Monday, August 31, 2009

கடவுளின் மறுபெயர்?

தன் லட்சியத்தை அடைய கடும் முயற்சிகள் செய்து கொண்டே கடவுளை வணங்கினாலும் பல ஆண்டுகளாக அடைய முடியவில்லை. அனைவரும் அதை விதி என்று கூறுகின்றனர். முயற்சி திருவினையாக்கும் என்று கூறினாலும், அது 100% உண்மை என்று கூற முடியாது என்பது என் கருத்து.

விதி - கடவுளின் மறுபெயர் என்று கூறலாமா?

கடவுள் நம்பிக்கை இருந்தாலும், வணங்காமல் எந்த வித முயற்சியும் இல்லாமல் சில பேர் லட்சியத்தை அடைகின்றனர். இதற்கு அனைவரும் அதிர்ஷடம் என்று கூறுகின்றனர்

அதிர்ஷடம் - கடவுளின் மறுபெயர் என்று கூறலாமா?

"நல்லவங்களுக்கு ஆண்டவன் அதிகம் சோதிப்பான் ஆனா கைவிட மாட்டன்..கெட்டவங்களுக்கு ஆண்டவன் அதிகம் கொடுப்பன் ஆனா கைவிட்டு விடுவான்" என்று தலைவரின் விரிகளை கூறாமல், நடைமுறைப் படி யோசித்தால்.. (அய்யோ, இப்பவே கண்ண கட்டுதே.. முடியலப்பா)

கடவுளின் மறுபெயர் விதி மற்றும் அதிஷ்டம்?

இங்கு கடவுள் நம்பிக்கை பற்றி பார்க்கிறோம். அதற்கும் தன்நம்பிக்கை உள்ள வித்தியாசம்? எது பெரியது? நான் யோசித்து பார்க்கிறேன்..

பி.கு. எனக்கும், இந்த பதிவுக்கும் நிறைய முரண்ப்பாடு இருந்தாலும், தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டியது.

மலை மலை - திரைவிமர்சனம்

கிராமத்து சண்டியர் ஆன ஒரு வாலிபன், சென்னையில் உள்ள ஒரு தாதா உடன் எதிர் பாராவிதமாக மோதி, அவனை வெற்றி கொள்வதே கதை.

அருண் விஜய் என்னதான் நடித்தாலும், ஆடினாலும் மற்றும் பாடினாலும் இந்த 90ம் ஆண்டு கதை காரணமாக எடுபாடமல் போகிறார். இவருக்கு இராசி இல்லை என்று தான் சொல்ல வேண்டும். "டம்மி பிஷ்க" வடிவேலுவை பயன்படுத்தாமல், நடிகர் பிரபுவை வைத்துக் கொள்வது மிக மிக அநியாயம்... வில்லனாக வரும் பிரகாஷ் ராஜ் பற்றி சொல்ல தேவை இல்லை. அவர் வேலையை கச்சிதமாக முடித்து இருக்கிறார்.

நடிகர் அருண் விஜய், நடிகை வேதிகா இருவருக்கும் ராசி இல்லை என்று நீருபிக்கும் இன்னொருப் படம்..

அழகர் மலை - திரைவிமர்சனம்

இப்படத்தை பார்க்க தூண்டிய விஷயங்கள் மூன்று....(என்ன தான் இருந்தாலும் நானும் மதுரை மச்சான் தானே)
1. இசைஞானி இளையராஜா
2. வைகை புயல்
3. படத்தின் பெயர்

நானும் எதோ நினைத்து பார்த்தால் சொல்கின்ற அளவுக்கு கதை இல்லை. அதுவும் இசைஞானி ஒரே ஒரு பாட்டுவுடன் நாம்மை ஏமாற்றி விட்டார் என்று தான் கூற வேண்டும். கதாநாயகன் ஆர். கே. நடிப்பில் நல்ல முன்னேற்றம் தான் என்றாலும் காதல் காட்சிகளை பார்க்க முடியவில்லை. கதாநாயகியை பற்றி சொல்ல எதுவும் இல்லை. வைகைப் புயல் நீண்ட நாளைக்கு பிறகு நம்மை கொஞ்சம் சிரிக்க வைக்கிறார். படத்தின் பெயருக்கும் இந்த கதைக்கும் தொடர்பு இல்லை என்பதால், தொடர்பு ஏற்படுத்த சரவணன் மற்றும் சுகன்யாவையும் வைத்து ஒரு பாடல். அய்யோ என்னால் முடியலப்பா.

எனக்கு தெரிந்த ஒரே ஒரு ஆறுதல் ஆன விஷயம் இளையராஜா தலைப்புப் பாடல் மாட்டும் தான். காதலுக்கு மரியாதையை படத்திற்கு பிறகு இளையராஜாவின் தலைப்புப் பாடல் ரசிக்கும் படி இருந்தது இப்பாடல். இந்நேரத்தில் மற்ற எந்த படத்து பாடலும் கேட்கும் படி இல்லாமல் இருப்பதால் ஏனோ இது ரசிக்கும் படி உள்ளதாக நினைக்க தோன்றுகிறது. இதோ அப்பாடலின் வரிகள்

உலகம் இப்ப எங்கோ போகுது எனக்கு இந்த அன்னை பூமீ போதும்
இங்கு பிறந்தவரும் எங்கோ போகிறார் எனக்கு இந்த சொந்த நாடு போதும்
வகை வகையை வாழ்ந்தது எல்லாம் வாழ்க்கை இல்லையா
வழி வழியாய் காத்தது எல்லாம் நமது செல்வம் இல்லையா
மாற்றம் தான் நல்ல மாற்றமா அது நமக்கு வேணுமா

நதிகளினால் நிலம் செழித்து கொள்வதில் நெஞ்சம் நெகிழ்கிறேன்
நிதி வசத்தினால் நான் சோற்றுக்கு அலைந்ததை நினைத்து பார்க்கிறேன்
பட்டினியும் பாமரனும் பாரதத்தின் செல்வம் என்பேன்
நாடு விட்ட செல்வர் எல்லாம் இடிந்து நிற்கும் ஏழை என்பேன்
கன்னியரின் செல்வம் எல்லாம் அன்னை மண்ணுக்கு விலையாமோ
இந்த மண்ணை விட்டு விட்டு எங்கு போவது

உலகம் இப்ப எங்கோ போகுது எனக்கு இந்த அன்னை பூமீ போதும்
எதுவும் இங்கே மாறி போகுது எனை இந்த மாற்றம் என்ன செய்யும்

தாயாவாள் பாசமும் தந்தை ஈசமும் நிலைத்து கிடைக்குமா
உறவினர் சொந்தமும் உருகிடும் பந்தமும் வெளியில் கிடைக்குமா
வள்ளுவனும் பாரதியும் வணங்கிய மண் இது அல்லவா
வைகை கரை ஓரத்திலே வளர்த்த தமிழ் நமது அல்லவா
வார்த்தைகுள்ளே அடங்கிடுமா முன்னோர்தம் பெருமை எல்லாம்
நினைக்கையிலே நெஞ்சம் எல்லாம் நிரம்பி வழியுதே

Sunday, August 30, 2009

ஆண்களே யோசிப்பிர்

கவிஞர்கள் பெண்ணை மலர், நிலவு, கொடி மற்றும் பலவிதங்களில் பாடினாலும், வர்ணித்தாலும் இலக்கியம்/வரலாறு உடன் ஒப்பிடப்பட போது அது என்னை பொறுத்த வரையில் கொஞ்சம் வேறு பட்டு விடுகிறது. இலக்கியம்/வரலாறு காவியங்களில் வரும் கதாபாத்திரம் மட்டும் தான் உணர்வு உள்ள உயிர்கள். மற்றவை எல்லாம் கவிங்கனின் கற்பனை நதிகள். சமீபத்தில் வரலாற்றுடன் ஒப்பிடப்பட நான் ரசித்த வரிகள்

கம்பன் கண்ட சீதை உந்தன் தாய் அல்லவா
காளிதாசன் சகுந்தலை உந்தன் சேய் அல்லவா
அம்பிகாபதி அணைத்த அமராவதி மங்கை அமராவதி
சென்ற பின்னர் பாவர்களுக்கு நீயே கதி

இந்த பதிவை எழுதும் போது என் நண்பர் சரவணன் உடன் பேசிக் கொண்டு இருந்தேன். அவர் கூறுகையில் என் ஆண் மகனைப் பற்றி குறைந்த பச்சமாவது மாடுகளுடன் கூட ஒப்பிடுவதில்லை என்று வருத்தப்பட்டார். அவர் கருத்துக்கு நானும் கைகொடுப்பதை விட வேறு வழிஇல்லை.. இதற்கு காரணம் என்னவாக இருக்கும் என நினைத்தல் ஆண் கவிஞர்கள் அதிகம் என்பது என் கருத்து. பெண் கவிஞர்கள் இருந்தாலும், பாடல்கள் எழுதுவதில் அவர்கள் ஒரு சதவீதம் தான்

இன்றைய சிந்தனை

நாய்க்கு கூட வாலாட்டினால் தான் ரொட்டி கிடைக்கும்

Monday, August 24, 2009

நோக்கியா 2323சி

விநாயகர் சதுர்த்திக் காரணமாக, புது பொருள் வாங்க வேண்டும் என்ற நினைத்துப் போது, கை தொலைப்பேசி நினைவு வந்தது. உடனே சென்ற சனிக்கிழமை இரவு 10:30 மணிக்கு பெரியார் சென்று நோக்கியா 2323சியை வாங்கிக் கொண்டு வந்தேன். எனக்கு பயமே, இது வரை இந்த தொலைப்பேசிக்கு வலைத்தளத்தில் உபயோக பயன்பாடு இல்லை. ஆனால் அடிமட்ட உபயோகத்துக்கு உகுந்த தொலைப்பேசி எனத் தெரிகிறது
 

தொலைப்பேசி, நோக்கியா

திருமண வாழ்த்துகள் - ஜெயாகுமார்

எனது தொழில்நூட்ப நண்பர் திரு. ஜெயாகுமார் அவர்களுக்கு இன்று 24ம் தேதி திருமணம் நடைப் பெறுவதை தெரிவித்து கொண்டு, என்னுடைய திருமண வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்... இவரது திருமணம் மதுரையில் நடைப்பெற்றாலும், எனது தனிப்பட்ட வேலையின் காரணமாக திருமணத்திற்கு செல்ல முடியாததை நினைத்து வருந்துகிறேன்.
 

திருமணம், வாழ்த்துகள்

Sunday, August 23, 2009

சின்ன குமுறல்

மதுரை என்ற அழகிய மற்றும் பாரம்பரிய ஊரில் கூட என்ற இந்த ஒழுங்கு முறை... கேட்டால் மதுரை முன்னேறுகிறது என்ற வார்த்தை வேறு. சாதரண மக்கள் இதனால் எவ்வளவு கஷ்ட படுகின்றனர் என்று யாருக்கும் தெரியவில்லை.. உதாரணம்

மதுரையில் குளிர் சாதன மற்றும் சொகுசு பேருந்து
திரைஅரங்கில் முன்பதிவு முறை மற்றும் சோதனை செய்து உள்ளே அனுப்புவது
தலைகவசம் அணிய சொல்வது
பொழுதுபோக்கு முறைகளில் புது வழிமுறை


இப்படி பல புது வழிமுறைகள் ...சாதரண மக்களில் ஒருவன் என்ற முறையில் என் மன குமுறல்....

கந்தசாமி - திரைவிமர்சனம்

விக்ரம் என்ற உச்ச நடிகரை நடிக்க வைத்து, அவரை எவ்வளவு மோசமான அறிமுக காட்சியை வைக்க முடியுமோ வைத்து நடிகரை கேவல படுத்தி உள்ளனர். ஷிரேயா நடிக்கும் காட்சிகள், வயதுக்கு வந்தவர்கள் மட்டும் பார்க்கும் காட்சிகளாகவே அமைத்து உள்ளனர். நடுவில் வைகைப் புயலை வைத்து தனியாக இன்னும் சில மொக்கை நகைச்சுவை காட்சிகள் வைத்து கொன்று விட்டனர். கலைப்புலி எஸ். தானுக்கு மொட்டை போடும் விதத்தில் திரைக்கதையை, திரைக்காட்சிகளை வைத்து, மோசமான ஒளிப்பதிவுடன் படத்தை தந்த இயக்குனர் சுசி கணேஷன் அவர்களை என்ன வென்று சொல்ல.

கந்தசாமி - மிக மிக மோசமான மொக்கசாமி

தங்கரீகல் திரைஅரங்கில் இப்படத்தை இரவு 10:45 மணி முதல் அதிகாலை 2:20 வரை பார்த்து தூக்கத்தை கெடுத்துக் கொண்டது தான் மிச்சம் என்ற சொற்களை அனைத்து தரத்து மக்களிடம் கேட்டு, நான் வீட்டை அடையும் போது மணி காலை 3:15...

Saturday, August 22, 2009

பொக்கிஷம் – திரைவிமர்சனம்

தபால், தந்தி மற்றும் தொலைப்பேசி துறைகள் இப்படத்திற்கு நன்றி சொல்லியாக வேண்டும். 1970ல் இருந்த தகவல் பரிமாற்றத்துக்கும், இப்போது உள்ள தகவல் பரிமாற்றத்துக்கும் இடைவெளியை நம்மால் யோசிக்க முடியாது. ஆனால் அதை இப்படம் கண் முன் கொண்டு வந்து நிறுத்தி உள்ளது. அதே போல் அப்போது இருந்து உள்ள, கொல்கத்தாவை திரையில் காண முடிகிறது.

சேரனும், பத்ம ப்ரியாயும் சந்தர்ப்ப சூழ்நிலையால் சந்தித்து எண்ணங்களை பரிமாறிக் கொள்கின்றனர். பிரிந்த பின்பும் அந்த நட்பு கடிதம் வழியாக தொடர்கிறது. பின்பு காதலாக மாறுகிறது. அந்த காதலுக்கு மதம் காரணமாக பத்ம ப்ரியா பிரிந்து விடுகிறார். அதே போல் சேரனும் அவரது தந்தையின் காரணமாக வேறு ஒரு திருமணம் செய்து கொள்கிறார். இருந்தாலும் அவரது காதல் கடிதம் தொடர்கிறது, பத்ம ப்ரியாக்கு போய் சேராமல். அதாவது கடிதம் மட்டும் எழுதி வைத்துக் கொள்கிறார். காலங்கள் செல்ல, சேரனும் இல்லாமல் போக, அக்கடிதம் மட்டும் அவரது மகன் கையில் கிடைக்கிறது. மகன் தற்போது உள்ள தகவல் தொழில் நுட்பத்தைப் பயன் படுத்தி கடைசியா பத்ம ப்ரியாவை கண்டுப் பிடித்து அக்கடிதத்தை சேர்கிறார். ஆனால் பத்ம ப்ரியா அந்த மடலுக்குக்காக, தன் வாழ்க்கை அர்பணித்து உள்ளார் என்பது தெரிய வரும். அதாவது திருமணம் செய்து கொள்ளாமல் தன் காதல் மடலுக்குக்காக காத்துக் கொண்டு இருந்திருப்பார். சேரனின் மகன் வழியாக அவர் உலகில் இல்லை என்று தெரிந்ததும், மடலுடன் உயிர் விடுகிறார்

நல்ல கதை என்றாலும், படம் முழுவதும் கடிதங்கள் எழுதபடுகின்றன மற்றும் வாசிக்கபடுகின்றன. எல்லா மடல்களும், வசனங்களும் கவிதையாகவே இருந்தது.அனைத்து தரப்பு மக்களையும் கொல்கின்றனர். படம் எப்போது முடியும் என்கின்ற நிலைக்கு வந்து விடுகிறோம். அதை விட முக்கியமா, சேரனின் நடிப்பு. அவர் நடிக்கவில்லை என்று யார் அழுதார்கள் என்று தெரியவில்ல. அவர் நடிப்பை பார்த்து நாம் தான் அழ வேண்டும். அவ்வளவு மோசம். அதிலும் அதிகமா நடித்து கொல்கிறார். 1970ல் இருந்த வாழ்க்கை முறையை கொண்டு வர அவர் பாடுபட்டு இருந்தாலும், அது பல விஷயத்தில் அடிப் பட்டு போகிறது. இது காதலர்க்கான படம் என்று இருந்தாலும் (தனியாக போய் உட்கார முடியாது), அவர்களையும் இவ்வளவு சோதிக்க கூடாது.

நானும், என் நண்பர்கள் சேர்ந்து இப்படத்திற்கு சென்றோம். இப்படத்தை பார்த்து அழ முடியாமல், சென்டிமென்ட் காட்சிகள் வரும் போது, கை தட்டி, "சூப்பர் அப்பு" என்று கூறி அதை நகைசுவை கட்சிகளாக மாற்றிவிட்டனர். நாங்கள் மட்டும் தான் செய்கிறோம் என்றால், திரை அரங்கமே அதை தான் செய்து கொண்டு இருந்தது. இதில் இருந்தே இப்படத்தைப் பற்றி அறியலாம்.

சேரன் இயக்குனரின் படைப்புகள் ஆன பாரதி கண்ணம்மா, பொற்காலம், தேசிய கீதம், வெற்றி கொடி கட்டு, பாண்டவர் பூமி, ஆட்டோகிராப், மற்றும் தவமாய் தவமிருந்து காவியங்களை போன்று எதிர்ப் பார்த்து காத்து கொண்டு இருக்கும் அவரது ரசிகன் என்ற முறையில் இத்திரைவிமர்சனத்தை எழுதி இருக்கிறேன்.

என்ன செய்ய?

திருமண மக்கள், ஞாயிற்றுக்கிழமை வைத்தால் அனைவரும் வருவார்கள் என்று நினைத்து, நல்ல நாளில் அதுவும் ஞாயிற்றுக்கிழமை பார்த்து திருமணத்தை வைத்து விடுகிறார்கள். (ஆனால் சில மக்கள் மட்டும் வார நாட்களில் வைத்து செலவை குறைக்க முயலுகின்றனர். அவர்களைப் பற்றி இங்கே பேச வில்லை)
இதே போல் நண்பர்கள் மற்றும் சொந்த சுற்று வட்டாரங்களில் அனைவரும் யோசிக்க முடிவு, ஒரே நாளில் மூன்று மற்றும் நான்கு திருமணங்கள். எந்த திருமணத்திற்கு செல்ல? திருமணத்திற்கு வரவில்லை சென்று மணமக்கள் கோபம் கொள்கின்றனர். ஒரே ஊரில் திருமணம் இருந்தாலும் தெரியாது. எடுத்துக் காட்டாக, அக்டோபர் 25ம் தேதி அன்று, எனக்கு தெரிந்த நண்பர்கள் மற்றும் சொந்த சுற்று வட்டாரங்களில் திருமணம் நடைப்பெறும் இடங்கள் மதுரை, பரமக்குடி, திருச்சி. இதே போல் நவம்பர் மாதம் முதல் தேதியில், மதுரை, சென்னை மற்றும் ஆந்திராவிலும்.. அவர்கள் மீது எந்த தவறும் இல்லை, அதே போல் வராதவர்கள் மீதும் தவறும் இல்லை என்று புரிந்துக் கொண்டல் சரி.

ரசித்தது - விளம்பரம்

வாழ்க்கையில் சில வினாடிகளில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதை டாட்டா - டோகோமோ விளம்பரம் அருமையாக சொல்லி விடுகிறது.

அதே போல் ஏர்டெல்லின் விளம்பரம் அனைத்துமே குடும்ப உருகி வைத்து செண்டிமேண்டக எடுத்து அசத்துகின்றனர்.

