Monday, February 01, 2010

தமிழ்ப்படம் - திரைவிமர்சனம்

"நாட்டாம தீர்ப்ப மீறினா, இப்படி அப்படி இன்னு விரலு ஆட்டி பேசுற நடிகனோட படத்த, பஞ்சாயத்து T.V 100 தடவ பாக்கணும்..." என்று நாட்டாம கூற, உடனே மக்கள், தீர்ப்பே தேவல என்று கூறி நகருகின்றனர். ... இந்த மாதிரி காட்சி அமைப்புடன் இப்படம் ஆரம்பிக்கிறது....

ஒரு பான சோத்துக்கு ஒரு சோறு பதம் என்கிறது போல, இப்படத்தை பற்றி அறிய இந்த காட்சி அமைப்பு போதும்.  விமர்சனத்தை படிக்காமல் இந்த படத்தை கண்டிப்பாக, திரையில் பார்த்து வயிறு குலுங்க சிரிக்கலாம். நடிகர் சத்தியராஜ் அவர்கள் தனது படங்களில் ஒரு சில காட்சிகளை மற்ற நடிகர் செய்வது போல் நடித்து காட்டி குறுப்பு செய்வர். இதே விதமாக முழு படமும் அமைந்துஉள்ளது.

சில சைக்கிள் சக்கரம் சுற்றுதலில் கதாநாயகன் பெரியவன் ஆகி சந்திரமுகி ஸ்டைலில் முதல் போஸ் கொடுக்கும் முதல் (பின்னால் கிழிந்த ஜீன்ஸ் உடன்), சிவாஜி,சேதுபதி,  7G ரெயின்போ காலனி, காதலுக்கு மரியாதையை, பாய்ஸ், போக்கிரி, வேட்டைக்காரன் முக்கியமாக ஆபூர்வ சகோதரர்கள், ரன், தளபதி, அருணாச்சலம், பாட்ஷா, மற்றும் விக்ரம் போன்ற படத்தின் உள்ள காட்சிகளை வைத்தே ஒரு படத்தை உருவாக்கிய இயக்குனர் அமுதனை பாராட்டியே ஆக வேண்டும்.  எந்த எந்த நடிகரை வம்புக்கு இழுக்க வில்லை என்று விவதேமே நடத்தலாம்.

மனோபால, வெண்ணிறாடை மூர்த்தி, பாஷ்கர் என்று அவரவர் பாத்திரத்தில் சரியாக நடித்து உள்ளனர். பாடல்கள் சொல்லி கொள்ளும் அளவுக்கு  இல்லை என்றாலும் பாடல் காட்சியிலும் சிரிப்பை வரவைத்து நம்மை கட்டி போடுகிறார்.  இரண்டாவது பாதியில் சில இடங்களில் அதிகமாக மொக்கை போட்டாலும், சிரிப்பு காட்சிகளால் அது தெரியாமல்போகிறது.

சிறிய பட்ஜெட் என்று பார்த்தாலும், ஒரு வெற்றி படத்தை கொடுத்து இருக்கிறார்கள் என்று கூற வேண்டும். மொத்தத்தில் கண்டிப்பாக ஒரு முறையாவது பார்த்து சிரிக்க வேண்டியபடம்..

No comments: