Showing posts with label அர்கன்சாஸ். Show all posts
Showing posts with label அர்கன்சாஸ். Show all posts

Wednesday, June 16, 2010

டெவில் டென் - மாநில பூங்கா - பயணம்

அர்கன்சாஸ், இயற்கையின் மாநிலம் என்ற இடத்தில் இருப்பதால், பெருநகரத்தில் அல்லது வெளி மாநிலத்தில் இருந்து  மனஅமைதியை தேடி வரும் அனைத்து மக்களுக்கும் தேவையான மலைகள் , காடுகள், ஏரிகள் மற்றும் பூங்காக்கள் என்று அனைத்தும் எனக்கு மிகஅருகில். டெவில் டென் என்ற மாநில பூங்கா என்று எங்களுக்கு அருகில் இருப்பத்தை அறிந்து, பயணத்தை ஆரம்பித்தோம். 


அந்த பூங்காவில் உள்ள அரசாங்க அலுவலம் போய் சேருவதற்கு காட்டு பாதையில் இருபது நிமிடம் காரில் பயணம் செய்ய வேண்டிருந்தது. செல்லும் வலி எங்கும் அடர்ந்த காடுகள். தொலைபேசி தொடர்பு சில நிமிடங்களிலே தொடர்பு காணாமல் போனது. அன்று நல்ல வெயில் இருந்தாலும் காட்டு பகுதியில் சிறு தூரம் சென்ற உடன் வெயிலின் தாக்கம் குறைந்து கொண்டே வந்தது. காரின் கண்ணாடி ஜன்னல்களை திறக்கலாம் சென்றால், பூச்சிகள் வந்து விடும் என்ற பயம் காரணமாக மூச். 


ஒரு வழியாக அலுவகத்தை அடைந்து பார்த்தல், காரை நிறுத்த இடம் இல்லை. அவ்வளவு கூட்டம். வெளியில் வந்து பார்த்தல் அந்த இடம் முழுவதும் சிறுவர்கள் கூட்டம். போச்சுட சின்ன பசங்க இடத்திற்கு வந்துட்டோம் போல என்று நினைத்து கொண்டே, உள்ளே போய் விசாரித்து விட்டு சுற்றி பார்க்க கிளம்பினோம். எங்கு போனாலும் சிறுவர்கள் கூட்டம், அவர்களின் பெற்றோர்கள் அதுவும் அந்த அடர்ந்த காட்டில். ஒன்றும் இல்லை என்று மனதில் நினைத்துக் கொண்டு கிளம்பலாம் என்ற முடிவின் போது, மலை மேல் செல்வதற்கு படி போன்ற அமைப்பு உடைய கற்களை கண்டோம்.
  மேலும் அந்த சில மக்கள் மலையின் மேலிருந்து கீழே இறங்கி வந்து கொண்டு இருந்தனர். அங்கு என்னவென்று விசாரித்ததில், மலையின் மேல் பல குகைகள் இருப்பதாகவும் அதை பார்க்க மலை ஏற வேண்டும் என்றும், ஒவ்வொரு மலை ஏறும் வழியும் இரண்டு மைல் முதல் பதினைந்து மைல் வரை இருப்பதாவும், நம்முடைய உடல் நிலைமையை பொறுத்து செல்லலாம் என்றும் கூறி விட்டனர். 


முதல் முறையாக இங்கு வருவதால், அருகில் உள்ள குகைக்கு மலை ஏறி சென்று வரலாம் என்று புறப்பட்டோம். முதல் குகையை பார்க்கவே குறைந்தது இரண்டு மணிநேரமாவது மலை ஏறவேண்டும். மலை ஏறி சில காலம் ஆகி விட்டதால் முதல் பத்து நிமிடத்தியிலே கண்ணை கட்ட ஆரம்பித்து விட்டது. வந்தாகிவிட்டது என்று நினைத்துக் கொண்டே முடியாமல் மேலும் ஏற ஆரம்பித்தோம்.
  ஏறும் பாதையில் மரங்களில் சிவப்பு நிற வண்ணம் காண முடிந்தது. சிவப்பு நிறம் நம்மை அழகாக வழிநடத்தி சென்றது. குகையில் வவ்வால்கள் வந்து தங்க ஆரம்பித்து விட்டதாலும், புது வகையான பூச்சிகள் சிலவற்றை சில பேர் குகையில் கண்டதாலும், குகைக்கு உள்ளே செல்லும் வழி அடைத்து விட்டதாகவும் வெளியில் இருந்து பார்க்க முடியும் என்று பலகை ஒன்று காண முடிந்தது. மலை ஏறும் போது, சில கற்களுக்கு அடியில் பனிக் கட்டிகளை காண முடிந்தது. 



நீண்ட நாளைக்கு பிறகு மலை ஏறுதல் என்பதால், அப்ப அப்ப முடியல. ஆனால் நல்ல இயற்கை கண்ட மனநிறைவு மற்றும் வித்தியாசமான அனுபவம் தான்.

