Tuesday, March 29, 2011

இது ஒரு குற்றமா? - சிறுகதை - பாகம் - III



இரண்டு நாட்கள் அவள் பேசாமல் இருக்க, குமாரே அவளை தொடர்பு கொண்டு பேசினான். அர்ச்சனா பேசுகையில், குமாரின் காதுகளில் ஒரு விதமான புகை வந்ததை நண்பர்கள் அனைவரும் பார்த்துக் கொண்டு இருந்தனர். இந்த மாதிரியான தப்பு இனிமேல் நடக்காது என்று கூறி மன்னிப்பு கேட்டு கொண்டான். தவறை திருத்திக் கொள்கிறேன் என்று கெஞ்ச, அவளுக்கும் சமதானம் ஆக, ஞாயிறு கிழமை காலையில் மீண்டும் Navy Pierல் பார்க்க முடிவு எடுத்து, ஒரு மணிநேரத்திற்கு முன்னே குமார் நின்று கொண்டு இருந்தான். மதிய உணவை முடித்து விட்டு, கிளம்பும் முன் மறதியில் குமார் அவனுக்கும் மட்டும் பணத்தை எடுத்து கொடுக்க, ஆனால் தவறை நினைத்து இரண்டு பேருக்கும் பணத்தை கட்டினான். இந்த விஷயம் அர்ச்சனாவுக்கு தெரியாது என்று நினைத்து இருந்தாலும், அவள் பார்த்துக் கொண்டு இருந்தால். குமார் வந்த உடன் சிறிது நேரம் யோசித்து விட்டு, கோபம் கொள்ளாமல் உன்னுடைய பிளான் என்ன கேட்க ஆரம்பித்த உடன்


குமார்: இன்னும் ஒரு வருடன் இருந்து விட்டு இந்திய செல்ல வேண்டியது தான்.
அர்ச்சனா: என்னை பற்றி எதாவது நினைத்து பார்த்தாய்யா. என்னுடைய ஆசை அமெரிக்காவிலேயே குடியேற வேண்டும் என்பதது தான்.
குமார்: அது எப்படி முடியும்? ஏற்கனவே இரண்டு வருடம் அமெரிக்காவில் போய் விட்டது. சொந்தகாரங்க நிறைய பேர் எனக்கு இருக்காங்க. பறேன்த்ஸ் விட்டு என்னால தனியா வாழ முடியாது.
அர்ச்சனா: என் ஆசைகளை பற்றி உனக்கு கவல கிடையாது. சரி
don’t know what kind of relationship you imagined about me. But you was there in my heart.
குமார்: was?
அர்ச்சனா: yes. My life ambition is getting green card in US. But it seems it is not possible now. So this is the right time to close our anykind of relationships.
குமார்:  என்ன சொல்லற. Are you kidding?
அர்ச்சனா: No. நான் உன்னை பத்தி விசாரிச்சப்ப, நீ இங்கேயே தங்க போறே ஏன்னு கேள்வி பட்டேன். ஆனா, நீ இந்தியா போவென்னு நினைக்கல. அதனால தான் நானே உனக்கு போன் பண்ணி பேசுனேன். That’s fine. Will leave this place as friends. Bye.


என்று அர்ச்சனா கிளம்பி கொண்டு இருக்கையில், அவள் மனதில் உன்னை பார்த்த உடன் உனக்கு நான் அடிமை ஆகி விட்டேன். நான் அமெரிக்காவில் வாழும் லட்சியம் கூட எனக்கு பெரிதாக படவில்லை. உன்னுடன் நானும் சேர்ந்து இந்தியா வர முடிவு செய்து விட்டேன். ஆனால் நீ வளர்ந்த விதம், பெண்களுடன் பழகும் முறையை என்னால் எடுத்துக் கொள்ள முடியவில்லை. நானும் சாதாரணமான பெண் தான். எனக்கும் ஆண்கள் முறையாக அணுக வேண்டும் என்ற எண்ணம் உண்டு. அது நிச்சியமாக உன் இடத்தில் எதிர் பார்க்க முடியாது. அந்த அணுகு முறையை என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது. அதனால் உன்னை விட்டு விலகுகிறேன்

முற்றும்

Monday, March 28, 2011

பாலரி மணிக்யம் - மலையாளம் – 2009 – Paleri Manikyam – Malayalam




மலையாள திரைப்படங்கள் இன்றும் பலசமயங்களில் நல்ல கதை, திரைக்கதை, நடிப்பு என்ற ஏதாவது ஒரு வடிவத்தில் உயர்ந்த இடத்தை பெறும். அதற்கு காரணம் என்று பார்த்தால் அந்த திரைப்படத்தில் இருக்கும் ஒரு உயிரோட்டம. பணம் செலவு செய்யாமல், எந்த வெளி நாட்டிற்கும் செல்லாமல்,நடிப்பு மற்றும் திரைக்கதையை மட்டுமே கொண்டு ஒரு திரைப்படம் என்றால் மலையாள திரைப்படம் தான். 1980ல் நடித்த நாயகர்கள் மட்டுமே இன்றும் நடித்து, நாமும் ரசிக்கிறோம் என்றால் அது தான் மலையாள திரைப்படங்களின் வெற்றி. இப்படத்திற்கு வருவோம்.


1950ம் ஆண்களில் ஒரே நாளில் கற்பழித்து கொலை செய்யப்பட்ட பெண், கொலை செய்யப்பட்ட நங்கோதிரி இனத்தை சேர்ந்த ஒரு ஆண் மற்றும் அதே நாளில் பிறக்கும் ஒரு குழந்தை என்று படம் ஆரம்பிக்கிறது. கொலை நடந்த இடம் தான் பாலரிகொலை செய்யபட்ட பெண் தான் மணிக்யம். அதே ஆண்டு இக்கொலை வழக்கிற்கு நீதிமன்றம் வழியாக திசை மாறுகிறது. மம்மூட்டி 50 ஆண்டுகள் கழித்து மீண்டும் இந்த கொலை வழக்கை தனியாக ஆராய்ந்து குற்றம் செய்தவர் யார் என்று கண்டு பிடிக்கிறார்.


மம்மூட்டி ஒரு கதை ஆசிரியர். ஒரு உண்மை கதையை ஆராய்ந்து அதை எழுத வேண்டும் என்ற எண்ணத்தில் வருவதாக கூறி வந்தாலும், கொலை செய்யப்பட்ட நேரத்தில் பிறந்த குழந்தை. மெகா ஸ்டார் மற்றும் இந்தியாவின் சிறந்த நடிகர் என்று பெயர் இருந்தாலும், இம்மாதிரியான கதையில் நடிக்க ஒரு தைரியம் வேண்டும். இப்படத்தில் மூன்று வேடத்தில் நடித்து, தன்னை ஒரு சிறந்த நடிகர் என்று நீருபித்து இருப்பார்.

படத்திற்கு பலமே, இப்படத்தின் திரைக்கதை. ல் இருந்த மக்களின் வாழ்க்கை, மேல் மற்றும் கீழ் ஜாதியினரின் வித்தியாசம் மற்றும் கம்யூனிஸ்டுகள் வளர்ந்த விதம் என்று எல்லாவற்றையும் தெளிவாக கொடுத்து திரைக்கதையை நகர்த்தியது தான் படத்தின் வெற்றி. செல்லப்பட வேண்டிய விஷயங்களில் ஒன்று, ஒளிபதிவு செய்யப்பட்ட விதம். கடவுளின் நாடு என்பதை ஒளிபதிவாளர் மனோஜ் நீருபித்து இருப்பார். பல காட்சிகள் இரவு பொழுதில் வந்தாலும், அழகை நாம் கண்ணில் நிறுத்தி இருப்பார்

கேரளா நாட்டின் மாநில விருது இப்படத்திற்கு ஐந்து கிடைத்தது. அதே போல் மம்மூட்டி அவர்கள் தனது 50வது சிறந்த நடிகருக்கான விருதை இப்படத்தில் பெற்றார். கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படங்களில் இதுவும் ஒன்று.

Friday, March 25, 2011

இது ஒரு குற்றமா? - சிறுகதை - பாகம் - II


இரவு பத்து மணிக்கு, கை தொலைபேசி அழைப்பு. குமார் எடுத்து பேசுகையில்


அர்ச்சனா: Can I speak with Kumar.
குமார்:
Yes. Kumar here. Who is this?

அர்ச்சனா:
I am archana. Hope you remember me. Once we met in Aurora temple.
குமார்: (மனதில், ஒக்க மொக்க, இவளுக்கு எப்படி என் நம்பர் கிடைச்சது) அத்துடன் வேகமாக சென்று ஒரு தனி அறையில் நுழைந்து கதவை பூட்டி கொண்டு  

Yeah! I remember it. But how did you get my number?
அர்ச்சனா: That’s it archana.. Are you free now?
குமார்: of course I am free now. By the way, are you from Andhra or Tamil nadu?

அர்ச்சனா: I am from Chennai. How about you?
குமார்: நான் பொறந்தது, வளர்ந்தது,  படிச்சது எல்லாம் மதுரையில். வேலை பார்த்தது சென்னை, தரமணியில்

குமாரின் அலுவகத்தில் அர்ச்சனாவின் தோழி வேலை பார்ப்பதாகவும், அவள் மூலம் அனைத்து விபரங்களையும் தெரிந்து கொண்டதாக கூறி பேச ஆரம்பித்தனர்.  இப்படியே இவர்கள் பேசி கொண்டே உள்ளங்களை பரிமாறி கொள்ள, நேரத்தை குமார் பார்த்த போது இரவு இரண்டு.

குமார்: நாளைக்கு காலையில நான் ஆபீஸ் போனும். அதனால நாளைக்கு சாயங்காலம் பேசலாமே.
அர்ச்சனா: மனது இல்லாமல், சரி நாளைக்கு வேண்டாம். இந்த வார இறுதியில் நேரில் பார்க்கலாம் என்று கூறி தொலைபேசியை வைத்து விடுகிறாள்.

ஆனால் மனதில், என்ன ஆபீஸ் போனுமேன்னு கட் பண்ணிட்டன் என்ற உறுத்தல் இருந்தாலும், குமாரின் பேச்சு அவளுக்கு புது அனுபவத்தை/மகிழ்ச்சியை கொடுத்து இருந்தது.

வேலைக்கு சென்ற பின், குமாருக்கு அர்ச்சனாவின் எண்ணம் சுத்தமாக இல்லை. எப்போதும் போல் வழக்கமாக நண்பர்கள் உடன் ஜாலியாக அரட்டை அடித்துக் கொண்டு, பொழுது சென்று கொண்டே இருந்தது. ஆனால் அர்ச்சனா போன் கையிலேயே வைத்து இருந்தால். ஒரு அழைப்பு வந்தாலும், அது குமாரின் அழைப்பாக தான் இருக்கும் என்ற எண்ணம். வெள்ளி கிழமை மாலை பொழுதில், வார இறுதி நாட்களை பற்றி யோசிக்கும் போது அர்ச்சனாவின் நினைவு குமாருக்கு வந்தது. தொலைபேசி தொடர்பு கொள்ளலாமா என்று நினைத்துக் கொண்டே, அழைப்பு கொடுக்க
குமார்: அர்ச்சனா? என்ன நியாபகம் இருக்க? இப்ப பேசலாமா?
அர்ச்சனா: (முதலில் எடுத்த உடன்) இப்பவாவது என் நினைப்பு வந்ததே. எப்படி?
குமார்: அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல. நீ தானே
weekend மீட் பண்ணலாம் சொன்ன. அதுக்கு தான் இப்ப பண்றேன்.
அர்ச்சனா: ஒரு
SMS அனுப்பி இருக்கலாம். ஒரு நாள் கூட என் நினைப்பு வரல.. 
குமார்: விடு. நாளுக்கு மீட் பண்ணலாம்ன்னு சொன்ன இல்ல. எங்கே மீட் பண்ணலாம்.
அர்ச்சனா:
Millenium Park?
குமார்:
I am fine with that, coz it is near to my home. Evening 4’o clock?
அர்ச்சனா:
I am ok. Then anything else?
குமார்: Nothing.. Will meet tomorrow. என்று தொலைபேசி அழைப்பை முடித்தான்.





சனிக்கிழமை மாலை பொழுதில், இருவரும் சிகாகோ நகரத்தை முழுமையாக காட்டும்
Millenium Parkல். இருவரும் தங்களின் உணர்வுகளை பரிமாறிக் கொள்ளும் போது, குமார் இன்னும் வளர வேண்டும் என்ற எண்ணம் அர்ச்சனாவுக்கு வந்தது விட்டது. தனக்கு பிடித்தது ரச சாதம் என்றும், அமெரிக்காவில் கூட பணத்தை wallet ல் வைக்காமல், கையில் பயன்படுத்துவதும், எப்போதுமே மதுரை என்று சொல்வதும் சென்னையில் இருந்து மதுரைக்கு வாரத்திற்கு இரண்டு முறை பயணம் என்று சொல்வதும் அவனது அறியாமையை அப்படியே எடுத்து காட்டியது. அதையும் குமார் ஒத்து கொண்டதால், எப்படியாவது அவனை மாற முயற்சி செய்யலாம் என்று நினைத்துக் கொண்டே, உணவை முடிந்து கொண்டு வீட்டிற்கு செல்லும் பேருந்து நிறுத்தத்தில் நிற்க, இரவு எழு  மணி. முதலில் குமாரின் பேருந்து வர, அவன் நான் கிளம்புகிறேன் என்று கூறி விட்டு கிளம்பு, அர்ச்சனாவுக்கு ஏதோ போல் ஆகி விட்டது.

Thursday, March 24, 2011

திரைகலவைகள்


வினயகுடு - தெலுகு - 2008


கிருஷ்ணுடு, சற்று குண்டான எப்போதும் சந்தோஷமாக இருக்கும் நபர். வேலை கிடைத்து அக்கா வீட்டில் இருக்கும் அதே பிளாட்டில் தான் நம்ம நாயகியும் சோனியா தீப்தி. இருவரும் ஒரே இடத்தில் வேலை பார்க்க, முதலில் கிருஷ்ணுடு உடன் மோதலில் ஆரம்பித்து, மெதுவாக நட்பாக மாறுகிறது. நாயகனுக்கு மெதுவாக ஒரு தலை காதல் துளிர் விடுகிறது. இதே நேரத்தில் சோனியாவிற்கு என்று ஒரு மாப்பிள்ளை பெற்றோர் பார்த்து இருக்க, அவர்களும் ஒரு வித நட்புடன் பழகி கொண்டு இருக்கும் போது, கிருஷ்ணுடு இந்த விஷயம் தெரிகிறது. இதனால் கிருஷ்ணு தன் காதலை மறைக்கிறான்.  எதோ ஒரே பிரச்சனையின் காரணமாக சோனியா மற்றும் புது மாப்பிள்ளை பிரிய, கிருஷ்ணு மீது ஒரு மயக்கம் சோனியாவிற்கு விழுகிறது. கடைசியில் இருவரும் இணைந்தார்களா என்பதே கதை.


ஒரு வானவில் வண்ணத்துடன், ஒரு காதல் கதை. எங்கேயும் ஒரு வறச்சி இல்லாமல், நம்மை சுற்றி நடக்கும் ஒரு காதல் கதை ஓர் அனுபவம். இந்த படத்தில் கதையை மெல்லிய நகைச்சுவையுடன் சொன்னது தான் படத்தின் வெற்றியே. கிருஷ்ணுடு, நாயகன் எப்படி தான் இதில் நடித்தார் என்று தெரியவில்லை. இவரை போல் நாமும், பல மனிதர்களை பார்த்து இருப்போம். சோனியா, ஒரு தைரியமான பெண்ணின் வடிவம். கதைக்கு ஏற்ற வேடம். பூனம் கூர், நாயகியின் தோழி. இவருக்கு என்று ஒரு தனி கதை சொல்லாமல், முக்கிய கதை காலத்திலேயே இருந்தது கூடுதல் பலம். எந்த வித பிரதிபலனும் பார்க்காமல், செய்த உதவிக்கு நன்றி என்று நாயகனை பார்த்து கூறும் இடத்தில், ஏற்படுகின்ற ஒரு மயக்கத்தை, அதன் பின் ஏற்படுகின்ற காட்சி அமைப்புகள், காதலை முழுமையாக நாம் உணர முடியும். இயக்குனர் சாய் கிரண் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

இதே படம் தமிழில் வந்ததாக நினைவு. ஆனால் அப்படத்தை பார்த்ததில்லை.

இன் கோஷ்ட் ஹவுஸ் இன் – மலையாளம்- 2010


படம் 70களில் ஆரம்பிக்கிறது. தன் கணவர், கள்ள காதலி மற்றும் ஓட்டுனரை கொலை செய்து விட்டு அங்கேயே பிணத்தை மறைப்பதாக தொடங்கிறது. இப்போது இந்த வீட்டை நான்கு நண்பர்கள் வாங்கி சுற்றலா வீடாக மாற்ற முயலுகின்றனர். நான்கு நண்பர்களாக முகேஷ், ஜகதீஷ், சித்திக் மற்றும் அசோகன். இந்த வீட்டை சுற்றி இருக்கும் பொது மக்கள், இதை பேய் வீடாகவே கருதுகின்றனர். அந்த பேய், பெண்களை தான் தீங்கு செய்யுமே தவிர, ஆண்களை ஒன்றும் செய்யாது என்று நிலைமை வர அவர்கள் தங்களின் மனைவிகளை வர சொல்கின்றனர். ஆனால் நிலைமை மேலும் தீவிரம் அடைய, அவர்களும் ஏதோ ஒரு இடத்தில் மாட்டி கொண்டதாக நினைப்பு வருகிறது.

பேய் இருப்பதாக நினைத்து, அவர்களும் அந்த வீட்டை மறுபடியும் வீட்டின் ஒனருக்கே விற்க முயல, அவரும் மறுத்து விடுகிறார். ஆனால் எதாவது பிரச்சனை என்றால், அருகில் இருக்கும் பாதிரியாரை பார்க்க சொல்கிறார். பாதிரியார் இவருக்கு உதவ முன் வருவதாக கூறி, பேயை விரட்ட வருகிறார். வீட்டில் வேலை செய்யும் பெண்ணுக்கு பேய் பிடித்து இருப்பதை கண்டு பிடித்து, விரட்ட முயல்கிறார். ஆனால் வெற்றி யாருக்கு என்பதை திரையில் காண்க. இதில் விஷயமே, இப்படம் நகைச்சுவை படம்.



என்னடா பழைய திரைக்கதை போல இருக்கிறதே என்று பார்த்தால், முடிவில் இருக்கும் ஒரு குழப்பத்தை அவிழ்த்து விடுகின்றனர். இப்படம் ஒரு அக்மார்க் முத்திரை பதித்த மலையாள படம் என்று முடிவை பார்த்து தெரிந்து கொள்ளலாம். பொழுது போகாமல் இருக்கும் போது பார்க்க வேண்டிய நகைச்சுவை படம்.

Wednesday, March 23, 2011

இது ஒரு குற்றமா? - சிறுகதை - பாகம் - I



குமார் வேகமாக தனது காரை ஆரோர கோவிலுக்கு ஒட்டி கொண்டு இருந்தான். அவன் கோவில் அடையும் முன்னால், அவனை பற்றி. குமார் மண்ணின் மைந்தன். இவன் மண்ணின் பெருமை பேசும் விதமே தனி. வளர்ந்தது எல்லாமே திருமங்கலத்தில் தான். அவர்களது பெற்றோர்களுக்கு ஒரே மகன். படித்ததும் முக்குலோத்தோர் பள்ளியில் தான். சொந்த பந்தங்கள் அனைத்திலும் அவனுக்கு சமமான ஆண்கள். அதனால் பெண்ணால் என்ற வாடையே இல்லாமல் வளர்ந்து இருந்தான். பெண்களிடம் பழகும் முறை என்றால் கூட தெரியாமல் இருந்தது. சென்னையில் முதல் முதலாக வேலைக்கு சேரும் போது, சென்னை தோழர்கள் கிடைத்ததும், அந்த தோழர்கள் உடனே அமெரிக்கா வந்ததும், பெரிய வித்தியாசத்தை பார்க்கவில்லை.  அமெரிக்காவிற்கு வந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. வாழ்வில் ஒரு மாற்றம் இல்லாமல் போகிறதே என்ற எண்ணம் உள்மனதில் இருந்தாலும், வெளியில் காட்டி கொள்ளமல், இப்போது காரை ஒட்டி கொண்டு இருக்க, காரில் நண்பர்கள் அனைவரும் பேசி கொண்டே இருந்தனர்.

இவர்கள் அக்கோவிலுக்கு செல்வதே இரவு உணவை முடிக்க தான் என்பது சொல்ல வேண்டியதில்லை. சிகாகோவில் இருக்கும் அனைத்து இந்தியர்களுக்கும் தெரியும். 90% மேல் அக்கோவிலுக்கு வருபவர்கள், அங்கு கிடைக்கும் தென் இந்திய உணவுக்காக மட்டுமே. குமாரும் கோவில் சென்ற காரணத்தினால், முதலில் பாலாஜியை பார்த்து விட்டு, மிக வேகமாக உணவு கிடைக்கும் இடத்தில் சென்று டோக்கன் வாங்க வரிசையில் நின்று கொண்டான். எப்போதும் போல் இல்லாத ஒரு மகிழ்ச்சி அதுவும் உள் மனதில். ஏதோ ஒரு நறுமண வாசம், ஒரு வித மயக்கத்தை ஏற்படுத்தியது. யார் என்று திரும்பி பார்க்கும் போது, நண்பர்கள் அனைவரும் வரிசையாக நின்று இருந்தனர்.  இரவு உணவை முடித்து விட்டு வெளியே செல்லும் வேளையில், யாரோ தெரியாமல் இடித்ததிற்கு "சாரி" கேட்க, பரவா இல்லை என்று கூறுவதற்கு திரும்ப, கோவில் மணி அடிக்க, இவன் முகத்தில் ஒரு பளிச். ஆம் பார்த்தது அர்ச்சனா(வை). அந்த நறுமணம் அடித்து இவளிடத்தில் இருந்து தான் என்று முதலில் இழுக்கும் மூச்சிலேயே தெரிந்து கொண்டான்.

