Showing posts with label தமிழ். Show all posts
Showing posts with label தமிழ். Show all posts

Sunday, March 04, 2012

அரவான் - திரைவிமர்சனம்


 நாவல்களை அடிப்படையாக கொண்ட திரைப்படங்கள் வெளிநாடுகளில் மட்டுமே எடுக்க படும். இதற்கான காரணத்தை ஆராய்ந்தால், நாவல்களில் உள்ள கதைக்கு உயிர் தரும் வேலையில் தமிழ் திரையுலகத்திற்கு உயிர் மூச்சான மசாலாவை எடுத்து கொண்டு வர இயலாது. அதே போல, திரைப்படத்தின் வேக தன்மை, தீடிர் திருப்பங்கள் என்பதையும் கொண்டு வர இயலாது. இதனால் தமிழ் நாட்டில் பல நாவல் ஆசிரியர்கள் இருந்தும், இன்னும் தமிழ் திரையுலகில் கதை தேடும் சூழ்நிலை உள்ளது. உதாரணமாக 1980ல் எடுத்த திரைப்படத்தை மீண்டும் இப்போது எடுக்கும் நிலையை சொல்லலாம். இந்த விதியை மாற்றி, நாவலை அடிப்படையாக கொண்ட கதை எடுத்த இயக்குனர் வசந்த பாலன் அவர்களுக்கு முதல் பூங்கொத்து.

அரவான்... படம் பார்த்து கொண்டு இருக்கும் போது, நண்பர் ஒருவர் அதற்க்கான பொருளை கேட்டார். எனக்கு சுத்தமாக தெரியவில்லை. இப்படத்திலேயே அதற்க்கான காரணம் சொல்லபட்டு இருந்தாலும், இப்படத்திக்கு முன்னால் நான் எங்கேயோ படித்த நியாபகம் என்று மட்டும் தெரிந்தது. கடைசியாக பார்க்கும் போது, என் வலை தளத்திலேயே 2009ம் ஆண்டு அரவானை பற்றி பதிவு செய்து உள்ளேன். இதோ அந்த பதிவு "அரவான் - மகாபாரதம்".


18ம் நூற்றாண்டில் திருட்டை தொழிலாக கொண்ட ஒரு ஊரில் வசிக்கும் நபர் பசுபதி மற்றும் உறவினர்கள். அவ்வூரின் பெயரை மட்டும் பயன்படுத்தி திருடும் அனாதையான ஆதி,ஒரு கட்டத்தில் நண்பர்கள் ஆகின்றனர். ஒரு சமயத்தில், பசுபதியின் உயிரை ஆதி காப்பாற்ற, மேலும் அவர்கள் நட்பு கூடுகிறது. ஊரின் மானபிரச்சனை உடன்,பசுபதி உயிருக்கு ஆபத்து வரும் போது, அனாதையான ஆதி தான் யார் என்பதை கூறுகிறார். இதனால் ஆதிக்கு மேலும் பிரச்சனை இறுகுகிறது. அப்பிரச்சனையில் இருந்து யார் தப்பித்தனர், முடிவு என்ன என்பதே கதை.


இங்கே கதாநாயகன் என்பதை விட, கதையின் நாயகனாக இருக்கும் ஆதிக்கு வாழ்த்துக்கள். ஒரு நல்ல நடிகரான பசுபதியை மீண்டும் திரையில் பார்ப்பது மகிழ்ச்சி. முதல் பாதி முழுவதும் பசுபதியின் ஆளுமை தான்.  இந்த இரண்டு பேருக்கும் போட்டி நடிகன் கரிகாலன். அருமையான நடிப்பு. கதாநாயகிகளாக தன்ஷிக மற்றும் அர்சன கவி. அவர்கள் தன் வேலையை சரியாக செய்து இருக்கின்றனர்.  வெயில் படத்தின் நன்றி கடனாக பரத்தும், அங்காடி தெரு நன்றி கடனாக அஞ்சலியும் இரண்டு காட்சிகள். அனைத்து கதாபத்திரங்களையும், மீறி இரண்டு பேர் தனியாக நிற்கின்றனர் என்றால் அது ஒளிபதிவாளர் சித்தார்த் மற்றும் ஆர்ட் இருக்குனர் விஜய். இப்படம் திருட்டு தொழிலை மையமாக கொண்டதால், பல இரவு காட்சிகள். இரவு என்பதை மறக்க வைத்து, நம்மை கதைக்குள்ளே அழைத்து சென்றது ஒளிபதிவளரின் வெற்றி எனலாம். அவருக்கு இரண்டு பூங்கொத்து. இதே போல் 18ம் நூற்றாண்டில் நடைபெறும் கதையாக எடுத்து, அக்காலத்தை நம் முன்னால் கொண்டு வந்ததற்கு ஆர்ட் இயக்குனருக்கு  மூன்றாவது பூங்கொத்து.  இத்திரைப்படத்தின் இன்னொரு முக்கிய நபர் கதை ஆசிரியர் மற்றும் வசன ஆசிரியர் வெங்கடேசன். மக்களின் வாழ்க்கை முறை திரையில் எவ்வளவு காட்டினாலும், அவர்களின் பழக்க வழக்கங்கள் மற்றும் வார்த்தைகள் தான் மிக முக்கியம். வெங்கடேசன் தன் வார்த்தைகள் மூலம், அவர் 18ம் நூற்றாண்டை உணர வைத்து இருப்பார். இதற்காக அவருக்கு நான்காவது பூங்கொத்து.



