Monday, January 28, 2013

விஸ்வரூபம் - திரைவிமர்சனம்


நான் தமிழ்நாட்டில் நிலவும் சமூக/மத பிரச்சனைகளை பற்றி நான் இங்கு எழுதவில்லை. இப்பதிவு திரைப்பட விமர்சனம் மட்டுமே


அமெரிக்காவில் பாரத நாட்டியம் கற்று தரும் ஒரு கலைஞர். மனைவியாக பூஜா. கற்று கொள்ளும் பெண்மணியாக ஆன்ரியா. பூஜாவுக்கு தன் அலுவக அதிகாரியுடன் ஒரு ஈர்ப்பு. கமல் மேல் தவறு எதாவது இருந்தால் அதை காரணம் காட்டி, விவாகரத்து வாங்கி கொள்ளலாம் என்ற எண்ணத்தினால் ஒரு துப்புரவு அதிகாரின் மூலமாக கமலை வேவு பார்க்கிறார். அதன் முடிவாக அவர் ஒரு முஸ்லீம் மதத்தை சேர்ந்தவர் என்ற உண்மை வெளி வருகிறது. அந்த அதிகாரி கமலை தேடி செல்லும் இடத்தில் கொல்ல படுகிறார். கொலை செய்தவர்கள், அந்த அதிகாரியை அனுப்பியது யார் என்று விபரம் சேர்க்கும் போது, கமலும், பூஜாவும் மாட்டி கொள்கின்றனர். அந்த கூட்டத்தின் தலைவன் ராகுல் போஸ், கமலின் புகைப்படத்தை பார்த்து விட்டு, அதிர்ச்சியுடன் அங்கு வரும் முன், கமல் தீடிர் என்று, நங்கையுடைய பழக்கத்தை விட்டு விட்டு அனைவரையும் போராளி போல் வன்முறையாக கொன்று விட்டு தப்புகிறார். அங்கு வரும் ராகுல், அல்-குய்தாவுக்கே பயற்சி கொடுத்தவன், இது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை என்று கூறி விட்டு போகிறான்.  


 சில ஆண்டுகளுக்கு முன், பாகிஸ்தானில் உள்ள ஒரு தீவிரவாத கும்பலில் இந்தியாவில் இருந்து சேர்க்கிறார். திறமையை பார்த்து ராகுல் உடன்அல்-குய்தாவுக்கு பயற்சி அளிக்கும் பொறுப்புடன், ஆப்கானிஸ்தான் பயணிக்கிறார். அங்கு இருக்கும் பல சிறுவர்களுக்கு, போராளிகளுக்கு பயற்சி கொடுக்கிறார். அதே போல் ஆப்கானிஸ்தான் முழுவதும் பயண படுகிறார். ஒசாமா பின்லேடன் இருக்கும் இடத்தை அடையும் போது, அமெரிக்கா இராணுவம் பெரிய படையுடன் வந்து போர் தொடுக்கிறது. அவர்கள் அங்கு இருக்கும் இடத்தை காட்டி கொடுத்ததாக கருதப்படும் நபர் அனைவரின் முன்னிலையில் தூக்கிலிட படுகிறார். அப்போது புறாவின் வழியாக இரசாயன பொருளை அமெரிக்கா கொண்டு சென்று, நியூயார்க் நகரத்தை அழிக்கும் திட்டம் தெரியவருகிறதுமீண்டும் அமெரிக்காவில், பல போராளிகளுடன் அதே அல்-குய்தா கும்பல் நியூயார்க்கை அழிக்க இரசாயன வெடி மருந்து தயார் செய்கிறது. இந்தியா ரா உளவாளியான கமல், எப்படி அதை முறியடிக்கிறார் என்பதே பின் பாதியின் கதை.


படத்தின் பலம் என்று பார்த்தால், கதையின் நாயகனான கமல், திரைக்கதை ஆசிரியரான கமல், தயாரிப்பாளரான கமல். திரைக்கதை அமைத்தவிதம், மீண்டும் இந்தியாவின் சிறந்த கலைஞர் கமல் என்பதை நீருபித்து இருப்பார். எங்கும் இடைவெளி இல்லாமல், தேவையற்ற பாடல் இல்லாமல், கதையை மட்டுமே மையபடுத்தி நகரும் அமைப்பு. நங்கை பழக்கம் உடைய கமலின் நடிப்பும், தீடிர் என்று போராளியாக மாறி சண்டை போடும் இடம் ஆகட்டும், சிவாஜிக்கு பிறகு கமல் தான் நடிப்பு என்பதை காண முடியும்நியூயார்க் மக்களின் ஒரு சராசரி வாழ்க்கை காட்டாமல், காவல் துறை, நியூயார்க் அழகின் வேறு கோணம் என்று அமெரிக்கா காண்பிக்க படுகிறது.  ஆப்கானிஸ்தானில் போராளிகளின் வாழ்க்கை முறை, அவர்களின் பயற்சி முறை, தண்டனை கொடுக்கபடும் முறை என்று, செய்திகளில் படித்த விஷயங்கள் அனைத்தும் கண் முன்னே. கமலின் உழைப்பு பல இடங்களில் நன்றாகவே தெரிகிறது


