Showing posts with label புகைவண்டி. Show all posts
Showing posts with label புகைவண்டி. Show all posts

Friday, January 23, 2009

புறநகர் புகைவண்டி

இந்தியாவில் குறிப்பிட்ட நகரங்களில் உள்ள போக்குவரத்து தொடர்பு...தமிழ்நாட்டில் சென்னை மக்களுக்கு மட்டும் கிடைத்த வரப்பிரசாதம்....
கடந்த ஒரு மாதகாலமாக புறநகர் புகைவண்டியில் பயணம் செய்து கொண்டு இருக்கிறேன். மற்ற போக்குவரத்து தொடர்பை விட சுலபமான, பாதுக்காப்பான, சிக்கனமான பயணம். சைதையிலிருந்து தாம்பரம் வர பேருத்திலோ, இரண்டு சக்கர வாகனத்திலோ வந்தால் குறைந்தது ஒரு மணி நேரம் ஆகும். ஆனால் இதில் 20 நிமிடம் தான். அதே சமயம் அதற்கு ஆகும் செலவு குறைந்தது ரூ. 1000. ஆனால் மாதந்திர பயணச்சீட்டு எடுத்தால் கடற்க்கரை நிலையத்தில் இருந்தே தாம்பரம் வரை ரூ. 115.
மக்கள் வெள்ளத்தில் சென்னை தத்தளித்து கொண்டு இருக்கும் வேலையில் புறநகர் புகைவண்டி மட்டும் இல்லையெனில் சென்னை சென்னையாக இருக்காது என்று தெளிவாக தெரிகிறது.