Thursday, May 24, 2012

பெட்ரோல் - மரண அடி என்பது இது தானா?

சிறு வயதில் நான் கண்ட அரச பெரிய நெடுந்தொடர்களில் , மன்னர் கொடுமையான வரிகளை போடுகிறார் என்றும், அதனால் மக்கள் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகின்றனர் என்று பார்த்து இருக்கிறேன். அதே போல் இப்போது இந்தியாவில் நடக்கிறது என்பது தான் நிதர்சனம். அப்போதைய நிலைமையை நாம் பார்க்கும் மற்றும் படிக்கும் நிலைமை போல், நம்முடைய நிலைமையை எதிர்கால மக்கள் இப்படி தான் பேசுவார்கள் என்று நினைக்கிறேன். உதாரணமாக பெட்ரோல் விலையை எடுத்துக் கொண்டால், இந்தியாவில் தான் பெட்ரோல் விலை அதிகமாக இருக்கிறது. பெட்ரோலின் முக விலை 40 என்று எடுத்துக் கொண்டால், நாம் கொடுக்கும் தொகை 78 . வித்தியாச தொகை அனைத்தும் பலவகை வரிகள்.

(நன்றி: புதிய தலைமுறை) தற்போதைய நிலவரப்படி சுமார் 159 லிட்டர்களைக் கொண்ட 1 பேரல் கச்சா எண்ணெய் விலை சர்வதேசச் சந்தையில் 5 ஆயிரத்து 110 ரூபாயாகும். அதன் படி ஒரு லிட்டர் கச்சா எண்ணெய் 32 ரூபாய் 13 காசுகள். கச்சா எண்ணெய் சுத்திகரிக்கப்படும் போது பெட்ரோலுடன், டீசல், மண்ணெண்ணெய், நாப்தா, தார் போன்றவை கிடைக்கிறது. அவையும் எண்ணெய் நிறுவனங்களால் காசாக்கப்படுகிறது. சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோல் விலை சுமார் 38 ரூபாய் அளவுக்கு இருக்கும் என்று கூறப்படுகிறது. அதன் மீது மத்திய அரசு கலால் வரியாக சுமார் 15 ரூபாய் விதிக்கிறது. அடிப்படை விலையில் கச்சா எண்ணெய் மீது 5 சதவீத சுங்க வரியும், பெட்ரோல் மீது ஏழரை சதவீத சுங்க வரியும் வசூலிக்கப்படுகிறது. தமிழக அரசு 30 சதவிகித வாட் வரி விதிக்கிறது. பெட்ரோல் பங்க் முகவர்களுக்கு ஒரு லிட்டர் 1 ரூபாய் 45 காசுகள் கமிஷன் வழங்கப்படுகிறது. போக்குவரத்து கட்டணமாக சுமார் 7 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. கல்வி வரியாக கலால் வரியில் இருந்து 2 சதவீதம் வசூலிக்கப்படுகிறது. இதுபோன்று40 ரூபாய் அளவுக்கு அடுக்கடுக்காக வரி விதிக்கப்படுவதாலேயே ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 77 ரூபாய் 53 காசுகளாக சென்னையில் விற்பனை செய்யப்படுகிறது.

காங்கிரஸின் கடந்த ஆட்சியில் 22 முறையும், ஆளுகின்ற ஆட்சியில் 16 முறையும் பெட்ரோல் விலை ஏறி உள்ளது. விலை மாற்றத்தின் பட விளக்கம் இங்கே.

(நன்றி: mypetrolprice.com)


மற்ற நாடுகளை ஒப்பிடும் போதும் கூட இந்தியாவில் தான் அதிகமாக பெட்ரோல் விலை இருக்கிறது. சில அறிவு ஜீவிகள் வெளிநாடுகளில் அமர்ந்து கொண்டு, இந்தியாவில் இருக்கும் நிலைமை குறித்து தெரியாமல், அனைத்தும் தெரிந்தார் போல் பேசி வருகின்றனர். எடுத்து சொன்னாலும் புரிந்து கொள்வதில்லை. தான் சொல்வது தான் சரி என்ற எண்ணம் தான் காரணம். நான் படித்த விலை பட்டியல் விவரங்கள் இங்கே.

