Sunday, July 10, 2011

திருமண வாழ்த்துகள் - பாலமுருகன்

எனது தொழில்நூட்ப கல்லூரி நண்பர் திரு. பாலமுருகன் அவர்களின் திருமணம் இன்று ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெறுவதை தெரிவித்துக் கொண்டு, என் நல் வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்.

நான் படித்த பொறியியல் கல்லூரியில் இப்போது அவர் ஒரு பேராசிரியர் என்று கூறும் போது, ஆச்சிரியத்துடன் மகிழ்ச்சியும் இருந்தது.

திருமண வாழ்த்துகள் - ஷ்யம்சுந்தர்

எனது தாய்மாமன் திரு. ஷ்யம்சுந்தர் அவர்களின் திருமணம் இன்று மதுரையில் நடைபெறுவதை தெரிவித்துக் கொண்டு, என் நல் வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்.

என்னை விட வயதில் மூத்தவராக இருந்தாலும் நான் தொழில்நூட்ப கல்லூரியில் படித்த போது, இருவரும் என்னுடன் தான் படித்தார். பொறியியல் கல்லூரியின் இடம் கிடைத்தது பற்றி தெரியாமல் இருந்த போது, என்னுடன் சென்னை வரை துணைக்கு வந்து சென்னையை அறிமுக படுத்தியவர் இவர் தான்மாமனாக இருந்தாலும் நண்பராக என்னோடு இருந்த இவரின் திருமண சுபவைபவத்தில் கலந்து கொள்ள முடியாமல் போனதற்கு வருத்தம் அடைகிறேன்

கலவைகள் - அமெரிக்காவை பற்றி

இந்த மாதம் ஐந்தாம் தேதி, நான் அமெரிக்காவில் சுற்றிய இடமான பினிக்ஸ், அரிசோனாவில் புழுதி புயல். இதை நான் எப்படி சொல்ல? ஆம், ஹாலிவுட் படமான மம்மி படத்தில், ஒரு காட்சியில் பாலைவனத்தில் புழுதி புயல் வரும். அதே போல் இன்று ஒரு புழுதி புயல், பினிக்ஸ் இடத்தை தாக்கி இருக்கிறது. சொல்ல போனால் அந்த காட்சியை பார்க்கும் போது, எதிர்பாரா ஒரு வித பயம் தானாகவே வந்து விடுகிறது. இந்த மாதிரியான நிலையிலும் ஒரு நல்ல செய்தி, மக்கள் யாரும் இந்த புயலால் பாதிக்கப்பட வில்லை.




***********************************************************************************
அமெரிக்காவில் கடந்த ஒன்றரை வருடமாக, என்னை சுற்றி பல இந்தியர்கள் இருக்கின்றனர். சுற்றுலா சென்ற இடத்திலும், பல தரபட்ட (ஜெர்மன், சீனா, ஜப்பான், தாய்லாந்து, தென் அமெரிக்கர்கள், மெக்ஸிகோ, அரபுமக்களை கண்டு இருக்கிறேன். இருந்தாலும் அமெரிக்கா வெள்ளை இன மக்கள் மட்டும் ஒன்று கூடும் இடம் இல்லையா? என்று கேள்வி என் மனதில் இருந்து கொண்டே தான் இருந்தது. தற்போது அதற்கு விடை கிடைத்து விட்டது. வட அமெரிக்கா மக்களால் விரும்பி பார்க்கப்படும் விளையாட்டுகள் என்று சில உண்டு (rodeo இதில் முக்கியமானது). இந்த மாதிரியான போட்டிகள் நடப்பது வெளி உலக மக்களுக்கு தெரியாது.  அதாவது அமெரிக்கா வெள்ளை இன மக்களுக்கு தெரியவாரது. என் நண்பர்களில் ஒருவர் அமெரிக்கா இளைஞரின் நண்பர் என்பதால் இதை பற்றி கேள்வி பட்டு, கண்டிப்பாக செல்லலாம் என்று முடிவெடுத்து, நுழைவு சீட்டை வாங்கி, சென்ற போது நான் ஆச்சிரியம் அடைத்தேன். அனைத்து மக்களும் "குதிரை மனிதன்" (கவ் பாய்) உடையில். அந்த அழகு பதுமைகளை/தேவதைகளை பார்க்க ஆயிரம் கண் இருந்தாலும் போதாது. நீங்களே அந்த மகிழ்ச்சியை பெற, உங்களுக்காக நான் எடுத்த காட்சி  