அர்ச்சனா, அமெரிக்கா வந்து ஒரு வருடம் தான் ஆகிறது. பல காலத்திற்கு முன்னர், தெலுகு தேசத்தில் இருந்தது தமிழ் நாட்டிற்கு குடியேறி வந்த மக்கள். வீட்டில் பேசுவது தெலுகு தான் என்றாலும், சென்னையை வீடாக கொண்டவர்கள். ஆனால் இவளுக்கும் தெலுகு பரம்பரையில் சாயல் இருக்க தான் செய்தது. ஆம் அமெரிக்காவிலேயே குடியேறி விட வேண்டும் என்பது தான். குமாரிடம் சாரி கேட்ட உடன், ஒரு வெட்கம் தன்னுள் வந்ததை உணராமல் இல்லை.இருவரும் திரும்பி திரும்பி பார்த்து கொண்டே தங்கள் காரில் ஏறி சென்று விட்டனர். வீட்டு வந்த பின் அந்த எண்ணங்களை மறந்து, அவன் செயல்களை செய்துக் கொண்டு இருந்தான். சில சமயங்களில் மட்டும், தீடிர் என்று தேவதையின் முகம் நினைவில் வந்து செல்லும். எப்படியும் மறுமுறை அவளை பார்ப்போம் என்று நினைத்து, அடுத்த காரியத்து சென்று விடுவான். இரண்டு வாரம் கழித்து, இரவு பத்து மணிக்கு, கை தொலைபேசி அழைப்பு.

சொர்கமே என்றாலும்


சொர்கமே என்றாலும்
அது நம் ஊரைப் போல வருமா?
அட என் நாடு என்றாலும்
அது நம் நாட்டுக் கீடா ஆகுமா?
பல தேசம் முழுதும் பேசும் மொழிகள்
தமிழ் போல் இனித்திடுமா?



நேற்று இரவுடன் ஒரு வருட அமெரிக்க வாழ்க்கை முடிந்தது. பெற்றோர் உடன் தங்கி கல்லூரி படிப்பை முடித்து விட்டு, முதல் முதலில் சென்னை அல்லது பெங்களூர் செல்லும் போது கிடைக்கும் அனுபவம் தான், எனக்கும் இங்கு கிடைத்தது. மதுரையில் மக்கள் பழகும் விதம், உணவு முறை, மதுரையின் சுற்றளவு என்று இருக்கும் போது, சென்னையில் அனைத்துமே வேறு விதம். அதை எப்படி பழகி கொண்டோமோ அதே போல் இங்கு இந்த நாட்டிற்கு ஏற்றார் போல் இருக்கும் முறை கற்று கொண்டது. ஒரே ஒரு வித்தியாசம், இங்கு கிடைக்கும் அனுபவம் அதி நவீன தொழில் நுட்பம் அடங்கிய வாழ்க்கை முறை. கொஞ்சம் நேரம் எடுத்துக் கொள்ள தான் செய்யும். ஆனால் பழகி கொள்ளலாம். என்ன தான் இங்கு ஆட்டம் போட்டு கொண்டு இருந்தாலும், தமிழ் நாடு எதற்கும் இடு ஆகாது. வெளியில் இருந்து பார்க்கும் நபர்களுக்கு, தெரியாத விஷயம் இங்கு பல உண்டு.  அதி விரைவில் மீண்டும் தமிழ் நாட்டை அடைவேன் என்ற நம்பிக்கையில்/எண்ணத்தில் ஒரு மகிழ்ச்சி.



Tuesday, March 22, 2011

ஆக்ரோஷ் – இந்தி - 2010



தன்னுடைய பிள்ளை ஊரை விட்டு வெளியே சென்று படித்தால், காதல் வலையில் விழுந்து தன்னுடைய ஊரின் மானத்தை கெடுத்து, தன்னுடைய குடும்ப கௌரவத்திற்கு களங்கம் வந்தது விடுமோ என்ற எண்ணத்தில் ஒரு தந்தை, மகனை படிக்க வைக்கவில்லை. இந்த விஷயம் தமிழ் நாட்டில் தான் நடக்கிறது என்பதை என்னால் நம்ப முடியவில்லை. இது தந்தையே நீயா நானா நிகழ்ச்சியில் பேசியது. அவரின் ஊர் கிருஷ்ணகிரி என்று நியாபகம். இதே போல் ஊரின் மானம், மேல் ஜாதியினர் மற்றும் கீழ் ஜாதியினர் என்ற ஏற்ற தாழ்வுகள் இருக்கிறது என்பது நிதர்சனம். கௌரவ கொலைகளும் இதே காரணத்தால் தான் தொடர்ந்து நடைப்பெற்று கொண்டு இருக்கிறது.

தமிழகத்தில் மட்டும் இல்லாமல், இந்தியா முழுவதும் இந்த மாதிரியான நிகழ்ச்சிகள் நடைப் பெற்று கொண்டு தான் இருக்கிறது. வடஇந்தியாவில் நடைப்பெறும் கௌரவ கொலைகளை அலசும் படம் தான் இது. இயக்குனர் பிரியதர்சன் உருவாக்கத்தில் வெளிவந்த தரமான திரைப்படத்தில் முக்கிய இடம் இப்படத்திற்கும் உண்டு.
டெல்லி மெடிக்கல் கல்லூரியில் படிக்கும் மூன்று மாணவர்களை காணமல் போக, சி.பி.ஐ விசாரணைக்கு வருகிறது. சி.பி.ஐ அதிகாரிகளாக அஜய் தேவ்கன் மற்றும் அக்ஷய் கண்ணா. உள்ளூர் போலீஸ் அதிகாரிகளும் மேல் ஜாதி மக்களின் ஒருவராக இருக்க, தொடர் கௌரவ கொலைகள் மறைக்க படுகின்றன. அதே போல், கீழ் ஜாதி மக்கள், உண்மையை சொன்னாலோ மற்றும் மேல் ஜாதி மக்களை முறைத்தலோ, அவர்களின் குடும்பமே கொலை செய்யப்படுகிறது. இதனால் உள்ளூர் நபர்களின் துணை இல்லாமல், எப்படி இந்த கொலைகளைப் பற்றி வெளியே கொண்டு வர படுகிறது என்பதே கதை.

அஜய் தேவ்கன் நடிப்பில் அசத்தி இருப்பார். போலீஸ் அதிகாரிகளை முறைக்கும் காட்சிகள் ஆகட்டும் மற்றும் எப்படி இந்த கொலைகளை கையாள வேண்டும் என்பதை எடுத்து சொல்லும் இடத்தில், மனிதன் நிற்கிறார். அக்ஷய் கண்ணா எப்போதும் போல் நிதானமான நடிப்பு. ரீமா சென் மற்றும் பிபாஷா அவர்களின் எடுப்பு, கதைக்கு பிடிப்பு. இந்த மாதிரியான மக்களும், இந்தியாவில் வாழ்கிறார்கள் என்றால் நம்ப தான் முடியவில்லை.

இந்த படத்தின் அனைத்து காட்சிகளும், காரைக்குடியில் எடுக்க பட்டவை. பிரியதர்சனின் இந்தி படபிடிப்பு காரைக்குடியில் என்று அதிக நாளுக்கு முன் கேட்டதாக மற்றும் படித்தாக நியாபகம். எதோ ஒரு காட்சியில் எடுக்க படுகின்ற இடத்தின் சாயல் தெரிந்து விடும். ஆனால் எப்படி தான் தமிழ் நாடு என்ற விஷயத்தை முழுவதுமாக மறைத்து, வடஇந்தியாவாக காரைக்குடியை காட்ட முடிந்ததோ. வாழ்த்துக்கள் பிரியதர்சன் அவர்களுக்கு. கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம் தான்.

Sunday, March 13, 2011

வாடகை வீடு


நாம் வாழ்க்கையில் காணும் ஒவ்வொரு அனுபவமும், மிக முக்கியமானது. மதுரையில் இருந்து சென்னைக்கு முதலில் வந்து இறங்கி போது, முதல் மூன்று மாதங்களில் கிடைக்கும் அனுபவங்கள் வித்தியாசமானது. சென்னையில் இருக்கும் அதிவேக வாழ்க்கை முறை, சாப்பாட்டு வழக்கம், மக்களின் பழக்கவழக்கம், நண்பர்களின் வீடு, கோவில்களின் விதிமுறைகள், வீடு பார்த்தல் என்ற பல புது அனுபங்கள்.

முக்கியமாக வீடு பார்த்து, அமருதல் என்பது நான்கு ஆண்டுகளுக்கு முன்பு குதிரை கொம்பு குறிப்பாக படிப்பை முடித்து விட்டு தோழர்களுக்கு. ஆனால் இன்றைய நிலைமை வேறு என்றாலும், நல்ல வீடு பார்ப்பது என்றால் கஷ்டம் தான். நானும் சென்னையில், மேற்கு மாம்பலம், வில்லிவாக்கம், வடபழனி, சைதை, மேற்கு தாம்பரம், சாலிகிராமம், கிழக்கு தாம்பரம் என்று பல இடங்களில் வீடு பார்த்து தங்கி இருந்தாலும், ஒவ்வொரு வீடும் கிடைக்கும் முறையை பார்த்தால், உலகப்போரில் கூட பங்கு எடுத்துக் கொண்டு வந்து விடலாம் என்று தோன்றி விடும் நினைப்பு வரும். இது போக நண்பர்களுக்காக என்று பல ஏரியாக்கள் பார்த்தது உண்டு. 

