவர்களுக்கே புரியும்.

* வெளிநாடுகளுக்கு சென்று வேலை பார்கிறவர்கள் அவர்களின் அனுமதி கடிதம் தேதி முடியும் போது ஏற்படும் கஷ்டம் மிக அதிகமாக சொல்ல பட்டதாக நினைக்க தோன்றுகிறது. ஆனால் உண்மை நிலவரம் அங்கு சென்று பார்த்தல் தான் தெரியும். இப்புத்தகத்தை படித்த பின்பு, வெளிநாடு சென்று வேலை பர்ர்க்க சொன்னால் கொஞ்சம் பயமாக தான் இருக்கிறது.

* கடைசியில் மென்பொருள் துறை படித்த என்ற ஒரே காரணத்திற்கு, சாம்பார் வாழி தூக்க வைத்தது கொஞ்சம் கொடுமை தான்

No comments: