Monday, August 02, 2010

விமர்சனம்

களவாணி - தமிழ்


மீண்டும் ஒரு இயல்பான ஒரு குறும்புக்கார கிராமத்து வாலிபனின் காதல் கதை. இந்த மாதிரி கதைகளில் நடிகர், இயக்குனர் மற்றும் நகைச்சுவை என்று ஏதாவது சொதப்பி வைத்துவிடுவார்கள். ஆனால் இப்படத்தில் அனைத்துமே அமைத்தது தான் அம்சமே. கண்டிப்பாக திரைஅரங்கில் பார்க்க வேண்டிய படம். நடிகர் விமல் மற்றும் இயக்குனர் சற்குணம் அவர்களுக்கு பாராட்டுகள்

மகாதீரா - தெலுகு


பல இடங்களில் இப்படம் தெலுகு படம் என்று நீருபித்தலும், படம் எடுத்து சென்ற விதமும்,  நடிகையும் தான் படத்தை பார்க்க வைத்த விஷயம். அரச குல அரண்மனை, உடைகள், மற்றும் அதற்குரிய கிராபிக்ஸிலும் இயக்குனரின் உழைப்பு தெரிகிறது. இப்படத்தை திரைஅரங்கில் பார்க்காமல் எப்படி மறந்தேன் என்று தெரியவில்லை. தெலுகு திரையுலகம் நடிகைகளை அழகாக காட்டுவதில் வல்லவர்கள். அந்த தொழில்நூட்ப கலைஞரின் உழைப்பு கஜல் முகத்திலும், உடையிலும் தெரியும். கஜல் அவ்வளவு அழகா என்று இப்படத்தை பார்த்த பின்பு தான் தெரிந்தது.  நடிகர் சிரஞ்சீவின் மகன் ராம்சேரன்தேஜா தான் இப்படத்தின் நாயகன் . நடிக்க நல்ல முயற்சி எடுத்து இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். வாழ்த்துக்கள் ராம்.  திரைஅரங்கில் சென்று பார்க்க வேண்டிய படம் தான் இது.

Shooter - ஆங்கிலம்


அமெரிக்கா அதிபரை கொல்ல சதி நடக்கும் போது அதற்கு பதில் பக்கத்தில் உள்ள நபர் கொல்ல படுகிறார். உண்மையாக யாரை கொல்ல சதி நடந்தது, நாயகன் எப்படி மாட்டி கொள்கிறான், எப்படி தப்பித்து கொள்கிறான் என்பதே கதை. வழக்கம் போல் ஹாலிவுட் பட வடிவில் உள்ள படம். சொல்வதற்கு சொல்லும் படி விஷயம் இல்லை.

தில்லாலங்கடி - தமிழ்


என்னடா இது சன் நிறுவத்தில் இருந்து நல்ல படமா என்று அடுத்த நாளே பார்த்தால் தான் தெரிந்தது, அது தெலுகு படமான "KICK" படத்தின் தமிழ் பதிப்பு என்று. திரைக்கதை முதல், நடிகர்களின் நடிப்பு வரை என்று எல்லாமே காப்பி தான். ரவிதேஜா செய்த அதே நடிப்பை ஜெயம் ரவியிடம் பார்த்தால், சகிக்க முடியவில்லை. இலியான அல்லது தமன்னா என்று கேட்டால் இலியானா தான். அது இப்படத்தின் முதல் காட்சியை பார்த்தாலே தெரிந்து விடும். வழக்கம் போல் வடிவேலும், சந்தனமும் கலக்கி இருப்பார்கள். இவர்கள் இல்லை என்றால் படம் கஷ்டம் தான். தெலுகு படத்திற்கு சொன்ன அதே முடிவு தான் இதற்கும். ஜாலியான படம் முடிவை தவிர.

No comments: