Friday, February 19, 2010

கொடைக்கானல்

என்ன தான் நம்ம சென்னை, மதுரைன்னு போய் வந்துக் கொண்டு இருந்தாலும், இரண்டிலும் வெயில் கொடுமை தாங்க முடியாது. மனதிற்கு இதமாக, குளிராக இருக்க மதுரை மச்சானுக்கு நியாபகம் வருவது ஒரே ஒரு இடம் மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானல் மட்டும் தான்.. மதுரையில் இருந்து கொடைக்கானலுக்கு காரில் 1:30 மணி நேரம்தான்.. அரசுப் பேருந்தில் 3 மணி நேரம் தான். மதுரையில் இருக்கும் போது 3 மாதத்தில் ஒரு முறை கொடை பயணம் என்று இருந்த நான், சென்னையில் இருக்கின்றேன் என்ற ஒரே ஒரு காரணத்தினால் கொடை சென்று ஒரு வருடம் மேல் ஆகி விட்டது. இந்த கொடைக்கானலைப் பற்றிய வரலாறு நான் எங்கேயோ படித்தது உங்களுக்காக இங்கே (தெரியாதவர்களுக்கு மட்டும்)... கொடைக்கானல் எப்படி இருக்கும் என்று கேட்பவர்கள், தயவு செய்து மன்னிக்கவும்...

 

கொடைக்கானல் என்ற அற்புதமான கோடை வாசஸ்தலத்தை கண்டுபிடித்தது ஆங்கிலேயர்கள். இந்திய வெயிலில் நொந்து போயிருந்த ஆங்கிலேயர்கள், கோடையில் "ஒண்டிக்கொள்ள' ஒரு இடத்தை தேடினர். 1822ல் பிரிட்டிஷ் ராணுவம், முதன் முதலாக கொடைக்கானல் மலையை சர்வே செய்தது. 1845ல் மலை பயிர்களை பயிரிடுவதில் ஆர்வம் கொண்ட ஒரு அமெரிக்க குழு, கொடைக்கானலை கண்டுபிடித்தது. முதன்முதலாக பெரியகுளம் வழியாக இவர்கள், கால்நடையாக கொடைக்கானலை அடைந்தனர். அதே ஆண்டு சவேரா லீவெஞ்ச் என்ற அதிகாரி, தற்போது ஏரி உள்ள இடத்தில் இருந்த மரங்களை வெட்ட வைத்து, செயற்கையான ஏரியை உருவாக்கினார். வேலைக்காக சமவெளியில் இருந்து தமிழர்களை மலைக்கு அழைத்துச் சென்றனர். மலையில் வாழ்பவர்களுக்கு எரிபொருளாக நிறைய மரங்கள் தேவைப்பட்டன.

 

கொடைக்கானல் மலையின் அமைப்புப்படி, மேடான பகுதிகளில் புல்வெளிகளும், தாழ்வான பகுதிகளில் சோலை மரங்களும் (சோலா காடுகள் என அழைக்கப்படும் இவை தான், உண்மையான காடுகள்) இருந்தன. சவேரா லீவெஞ்ச், மேட்டுப்பகுதிகளில் இருந்த புல்வெளிகளை அழித்து, தென் ஆப்ரிக்காவில் இருந்து விறகிற்காக யூகலிப்டஸ், பைன், சவுக்கு விதைகளை விமானம் மூலம் துவச் செய்தார். 1914 வரை கொடைக்கானலுக்கு சாலை வசதி இல்லை. பெரியகுளம் வழியாக நடந்தே வெள்ளையர்கள் வந்து சென்றனர். 1890ல் போட் கிளப் துவக்கப்பட்டது. புதுக்கோட்டை மன்னர் தான், 1914ல் முதன்முதலாக கொடைக்கானலுக்கு கார் கொண்டு வந்துள்ளார். சுதந்திரத்திற்குப் பிறகு பல இடங்களை தங்களிடம் வேலை பார்த்த இந்தியர்களுக்கும், கிறிஸ்தவ மிஷனரிகளுக்கும் கொடுத்து விட்டு ஆங்கிலேயர்கள் சென்றனர்.

Monday, February 01, 2010

கோவா - திரைவிமர்சனம்

வெங்கட் பிரபுவின் 3வது படமும் ஹிட் ஆகி விடும் என்று எண்ணத்தில் செல்பவர்களுக்கு, குறை கண்டிப்பாக இருக்க தான் செய்யும்...அவருடைய குழு உறுப்பினர்கள் வைத்து ஒரு கலாட்ட/மசாலா படத்தை கொடுத்து இருக்கிறார்.