Monday, August 10, 2009

மாப்பிள்ளையின் யோசனை

கடந்த மாதம் எனது பழைய அலுவலக நண்பர் திருமணத்திற்க்காக இராமநாதபுரம் அருகில் உள்ள ஒரு கிராமத்திற்கு சென்றோம். இதைப் பற்றி கடந்த பதிவுகளில் சொல்லி இருந்தேன். திருமணம் அவர்களின் சடங்கு முறைப்படி நடைப்பெற்ற பின் 4 அல்லது 5 சிறுவர்கள் ஒரு புத்தகத்தை வினியோகித்தனர். புத்தகம் பெண்ணின் குடும்பப் பழக்கப் படி விநியோகிக்கப் பட்டதாக சொல்லப் பட்டது. நானும் வேகமாக சென்று ஒரு புத்தகத்தை வாங்கிக் கொண்டேன். முதல் பக்கம் வைரமுத்து வரிகளுடன் ஆரம்பித்தது. எனக்கு ஒரே ஆச்சிரியம். கிராமத்து திருமண விழாவில் இப்படியும் ஒரு அறிவுத் தீனி என்று…மீன் குழம்பு, இறால் புட்டு செய்வது எப்படி என்றும், சிந்தனை மொழிகளும் இடம் பெற்று இருந்தன. ஆனால் அந்த கவிதைப் படித்த உடன் தான் எனக்கு சிறு சந்தேகம் ஏற்பட்டது. இந்த புத்தகம் விநியோகிக்க சொன்னது மாப்பிள்ளையோ என்று.... அப்படி என்ன கவிதை என்று யோசித்தால் இதோ...

ராதாகிருஷ்ணனே!
சாதாரண நாளல்ல
இன்று உனக்கு!
உன் வாழ்க்கைத் தேரோட்டத்தை
வெற்றியுடன் வழிநடத்த
கை பற்றிட வந்தவள்...
"ராமன் தேடிய சீதை"யாய்
உன் மனதை கைப்பற்றி வந்தவள்...

உழைப்பாளிகளால் புகழ்பெற்ற
களைப்பில்லா நகர்
சிவகாசியில்
தலைமகனாய்
பிறந்த உன்னை
தத்தெடுத்துக் கொண்டதோ
தலைநகர் சென்னை!

பள்ளிப் பருவத்திலே
தடகள ஓட்டத்திலே
கோப்பைகள் பல வென்றாய்!
ஆக்கி ஆட்டத்திலோ
கூக்கி நிறுத்தினாய் அணியை!
மட்டைப் பந்திலோ
தட்டிப் பறித்தாய் பலப்பல வெற்றிகளை!

இத்தனை திறமையிருந்தும்
சீட்டாடத் தெரியாது
உனக்கு!
இது நம்
ஆச்சி வீட்டுப் பரம்பரைக்கே
இழுக்கு!

அன்று
போதி மரம்தேடி
பாரயாத்திரை சென்றாய்!
தாத்தா பறக்கடையிலே
தவமாய் தவமிருந்தாய்!
இன்றோ
உலக அறிவு பெற்று
அமெரிக்காவரை
சென்று வந்தாய்
சொல்லியடிப்பதில்
நீ ஒரு கில்லி!
உன்னால்
மறக்க முடியாது "மல்லி"!


வீட்டுக்கு மூத்தவனாய்
பாரம் சுமக்கும்
உன் திறமை
அபாரம்!

நீ செல்லும் பாதையிலே
வெல்லும் பாதையிலே
தம்பிகளும் பின்தொடர்ந்தபடி!

"சாப்ட்வேர்" இஞ்சினியர் நீ...
கண்டிப்பு காட்டுவதிலோ
என்றும் ஹார்டுவேர்!

தமிழனுக்குத் தலைகுனிவென்றால்
பொறுக்காது உன் உள்ளம்!
பொங்கிடுமே
உணர்ச்சி வெள்ளம்!
போராடும் வேளையிலே
ராதா கிருஷ்ணனல்ல...
நீ ஒரு
"தாதா" கிருஷ்ணன்!

இத்திருமண நாளில்
நீ கடந்து வந்த பாதையை
சற்றே
திரும்பிப் பார்த்தது போதும்...

இனி உங்கள் இணையை
உங்கள் சாதனையை
திரும்பிப் பார்க்கட்டும் உலகம்!
வாழ்த்துகிறோம்
வைகை பொங்க!

இப்போது நீங்களே சொல்லுங்கள்... இதை படித்தவுடன் தான், எனக்கு ஒரு யோசனை... அது....????

