சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, ஒரு முழு புத்தகத்தை படிக்கும் நேரமும், அதற்குரிய மன-அமைதியும் கிடைத்தது. தனிபட்டகதாபாத்திரங்களின் பண்பு, கோபம், சோகம், மகிழ்ச்சி,பொறமை,நற்குணம்என்று விவரிக்கக்கூடிய திரைப்படங்கள் ஆகட்டும், புத்தகங்கள் ஆகட்டும், அதில் எனக்கொரு தனி விருப்பம் உண்டு. திரைப்படத்தை எடுத்து கொண்டால் நாயகன், தவமாய்தவமிருந்து,வெயில்,ஆட்டோகிராப்போன்ற படங்கள் தனிபட்ட மனிதனின் வாழ்க்கையை மிகசிறப்பாக கொடுக்கபட்டு இருக்கும். அதே போல் இயக்குனர் விசுவின் திரைப்படங்களை எடுத்துக் கொண்டால் தனிபட்டகதாப்பாத்திரங்கள் இருந்தாலும், அதற்கு முன் ஒரு குடும்பத்தை காட்டி, அதில் உள்ள பற்பல மனிதர்களை சுட்டி காட்டி இருப்பார். அதனால் தான் என்னவோ விசுவின் திரைப்படங்களின் மேல் ஒரு தனிப்பட்ட விருப்பம் எப்போதும் இருக்க தான் செய்யும்.சம்சாரம்அதுமின்சாரம்,மணல்கயிறுபோன்ற படங்கள்நல்லஉதாரணம்.அப்படிப்பட்ட இரண்டு குடும்பத்தில் இருக்கும்நான்குகதாப்பாத்திரங்கள்மற்றும் இரண்டு தனி மனிதர்கள் என்று ஆறு பேரை மட்டுமே கொண்டு ஒருகுடும்பநாவல் தான் "அனலாய்க் காயும் அம்புலிகள்".
கதை ஆசிரியர் இந்திரா சௌந்தரராஜன். அவர் பற்றி சொல்ல தேவையில்லை. இலக்கிய மற்றும்புத்தக உலகில் இவருக்கு என்று தனிப்பட்டஅடையாளம் உண்டு. திரில், காதல்,குடும்பகதைகள் என்று அனைத்து விதங்களிலும் தன்னுடைய திறமையை எடுத்துக் காட்டியவர். அக்கதையை படிக்கும் போது ஏற்படும் நிகழ்வுகள் நம் கண் முன் ஓடுகின்ற மாதிரி தனது எழுத்தை வைத்தது இல்லாமல், நம் குடும்பத்தில் நடக்கும் நிகழ்வை காணலாம்.
அரவிந்தன், ரம்யா, ராம்நாத், சரண்யா, ஞானசேகரன், குணசேகர் என்று மொத்தம் ஆறு நடமாடும் மனிதர்கள். ஒவ்வொருவருக்கும் தனிபட்ட பிரச்சனை என்று இருந்தாலும், அப்பிரச்சனை கூட குடும்பத்தை சார்ந்ததாக இருக்கும்.அரவிந்துக்கும்,ரம்யாவிற்கும்காதல்ஏற்படும்தருணம், அவர்கள்பேசிகொள்ளும்கருத்துக்கள்,சரண்யா மற்றும்ராம்நாத்தின்உள்ளுர்வுபிரச்சனைகள் என்றுஒவ்வொரின்தனிப்பட்டகோபம், சோகம், மகிழ்ச்சி,பொறமை என்று இந்திராவின் வார்த்தை ஜாலங்கள் அதுவும் இலக்கிய நாயத்துடன்.
பெண்களுக்கு இறைவன் இரண்டு அஸ்திரங்களை கொடுத்திருக்கிறான். ஒன்று அவர்களது இளமை. இரண்டாவது அவர்களது சமையல். சமையலில் ஒரு பெண் ஆணை சாய்த்துவிட்டால் அதன் பின் அவனால் எந்த காலத்திலும்எழுந்திருக்கவே முடியாது.
ஒரு ஆண் கவனம் அவனோடு பணியில இருக்கணும். ஒரு பெண்ணோட கவனம் ஆணின் நலத்திலும் கெளரவத்திலும் இருக்கணும். அவள் அவனை உயர்த்திப் பிடிக்கணும். அப்படி பெண்ணால் தூக்கி நிறுத்தப்படர குடும்பம் தான் ஆலமரமா வளரும். குடும்ப உறவு தர்மம் சார்ந்தது. எப்பவும் வாழ்க்கை நியதிகள் ஆண், பெண் இயலபுகளை ஒட்டி இருக்கணும்.
இப்ப உடம்பில தெம்பு இருக்கு. எப்படி வென வாழ்ந்துடலாம். வயசாகிக் கண்பார்வை குறைஞ்சு ஒரு கவர்ச்சியும் இல்லாமக் கிடக்க நேரும் போது, பசங்களோ குட்டிகளோ இல்லைன்னா யாருடா வருவா?
இப்படி ஒவ்வொரு வார்த்தைகளும், கூர்மையானகத்திகள் போல் எங்கும் பரவி கிடைக்கின்றன. மொத்தத்தில் இந்த புத்தகத்தை முடிக்கும் போது விசுவின் படத்தை பார்த்த ஒரு மகிழ்ச்சி.
இந்த புத்தகத்தை வாங்க வேண்டுமா என்ற எண்ணம் இருந்தது.. அதே போல் நான்விசாரித்த போது கூட அந்த அளவு இல்லை என்று கேட்ட முடிந்தது. ஆனால்புத்தகக் கடையில் சென்ற போது, மனதில் ஒரு எண்ணம். எவ்வளவே செலவு செய்றோம், இந்த புத்தகத்தை வாங்கின என்ன என்ற எண்ணத்தில் வாங்கியது. அதற்கு கோபிஅவர்களின்விஜய் தொலைக்காட்சியின் "நீயா நானா" என்ற நிகழ்ச்சியும் ஒரு உள்காரணம்.
எனக்கு தெரிந்தவரை கோபி அவர்கள் ஒரு சாதாரண மனிதனின் எண்ணத்தை நன்குஅறிந்தவர் என்று கூற வேண்டும். இல்லையென்றால் இந்த புத்தகத்தை இவ்வளவுதெளிவாக அதுவும் சுவராஸ்யமாக எழுத முடியாது. நான் தனியாக இருக்கும் போது, மனதில் பல கேள்விகளும், குழப்பங்களும் மனதை/மூளையும் பிடித்துஆட்டிவிடும்.
வாழ்க்கையில் சுவாரஷ்யம் இல்லாமல் இருக்குதே?
பக்கத்து வீட்டுகாரன் அல்லது எதிர்க்கட்சிக்காரன் பார்த்த என்ன நினைப்பான்
மனசு என்னமோ மாதிரி இருக்கு
எல்லாமே எனக்கு எதிராவே நடக்குது.
பழையதை நினைத்து "போச்சே" என்று புலம்புவது..
மேல சொன்ன சில விஷயங்கள் அனைத்தும், ஏதாவது ஒரு நிமிடத்தில் கண்டிப்பாகநினைத்து இருப்போம்.இந்த மாதிரியான நினைப்பை. எடுத்துக்காட்டு உடன்விவரித்து, இதற்குக்கான காரணம் என்ன, எப்படி இதில் இருந்து வெளியே வருவதுஎன்று தெளிவாக விளக்கப் பட்டுள்ளது. இந்த புத்தகத்தில் பல இடங்களில் என்னைபார்க்கின்றேன் என்று தான் கூற வேண்டும்..
மொத்தத்தில் இந்த புத்தகத்தை வாங்கி பொறுமையாக அனுபவித்து படிக்கலாம்...
“The truth about Making Smart Decision” என்ற புத்தகத்தின் தமிழாக்கம். திரு. லட்சுமி விஸ்வநாதன் அருமையாக தமிழாக்கம் கொடுத்து உள்ளார்.
"விரைவாக சிந்திக்க வேண்டும்... சாமர்த்தியமாக கணக்கு போடா வேண்டும்... உடனே, உடனே முடிவெடுக்க வேண்டும்...
மிக சரியான முடிவைகளை மிக சரியான நேரத்தில் எடுப்பது ஒரு கலை"
ஒரு தனி மனிதன் தன்னை பற்றி முடிவெடுக்கும் போதோ அல்லது சுற்றிஉள்ளவர்களின் முடிவை பற்றி முடிவெடுக்கும் போதோ அதனால் ஏற்பட கூடியதற்போதைய நன்மை/தீமை, நீண்ட கால விளைவுகள், மன உளைச்சல்கள், வரவு/செலவுஆரோக்கியம் என்று பல காரணிகளை மனதில் கொண்டு சாமர்த்தியமாக எவ்வாறுஎடுக்க வேண்டும் என்பதை உதாரணத்தோடு கொடுக்க பட்டு உள்ளது... கண்டிப்பாக அனைத்து வகையான பிரிவினரும் படித்து தெரிந்து கொள்ள பட வேண்டிய விஷயம்..
குறைகளே இல்லையா? என்ன தான்தமிழாக்கமாகஇருந்தாலும், இந்தமாதிரியானபுத்தகத்தைபடிக்கபொறுமைவேண்டும்என்பதைஇதன்மூலமாகஅறிந்துகொண்டேன் (ரொம்பகஷ்டம்). எடுத்துக்காட்டாகஅமைக்கபட்டுஉள்ளமக்கள், தொழில்அமைப்புகள், அதிபர்கள்மற்றஅனைத்தும்வெளிநாட்டவர்களைசார்ந்தவை. இந்த வயசில படிக்கிற புத்தகமா என்ற கேள்வி மனதில் இருந்து கொண்ட தான் இருந்தது
உலகவரலாற்றில் விரல் விட்டு என்ன கூடிய கொலை வழக்குகளில் முன்னால் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி வழக்கும்ஒன்று.. இதை வழக்கை கையாண்டதிரு.ரகோத்தமன் அவர்களின் ”ராஜீவ் கொலை வழக்கு”, மர்மம் விலகும் நேரம் என்ற புத்தகம் வசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. ஏதோ "கிரைம்நாவல்" படிக்கும் அனுபவம்... கையை விட்டுபுத்தகத்தைமுடிக்காமல் வைக்க முடியவில்லை என்பது உண்மை.
என்னால் இந்த புத்தகத்தை பற்றி முழுமையாக விமர்சனம் செய்ய முடியுமா என்றகேள்வி என் மனதில்.. அதனால் இந்த புத்தகத்தை பற்றி தெளிவாக விமர்சனம்செய்து உள்ள ஒரு பதிவை இங்கே வைக்கிறேன். இந்த பதிவு இட்லிவடை வலைதளத்தில் இருந்து எடுக்க பட்டது... அவருக்கு யுதிராஜ் என்ற நண்பர்கொடுத்து இருக்கிறார்.
சில நாட்கள் முன்பு ராஜிவ் காந்தி புத்தகம் பற்றி விமர்சனம் எழுத போவதாகயதிராஜ் சாட்டினார். ஏற்கனவே பா.ராகவன் நிறைய விளம்பரம் செய்துவிட்டார் (செய்துக்கொண்டு இருக்கார்) இப்ப நீங்க வேற ... சரி செய்யுங்க என்றேன்.
ஆனால்நீங்க விமர்சனம் எழுதும் போது கார்த்திகேயன் புத்தகத்தையும் ஒரு முறைபடித்துவிடுங்கள் என்றேன். இரண்டு புத்தகத்தையும் படித்து இந்தவிமர்சனத்தை எழுதி எனக்கு அனுப்பினார்.
நான் ஜெயின் கமிஷன்அறிக்கையை படித்துவிட்டீர்களா என்று அவருக்கு அனுப்பினேன். அதையும்கொஞ்சம் படித்து திரும்ப எழுதி அனுப்பினார்.....
”ராஜீவ்கொலை வழக்கு”, மர்மம் விலகும் நேரம், ராஜிவ் படுகொலை - புலனாய்வு என ஒரேவிஷயத்தைப் பற்றியதான இரு நூல்கள், இரு வேறு ஆசிரியர்களால் அளிக்கப்பட்டுசந்தையில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. ஆனால்இவ்விருத்தகங்களுக்குமிடையிலான அடிப்படை ஒற்றுமை வேற்றுமைகளென்னென்னஎன்பதை எனதறிவிற்கு எட்டியவரை எழுதியுள்ளேன். நிச்சயமாக, எனக்கும், கிழக்கு மற்றும் ராஜராஜன் பதிப்பகத்தாருக்குமிடையே எந்த வர்த்தகத் தொடர்போஅல்லது வேறு எவ்வித உறவோ இல்லை. இது ஒரு மார்கெட்டிங் உத்தியும் கிடையாது.இவ்விரு புத்தகங்களையும் படித்த பின்னர் எழும் கேள்விகளையும், குழப்பங்களையும் உங்களிடம் பகிர்ந்து கொள்ளும் ஒரு எண்ணத்தின்வெளிப்பாடுதான்.
புத்தகாசிரியர்கள் இருவருமே, இப்புத்தகங்களை, ஒருதேர்ந்த எழுத்தாளருக்குரிய, உயர்ந்த விருவிருப்பான நடையில் இறுதிவரைகொண்டு சென்றுள்ளனர். ஏதோ ராஜேஷ்குமாரின் கிரைம்நாவல் படிப்பது போன்றதானஉணர்வுதான் மேலிட்டது. நிச்சயம் எடிட்டர்களின் 'கைவண்ணம்' இருப்பதுதெரிகிறது. அவர்களுக்கு முதலில் பாராட்டுக்கள்.
ஆனால்திரு.ரகோத்தமன் அவர்கள் எழுதிய புத்தகத்தைப் படிப்பதற்கு முன்னர், திரு.கே.டி.கார்த்திகேயன் எழுதிய, ”ராஜீவ் படுகொலை” புலனாய்வு புத்தகத்தைமுழுமையாக வாசிக்க வேண்டும். இத்தனைக்கும் ரகோத்தமன் அவர்களும், கார்த்திகேயன் அவர்களும் ஒரே வழக்கை ஒரே குழுவாக இருந்து கையாண்டவர்கள்.எனவே, இருவரும் எதற்காக தனித்தனியே ஒரே விஷயத்தைப் பற்றிய புத்தகம்எழுதியிருக்கிறார்கள் என்ற கேள்வி பலருக்கும் எழலாம். எனக்கும் எழுந்தது.ஆனால் இரண்டையும் படித்தபின்னர், ஒன்றிலிருந்து ஒன்று எவ்வாறு ஒரு முக்கியவிஷயத்தில், அதுவும் வழக்கின் போக்கையே மாற்றியமைத்திருக்க்க் கூடியவித்த்தில் வேறுபடுகிறது என்பது புரியும்.
இலங்கையில்சிங்களவர்களுக்கும், தமிழர்களுக்குமிடையேயான அடிப்படைப் பிரச்சனை, அவற்றில் புலிகளின் பங்கு, விடுதலைப் புலிகள் அல்லாத மற்ற தமிழ்இயக்கங்கள், இந்திய இலங்கைக்கிடையிலான ராஜிவ் ஜெயவர்த்தனே ஒப்பந்தம், அவற்றில் புலிகளின் அதிருப்தி, அமைதிப்படை, புலிகளின் தமிழகத் தொடர்புகள் (அரசியல் தொடர்புகள் நீங்கலாக), இலங்கையில் தான் மேற்கொண்ட கள ஆய்வு எனதிரு. கே.டி.கார்த்திகேயன் சற்று ஆழமாகவே தனது புத்தகத்தில் அலசுகிறார்.இலங்கைப் பிரச்சனை பற்றி ஏதும் தெரியாதவர்கள் இவருடைய புத்தகத்தின் மூலம்இலங்கையின் இனப்பிரச்சனைக்கான அடிப்படையை நன்கு புரிந்து கொள்ள முடியும்.எவ்வித குழப்பமும் இல்லாமல் தெளிவாக விளக்கியிருக்கிறார்.
திரு.ரகோத்தமன்அவர்களும் இதே விஷயங்களைத் தனது புத்தகத்தில் அலசியிருக்கிறார்கள். ஒரேவழக்கில் பணியாற்றியவர்கள் என்ற காரணத்தால், வழக்கின் புலனாய்வு தொடர்பானவிஷயங்களில் அதிக முரண்பாடில்லாமல் இவ்விரு புத்தகங்களும் செல்கின்றன.ஆனாலும், கார்த்திகேயன் தனது புத்தகத்தில் குறிப்பிடாத சில பல விஷயங்களை, ரகோத்தமன் தனது நூலில் குறிப்பிட்டிருப்பது ஆச்சர்யமான அதிர்ச்சியைத்தோற்றுவிக்கிறது. நிச்சயமாக கார்த்திகேயன் எழுதாமல் விட்டிருப்பது சாதாரணவிஷயங்களோ, அல்லது தொகுக்கும்போது நேர்ந்த கவனப் பிழைகள் என்றோ சொல்லமுடியாது. அவையனைத்தையும் இங்கு குறிப்பிட்டு விட்டால், புத்தகத்தைப்படிக்க்கும் ஆர்வம் குறைந்து விடுமென்பதால் சிலவற்றை மட்டும் இங்கேகுறிப்பிடுகிறேன்.
உதாரணமாக, பத்மநாபாவைக் கொலை செய்து விட்டு, சிவராசன் குழுவினர் தப்பிச் செல்லும் போது, கார்த்திகேயன் இவ்வாறு எழுதுகிறார்.
“ஒருஅம்பாசிடர் காரில் தப்பித்துச் சென்று கொண்டிருந்த புலிகளை, செங்கல்பட்டுஅருகே போலீசார் தடுத்து நிறுத்தியதைச் சட்டை செய்யாமல் இரவு ஒண்ணரைமணியளவில் விழுப்புரம் சென்றடைந்தனர். அங்கே, அம்பாசிடர் காரைவிட்டுவிட்டு, ஒரு மாருதி காரை மடக்கி அங்கிருந்தவர்களை வெளியேற்றிவிட்டு, அந்த காரில் திருச்சி நோக்கி விரைந்தனர். மாலையில் திருச்சியிலிருந்துபுறப்பட்டு, வங்க்க் கரையை ஒட்டிய மல்லிப்பட்டினம் என்ற ஊரில், ஒருதென்ன்ந்தோப்பில் இரவைக் கழித்தனர்.......
இச்சம்பவத்தை ரகோத்தமன் விவரிக்கும் போது....
”செங்கல்பட்டுதாண்டும் போதே இரண்டு போலீஸ்காரர்கள் வழிமறித்திருக்கிறார்கள்.அவர்களுக்கும் சந்தேகமெல்லாம் ஒன்றுமில்லை. வழக்கமான நெடுஞ்சாலைபரிசோதனைதான்.
வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு எதற்கோஇறங்கியிருந்தவர்களை நெருங்கிய அந்த இரண்டு போலீசாரும் வண்டியில் என்னஇருக்கிறது என்று கேட்டிருக்கிறார்கள்.
வண்டி நிறையவே ஆயுதங்கள் இருந்தன. ஏகே ரகத் துப்பாக்கிகள். கையெறி குண்டுகள் இன்னும் பல்.
“டிக்கியைத் திறந்து காட்டுங்கள்!”
இரண்டுகாவலர்களில் ஒருவர் வயதானவர். ஒருவர் இளைஞர். கேட்ட்து இளைஞர்தான். வயதானகாவலருக்கு அவர்களைப் பார்த்த்தும் பிரயோஜனமில்லாதவர்கள் என்றுதோன்றிவிட்டிருக்கிறது. இளைஞருக்கு ஒரு முயற்சி செய்து பார்க்கும் ஆசை.....
அந்தஇளம் காவலர் விடாமல் வண்டியைத் துரத்தப் பார்க்க, அவர் கையை இழுத்துப்பிடித்தபடியே சிறிது தூரம் வண்டியை ஓட்டி, ஓரிட்த்தில் கையை விட்டார்சிவராசன். அடி. பலத்த அடி...............
அவர்கள்திருச்சிக்குச் சென்று, அங்கிருந்து மல்லிப்பட்டினம் போய், இரவு வரைகாத்திருந்து படகு ஏறிச் செல்லும்வரை ஒரு நடவடிக்கையும் கிடையாது.
போகிறவர்களைப் பிடிக்க வேண்டாம் என்று மேலிடத்து வாய்மொழி உத்தரவுகள் இருந்த்தாகப் பின்னால் சொல்லப்பட்ட்து”
“இந்தவழக்கை யாரும் கேட்டுக் கொள்ளாமலேயே சி.பி.ஐ எடுத்துக் கொண்டிருக்கலாம்.அதற்கான அதிகாரங்கள் எங்களுக்கு இருந்தன. தவிர ராஜிவ் படுகொலையுடன்நெருங்கிய தொடர்புடைய வழக்கு அது. ஆனால் மாநில போலீஸ் மெத்தனம்காட்டுவதைக் கண்டு அதிமுக தலைவர் ஜெயல்லிதா, தமிழக முதல்வராக இருந்தபோது, இதனை சிபிஐக்கு மாற்றச் சொல்லி சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு மாற்றச்சொல்லி மத்திய அரசுக்குக் கடிதமே எழுதிய பிறகும் ஏனோ ராஜிவ் கொலை வழக்குசிறப்புப் புலனாய்வுப் பிரிவின் தலைவரான கார்த்திகேயன் அப்போது அதில்ஆர்வம் செலுத்தவில்லை. வழக்கை இறுதி வரை கையில் எடுக்கவும் இல்லை.தமிழ்நாடு போலீசே விசாரிக்கட்டும் என்று சொல்லி விட்டார்.
இதற்கான காரணம் எனக்குப் புரியவே இல்லை.”
இந்தஒரே விஷயத்தைப் பற்றி இவ்விருவரும் விவரிப்பதில், வித்யாசம் உங்களுக்கேதெரியும். மேலிட உத்தரவு பற்றி கார்த்திகேயன் குறிப்பிடவே இல்லை.இதுமட்டுமல்லாமல், கார்த்திகேயன் எழுதிய 340 பக்க புத்தகத்தில், ராஜிவ்படுகொலை பற்றி விசாரிக்கப்படவேண்டியவர்களாக ஜெயின் கமிஷனால் கூறப்பட்ட ஒருஅரசியல்வாதியின் பெயர் கூட இடம்பெறாதது மிகப்பெரிய ஆச்சரியம். இதற்கானகாரணம் என்னவென்பது அவருக்கு மட்டுமே தெரியும்.
மேலும் இது போன்றசில விஷயங்களில் கார்த்திகேயன் அவர்கள் காட்டிய அலட்சியம் ஏனென்றுபுரியவில்லை என்பதாக ரகோத்தமன் குறிப்பிடுகிறார். இன்னொரு உதாரணம், சென்னையில் கரையொதுங்கிய விடுதலைப் புலிகளின் கப்பல் பற்றி தமிழககாவலர்களே விசாரித்துக் கொள்ளட்டும் என்று கார்த்திகேயன் அதிக ஆர்வம்காட்டாமல் விட்டுவிட்டார் என ரகோத்தமன் தெரிவிக்கிறார்.