பலவீனம் என்று பார்த்தால், படித்த மக்கள் மட்டுமே பார்க்கும் அமைப்புடைய திரைக்கதை. ஒரு பாமர மனிதன், படத்தை பார்த்தால் பல இடங்களில் புரியாது என்பது நிதர்சனம். படம் முழுவதும் பல இடத்தில் ஆங்கில வசனங்கள். தமிழ்நாட்டை பொறுத்த வரை, ஏன்  தென் இந்தியா முழுவதும், அமெரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் பிரச்சனை பற்றி தெரிந்த நபர்கள் மிக மிக குறைவு. இந்த கதையை எடுத்தது ஏன் என்ற கேள்வி கமலுக்கு மட்டுமே வெளிச்சம்முக்கியமாக படத்தின் பின்னணி இசை மிக பெரிய தொய்வு. தமிழ் இசை அமைப்பாளிடம் இல்லாத திறமை வேறு என்ன  (S-E-L) அவர்களிடம் இருக்கிறது என்பதே என் கேள்வி. அதேபோல் கமலின் நடிப்பு நண்பர்கள் பல பேர் இப்படத்தில் இல்லை (நாசரை தவிர). ஒரு வேளை, பல நாடுகளில் திரையிடுவதால் ஒவ்வொரு மொழியில் இருந்து ஒரு நடிகரை போட்டு இருப்பதாக ஒரு சந்தேகம். கண்டிப்பாக 'A' சென்டர் எனப்படும் நகரத்தில் மட்டுமே ஓடும் வகை திரைப்படம்.  என்னில் இருக்கும் இன்னொரு கேள்வி, எப்படி தான் இவர் நாயகியை தேர்வு செய்வார் என்று தெரியவில்லை.

ஒரு ஆங்கில படத்தை, தமிழ் நடிகர்கள் நடித்து, இயக்கி இருந்தால் எப்படி இருக்கும் என்பதை, விஸ்வரூபத்தில் பார்க்க முடியும்.

என் அனுபவம்:  நீண்ட நாட்கள் கழித்து உச்ச நட்சத்திரத்தின் திரைப்படம். அதுவும் அமெரிக்காவில் காணபோகிறோம் என்ற மகிழ்ச்சி. இதை விட, தமிழ்நாட்டு மக்கள் பார்பதற்க்கு முன்னால் காண போகிறோம் என்ற சிறு அல்ப சந்தோசம் வேறு. நான் இருக்கும் ஊரில் இருந்து நாற்பது நிமிடம்  பயணம் செய்து, திரைப்படத்தை காண வேண்டும். அமெரிக்காவில் வேறு மாநிலத்தில் தங்கி இருக்கும் நண்பர்கள், வியாழக்கிழமை இரவு இப்படத்தை பார்த்து விட்டனர். அதனால் எப்படியாவது வெள்ளி கிழமை இரவு காட்சியை கண்டிப்பாக காணவேண்டும்  என்று முடிவு செய்து கொண்டு, நண்பர் வீட்டிற்கு செல்ல ஆயித்தம் ஆனேன். என் கெட்ட காலம்  வெள்ளி கிழமை மதியம், நான் தங்கி இருக்கும் ஏரியாவில் கருப்பு பனி மழை. வெள்ளை பனி மலையில் காரை ஓட்ட முடியும். ஆனால் கருப்பு பனி மழையில் காரை ஓட்டுவது என்பது முடியாத காரியம். மாலை வேளையில், காரை சுத்த படுத்தி கொண்டு, நண்பர் இருக்கும் இடத்திற்கு கிளம்பினேன். பனி மழை காரணமாக, பெரிய லாரிகள் அருகில் செல்லும் போது, சாலையை பார்க்க முடியாத படி, முன் கண்ணாடி முழுவதும் பனி மற்றும் அழுக்கு படிந்து விடும். வண்டியை ஏன்  தான் ஓட்டிகிறோம் என்ற நிலைமை வந்துவிடும்மிகவும் கஷ்ட பட்டு, ஒரு வழியாக நண்பர் வீட்டிற்கு சென்று கிளம்பும் முன், எதர்ச்சையாக திரை அரங்களை பற்றி காணும் போது தான், கருப்பு பனி காரணமாக திரை அரங்கம் மூடி விட்டதாக தெரிய வந்தது. என்ன ஆனாலும் பரவ இல்லை, கண்டிப்பாக சனி கிழமை அன்று முதல் காட்சி காண வேண்டும் முடிவு செய்தோம். வெள்ளி கிழமை அன்று திரை அரங்கம் விட்ட காரணத்தால் கண்டிப்பாக, சனி கிழமை அன்று கூட்டம் என்று நினைத்து சென்றது சரியாக தான் இருந்தது. அரங்கம் முழுவதும் தமிழ் மற்றும் தெலுங்கு மக்கள் கூட்டம். நான் சூப்பர் ஸ்டார் அவர்களின் எந்திரன் திரைப்படம், அமெரிக்காவில் உள்ள வேறு மாகாணத்தில் பார்த்த கூட்டத்தை, இப்போது கமலுக்காக திரை அரங்கில் பார்க்க முடிந்தது.

3 comments:

Gobi said...

கிட்டதட்ட படம் பார்த மாதிரி இருக்கு . நல்ல விமர்சனம் நிர்மல். Good One..

Ramkumar said...

ஒரு வேண்டுகோள், இந்த படம் இன்னும் தமிழ்நாட்டில் வெளியாகவில்லை. ஆதலால் விமர்சனத்தில் முக்கியமான நிகழ்வுகளை சொல்ல வேண்டாம். குறிப்பாக கதை சொல்லப்படவே கூடாது என்று நினைக்கிறேன். அப்படி சொல்லும் பட்சத்தில் ஸ்பாய்லர்கள் இருக்கிறது என்று முன்னுரையில் சொல்லி விடுவது நல்லது. என்னைப் போல் நிறைய பேர் கதை என்ன என்று தெரிந்து கொள்ளாமல் படம் பார்த்தால் அதில் இருக்கும் சுவாரசியமே வேறு. மற்றபடி நல்ல பதிவு.

Sathya Narayanan said...

"துப்புரவு அதிகாரி" இல்லை. "துப்பு துலக்கும் அதிகாரி". நன்றி !