மூன்று வாலிபர்கள் தேனிக்கு அருகில் உள்ள அவருடைய ஒரு கிராமத்தில் இருந்து, ஊர் கட்டுபாடு, கலாச்சாரம் பிடிக்காமல் மதுரைக்கு ஒருவாரம் வருகின்றனர். மதுரையில் கோவாவை பற்றி தெரிந்து கொண்டு, வெளிநாட்டு அழகியை காதலித்து கல்யாணத்தை பண்ணி கொண்டு வெளிநாட்டிற்கு செல்ல வேண்டும் என்ற "லட்சியத்துடன்" கோவாவிற்கு கிளம்பி, அவர்கள் வாழ்க்கையில் திருப்பங்களுடன் ஏற்பட கூடிய முடிவை படு சொதப்பலாக கொடுத்து உள்ளனர். சொல்ல போனால் பிரேம் ஜி அமரனை நம்பி எடுத்த படம் போல் தெரிகிறது....

நடிப்பு என்று பார்த்தல் சம்பத், ஆகாஷ் மற்றும் பிரேம் நடிப்பு கலக்கல்... சம்பத், ஆகாஷ் காதல் தமிழ் நாட்டில் பிரச்சனை ஏற்படுத்தாமல் இருந்தால் சரி. சொல்ல பட வேண்டிய முக்கிய நபர் ஒளிபதிவாளர். கோவாவின் அழகை கண் முன்னால் நிறுத்துகிறார்.  முதல் பாகத்தில் தேவை இல்லாமல் பாடல்கள் வந்து கொல்கிறது என்றால், இரண்டாம் பாதியில் தேவை இல்லாமல் பாடல் மற்றும் தொடர் காட்சி அமைப்பு என்று கொல்கிறது... சினேகா முத்தின பழம் என்று திரையில் அருமையாக தெரிகிறது... அதை தவிர செல்வதற்கு ஒன்றும் இல்லை...

மொத்தத்தில் இப்படம் சொதப்பல் என்றாலும், கண்டிப்பாக கோவா சென்று வர வேண்டும் என்ற எண்ணத்தை அதிக படுத்தி இருக்கிறது...

தமிழ்ப்படம் - திரைவிமர்சனம்

"நாட்டாம தீர்ப்ப மீறினா, இப்படி அப்படி இன்னு விரலு ஆட்டி பேசுற நடிகனோட படத்த, பஞ்சாயத்து T.V 100 தடவ பாக்கணும்..." என்று நாட்டாம கூற, உடனே மக்கள், தீர்ப்பே தேவல என்று கூறி நகருகின்றனர். ... இந்த மாதிரி காட்சி அமைப்புடன் இப்படம் ஆரம்பிக்கிறது....

ஒரு பான சோத்துக்கு ஒரு சோறு பதம் என்கிறது போல, இப்படத்தை பற்றி அறிய இந்த காட்சி அமைப்பு போதும்.  விமர்சனத்தை படிக்காமல் இந்த படத்தை கண்டிப்பாக, திரையில் பார்த்து வயிறு குலுங்க சிரிக்கலாம். நடிகர் சத்தியராஜ் அவர்கள் தனது படங்களில் ஒரு சில காட்சிகளை மற்ற நடிகர் செய்வது போல் நடித்து காட்டி குறுப்பு செய்வர். இதே விதமாக முழு படமும் அமைந்துஉள்ளது.

சில சைக்கிள் சக்கரம் சுற்றுதலில் கதாநாயகன் பெரியவன் ஆகி சந்திரமுகி ஸ்டைலில் முதல் போஸ் கொடுக்கும் முதல் (பின்னால் கிழிந்த ஜீன்ஸ் உடன்), சிவாஜி,சேதுபதி,  7G ரெயின்போ காலனி, காதலுக்கு மரியாதையை, பாய்ஸ், போக்கிரி, வேட்டைக்காரன் முக்கியமாக ஆபூர்வ சகோதரர்கள், ரன், தளபதி, அருணாச்சலம், பாட்ஷா, மற்றும் விக்ரம் போன்ற படத்தின் உள்ள காட்சிகளை வைத்தே ஒரு படத்தை உருவாக்கிய இயக்குனர் அமுதனை பாராட்டியே ஆக வேண்டும்.  எந்த எந்த நடிகரை வம்புக்கு இழுக்க வில்லை என்று விவதேமே நடத்தலாம்.

மனோபால, வெண்ணிறாடை மூர்த்தி, பாஷ்கர் என்று அவரவர் பாத்திரத்தில் சரியாக நடித்து உள்ளனர். பாடல்கள் சொல்லி கொள்ளும் அளவுக்கு  இல்லை என்றாலும் பாடல் காட்சியிலும் சிரிப்பை வரவைத்து நம்மை கட்டி போடுகிறார்.  இரண்டாவது பாதியில் சில இடங்களில் அதிகமாக மொக்கை போட்டாலும், சிரிப்பு காட்சிகளால் அது தெரியாமல்போகிறது.

சிறிய பட்ஜெட் என்று பார்த்தாலும், ஒரு வெற்றி படத்தை கொடுத்து இருக்கிறார்கள் என்று கூற வேண்டும். மொத்தத்தில் கண்டிப்பாக ஒரு முறையாவது பார்த்து சிரிக்க வேண்டியபடம்..