தவிர, ராஜிவைப் படுகொலை புரியும் நோக்கோடு இந்திய மண்ணில் காலடியெடுத்து வைத்தமுதல் பெண் தற்கொலைப்படை மனித வெடிகுணடு ஆதிரை. இவர் மூலம் ராஜிவைதில்லியிலேயே படுகொலை செய்ய முதலில் திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது. பிறகுநடைமுறைச் சிக்கல்களால் அத்திட்டம் கைவிடப்பட்டு, தணு மூலம் படுகொலைசெய்யப்பட்டிருக்கிறார். அதற்குமுன், தில்லியில் ஆதிரை மற்றும் அவருக்குஉதவியாக கனகசபாபதி என்னும் முதியவர் ஆகிய இருவரும் தங்குவதற்கான உதவிகளை, தில்லியில் தியாகராஜன் என்பவர் செய்திருக்கிறார். இந்த தியாகராஜன், வைகோவின் நெருங்கிய நண்பர். தவிர வைகோவின் உறவினரான ரவிச்சந்திரன்என்பவரும், இத்திட்ட்த்தில் தொடர்புடையவர்களுக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோசில உதவிகளைச் செய்துள்ளார். இதுபற்றிய எந்த தகவலும் கார்த்திகேயன் எழுதியபுத்தகத்தில் இல்லை. அது ஏன் என்ற கேள்வி பிரதானமாக எழுகிறது.
பிறகு, ராஜிவ் படுகொலை நிகழ்த்தப்பட்ட அதே தினத்தில், ராஜிவ் கூட்டத்திற்குஇரண்டு மணிகளுக்கு முன்னர், கலைஞர் கலந்து கொள்ளும் பொதுக் கூட்டமும்ஏற்பாடு செய்யப்பட்டிருந்த்து. பிறகு அக்கூட்டம் எவ்வித முன்னறிவிப்பும்இன்றி கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது. ராஜிவ் படுகொலை குறித்ததகவல்கள் முன்னரே அவர்களுக்குத் தெரியுமா என்பன போன்ற சந்தேகங்கள்எழுகின்றன. ஆனால் இது போன்ற சந்தேகங்களைக் கார்த்திகேயன் தனதுபுத்தகத்தில் எழுப்பவில்லை. இதெல்லாவற்றையும் விட ஆச்சரியமான விஷயம் ஒன்றுஇருக்கிறது. ராஜிவின் கூட்டம் 8 மணிக்கு. ஆனால் அவர் புறப்பட வேண்டியவிமானம் கோளாறினால் தாமதப்பட்டு, இரண்டு மணிநேரம் தாமதமாகத்தான்கிளம்பியிருக்கிறார். அவ்விஷயம் காவல் பணியில் இருந்த காவலதுறைஅதிகாரிகளுக்கும், உளவுத் துறையினருக்குமே தெரியாதாம். ஆனால் இவ்விஷயத்தைஸ்தலத்திலிருந்த சிவராசன் தனது டைரியில் குறித்து வைத்திருந்திருக்கிறார்.அவருக்கு தகவல் கொடுத்த்து யார்? இது போன்ற கேள்விகளுக்கு விடையில்லை.கார்த்திகேயன் இது போன்ற கேள்வியையே எழுப்பவில்லை.
இன்னும், ராஜிவ்படுகொலை ஹரிபாபு என்ற விடுதலைப் புலி அபிமானியால் படம்பிடிக்கப்பட்டிருக்கிறது. குண்டு வெடிப்பில் இறந்தவர்களுள் அவரும் ஒருவர்.வீடியோகிராபர்களுக்கான மின்சார சப்ளை சரிவர இல்லாத காரணத்தால் படுகொலைநடப்பதற்கு முன்பு, ராஜிவை சரியாக பதிவு செய்ய முடியாத காரணத்தால், வீடியோகிராபர்கள் கேமராவை ஆப் செய்து விட்ட்தாக கார்த்திகேயன்குறிப்பிட்டுள்ளார். ஆனால் ரகோத்தமன் எழுதிய புத்தகத்தில், படுகொலைச்சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் தங்களுக்குக்கிடைத்திருப்பதாகவும், அதனை ஆய்வு செய்து அறிக்கைகள் அளிப்போம் என்றும்உளவுத் துறைத் தலைவர் எம்.கே.நாராயணன் தெரிவித்ததாகதெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் வர்மா கமிஷனின் விசாரணை முடிவடையும் வரை, உளவுத் துறை அவ்வாறான ஒரு வீடியோ கேசட்டை வெளியிடவே இல்லை என ரகோத்தமன்கூறுகிறார். புகைப்படத்தைத் தவிர வேறு எவ்வித ஆதாரமும் இல்லாத நிலையில்அவ்வீடியோ ஆதாரம் மிகப்பெரிய உதவியாக இருந்திருக்கும் எனத்தெரிவிக்கிறார். ஆனால் வீடியோ கேசட் கடைசிவரை வெளியிடப்படவில்லை.அப்படியானால் வீடியோ எடுக்கப்பட்டதா இல்லையா? இல்லை என கார்த்திகேயன்தெரிவிக்கிறார், எம்.கே.நாராயணன் வீடியோ ஆதாரம் உளவுத் துறை வசம்இருக்கிறது என்கிறார். அப்படியென்றால் எது உண்மை? இருப்பது உண்மையெனில்கடைசி வரை ஏன் அதனை வெளியிடவே இல்லை?