(நன்றி: புதிய தலைமுறை) நமது அண்டை நாடான பாகிஸ்தானில் லிட்டர் பெட்ரோல் 59 ரூபாய்தான். இலங்கையில் 61 ரூபாய் 70 காசுகளாகவும், சீனாவில் 72 ரூபாய் 10 காசுகளாகவும் உள்ளது. வங்கதேசத்தில் 43 ரூபாய் 40 காசுகளாகவும் ஒரு லிட்டர் பெட்ரோல் விற்பனை செய்யப்படுகிறது. உலகிலேயே மிகவும் விலை குறைவாக சவுதி அரேபியாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் 5 ரூபாய் 70 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது. மிக அதிகபட்சமாக நைஜீரியாவில் 181 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வளர்ந்த நாடுகளான அமெரிக்காவில் லிட்டர் பெட்ரோல் விலை 53 ரூபாய் 70 காசுகளாகவும், ரஷ்யாவில் 50 ரூபாய் 20 காசுகளாகவும், பிரிட்டனில் 101 ரூபாய் 10 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

தமிழக மக்கள் எவ்வளவு அடி கொடுத்தாலும் தங்குவார்கள், திரும்பி ஒரு கேள்வி கூட கேட்க மாட்டார்கள் என்பது உலக உண்மை. இலங்கை விவகாரம் வைத்தே, தமிழக மக்கள் எப்படி பட்டர்கள் என்பதையும், தமிழக அரசியல்வாதிகள் எப்படிபட்ட சுயநலம் என்பதையும் கண்டு கொள்ளலாம். ஆனால் தமிழன் மட்டும் அல்ல இந்தியனும் அதே வகை சேர்ந்தவர்கள் என்பதை இந்த பெட்ரோல் விலை ஏற்றத்தை வைத்தே சொல்லி விடலாம்.

வாழ்க ஜனநாயகம்...

Wednesday, May 02, 2012

Amazon.com: USA 2 India: Is it worth?

இந்தியா என்பது ஒரு வியாபார தளம். எல்லாவிதமான பொருட்களையும்  இங்கு விற்க முடியும். எவ்வளவு விலை கூட்டி விற்றாலும், இங்கு கேட்ட ஆட்கள்/சட்டங்கள் கிடையாது.  சட்டங்கள் இருந்தாலும், அதை செயல் படுத்தும் அதிகாரிகள்  தான் அரசு. அதிகாரிகளுக்கு கேட்டதை கொடுப்பதன் மூலம், நிறுவனங்கள் என்ன என்ன தில்லு முள்ளு செய்ய முடியுமோ அதை செய்து அவர்களுடைய பொருட்களை விற்கின்றனர். காரணம்  லஞ்சம் மற்றும் ஊழல். அதனால் தான் பன்னாட்டு நிறுவனங்கள் கூட இந்தியாவை குறி வைத்து தான் பொருட்களை விற்க ஆர்வம் காட்டுகின்றனர். மற்ற ஊர்களை பற்றி சரியாக தெரியவில்லை என்றாலும், சென்னை படு மோசம் தான். எல்லாவற்றுக்கும் மக்கள் தொகை தான் காரணமாக வந்து நிற்கிறது. சென்னையில் எந்த பொருளையும் விற்கலாம். விற்பனை செய்பவர் வைத்தது தான் சட்டம். அவர் சொல்லும் விலை, அப்பொருளின் விலை. பாரிஸ் முதல் தாம்பரம், ஆவடி முதல் எழும்பூர் வரை, விற்பனை செய்பவர் வைத்தது தான் சட்டம் போல் இருக்கிறது. விலையை குறைத்து கேட்டால், தர முடியாது என்று நேரடியாக கூறுகின்றனர். ஏனென்றால், அதே பொருளை, நமக்கு பின்னல் நிற்கும் நபர் அதை விட அதிக விலைக்கே வாங்கி செல்வார். இது தான் தற்போதைய சென்னையின் நிலை. தக்காளி முதல் பெரிய மின்னணு சாதனங்கள் வரை ஒரே சூழ்நிலை தான் நிலவுகிறது. யார் தான் கேள்வி கேட்க முடியும். இந்த சூழ்நிலையில் தான் இணையதள வர்த்தகம் கண்கள் முன்னால் வந்து நிற்கிறது. இணையத்தில் விற்பதால் சில வலை தளத்தில் வரி இல்லை. அதுவும் கணினி, சகலவசதியுடன் கூடிய கைதொலைபேசி என்ற போன்ற வளர்ச்சியின் காரணமாக, இணையதள வர்த்தகம் முதல் இடத்தில் வந்து விடுகிறது. அமெரிக்கா போன்ற நாடுகளில், இணையத்தில் பொருட்களை வாங்குவது என்பது சாதாரணம். அதே போல் இப்போது இந்தியாவில் வந்து கொண்டு இருக்கிறது. குறிப்பாக போன்ற இணைய தளங்கள்.

flipkart.com
homeshop18.com
ebay.in
junglee.com
indiatimes.com
rediff.com
futurebazzar.com
indiaplaza.com
fashionandyou.com
tradus.in

மின்னணு பொருட்களை பொறுத்த வரையில், அமெரிக்காவை அடித்துக் கொள்ள முடியாது. அனைத்து பொருட்களும் பாதிக்கு மேல் விலை குறைவு. ஏன் என்று காரணம் சரியாக தெரியவில்லை. மக்கள் தொகை இந்தியாவில் அதிகம் என்றாலும், விற்க கூடிய பொருட்கள் இந்தியாவில் அதிகம் என்றாலும், விலை இந்தியாவில் தான் விற்கும் விலை அதிகம். இதற்கு வரிகள் தான் காரணமா?

இது ஒரு புறம் இருக்க, இணையத்தில் வியாபார ராஜாவாக இருக்கும் amazon.com சென்ற வருடம் உலகில் பலராலும் எதிர் பார்க்கப்பட்ட ஒரு புதிய வழிமுறையை கொண்டுவந்தது. அது உலகில் உள்ள குறிப்பிட்ட நாடுகள் அமெரிக்காவில் கிடைக்கும் பொருட்களை amazon.com ல் வாங்க முடியும். அப்பொருளை amazon.com அந்த நபருக்கு/அந்நாட்டுக்கு அனுப்பி வைக்கும். இவ்விஷயம் உலக அளவில் முக்கியத்துவம் பெறுகிறது என்பது நிதர்சனம்.

மற்ற நாடுகள் பற்றி தெரியவில்லை என்றாலும்,  இந்தியாவை பொறுத்த வரை, பார்சல்கள் என்பது மிக சாதாரண விஷயம். பார்சல்களை  கையாளும் விதம் மிக மிக மோசமாக தான் இருக்கும். பன்னாட்டு நிறுவனமான amazon.com வருவதால் இந்த நிலைமை கண்டிப்பாக மாறும். பொருட்களை கையாளும் விதம், வடிவமைப்பு, கட்டமைப்பு என்று சகலமும் மாறும் என்பதை ஒத்து கொள்ள வேண்டும். உலக அளவில் பொருட்களை அனுப்பும் போது பல வித சிக்கல்கள் இருக்க செய்யும். அதை amazon.com சிறப்பாக கையாண்டு வருவதே அதன் ஓராண்டு வெற்றி என்று கூறலாம். சில முக்கிய விஷயங்களை இங்கு காணலாம்.

பொருட்கள் அனுப்பப்படும் இடங்கள்: ஆசியா மற்றும் பசிபிக் நாடுகள், ஆப்பிரிக்கா, அட்லாண்டிக் மற்றும் கரிப்பியன், ஆஸ்திரேலியா, கனடா, ஐரோப்பா, இஸ்ரேல, ஜப்பான், தென் அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள்.

பொருளின் விலையை தவிர இரண்டு விதமான கட்டணம் வசூலிக்க படுகிறது.

முதலாவது கட்டணம் பொருளை  பத்திரமாக வேறு நாட்டிற்கு அனுப்ப. ஒவ்வொரு நாட்டிற்கும் கட்டணம் மாறுபடும்.

