Showing posts with label கடவுள். Show all posts
Showing posts with label கடவுள். Show all posts

Monday, April 11, 2011

இறைவனை வேண்டுகிறேன்

வாழும் கடவுள்களாக காணபடும் மருத்துவர்களும், மருந்தை கண்டுபிடிக்கும் ஆய்வாளர்களும் தயவு செய்து cancer என்ற நோய்க்கு மருந்து கண்டுபிடியுங்கள். எனது உற்றார் மற்றும் உறவினர் எழு பேர்கள், இந்த நோயால் அவதிபடுவதை நான் என் கண்களால் கண்டு இருக்கிறேன். அவர்களுக்கு இந்த நோய் வந்துவிட்டதே என்ற வலியை விட, அந்த வலியில் அவர்கள் படும் வேதனை தான் அதிகம். அதே போல் அதை பார்க்கும் போது ஏற்படும் வலிகள் நமக்கும் அதிகம்.

எனது தொழில்நூட்ப கல்லூரி நண்பரின் தாயார் அவர்களின் உடல் நிலை சரியாக இறைவனை வேண்டுகிறேன். இத்தனைக்கும் அவர்கள் தினசரி பூஜை செய்யும் பழக்கம் உடையவர்கள். இந்த நிலையில் நான் தெய்வம் என்ற சொல் கேள்வி குறி ஆகி விடுகிறது.

Monday, August 31, 2009

கடவுளின் மறுபெயர்?

தன் லட்சியத்தை அடைய கடும் முயற்சிகள் செய்து கொண்டே கடவுளை வணங்கினாலும் பல ஆண்டுகளாக அடைய முடியவில்லை. அனைவரும் அதை விதி என்று கூறுகின்றனர். முயற்சி திருவினையாக்கும் என்று கூறினாலும், அது 100% உண்மை என்று கூற முடியாது என்பது என் கருத்து.

விதி - கடவுளின் மறுபெயர் என்று கூறலாமா?

கடவுள் நம்பிக்கை இருந்தாலும், வணங்காமல் எந்த வித முயற்சியும் இல்லாமல் சில பேர் லட்சியத்தை அடைகின்றனர். இதற்கு அனைவரும் அதிர்ஷடம் என்று கூறுகின்றனர்

அதிர்ஷடம் - கடவுளின் மறுபெயர் என்று கூறலாமா?

"நல்லவங்களுக்கு ஆண்டவன் அதிகம் சோதிப்பான் ஆனா கைவிட மாட்டன்..கெட்டவங்களுக்கு ஆண்டவன் அதிகம் கொடுப்பன் ஆனா கைவிட்டு விடுவான்" என்று தலைவரின் விரிகளை கூறாமல், நடைமுறைப் படி யோசித்தால்.. (அய்யோ, இப்பவே கண்ண கட்டுதே.. முடியலப்பா)

கடவுளின் மறுபெயர் விதி மற்றும் அதிஷ்டம்?

இங்கு கடவுள் நம்பிக்கை பற்றி பார்க்கிறோம். அதற்கும் தன்நம்பிக்கை உள்ள வித்தியாசம்? எது பெரியது? நான் யோசித்து பார்க்கிறேன்..

பி.கு. எனக்கும், இந்த பதிவுக்கும் நிறைய முரண்ப்பாடு இருந்தாலும், தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டியது.

Monday, February 09, 2009

நான் கடவுள் (அஹம் பிரம்மாஸ்மி)

மிகுந்த எதிர்பார்ப்புக்களுடன் நான் ஞாயிறுக்கிழமை அன்று அதிகாலை மணி அளவில் நண்பர்களுடன் ஐநாக்ஸ் திரைஅரங்கில் அமர்ந்தோம். திரைப்படத்தை பார்த்துவிட்டு வெளியில் வரும் போது எதோ ஒரு வித ஏமாற்றம். இது கமர்சியல் படமல்ல என்பது பாடல் கேட்கும் போதே தெரிந்து விட்டது, எனவே எதிர்பார்ப்புகளும் அதை ஒட்டியே வைத்து இருந்தேன், அதையும் மீறி சில காரணத்தால் மனதில் நிற்க மறுக்கிறது.