ராஜிவ் படுகொலையில் கோட்டைவிட்ட உளவுத்துறை அதிகாரிகளை விசாரிக்கும் பொருட்டு சிபிஐ ஒரு விசாரணைமேற்கொண்டதாம். ஆனால் யாரை விசாரித்தார்கள், என்ன விசாரித்தார்கள்? என்னநடவடிக்கை எடுக்கப்பட்ட்து? என்பன போன்ற ஒரு தகவலுமே இல்லை என்கிறார்ரகோத்தமன். மேலும் கேஸ் டயரி இருக்கிறதா இல்லையா என்றே சந்தேகத்தைக்கிளப்பியிருக்கிறார். உளவுத் துறையையும், எம்.கே.நாராயணனையும்காப்பாற்றுவதற்காகவே அவதரித்ததாக சிறப்புப் புலனாய்வுக் குழுவின் தலைமை (கார்த்திகேயன்) நடந்து கொண்ட்தாக ரகோத்தமன் தெரிவிக்கிறார். ஏன்காப்பாற்ற முனைய வேண்டும்?
பல விஷயங்களில் தமிழக அரசியல்வாதிகளின்கசப்பிற்கு ஆளாக்க் கூடாது என்ற நோக்கில் பட்டும் படாமலும், கார்த்திகேயன்நடந்து கொண்ட்தாக அழுத்தமாகவே கூறியுள்ளார் ரகோத்தமன். குறிப்பாக, வர்மாகமிஷனுக்குப் பிறகு அமைக்கப்பட்ட, ஜெயின் கமிஷனுக்கு விசாரணை பற்றியமுழுமையான விவரங்களை சிறப்புப் புலனாய்வுக் குழு அளிக்கவே இல்லையாம்.தவிர, வைகோ போன்ற அரசியல்வாதிகளை முறையாக விசாரிக்க ரகோத்தமன் அனுமதிகோரிய போதும் மறுக்கப்பட்டிருக்கிறது. இதற்கெல்லாம் என்ன பின்னணி?
புத்தகத்தின் இறுதிக் கட்ட்த்தில் கார்த்திகேயன் இவ்வாறு கூறுகிறார்.
”......தங்களுடையபதவி மூலமாக சொந்த நலன் கருதி, அரசியல் செல்வாக்கிற்கும் பலவந்தத்திற்கும்ஆளாகி நாட்டின் நலனுக்கும், விசாரணையின் நேர்மைக்கும் பாதகமான செயல்களில்இறங்கிவரும் அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது வருந்தத்தக்கதுதான்.”
இவ்வாறு கார்த்திகேயனே எழுதியுள்ளநிலையில், அவர் ஏன் சில விஷயங்களில் மெத்தனப் போக்குடன் அலட்சியமாக நடந்துகொண்டார் என்பது சந்தேகமளிக்கிறது. தவிர வழக்கை எடுத்துக் கொள்வதற்குமுன்பாகவே, எந்த அரசியல் தலையீடும் இருக்க்க் கூடாது என நிபந்தனை விதித்துஅது ஏற்றுக் கொள்ளப்பட்ட்தற்குப் பிறகே விசாரணையைத் துவங்கியதாககார்த்திகேயன் குறிப்பிடுகிறார். இந்த முரண்பாடு புரியாத விஷயமாகஇருக்கிறது.
ரகோத்தமன் குறிப்பிடும்போது...
”சின்னசாந்தன் பிடிபட்ட பிறகுதான் அந்த வழக்கின் முழு வடிவம் வெளிச்சத்திற்குவந்த்து. கொலை நடந்த சமயம் அதை தமிழ் நாடு போலீஸ் “விசாரித்து முடித்து” அதைக் கிட்ட்த்தட்ட ஓரம் கட்டிவிட்டிருந்தார்கள். சின்ன சாந்தன் அளித்ததகவல்களின் அடிப்படையில் சிபிஐ மேற்கொண்டு துப்பு துலக்கியிருக்குமானால்இன்னும் பல விஷயங்கள் வெளிச்சத்திற்கு வந்திருக்கும்.
ஆனால் அந்தவழக்கைத் தமிழ்நாடு போலீசே பார்த்துக் கொள்ளட்டும் என்று கார்த்திகேயன்சொல்லிவிட்டார். ஒரே காரணம், வழக்கை சிபிஐ எடுத்தால் அன்றைய உள்துறைச்செயலர் நாகராஜன் தொடங்கி, திமுக தலைவர் கருணாநிதி வரை விசாரிக்கவேண்டியிருந்திருக்கும். பொதுமக்கள் எதிர்பாராத பல அதிர்ச்சிகரமானஉண்மைகள் வந்திருக்கும். நமக்கெதற்கு வம்பு? விட்டுவிடலாம். தமிழ்நாடுபோலீசே பார்த்துக் கொள்ளட்டும்!