என்ன போட்டி இது

காலையில் இசை சம்மந்தப் பட்ட சேனலைப் பார்த்தல்

இசையருவி - குத்து மற்றும் உதயநிதி தயாரிப்பில் உருவான பாடல்கள்
சன் மியூசிக் - சன் தயாரிப்பில் உருவான பாடல்கள் மற்றும் புது பாடல்கள்
ஜெயா மாக்ஸ் - பழைய பாடல்கள் மற்றும் கேட்கும் படி உள்ள பாடல்கள்
ராஜ் மியூசிக் - கேட்கும் படி உள்ள பாடல்கள்

தொழில் போட்டியின் காரணமாக இசையருவி மற்றும் சன் மியூசிக் மட்டுமே தெரியும் வண்ணம் உள்ளது. காலையில் இந்த சேனலைப் பார்த்தல் வந்த பாடல்களே வந்து உயிரை வாங்கும்.

அவ்வபோது ஜெயா மாக்ஸ் தெரிந்தாலும் பெரிய கஷ்டம் தான். ராஜ் மியூசிக் சொல்லவே தேவையில்லை. தெரியவே தெரியாது.

தொழில் போட்டி இருக்க வேண்டியது தான். ஆனால் அதற்க்காக அதே தொழில் உள்ளவர்களை கொல்ல கூடாது... நடக்கும் முறையைப் பார்த்தல் கூடிய விரைவில் ராஜ் இருக்கவே இருக்காது...

இதை விட முக்கியமான விஷயம், எல்லா சேனல்களில் இருந்து அடையாள சின்னத்தை எடுத்துவிட்டால் எல்லாமே ஒன்று தான்..இதை தெரிந்து கொண்டால் சரி..

Sunday, August 09, 2009

வைரமுத்துவின் வரிகள்: டூயட் (1994)

எனக்கு கவிதைகளில் பற்று வர முக்கிய காரணிகளில் கீழ்கண்டதும் ஒன்று..

1. கவிதைக்கு பொருள் தந்த கலைவாணி நீயா?
என் கனவோடு கேட்கின்ற காற்சலங்கை நீயா?
பேச்சுக்கு உயிர் தந்த சப்தங்கள் நீயா?
எனைப் பேசாமல் செய்கின்ற மௌனங்கள் நீயா?
சத்தங்கள் இல்லாத சங்கீதம் நீயா?
எனைச் சாகாமல் செய்கின்ற சஞ்சீவம் நீயா?
பருவத்தின் தோட்டத்தின் முதல் பூவும் நீயா?
என் பாலைவனம் காண்கின்ற முதல் மழையும் நீயா?
இரவோடு நான் காணும் ஒளி வட்டம் நீதான்!
என் இரு கண்ணில் தெரிகின்ற ஒரு காட்சிதான்!
வார்த்தைக்குள் உள்ளாடும் உயிரோட்டம் நீதான்!
என் வாக்கியத்தில் இசையாகும் உயிர் மூச்சும் நீதான்!
தூரத்தில் மயிலிறகாய்த் தொட்டவளும் நீதான்!
என் பக்கத்தில் அக்கினியாய்ச் சுட்டவளும் நீதான்!
காதலுக்குக் கண் திறந்து வைத்தவளும் நீதான்!
நான் காதலித்தால் கண்மூடிக்கொண்டவளும் நீதான்!


2. சத்தத்தினால் உண்ட பித்தத்தினால்
காதல் யுத்ததினால் எனது ரத்ததினால்
கவிதை எழுதி வைத்தேன் தோழி.
இரு கண்ணிருந்தால் வாசித்து போடி.
கண் பார்த்ததும், கெண்டை கால் பார்த்ததும்
உன்னை பெண் பார்த்ததும், தள்ளிப்பின் பார்த்ததும்
சுட்டாலும், மறக்காது நெஞ்சம்.
முற்றும் சொன்னத்தில்லை தமிழுக்கு பஞ்சம்.
கண்டிப்பதால், என்னை நிந்திப்பதால்,
நெஞ்சை தண்டிப்பதால், தலையை துண்டிப்பதால்,
தீராது என் காதல் என்பேன்.
நீ தீ அள்ளி தின்னச்சொல் தின்பேன்.
உம் என்று சொல், இல்லை நில் என்று கொல்.
என்னை வாவென்று சொல் இல்லை போவென்று கொல்.
உம் என்றால் உள்ளதடி சொர்க்கம்.
நீ இல்லை என்றால் ஈடுகாடு பக்கம்.