இரண்டாவது கட்டணம் வரி கட்டணம். ஒரு பொருள் வெளிநாட்டில் இருந்து வருகிறது என்றால், அதற்க்காக ஒரு வரி தனியாக உண்டு. ஒவ்வொரு நாட்டிற்கும், அவ்வரி மாறுபடும்.  இக்கட்டணம் சில நாடுகளில் இல்லாமலும் இருக்கும். ஆனாலும் முதலிலே amazon.com ஒரு கட்டணத்தை வசூலித்து விடுகிறது. இப்பொருள் அனுப்பிய நபருக்கு கிடைத்த உடன், வரி வசூல் கட்டணம், கூடுதலாக வசூலிக்க பட்டு இருந்தால், மீண்டும் மீதம் உள்ள தொகை திரும்ப தரபடுகிறது. இல்லை வரி வசூல் கட்டணம், வசூலித்ததை விட அதிகமாக கொடுக்க பட்டு இருந்தால், அப்பணம் நம்மிடம் இருந்து வசூலிக்க படுகிறது.

அமெரிக்காவில் உள்ளது போல் இங்கும் பொருட்கள் அனுப்பபட்ட உடன், பொருள் எங்கு உள்ளது என்பதை அறிய தொழில்நுட்பம். இந்தியாவில் எந்த நிறுவனத்தை அது தேர்ந்து எடுத்து உள்ளது என்பதை பொறுத்து நாம் பெற முடியும்.

இதை தெரிந்து கொள்ள நான் ஒரு மின்னணு 5.1  ஓலி கருவியை எடுத்து கொண்டேன். இதனுடைய விலை இந்தியாவில் ரூ.16000 முதல் 18000 வரை. ஆனால் இதே பொருளின் விலை அமெரிக்காவில் டாலர் 182.96 மட்டுமே (ஒரு டாலர் என்பது ரூ.50 கணக்கில்). அதாவது பாதிக்கு பாதி. இத்தனைக்கும் பெரும்பாலான பொருட்கள், சீனாவில் இருந்தே தயாரிக்க பட்டு, ஏற்றுமதி செய்யபடுகிறது. ஆனால் விலையின் வித்தியாசத்தை காணுங்கள் இப்போது இந்த ஒலி கருவியை, நான் amazon.com ல் உலக அளவில் ஏற்றுமதி ஆகும் வரைமுறை படி வாங்கினால், அதனுடைய விலை கீழ்கண்டவாறு மாறிவிடுகிறது.



பொருளின் விலை
$182.96
ரூ 9,148.00
இப்பொருளை இந்தியாவிற்கு அனுப்ப
$63.79
ரூ 3,189.50
சுங்க வரி
$64.62
ரூ 3,231.00
மொத்தம்
ரூ 15,568.50

அதாவது, கிட்டத்தட்ட இந்தியாவின் கிடைக்கும் பொருளின் விலைக்கு வந்துவிடுகிறது. இப்போது இரண்டு முக்கிய விஷயங்கள், கவனிக்க வேண்டும். முதலாவது விஷயம்: சுங்க வரி என்பது பொருளின் விலையை பொறுத்து மாறும். நாம் அதிகமாகவும் கொடுத்து இருக்க வாய்ப்பு உள்ளது. அப்படி இருக்கும் நேரத்தில், அதிகமாக எடுத்த பணம், நம்மிடம் திரும்ப கொடுக்க படுகிறது. அதே நேரத்தில், சுங்க வரி அதிகமாகும் போது, மீண்டும் பணம் நம்மிடம் இருந்து வசூலிக்கபடுகிறது. ஆக மொத்தித்தில், பொருளின் முடிவான விலை சில நாட்கள் கழித்தே நமக்கு தெரியும்.

இரண்டாவது விஷயம்: amazon.com ல் வாங்கிய பொருட்களுக்கு வாரண்டி என்ற விஷயம் என்பது வருமா என்பது கேள்வி. எனக்கு தெரிந்தவரை, உலக அளவில் வாரண்டி என்பது பல பொருட்களுக்கு கிடையாது. அதனால் வாங்கும் போது, உலக வாரண்டி உள்ளதா என்பதை அறிய வேண்டும். 

நானும் பல முறை யோசித்து, தளத்தில் வாங்குவது வீண் என்ற முடிவிற்கு வந்து விட்டேன். இப்பதிவு உங்களுக்கு பயன் உள்ளதாக இருக்குமா என்று தெரியவில்லை. இருந்தாலும், நான் கண்ட அனுபவம் என்ற முறையில் பதிவு செய்து விடுகிறேன்.