சென்னையில் காசு புடுங்கி சாப்பிடும் பண சைத்தான்கள் பாதிக்கு மேல் என்பதால், எங்கு சென்றாலும் பணத்தை வாரி இறைக்க வேண்டும். புரோக்கரில் ஆரம்பித்து, வீட்டு வாடகை அதிகமாக, மின் இணைப்புக்கு பத்து மடங்கு அதிகமாக என்று எங்கையோ போய் நிற்கும். நினைத்தாலே மயக்கம் வந்து விடும் சில பேருக்கு. தமிழகத்தில் பிற இடங்களில் நிலைமை என்னவென்று தெரியவில்லை. நான் பார்த்த சில வீடுகளில் வீட்டிற்கு சொந்தகாரர் , வருடத்திற்கு ஒரு முறை புது ஆட்களை கொண்டு வந்து குடி அமர்த்துவர். காரணம் வருடத்திற்கு ஒரு முறை வாடகை ஏற்றி கொள்ளலாம். குடி வரும் போதே இந்த விவரத்தை சொல்லி தான் அமர்த்துவது. குடி வருபவர்கள், வீடு கிடைப்பதே பெரும் பாடு என்பதால், தெரிந்தே வருகின்றனர். வீடு காலி செய்யும் போது கூட, சொந்தகாரர் கொடுத்த முன் பணத்தில் வீட்டை சரி செய்ய வேண்டும் என்று கூறி பாதி பணத்தை எடுத்து கொள்வர். இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். 

சென்னையில் அனுபவங்கள் எனக்கு கிடைத்து இருந்தாலும், நான் அமெரிக்காவிற்கு வரும் போது நண்பர்கள் இருந்த காரணமாக ஒரு வீட்டில் போய் அமர்ந்து கொண்டேன். அதனால் வீட்டை பார்த்து அமரும் முறை என்ன வென்று தெரியாமல் போய் விட்டது. ஆனால் இங்கு தான் வேறு நிலைமை ஆயிற்றே. பத்து மாதம் முடிந்த நிலையில் மாற வேண்டிய சூழ்நிலை. அமெரிக்காவில் வாடகை வீட்டில் இருக்கும் நிலை, அதுவும் என் அனுபவத்தில்

சென்னையில் கூட வீடு வாடகைக்கு எடுக்கும் போது, அரசு முத்திரை பதித்த தாளில் வீட்டின் சொந்தகாரரும், வாடைக்கு குடி வருபவரும் பேசி கொண்டு கை-எழுத்து போட வேண்டும். பேசியவற்றை மீறி, எதாவது செய்தால் நீதி மன்றத்திற்கு செல்லலாம் என்பது காது வழி கேள்வி. ஆனால் இந்த வீட்டு வாடகை முறையில் பத்திரம் என்பது செல்ல காசு என்பதும், நீதி மன்றம் அதை எடுத்து கொள்ளது என்றும் காது வழி கேள்வி. எது உண்மை என்று தெரியவில்லை. நான் பார்த்த வரையில், வீட்டிற்கு சொந்தகாரர், பத்திரத்தில் கையாப்பம் போட்டு கொடுத்து பார்த்ததில்லை. அதே போல் அமெரிக்காவில், லீஸ் என்கின்ற விதிமுறை இருக்கிறது. ஒரு வாடகை வீட்டிக்கு செல்ல வேண்டும் என்றால், முதலில் லீஸ் போட வேண்டும். அதாவது எத்தனை மாதத்திற்கு நான் இந்த வீட்டை வாடகைக்கு எடுக்க போகிறேன் என்ற அடங்கிய விபரம். வீட்டை எப்படி எடுத்தேனோ அதே போல் தர வேண்டும். அப்படி எதாவது பழுது பட்டு இருந்தால், என்ன செய்ய வேண்டும் என்ற விபரமும் அதில் அடங்கி இருக்கும். செல்ல பிராணிகள் வளர்த்தால், அதற்கு பின்பற்றவேண்டிய வழிமுறைகள் என்று ஒரு முப்பது பக்கம் இருக்கின்ற விதிமுறைகள் தான் லீஸ். இந்த முப்பது பக்கமும் நாம் கை-எழுத்து போட வேண்டும். இதை மீறி எதாவது செய்தால், நாம் நீதி மன்றம் போய் நிற்க வேண்டும் என்கின்ற சூழ்நிலை. 

மிக முக்கியமாக, லீஸ் முடிவதற்கு ஒரு மாதம் முன்பே இந்த வீட்டை காலி செய்ய போகிறோம் என்று சொல்ல வேண்டும் அல்லது இதே வீட்டில் தொடர்ந்து தங்க போகிறேன் என்றாவது சொல்ல வேண்டும். இல்லையென்றால் நாம் அதிகமாக பணம் கொடுக்க வேண்டி இருக்கும் அல்லது நீதி மன்றம் போய் நிற்க வேண்டி இருக்கும். ஒரு வீட்டில் இருந்து லீஸ் முடிந்து, அடுத்த லீஸ் அதே வீட்டிற்கு எடுத்தால், வாடகை அதிகம். அதனால் வேறு வீடு பார்த்து செல்வது முறை.

ஒரு வருடத்திற்கு லீஸ் போட்டு விட்டு, எழாவது மாதத்தில் நாம் காலி செய்ய வேண்டிய நிலை வந்தால் இரண்டு அல்லது மூன்று மாத வாடகை கொடுக்க வேண்டும். அதுவும் இந்த லீசில் இருக்கும். கொடுக்க தவறினால், கம்பி என்ன வேண்டியது தான். இதே லீஸ் விவகாரம், தொலைபேசி இணைப்பு, இணைய இணைப்பு என்று எல்லா இடங்களிலும் உண்டு .

இதே போல் இன்னொரு முக்கிய விஷயம், எப்படி பட்ட வீடு வேண்டும் என்பது. தனி வீட அல்லது மாடி முறை வீடா. இங்கே பல தனியார் நிறுவனங்கள் (ரிலையன்ஸ் மற்றும் டாட்டா போல), தனி தனி வீட்டையோ அல்லது பிளட் முறை வீட்டையோ கட்டி கொடுத்து, அவர்களே வாடகைக்கு கொடுப்பார்கள். பெரிய தனியார் நிறுவனம் என்றால், பல ஊர்களில் அதே பெயரில் வீடுகளை காணலாம். நூறு அல்லது இரண்டு நூருக்களில் வீட்டை கட்டி, அதற்கு ஒரு அலுவலகம் வைத்து இரண்டு அல்லது மூன்று பேர் வேலைக்கு இருப்பார்கள். அவர்கள் தான் நமக்கு வாடகைக்கு விடுவார்கள்.