விளிம்பு நிலை மனிதர்களை பற்றிய கதை இது. நாம் இருக்கும் தொழில்நுட்ப உலகில் இருந்து சற்றும் நாம் எதிர்ப்பார்க்காத இரண்டு உலகத்திற்கு நம்மை கூட்டி செல்லும் இத்திரைப்படம். காசியில் பிணத்திற்கு நடுவில் வாழ்ந்து தன்னை தானே கடவுள் சொல்லும் மக்களும், உடல், மன நலம் குன்றியவர்களை அல்லது நன்றாக இருப்பவர்களை ஊனமாக்கி அவர்களை வைத்து பிச்சை எடுக்க வைத்து மிரட்டி பிழைப்பு நடத்தும் பிறவிகளும் ஒருசேர கதையில் கொண்டு வந்து மிரட்டி இருப்பது பாலாவின் தனித்திறமை.

பலரும் காசியில் எடுக்கப்பட்ட காட்சிகளின் நேரம் மிகக்குறைவு என்று குறைப்பட்டு இருந்தனர். உண்மையில் காசியில் எடுக்கப்பட்ட காட்சிகள் அரை மணி நேரம் வெட்டப்பட்டுள்ளதாக ஊடக நண்பர் ஒருவர் கூறினார்.

இதில் அவலட்சணமான முகம் கொண்டவர்களை காட்டி இருப்பார், மிகையாக இல்லை உண்மையில் இதை போல இருப்பவர்கள் தான். ஆனால் என் மனதிற்கு படுவது இவர்களை காட்சிகளில் அதிகம் காட்டி விட்டார், இவர்கள் கஷ்டப்படுவது உண்மை என்றாலும் அந்த பகுதியை இன்னும் கொஞ்சம் குறைத்து இருக்கலாம், அவர்களை அடிக்கடி அருகில் காட்டுவதையும் தவிர்த்து இருக்கலாம். ஒரு சிலருக்கு பரிதாபத்திற்கு பதில் சலிப்பு வர வாய்ப்புண்டு.

ஆர்யா இதில் வீணடிக்கப்பட்டு விட்டார் அல்லது அவர் நடித்து இருந்த காட்சிகள் வெட்டப்பட்டு இருக்கலாம். கோபமாக நடப்பதையும் பேசுவதையும் நடிப்பாக கருத முடியாது. இந்த படத்தில் நடிக்க அதிக வாய்ப்பு பூஜாவிற்கு, அவரும் தன் பங்கை சிறப்பாக செய்துள்ளார் அதுவும் கடைசி காட்சியில் நம் கண்களில் கண்ணீர் வர வைத்து விடுக்கிறார். கண் தெரியாதவர் போல வருவதால் காண்டாக்ட் லென்ஸ் பொருத்தி இருக்கிறார், சிரமமான நடிப்பு தான்.

படம் முழுவதும் சீரியஸ் ஆக இருக்கும் என்று நினைத்து விடவேண்டாம், படத்தில் நடு நடுவே கதையோடு ஒட்டிய நகைச்சுவை வசனங்களும் உண்டு, சிரிக்காமல் இருக்கவே முடியாது, இயல்பான வசனங்கள். அதுவும் உடல் ஊனமுற்ற நபரில் ஒரு சிறுவன் அடிக்கும் லூட்டிக்கு அளவே இல்லை, அதே போல பலர். ஒரு காட்சியில் ஆர்யாவை அங்கே உள்ள போலி சாமியார்கள், சாமி! வாயில இருந்து லிங்கம் வருமா? என்று கேட்டதும் ..ம்ம் உன் வாயில அடிச்சா ரத்தம் வேணா வரும் என்று கூற அவர் கப் என்று இருப்பது செம காமெடி:-)) இதில் பல டைமிங் காமெடி என்பதால் அதை பார்த்தால் மட்டுமே உணர முடியும், வெறுமனே கூறுவதால் அந்த காட்சியின் அமைப்பு புரியாது.

படத்தில் சில குறைகள் இருந்தாலும் குத்து பாட்டு, வெளிநாட்டில் படமாக்கப்பட்ட காட்சிகள், ஒன்றுக்கும் உதவாத கதை, ஹீரோயிசம் என்று சம்பாதிக்க படம் எடுக்கும் மற்றவர்களிடையே இருந்து விலகி, கவனிக்கப்படாத மக்களை பற்றி அவர்கள் படும் துன்பங்கள்,அவர்களின் ஏக்கங்கள் பற்றி படம் எடுக்க பாலா ஒருவரால் தான் முடியும் என்பதை நிரூபித்து இருக்கிறார். அதற்காக அவரை கண்டிப்பாக பாராட்ட வேண்டும். விமசர்னம் என்ற பெயரில் அவரை குறை கூறாமல் இருக்க வேண்டும்.