Sunday, March 28, 2010

புது பயணம்...

வாழ்க்கை என்னும் இரயில் பயணத்தில் நாம் பல்வேறு வகையான மனிதர்களை சந்திக்கின்றோம். இதன் மூலமாக பல்வேறு புதுமையான வாழ்க்கை அனுபவத்தை கற்கிறோம் மற்றும் நல்ல நண்பர்களை பெறுகிறோம். அடுத்த கட்ட இரயில் பயணத்தின் போது காலத்தின் கட்டாயமாக பழகியவர்களை பிரியநேரிட்டு அதற்கு பதிலாக புது மனிதர்களை சந்திக்கின்றோம். அப்படி என்ன புது பயணம்? இது நாள் வரையில், அனைத்துக்கும் பணம் என்ற நிலையில் இருக்கும் சென்னையிலும், அவ்வபோது தென் இந்திய மாநிலங்கள் ஆன கேரளா, கர்நாடகம் மற்றும் தெலுகுதேசம் என்று சென்று இருந்தாலும், பல கோடி இந்திய மக்களின் கனவு நாடான அமெரிக்காவிற்கு எனது பயணம் ஆரம்பிக்கின்றது.

இந்நிலையில் கடந்த பயணத்தில் என்னுடன் பயணம் செய்த தோழர்களை (முக்கியமாக சதீஷ், மாதவன், நாகூர், கிருஷ்ண மற்றும் பத்மன்) மறுபடியும் சிந்திப்போம் என்று தெரிந்தாலும், எப்போதும் என் மனதில் அவர்களுக்கு ஒரு இடம். அதே போல் என்னை வழியனுப்ப வந்த நண்பர்கள் பாலாசுப்பிரமணியன், சுந்தர், கார்த்திக் சந் அவர்களுக்கு நன்றி...


Air India

எனது பயணம் சென்னையில் ஆரம்பிக்கும் போது விமானநிலையத்தை பார்த்து ஆச்சரியப்பட்டது உண்மை தான். ஆனால் அது மும்பை விமானநிலையத்தை பார்த்த உடன் காணமல் போனது. இன்னும் ஒன்று அல்லது இரண்டு வருடங்களில் சென்னை, மும்பை போல் ஆகும் என்ற நம்பிக்கை எனக்குள் பலமாக இருந்தது (மும்பை பார்க்காமலே). ஆனால்  மும்பை விமானநிலையத்தை பார்த்த உடன் கண்டிப்பாக பல வருடங்கள் ஆகும் என்று தெரிந்துவிட்டது. மும்பையில் இருந்து என் விமானம் ஜெர்மன் நாட்டில் உள்ள பிரான்க்பெட்க்கு சென்றது. சில வருடங்களுக்கு முன்னால் ஜெர்மன் மொழியை கற்ற போகிறேன் என்ற பெயரில் இந்த மொழியை பற்றி அறிந்து வைத்து இருந்ததால் எனக்கு மனதில் சிறு மகிழ்ச்சி. ஆனால் அங்கு சோதனை என்ற பெயரில் செய்த மிக கேவலமான முறையை என்னால் எடுத்துக் கொள்ள முடியவில்லை. சென்னையிலும், மும்பையிலும், அமெரிக்காவிலும் செய்த சோதனைகளை விட மோசமான சோதனை... அங்கு ஒரு முடிவு எடுத்தாகிவிட்டது அடுத்த எந்த ஒரு பயணத்திலும் கண்டிப்பாக ஜெர்மன் வழியாக பயணம் கூடாது என்பது தான்.

நான் அர்கன்சாஸ் என்னும் மாநிலத்திற்கு தான் செல்ல வேண்டும். எனது பயணம் ஒரு வழியாக அமெரிக்காவின் முக்கிய மாநிலமான சிக்காகோவிற்கு வந்தது. முதன் முதலில் வெள்ளை நிற மனிதர்கள் என்னை சுற்றிலும். என் மனதில்  2002ம் ஆண்டின் மதுரை பெரியார் பேருந்து நிலையம் வேகமாக வந்து நிற்கிறது. வாழ்க்கையின் ஓட்டத்தை பார்த்து பிரம்மித்து கொண்டு இருக்கும் வேளையில் அடுத்த ஆச்சிரியம். விமானத்தில் பறக்கும் போது எங்கும் ஒரே வெள்ளை நிறமாக தான் தெரிந்தது... நான் அர்கன்சாசில் விமானம் நின்ற பின்னும் ஒரே வெள்ளை நிறம். ஆம் அனைத்தும் பனி..முதல் முறையாக பனி படர்ந்து இருக்கும் இடத்தில் என்று என்னும் போது உடல் குளிரும் வேளையில், மனமும் குளிர்கிறது என்பது உண்மை தான்

அனுபவங்கள் மற்றும் பதிவுகள் புது உலகத்தில் இருந்து தொடரும்..