சென்னையை போல் நான் இங்கு புரோக்கரை பார்த்தது இல்லை. இணையதளத்திலேயே இந்த மாதிரியான எதாவது ஒரு வீட்டை பார்த்து, அங்கு சென்று பேசி வீடு பிடித்து இருந்தால், நம்முடைய அனைத்து விபரமும் தந்து விட்டு வர வேண்டும் (தற்போது தங்கி இருக்கும் இடம், வேலை பார்க்கும் இடம்). முன் பணமாக அவர்கள் நிர்ணயத்து வைத்து இருக்கும் தொகையை கொடுக்க வேண்டும். புதிதாக குடி போகும் இடத்தில் வேலை செய்வோர், நாம் தங்கி இருக்கும் இடத்தில் விசாரித்து பார்ப்பார்கள். நல்ல விதமான சொற்கள் வந்தால் மட்டுமே, புது வீடு கிடைக்கும். வீடு வாடகை வருவோரின் வருமானம், வாடகையின் தொகையை போல் மூன்று மடங்கு இருந்தால் மட்டுமே வீடு.

இத்தனையும் மீறி, நமக்கு வீடு கிடைத்தால் வீட்டில் மின்சாரம் இருக்காது. மின் இணைப்பு எல்லா இருக்கும். நாம் புதிதாக இந்த வீட்டிற்கு வருவதால், இருக்கும் மின் இணைப்பை நம் பெயருக்கு மாற்றி கொள்ள வேண்டும். ஒரு வீட்டில் இருந்தது காலி செய்யும் போது, அந்த வீட்டில் நமது பெயரில் இருக்கும் மின் இணைப்பை துண்டிக்க வேண்டும்.இல்லையென்றால் வீடு காலி செய்த பிறகும், நாம் அந்த கட்டணத்தை செலுத்த வேண்டிய சூழ் நிலை வரும். மின் அலுவலகம் சென்று, மின் இணைப்பை பெற, அதற்கு ஒரு கட்டணத்தை கொடுக்க வேண்டும்.

சரி ஒரு வழியாக புது வீட்டிற்கு தேவையான அனைத்தையும் முடித்து விட்டு, நிம்மதியாக அமரலாம் என்றால் முடியாது. இன்னும் இரண்டு வேலைகள் மிச்சம் இருக்கும். ஒன்று நமது அனைத்து பொருட்களையும் புது வீட்டிற்கு கொண்டு வருவது. இந்தியாவில் பக்கேர்ஸ் மற்றும் மூவர்ஸ் என்ற வேலை உண்டு. தொழிலாளிகள்  வந்து அனைத்து பொருட்களை பழைய வீட்டில் இருந்து, புது வீட்டிற்கு மாற்றி தருவர். ஆனால் இங்கு தொழிலாளிகள் வேலைக்கு மிக அதிக பணம் என்பதால், நாமே எல்லா வேலைகளையும் செய்ய வேண்டும். லாரியை வாடகைக்கு எடுத்து அல்லது எப்படியோ, புது வீட்டிக்கு செல்ல வேண்டும். 

இன்னொரு விஷயம், வீட்டை காலி செய்யும் போது, அந்த வீட்டிக்கு வரும் போது வீடு எப்படி இருந்ததோ அதே போல் அவர்களுக்கு திருப்பி தர வேண்டும். இல்லையென்றால் அவர்கள் சரி செய்ய ஆகும் செலவை நாம் ஏற்று கொள்ள வேண்டும். அதனால் வீட்டை சுத்தமாக பெறுக்கி, அழுக்கை போக வைத்து, புது வீடாக தர வேண்டும். 

இந்த அனைத்து விஷயங்களும் வருடத்திற்கு ஒரு முறை என்றால், யோசித்து பாருங்கள். நான் ஒரு முறை மாற்றியதற்கே, கண்ண கட்டிடுச்சு

Monday, March 07, 2011

திருமண வாழ்த்துக்கள் - சூரஜ்


எனது பொறியியல் கல்லூரி நண்பர் திரு. சூரஜ் அவர்களின் திருமணம் இன்று சேலத்தில் நடைபெறுவதை தெரிவித்துக் கொண்டு, எனது திருமண வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

Sunday, March 06, 2011

திருமண வாழ்த்துக்கள் - சுந்தர் பாரி


எனது பொறியியல் கல்லூரி நண்பர் திரு. சுந்தர் அவர்களின் திருமணம் இன்று மதுரையில் நடைபெறுவதை தெரிவித்துக் கொண்டு, எனது திருமண வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் கல்லூரி படிப்பை முடித்து விட்டு, சரியாக மூன்றாவது நாளில் தலைநகருக்கு கிளம்பினேன். அப்போது என்னுடன் பயணித்த ஒரே நண்பர் இவர் தான். மற்ற நண்பர்கள் கூட அவ்வோ போது சென்னை அல்லது பெங்களூர் என்று மாறி கொண்டே இருந்தனர். அன்று முதல் இன்று வரை என்னுடன் சென்னையில் தங்கி இருக்கும் ஒரே நபர் இவர் தான்.