.......அப்படியிருந்தும் அவர் பலவழக்குகளில் பட்டும் படாமலும் நடந்து கொண்ட்து, சிபிஐ எடுத்திருக்கவேண்டிய வழக்குகளை வேண்டுமென்றே தவிர்த்த்து, தமிழக அரசியல்வாதிகளின்கசப்பிற்கு ஆளாகாதிருப்பதே முக்கியம் என்று நினைத்த்தை என்னால் ஜீரணிக்கவேமுடியவில்லை.
ஆனால் இந்தியா டுடே வெளியிட்டுள்ளஒரு செய்தியில், தமிழக உள்துறைச் செயலர் நாகராஜன் விசாரிக்கப்பட்டு, வாக்குமூலமும் அளித்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவிர வேறொருஅதிர்ச்சியூட்டும் செய்தியையும் வெளியிட்டுள்ளது.
"chief minister also told Natesan that killing of Padmanabha was a necessity and so also of Vardaraja Perumal and that Natesan should ensure that he (Karunanidhi) was taken into confidence before such acts are committed". The commission has also recorded the evidence of former state home secretary R. Nagarajan, which further indicts Karunanidhi: "Nagarajan has deposed that the DGP informed him that the chief minister has asked him (DGP) that the police need not evince keen interest to trace out the culprits in the Padmanabha massacre till his arrival the next day for further instructions from him."
ரகோத்தமன்குறிப்பிடும்போது, நாகராஜன் தொடங்கி, கருணாநிதி வரை விசாரிக்கவேண்டியிருந்திருக்கும் என்றுதான் தெரிவிக்கிறார். ஆனால் நாகராஜன்அளித்துள்ள வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டிருப்பதன் மூலம் அவரும்விசாரிக்கப்பட்டிருக்கிறார் என்றே அறிகிறோம் (தமிழக காவல்துறையால்விசாரிக்கப்பட்டிருக்கலாம் என்பது எனது யூகம்). அவர் அளித்தவாக்குமூலத்தின் மீதான நடவடிக்கைகள் என்னவென்பது தெரியவில்லை.ரகோத்தமனாவது வாய்மொழி உத்தரவு, மேலிட உத்தரவு, மற்றும் தமிழக அரசியல்தலைகள் பலருக்குத் தொடர்பிருக்கலாம் என்ற ரீதியில் பல சந்தேகங்களைக்கிளப்பியிருக்கிறார். ஆனால் கார்த்திகேயன் தமிழக அரசியல் தலைவர்களின்பெயர்களையே உபயோகப்படுத்தவில்லை. இதிலிருந்து ரகோத்தமனின் குற்றச்சாட்டுஉண்மைதானோ என்று சந்தேகிக்கத் தூண்டுகிறது.
கடைசியாக ராஜீவ் கொலைவழக்கில் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டிருந்த, பிரபாகரன்மற்றும் பொட்டு அம்மன் ஆகிய இருவருமே இறந்து விட்ட்தாக இலங்கை அரசுதெரிவித்த்தால்தான், இப்புத்தகத்தையே எழுத முனைந்த்தாக ரகோத்தமன்தெரிவிக்கிறார். (ஏன் அவர்கள் மரணம் வரை காத்திருந்தார் ? ) ரகோத்தமன்இன்னும் பல கேள்விகளையும், சந்தேகங்களையும் அழுத்தமாகவேஎழுப்பியிருக்கிறார். ஆனால் எல்லாவற்றையும் இங்கேயே தொகுக்க இயலாது.மர்ம்ம் விலகும் நேரம் எனத் தலைப்பிட்டிருந்தாலும், இன்னும் விலகாதமர்மங்கள்தான் விலகிய மர்மங்களை விட அதிகம். இனியும் அவை விலகுமா என்பதும்கேள்விக்குறி ??
விடுதலைப்புலிகளின் திட்டமிடுதலும், புத்திக் கூர்மையும் வியக்க வைக்கிறது. அதேசமயத்தில் அவர்களது படுகொலையை நிறைவேற்றிய விதமும், அவர்களது மற்றதனிமனிதப் படுகொலைகளும் ரத்தத்தையே உறைய வைக்கிறது. இவ்வளவு ஈவிரக்கமற்றதன்மையுடைய ஒரு தீவிரவாத இயக்கத்திற்கு இன்றளவும் வெளிப்படையாக லாலிபாடும் அரசியல் கட்சிகளையும், அவற்றின் மீது கடும் நடவடிக்கை எடுக்கமுயலாத அரசு இயந்திரங்களையும் என்ன சொல்வதென்று தெரியவில்லை. இவ்வளவுதெளிவாகவும், அணு அணுவாகவும் இப்புலனாய்வு விளக்கப்பட்ட பிறகும் கூட, இக்கொலையைச் செய்தது அமெரிக்காவின் CIA என திருமாவளவன் போன்றோர் கூறுவதுதான் வேடிக்கையின் உச்சம்.இவர்கள் தான் நமக்கு பெரிய மர்மம்!