Monday, August 09, 2010

விமர்சனம்

என் சிறுவயது மனைவி கொரியா - My Little Bride – 2004 – Korea


கிம் ரே வான் (நாயகன்) மற்றும் மூன் குன் (நாயகி)  ஆகியோரின் பெற்றோர்கள் நண்பர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களும் நண்பர்கள். கிம் ரே வான் கல்லூரி படிப்பை முடித்து விட்டு தன் வீட்டிற்கு வர,  மூன் குன்னின் தாத்தா, கிம் ரே வானின் தாத்தாவுடன் செய்த சத்தியத்தை காப்பற்ற, கிம் ரே வானும், மூன் குனும் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசையை இரண்டு பேரிடம் தெரிவிக்க, இரண்டு பேரும் மறுக்கின்றனர். காரணம் மூன் குன் பள்ளி படிக்கும் 15 வயதுடைய  ஒரு பெண். அவளுக்கு இப்போது கல்யாணம் செய்தால் படிப்பு கேட்டு போய் விடும் என்றும்,  தானும் கல்லூரியை முடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், கிம் ரே வான் சிறு வயது முதல் தெரிந்ததாலும் அவளுக்கு இக்கல்யாணத்தில் இஷ்டம் இல்லை.  ஆனாலும் அவளின் தாத்தா, உடம்பு சரில்லை என்று நாடகம் நடத்தி இரண்டு பேருக்கும் திருமணத்தை முடிக்கிறார்.  அவர்களின் பெற்றோர்கள் தனியாக வீடும் எடுத்து தருகின்றனர். எலியும் பூனையும் ஒரே வீட்டில் தங்குகின்றனர். ஒரே வீட்டில் இருந்தாலும் இரண்டு பேரும் வெளியில் தான் யார் என்று காட்டி கொள்ள கூடாது என்றும் பேசி முடிவு எடுத்து கொள்கின்றனர். பள்ளியில் படிக்கும் மூன் தன் சக மாணவனான இன்னொரு பையனுடன் அவள் ஈர்ப்பு கொள்கிறாள். கிம்முவுக்கு மூன் குன் படிக்கும் அதே பள்ளியில் ஆசிரியர் வேலை கிடைக்க அவர்களின் விளையாட்டு ஆரம்பிக்கிறது. எப்படி இவர்கள் சேர்ந்தார்கள் என்பதை மிக மிக அழகாக சின்ன நகைச்சுவையுடன் இயக்குனர் கிம் ஹோ-ஜன் கொடுத்து உள்ளார்.


மூன் குன் தான் இக்கதையின் இதய துடிப்பு. அவளின் பள்ளி பருவத்தின் குணம், பேசும் விதம், ஆசை மற்றும் கணவனை பற்றி அறிந்து கொள்ளும் இடம் என்று அனைத்து விதமான இடத்திலும் முகபாவனைகள் அட்டகாசம். கிம் ரே வான் ஜாலியான வாலிபன். மூன் குன்னை அடைவதாக கூறி நடத்தும் நாடகம், ஆசிரியர் ஆன உடன் பள்ளியில் நடந்து கொள்ளும் விதம் ஆகட்டும், வீட்டில் இரண்டு பேரும் அடிக்கும் லூட்டி ஆகட்டும்,  நன்றாக செய்து இருக்கிறார்.

முக்கியமான விஷயம் இப்படத்தில் திரைக்கதை தான். ஹானிமூனில் தனியாக கிம் ரே படும் அவஸ்தைகள், மூன் குன்னின் தோழி அதே சக மாணவனை காதலிப்பதாக கூறுவதும், ஆசிரியையின் காதல் மற்றும் அதே ஆசிரியை வீட்டிற்கு வரும் போது இரண்டு பேரும் செய்யும் செயல்கள் என்று நம்மை கட்டி போட்டு விடுகிறார்.

கொரியன் படங்களில் எப்போதுமே வன்முறை, ரத்தம், கொடுமையான காமம், இராணுவ போர் என்று இருக்கும். ஆனால் முற்றிலுமாக காதல், குடும்பம், திருமணம், நகைச்சுவை என்று ஒரு முழு குடும்ப படத்தை பார்ப்பது மற்றும் கேள்வி படுவது முதல் முறை இது தான். 2004 ஆண்டு கொரியாவில் வெளிவந்த படங்களில் இந்த படம் இரண்டாவது இடத்தை பிடித்தது என்பது ஒரு சிறு விஷயம்.

நான் ரசித்த படங்களில் இந்த படத்துக்கு முக்கிய இடம் உண்டு.

FYI: நான் கஷ்டபட்டு படத்தை தேடி கண்டுபிடித்து இறக்கம் செய்து பார்த்தல்,  இப்படம் யுடியுபில் ஆங்கில வார்த்தைகளுடன் உள்ளது.

நதியா கொல்லப்பட்ட ராத்திரி - மலையாளம் - 2007


சுரேஷ்கோபி மற்றும் காவ்யாமாதவன் நடிப்பில் வெளிவந்த மற்றொரு கொலை விசாரணைப் பற்றிய படம். சென்னை மற்றும் மங்களூர் இடையில் செல்லும் சௌபர்ணிக எக்ஸ்ப்ரஸில் மூன்று பிணங்கள் கிடைக்கிறது. அதில் இரண்டு தற்கொலை போல் ஜோடிக்கப்பட்ட கொலைகள். அதை எவ்வாறு நம்ம சுரேஷ்கோபி கண்டுபிடிக்கிறார் என்பதே கதை.  சுரேஷ்கோபி நம்மூர் கேப்டன் மாதிரி தெரிகிறார். இந்த பக்கம் மற்றும் அந்த பக்கம் திரும்பும் போது முகத்தில் உள்ள தோல்கள் ஆடுகிறது. காவ்யாமாதவன் எப்போதும் போல் நடித்து தன் பங்கினை முடித்து இருக்கிறார். இயக்குனர் இந்த படத்தில் செய்த பெரிய தவறு என்னவென்றால், விசாரணை நடத்தும் போது சுரேஷ்கோபி சொல்லுகின்ற விஷயங்கள் அனைத்தும் நமக்கு புதிதாகவே இருப்பதாக தோன்றுகிறது. அதை அவர் எப்போது விசாரணை செய்தார் என்பது பல இடத்தில் தெரியவில்லை. காவ்யாமாதவனுக்கு இதில் இரட்டைவேடம். சொல்லிக்கொள்ளும் படி இல்லை என்றாலும் ஒரு முறை இப்படத்தை பார்க்கலாம்

No comments: