Wednesday, August 25, 2010

Identity – 2003 – ஆங்கிலம் - திரைவிமர்சனம்


திரில்லர் மற்றும் சஸ்பன்ஸ் படங்களை பார்த்து ரொம்ப நாட்கள் ஆகி விட்டதே, எந்த படத்தை பார்க்கலாம் என்று யோசித்து கொண்டு இருக்கும் போது இந்த படம் பார்க்க நேர்ந்தது. படத்தை இரண்டு முறை பார்த்து தான் பல வசனங்களை மற்றும் காட்சிகளை புரிந்து கொள்ள முடிந்தது. கதை என்று பார்த்தல் எப்போதும் போல தான்: இரவில் அதுவும் பேய் மழை பெய்யும் நேரத்தில் 11 பேர் எதிர் பாராமல் சந்தித்து ஒரே ஹோட்டேலில் தங்கும் நிலை ஏற்படுகிறது. ஒவ்வொருவருக்கும் அவர்களின் வேறுபட்ட கதை மற்றும் சூழல். அனைவருக்கும் ஒவ்வொரு அறையும் கொடுக்கபடுகிறது. நேரம் ஆக ஆக அனைவரும் ஒவ்வொருவராக கொலை செய்ய படுகிறார்கள். கொலைகள் நடக்கும் இடத்தில் வரிசையாக அறையின் பூட்டு எண்கள் கிடைக்கிறது. பத்தில் இருந்து ஆரம்பித்து வரிசையாக ஒன்பது, எட்டு என்று செல்கிறது. கொலைகள் செய்து யார் என்பது திரையில் காணலாம். 


இதிலும் கொலையாளி, தான் மனதால் வேறுநபராக இருந்து கொலைகளை செய்வது. நம்ம கருப்ப சாமி மர்ம தேசம் நாடகத்தில் வந்த விஷயத்தை தான் இங்கு படமாக கொடுத்து உள்ளனர். இதில் யோசிக்க பட விஷயங்கள் நிறைய உள்ளன. ஒவ்வொரு கதாபத்திரத்தின் பேரும் ஒவ்வொரு ஊரை சார்ந்தது. பத்து பேரின் பிறந்த நாளும் மே மாதம் பத்து.  அது போக பல வசனங்களில் பத்து பத்து என்று கேட்கும். சஸ்பன்ஸ் மற்றும் திரில்லர் கதையை விரும்பும் நண்பர்களுக்கு நல்ல விருந்து..ஆனால் கண்டிப்பாக இப்படம் சிறுவர்களுக்கு இல்லை.

1 comment:

Kumaran said...

ஏற்கனவே ஒருமுறை இந்த படத்தை பார்த்திருக்கிறேன்.
நல்ல விமர்சனம்.
வாழ்த்துக்கள்/