இத்தனை பெரிய வெற்றி இருந்தும், முடிவில் ஒரு நெருடல். திரைப்படத்தின் முடிவில், "18ம் நூற்றாண்டிற்கு பிறகு பிரிட்ஷ் காலத்தில் மரண தண்டனை நிறுத்த பட்டது. இன்னும் உலகில் நாடுகள் மட்டுமே மரண தண்டனையை வைத்து உள்ளது. மரண தண்டனை ஒழிப்போம்". இப்படம் மரண தண்டனை பற்றி சொல்கிறது என்பதை, கடைசி வரை நம்மால் உணர முடிய வில்லை. கதை களத்தின் படி, பலி இடுவதற்கும் மரண தண்டனைக்கும் என்ன தொடர்பு என்பதை யோசிக்க வைக்கிறது. இந்த சின்ன விஷயத்தை ஒதுக்கி வைத்து பார்த்தால், வசந்த பாலன் மீண்டும் நீருபித்து இருக்கிறார் என்பதை ஒப்பு கொள்ள வேண்டும்.

Monday, February 20, 2012

எஸ். என். லட்சுமி - அஞ்சலி


தமிழ் திரையுலத்தில் மறக்க மற்றும் அழிக்க முடியாத ஒரு குணசித்திர மற்றும் நகைசுவை பாட்டி நடிகை எஸ். என். லட்சுமி இன்று காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்ததுடன் தெரிவித்து கொள்கிறேன்

இவரது இழப்பு, திரையுலத்திற்க்கு பெரிய இழப்பு இன்பத்தில் ஐயமில்லை




இவரின் நடிப்புக்கு  மிக சிறந்த உதாரணம்

Friday, June 24, 2011

பிறந்த நாள் - கண்ணதாசன்


கவி உலகில் பேரரசராக, காவியத்தாயின் இளையமகனாக விளங்கிய மதிப்பிற்குரிய திரு. கண்ணதாசனின் பிறந்தநாளன இன்று, அவரை நினைவு கூறுகிறேன்.





ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
ஒரு கோல மயில் என் துணையிருப்பு
இசை பாடலிலே என் உயிர் துடிப்பு
நான் காண்பதெல்லாம் அழகின் சிரிப்பு!

காவியத் தாயின் இளையமகன்
காதல் பெண்களின் பெருந்தலைவன்
மானிட ஜாதியில் தனிமனிதன் நான்
படைப்பதனால் என்பேர் இறைவன்!

மானிட இனத்தை ஆட்டி வைப்பேன் அவர்
மாண்டுவிட்டால் அதை பாடிவைப்பேன் நான்
நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த
நிலையிலும் எனக்கு மரணமில்லை! 

Thursday, April 14, 2011

கலவைகள்


அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
*************************************************

என்னுடைய எண்ணமெல்லாம் தற்போதைய அரசு கண்டிப்பாக மீண்டும் ஆட்சிக்கு வந்து விட கூடாது. ஆனால் அது நடக்குமா என்று தெரியவில்லை. தென் தமிழகத்தில் முக்கிய பிரச்சனையாக கருதுவது விலைவாசி ஏற்றம் மற்றும் மின்வெட்டு. அதை தவிர மக்கள் எதுவும் பெரிதாக நினைக்கவில்லை. 2G, இலங்கை தமிழர் பிரச்சனை, மற்றும் ஊழல் என்று எதுவுமே அவர்களுக்கு தெரிவதில்லை. மே 13ம் தேதி தமிழ் மக்களின் தலை எழுத்து தெரிந்து விடும்.
*************************************************
இந்த வருடத்தையும் சேர்த்து ஐந்தாவது வருடமாக, சித்திரை திருவிழாவை காண முடியவில்லை. விழா ஆரம்பம் ஆகி ஆறு நாட்கள் முடிந்து விட்டது. மதுரையை விட்டு வெளியே வேலை செய்யும் மக்கள் அனைவருக்கும் இருக்கின்ற, ஒரே எண்ணம் தான் தற்போது இதுதான். சொர்கத்துக்கும் ஈடாகத மதுரை முழுவதும், மக்கள் வெள்ளம். புதூரில் அல்லது அண்ணாநகரிலோ அழகரை பார்த்து திரும்பும் போது கிடைக்கும் நிம்மதி, எங்கு போனாலும் கிடைக்காது என்பது நிஜம். அழகரை காண கீழே உள்ள பாடலை பாருங்கள். இசை அமைப்பாளர் தேவா அவர்கள் செய்த நல்ல காரியங்களில் மிக முக்கியமாக நான் கருதுவது, இந்த பாட்டிற்கு இசை அமைத்தது தான்.