Rodeo பற்றி சிறு குறிப்பு:
நான் சென்ற இடம் "Rodeo of the Ozark". ஓசார்க் (Ozark) என்பது மத்திய அமெரிக்காவில் உள்ள ஒரு மலை தொடர்ச்சி. இந்த இடத்தில் நடை பெறுவதால் தான் இந்த பெயர். அமெரிக்கா முழுவதும் இருந்து இந்த போட்டி விளையாட்டுகளை காண மக்கள் வருவார்கள். குதிரை மற்றும் காட்டு காளை மாடுகளை கொண்டு நடைபெறும் போட்டிகளை தான் என்பார்கள். அமெரிக்காவை தவிர ஆஸ்திரேலியா, மெக்ஸிகோ, பிரேசில், அர்கேன்டினா, சிலி, கனடா போன்ற நாடுகளில் இந்த விளையாட்டு போட்டிகள் நடைபெறும். நான் சென்ற இடம் அமெரிக்காவில் ஐந்தாவது இடத்தில் உள்ளது.

நான் சொல்லி அந்த விளையாட்டுகளை அறிவதை விட, நீங்களே சில போட்டிகளை காணுங்கள். இதே போல் பல போட்டிகள் இருந்தன.









அங்கு இருந்த கூட்டம் 600+ பேரை கொண்டது. அமெரிக்கா வெள்ளை இன மக்களை தவிர, வெளி உலக மக்கள் என்றால் நானும், என்னுடன் இருந்த நண்பர்கள் மட்டும் தான். இதை விட முக்கிய விஷயம், அமெரிக்காவில் உள்ள கறுப்பின மக்கள் ஒருவர் கூட இல்லாதது தான் மிக பெரிய அதிசயம்.

*********************************************************************************************
அமெரிக்காவின் சுதந்திர விழா நிகழ்ச்சிகளை நேரடியாக காண எனக்கு இந்த வருடம் வாய்ப்பு கிடைத்தது. அமெரிக்காவில் உள்ள எல்லா ஊர்களிலும் அந்த இடத்தின் சார்பாக அந்தந்த ஊர்களில் விழா கொண்டபடுகிறது. நான் இருப்பதே சிறு ஊர் தான் சொல்ல போனால் என் ஊர் ஒரு கிராமம். ஆனால் நான் இந்த விழாவில் கண்ட உற்சாகம், மதுரையில் என்ன, சென்னையில் கூட பார்த்து இல்லை. என் இடம் சிறிது என்றாலும், விழாவை காண வந்த கூட்டம் மதுரையில் திருகல்யாணம் முடிந்த அடுத்த நாள் காலையில் தேர் வெளியே வரும் போது இருக்கும் கூட்டத்தை போல் இருந்தது தான் ஆச்சிரியம். முப்பது நிமிட வான வேடிக்கை காண அவ்வளவு கூட்டமா என்ற நினைத்து போது, வான வேடிக்கை கண்ட உடன் பிரம்மித்து போனது நிஜம் தான். இந்தியாவில் இந்த மாதிரியான நிகழ்ச்சிகளை என்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை. வாழ்க அமெரிக்காவின் ஒற்றுமை மற்றும் புகழ்.


இந்த வகையிலான பலதரப்பட்ட அமெரிக்கா வெள்ளை இன மக்களின் வாழ்க்கையை பார்க்க ஆரம்பித்ததே கடந்த ஒரு மாதமாக தான் என்பதை இப்போது தான் உணர்கிறேன்.

Friday, July 08, 2011

என் மனதில் இருந்து சில துளிகள்


மதுரையில் அதுவும் திருப்புரங்குன்றம் அருகில் முத்து தேவர் பள்ளியில் படித்தால், எப்படி இருப்பார்கள் என்று சொல்லாமலே தெரியும். அந்த வழியில் வந்த நான், முதல் முதலாக உடன் வேலை செய்யும் நபர்கள் மதிய உணவிற்கு வெளியே அழைக்க, நான் உடனடியாக சரி என்று சொல்ல, ஆட்டம் ஆரம்பம் ஆனது. நான் தான் சின்சியர் சிகாமணி ஆயிற்றே. நான் சரியான நேரத்திற்கு செல்ல, என்னுடன் பேசிய நண்பர்கள் யாரும் சொன்ன நேரத்திற்கு வராமல் நான் மட்டும் அங்கு மாட்டி கொள்ள, மற்ற அனைவரும் வந்து விட்டனர். இதில் என்ன இருக்கிறது என்று நினைப்பவர்களுக்கு, அங்கு வந்தவர்கள் அனைவரும் அமெரிக்கா வெள்ளை இன மக்கள். சில பேருடன் மட்டுமே நான் தொழில் ரீதியாக பேசி வந்து வந்துள்ளேன். அதுவும் ஐந்து நிமிடம் மட்டுமே. என்னுடன் நெருங்கி பழகி வரும் அமெரிக்கா வெள்ளை நபரும் அங்கு வரவில்லை. எவ்வளவு நேரம் தான் நான் தனியாக நிற்பது நினைத்து, அவர்கள் மத்தியில் நானும் சேர்ந்து கொண்டேன். அவர்களே தன்னை அறிமுக படுத்திக் கொண்டு, என்னை பற்றி கேட்க, பெயர் சொன்ன உடன் அறிந்து கொண்டனர். இந்தியர்கள் சில பேர் வந்து இருந்தாலும், அவர்கள் அவர்களுடைய நண்பர்கள் அமர்ந்து கொண்டனர். அனைவரும் அமர்கையில், என்னை சுற்றி வெள்ளை இனத்தவர் அமர்ந்து கொண்டனர். நாங்கள் சென்றது இந்திய உணவு கிடைக்கும் இடம். அவர்களுடன் என்ன பேச என்று நினைத்து கொண்டு இருக்கையில், எடுத்த உடனேயே கார உணவை அவர்கள் எடுத்து உண்ண, அவர்கள் முகம் முழுவதும் சிவப்பாக மாறியது. அவர்களை பார்க்க எனக்கு பாவமாக இருந்தாலும், ஒன்றும் செய்ய முடியாத நிலை.

மெதுவாக அவர்கள் என்னை பற்றி அவர்கள் கேட்க, தொழில் ரீதியான அனுபவத்தை முடிக்க, மெதுவாக அவர்களின் வாழ்க்கை பற்றி போனது. அமெரிக்காவை பற்றி நம் (இந்திய) மக்கள் அனைவரும் அறிந்த ஒரு விஷயம் ஒன்று.  அவர்களுடைய குழந்தைகளை அறிமுக படுத்தும் போது சொல்லும் விஷயம், "எங்கள் குழந்தைகள், என் குழந்தைகள், என் மனைவியின் குழந்தைகள்". என்னுடன் அமர்ந்த ஒரு வெள்ளை நபர், இதே விஷயத்தை அப்படியே சொல்லும் போது, என்னுடைய எண்ண ஓட்டத்தை எண்ணி பாருங்கள். என்ன இப்படி மானங்கெட்ட கலாச்சாரம் என்று உங்களுக்கு நினைப்பு வந்தாலும், அவர்களின் வாழ்க்கை முறை சரி என்றே எனக்கு தோன்றியது. இங்கே இருக்கும் சுய உரிமை மற்றும் சுய மரியாதையை போல் எங்கும் நான் கேட்டது இல்லை. இங்கு வேலை செய்பவர்கள் அமெரிக்கா மக்கள் என்றாலும், இங்கிலாந்து, ஜெர்மனி, போலந்து, மெக்ஸ்சிகோ, ரஷியர்கள், ஜப்பானியர்கள், சீனர்கள், என்று பல விதம். அவர்கள் கூறும் கதையை கேட்டால், அமெரிக்கா மக்களின் நல்ல வாழ்க்கை முறையை அறிய முடியும். இந்திய மக்கள் பல பேர் அமெரிக்கா மக்களை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை நன்றாகவே நான் அறிவேன். ஏன் என்றால், நான் இங்கு வருவதற்கு முன், என் எண்ணமும் அது தான். ஆனால் பல இடத்திற்க்கு சென்று பல மக்களை பார்த்து வந்து பிறகு தான், நான் என்னுடைய தவறை உணர்ந்தேன். எப்படி இருந்தாலும், இந்தியா மக்களின் வாழ்க்கை தான் மகத்தானது என்பது நான் அறிவேன்.

ஏற்கனவே நான் சென்னது போல் என் இடம் கிராமம் போல் இருக்கும். என் இடத்தில் இருக்கும் அமெரிக்கா மக்கள் அனைவரும் நிம்மதி வாழ்க்கையை விரும்புபவர்கள். கடந்த 1.5 ஆண்டுகளில் நான் கண்ட அமெரிக்கா மக்களின் குடும்ப வாழ்க்கை பாராட்டும் விதமாக இருந்து இருக்கிறது. என்னுடன் பேசி கொண்டு இருக்கும் நபர், அவரின் இரண்டாம் காதலை கூற, மிக ஆர்வமாக கேட்டு கொண்டு இருந்தேன். முடிவில் என்ன வாழ்க்கைட இது என்ற சொல் எனக்கு வந்து விட்டது. இந்த அனுபவம், என் வாழ்வில் மிக முக்கியமானதாக கருதுகிறேன்.

இந்த பதிவின் முதல் வாக்கியத்தை நான் படித்து பார்க்கும் போது, முடிவில் இருக்கும் நிலைமையை பார்க்கும் போது, என் வாழ்க்கையை என்னால் பிரிந்துக் கொள்ள முடியாத நிலை என்று அறிகிறேன்.