Saturday, August 08, 2009

கண்ணீர் சிந்துகின்றேன்

ஐந்து வருடமாக என்னுடன் உறவாடியது... நண்பர்களை என் மேல் பொறாமை பட வைத்தது (கொஞ்சம் அதிகம் தான்...) இப்படி என்னால் சொல்லிக் கொண்டே போக முடியும். ஆனால் இன்று அது என்னுடன் இல்லை என்கின்ற போது கண்களில் நீர் வடிகிறது....

சென்ற செவ்வாய் கிழமை அன்று, இரவு சுமார் எட்டு மணிக்கு நான் மழையின் காரணமாக என் இரண்டு சக்கர வாகனத்தில் அதுவும் வேகமாக செல்லும் போது அதிக காற்றின் காரணமாக, அது வாகனத்தின் உள்ளே இருந்து பறந்து தாம்பரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள சாலையின் நடுவே கீழே விழ! என் கண் முன்னால் ஐந்து அல்லது எட்டு வாகன ஊர்திகள் அதன் மேல் ஏற்றி... ஐயகோ.. முடியவில்லை...

காப்பாற்றி விடலாம் என்று நினைத்து சென்று பார்த்தல் மிச்சம் மீதி கூட கிடைக்கவில்லை.

எனது குளிர் கண் கண்ணாடிக்காக கண்ணீர் சிந்துகின்றேன்...

அதிர்ஷ்டம்

அதிர்ஷ்டம் - அப்படி என்றால் என்ன?

1939 ஆம் ஆண்டு எஸ். டி. எஸ். யோகி இயக்கத்தில், வி. வி. சடகோபன், கொத்தமங்கலம் சுப்பு மற்றும் பலரும் நடித்துள்ள திரைப்படத்தைப் பற்றி இங்கு நான் குறிப்பிடவில்லை.

முயற்சியின்றி அல்லது உழைப்பின்றி கிடைக்கும் நன்மை என்று பொதுவாக சொல்வதுண்டு. ஒரு விதத்தில் உண்மை என்று எனக்கு தோன்றுகிறது.

உழைத்து, உழைத்து உழைத்தப் பயனை அனுபவிக்க முடியாமல் (பல காரணங்கள் இருக்கலாம்) வீழ்தவர்/மாண்டவர் உண்டு.... எடுத்துக்கட்டாக உங்களையும் அல்லது என்னையும் கூட சொல்லலாம்

அதே போல் உழைப்பின்றி இருக்கும் சில மக்களுக்கு நன்மை மேல் நன்மை கிடைக்கின்றன. இதற்கு கூட எடுத்துக்கட்டாக உங்களையும் அல்லது என்னையும் சொல்லலாம். [ஆனால் நாம் உண்மையை எடுத்துக் கொள்ள மாட்டோம். (இது வேறொரு விஷயம்.. அதனால் இங்கு இதனை விட்டு விடுவோம்)]


இதற்கு பெயர் என்ன? மேலோட்டமாக பார்த்தல் அதிர்ஷ்டம் என்று சொல்வர்.

அப்படி என்றால் உண்மையிலே உழைத்த அந்த மனிதனின் வியர்வைக்கு மதிப்பிலையா அல்லது அவனுடைய வியர்வை அவனுக்கு சொந்தம் இல்லையா? அவன் செய்த தவறு என்ன? இப்படி என் மனதில் பல கேள்வி அம்புகள்...

குறிப்பு: வாழ்க்கைத் தரத்தை உயர்த்த கூடிய விஷயம் கைவிட்டு போனதால் இதைப் பற்றி யோசிக்க வேண்டியதாயிற்று

சமீபத்தில் ரசித்தது

இருக்கின்ற எல்லா உறவுகளுடன் பாசமாக இருப்பது ஒரு கட்டம்.. இதே உறவுகள் நம்மை விட்டு பிரியும் போது அதை பக்குவமாக எடுத்துக் கொள்வது இன்னொரு கட்டம்.. வாழ்க்கை மிகவும் அழகானது.. -- அபியும் நானும்