**************************************************************************
சமீபகாலமாக என் மீது எனக்கு படுபயங்கர கோபம். எனது சொந்த வேலைகளுக்குகாக செலவிடும் நேரத்தில் புத்தகம் படிப்பதை மறந்தேன், ருசியான சமையல் செய்வதை மறந்தேன், படம் பார்ப்பதும் குறைந்து போனது, சீக்கிரம் தூங்கும் நேரத்தை மறந்தேன். இத்தனைக்கும் காரணம் facebook தளம். பல விஷயங்கள் அறிந்து கொண்டாலும், நேரத்தை கொள்கிறது என்பதே நிதர்சனம். அதில் இருந்து வெளியே வர வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு நாள் முழுவதும் பார்க்காமல், அடுத்த நாளில் இரண்டு மடங்கு நேரத்தை செலவிடுகிறேன். முடியலே

**************************************************************************
கீழே உள்ள படத்தை பாருங்கள். இது என் வீட்டிற்கு அருகில் இருக்கும் அமெரிக்காவில் உள்ள ஒரு நெடுஞ்சாலை. இந்த சாலைகளுக்கும் இடையில் குறைந்தது ஆறு லாரிகள் நிறுத்தலாம். சென்ற சனிக்கிழமை, ஒரு புறத்தில் இரண்டு கார்கள் சென்று கொண்டு இருந்தன. முதல் காரில் ஒரு வயதான அமெரிக்கா வெள்ளை நபர். இரண்டாவது காரில் ஒரு அமெரிக்கா வெள்ளை பெண்மணி.  முதல் கார் செய்த தவறால், இரண்டாவது கார் முதல் காரில் பின்னால் இடிக்க, முதல் கார் நிலை இழந்து,  ஒரு சாலையில் இருந்து மற்றொரு சாலை சென்று அங்கு வந்துக் கொண்டு இருந்த ஒரு காரை இடித்தது. எந்த வித தவறும் செய்யாமல் மூன்றவதாக விபத்தில் சிக்கிய காரில் இருந்த நபர், அந்த இடத்திலேயே உயிர் இழந்தார். முதல் மற்றும் இரண்டாம் காரில் உள்ள நபர்கள் பிழைத்துக் கொண்டார்கள். இதில் கொடுமையான விஷயம், மூன்றாவது காரில் உயிர் இழந்த நபர் ஒரு இந்தியன். அதுவும் 26 வயது ஒரு வாலிபன். என் அலுவலகத்தில் வேலை செய்து கொண்டு இருந்தாரம். இப்போது தான் அடுத்த வேலை கிடைத்து, அந்த ஊருக்கு செல்வதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொண்டு இருந்தாரம்என் அலுவலகத்தில் முழுநேர தொழிலாளியாக பணிபுரிந்தால் எதோ ஒரு சில சலுகைகள் கிடைக்கும். அந்த நபரோ H1-B consultant. மற்ற வேலைகள் இப்போது எப்படி என்று என்னால் யோசித்து கூட பார்க்க முடியவில்லை. அவருக்கு என்னுடைய அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறேன். அதே போல் இந்தியாவில் இருக்கும் அவருடைய பெற்றோருக்கு என்னுடைய அனுதாபங்கள்.



Thursday, April 07, 2011

அஞ்சலி: நடிகை சுஜாதா


நல்ல நடிகையை தமிழ் திரையுலகம் இழந்தது. அவருக்கு என்னுடைய கண்ணீர் அஞ்சலி.


Sunday, December 05, 2010

ரத்த கண்ணீர்

நேற்று எதிர்பாரா விதமாக சேனல் நான்கில் வெளியான தமிழ் மக்கள் மீது இலங்கை இராணுவம் செய்த கொடுஞ்செயலை பார்த்தப் போது இதயத்தில் இருந்து ரத்தம் வெளிவந்து விட்டது. தமிழ் மக்களை நிர்வாண படுத்தி, கைகளை காட்டி போட்டு அடித்து, சற்று நேரத்தில் அவர்களை தலைக்கு பின்னால் சுட்டுக் கொல்கின்றனர். அம்மக்கள் தமிழனாக பிறந்த குற்றத்தை தவிர எந்த வித தவறுகளையும் செய்யவில்லை. இதை பார்த்தும் தமிழ் நாட்டில் ஆட்சி மற்றும் அரசியல் நடத்தும் கொள்ளைகாரர்கள், பேசாமல் பதவி மற்றும் பண பேராசை உடன் இன்னுமும் வெளியில் கவலைபடாமல் திரிகின்றனர்.

உலக தமிழ் மக்களே, தமிழ் நாட்டில் இருக்கும் மக்களை இதற்கு எதிராக ஒன்று கூடாமல் செய்து விட்டனர். பணம் மற்றும் பிணம் தின்னும் அரசியல்வாதிகளை நம்பாமல், நீங்களாவது எதாவது செய்யுங்கள். நம் மக்களை காப்பற்றுங்கள்.