Friday, February 19, 2010

கொடைக்கானல்

என்ன தான் நம்ம சென்னை, மதுரைன்னு போய் வந்துக் கொண்டு இருந்தாலும், இரண்டிலும் வெயில் கொடுமை தாங்க முடியாது. மனதிற்கு இதமாக, குளிராக இருக்க மதுரை மச்சானுக்கு நியாபகம் வருவது ஒரே ஒரு இடம் மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானல் மட்டும் தான்.. மதுரையில் இருந்து கொடைக்கானலுக்கு காரில் 1:30 மணி நேரம்தான்.. அரசுப் பேருந்தில் 3 மணி நேரம் தான். மதுரையில் இருக்கும் போது 3 மாதத்தில் ஒரு முறை கொடை பயணம் என்று இருந்த நான், சென்னையில் இருக்கின்றேன் என்ற ஒரே ஒரு காரணத்தினால் கொடை சென்று ஒரு வருடம் மேல் ஆகி விட்டது. இந்த கொடைக்கானலைப் பற்றிய வரலாறு நான் எங்கேயோ படித்தது உங்களுக்காக இங்கே (தெரியாதவர்களுக்கு மட்டும்)... கொடைக்கானல் எப்படி இருக்கும் என்று கேட்பவர்கள், தயவு செய்து மன்னிக்கவும்...

 

கொடைக்கானல் என்ற அற்புதமான கோடை வாசஸ்தலத்தை கண்டுபிடித்தது ஆங்கிலேயர்கள். இந்திய வெயிலில் நொந்து போயிருந்த ஆங்கிலேயர்கள், கோடையில் "ஒண்டிக்கொள்ள' ஒரு இடத்தை தேடினர். 1822ல் பிரிட்டிஷ் ராணுவம், முதன் முதலாக கொடைக்கானல் மலையை சர்வே செய்தது. 1845ல் மலை பயிர்களை பயிரிடுவதில் ஆர்வம் கொண்ட ஒரு அமெரிக்க குழு, கொடைக்கானலை கண்டுபிடித்தது. முதன்முதலாக பெரியகுளம் வழியாக இவர்கள், கால்நடையாக கொடைக்கானலை அடைந்தனர். அதே ஆண்டு சவேரா லீவெஞ்ச் என்ற அதிகாரி, தற்போது ஏரி உள்ள இடத்தில் இருந்த மரங்களை வெட்ட வைத்து, செயற்கையான ஏரியை உருவாக்கினார். வேலைக்காக சமவெளியில் இருந்து தமிழர்களை மலைக்கு அழைத்துச் சென்றனர். மலையில் வாழ்பவர்களுக்கு எரிபொருளாக நிறைய மரங்கள் தேவைப்பட்டன.

 

கொடைக்கானல் மலையின் அமைப்புப்படி, மேடான பகுதிகளில் புல்வெளிகளும், தாழ்வான பகுதிகளில் சோலை மரங்களும் (சோலா காடுகள் என அழைக்கப்படும் இவை தான், உண்மையான காடுகள்) இருந்தன. சவேரா லீவெஞ்ச், மேட்டுப்பகுதிகளில் இருந்த புல்வெளிகளை அழித்து, தென் ஆப்ரிக்காவில் இருந்து விறகிற்காக யூகலிப்டஸ், பைன், சவுக்கு விதைகளை விமானம் மூலம் துவச் செய்தார். 1914 வரை கொடைக்கானலுக்கு சாலை வசதி இல்லை. பெரியகுளம் வழியாக நடந்தே வெள்ளையர்கள் வந்து சென்றனர். 1890ல் போட் கிளப் துவக்கப்பட்டது. புதுக்கோட்டை மன்னர் தான், 1914ல் முதன்முதலாக கொடைக்கானலுக்கு கார் கொண்டு வந்துள்ளார். சுதந்திரத்திற்குப் பிறகு பல இடங்களை தங்களிடம் வேலை பார்த்த இந்தியர்களுக்கும், கிறிஸ்தவ மிஷனரிகளுக்கும் கொடுத்து விட்டு ஆங்கிலேயர்கள் சென்றனர்.

1 comment:

Ramkumar said...

இந்த விமர்சனம் எங்கோ சுட்ட இட்லி வடை மாதிரி தெரியுது .....