Friday, December 23, 2011

பாமரனின் இப்போதைய நிலை



இரண்டு வாரத்திற்கு முன்னால், மத்திய நிதி அமைச்சர் பாராளுமன்றத்தில் "இரண்டு வருடங்களுக்கு முன்னால் இந்தியாவில் இருந்த அதே விலையில் தான் பருப்புகள், எண்ணை விலைகள் இருக்கிறது" என்று புள்ளி விவரம் கொடுத்து இருக்கிறார். அதையும் இந்த மத்திய அரசு அமோதித்து மகிழ்கிறது.  ஆனால் உண்மை நிலை என்ன?

எழுத்தால் புரிய வைப்பதை விட, புகைப்படத்தால்:


சென்னையில் கே.கே. நகரில் இருக்கும் சரவணா பவன் உணவகத்தின் விலை பட்டியலின் ஒரு பாகம்.

இரண்டு இட்லி - ரூ. 23
வடை - ரூ. 20
பொங்கல் - ரூ. 35
சாம்பார் வடை - ரூ. 25
தோசை - ரூ. 33
ஸ்பெஷல் தோசை - ரூ. 40
நெய் தோசை - ரூ. 75

சாதாரண வேலை செய்யும் மக்கள் யாரும் சரணவ பவன் உணவகத்தில் சென்று உணவு அருந்த முடியாது என்பது தான் நிதர்சனம். இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு முன்னால், ஒரு நிகழ்ச்சியை கொண்டாட பெரிய உணவகத்திற்கு செல்வோம். ஏன் என்றால்  அந்த மாதிரியான பெரிய உணவகத்திற்கு தினசரி செல்ல இயலாது.  ஆனால் இன்று அதே போல் ஒரு நிகழ்ச்சியை கொண்டாட சரவணாபவன் உணவகத்திற்கு சென்று உள்ளோம் என்ற பார்த்து கொள்ளுங்கள். அங்கு தினசரி சென்று உணவு எடுக்க முடியாத சூழ்நிலை.
சுருக்கமாக சொல்லவேண்டும் எனில், இந்தியாவில் சம்பளம் வாங்கி கொண்டு, இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா விலையில் பணத்தை கொடுத்து வாங்குகிறோம்.
இந்தியா திருநாட்டை இப்படி சீரழிக்கும் மத்திய அரசு எப்போது போகுமோ?

Thursday, December 22, 2011

மீண்டும் மீண்டும்...VI (நயாகரா பயணம்)


இந்தியாவில் இருக்கும் போது, அதுவும் படிக்கும் காலத்தில் தமிழ்நாட்டை தவிர என்ற மற்ற மாநிலங்களுக்கு சென்றது இல்லை. ஆனால் வேலைபார்க்கும் போது தென் இந்தியாவில் இருக்கும் நான்கு மாநிலத்தை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அதை தவிர இந்தியாவில் வேறு எங்கும் செல்லவில்லை. ஆனால் டாலர் தேசத்தில் இருந்த ஒன்றரை வருடங்களில், எத்தனை மாநிலங்களுக்கு சென்று இருக்கிறோம், எந்த இடங்களை பார்த்து இருக்கிறோம் என்ற பட்டியலே தனியாக இருக்கும். சென்னை வந்து மூன்று மாதங்கள் ஆகி விட்டதால், நான் சென்ற அனைத்து மாநிலங்களையும் நினைவு படுத்துவதற்குள் போதும் போதும் என்ற நிலை. இதோ நான் சென்று வந்த பட்டியல்.

1.   அரிசோனா (Arizona)
2.   அர்கன்சாஸ், (Arkansas)
3.   இல்லினோயிஸ், (Illinois)
4.   ப்ளோரிடா, (Florida)
5.   ஜார்ஜியோ (Georgia)
6.   இண்டியன, (Indiana)
7.   கன்சாஸ், (Kansas)
8.   மிஸ்ஸெளரி, (Missouri)
9.   நெவட, (Nevada)
10.  நியூ ஜெர்செரி (New Jersey)
11.  நியூயார்க்  (New York)
12.  ஒக்ளஹோம, (Oklahoma)
13.  டென்னிசி (Tennessee)
14.  டெக்சாஸ் (Texas)
15.  வாஷிங்டன் டி.சி. (Washington DC)
16.  வெஸ்ட் விர்ஜினியா (West Virginia)

கீழே இருக்கும் மாநிலங்கள், வேறு மாநிலத்திற்கு செல்லும் போது கடந்து போன பாதை தவிர, அங்கு சென்று வேறு எதையும் பார்க்கவில்லை.

17.  ஓஹயோ, (Ohio)
18.  மேரிலன்ட், (Maryland)
19.  பென்ன்ச்யல்வானியா, (Pennsylvania)
20.  டெலவாரே (Delaware)

இங்கு இருக்கும் அனைத்து மாநிலங்களிலும், ஏதாவது சிறப்பு வாய்ந்த விஷயங்களை பார்த்து இருப்பேன். ஒரு வருடம், ஐந்து மாதங்கள் ஆகியும் நான் செல்ல நினைத்த இடம் நயாகரா நீர்விழ்ச்சி, அமெரிக்காவில் இருந்து கிளம்புவதற்கு இன்னும் மூன்று வாரங்கள் மட்டுமே இருந்த நிலையில், நயாகராவை பார்க்காமல் போகிறேன் என்ற குற்ற உணர்வு என்னை ஆட்டி படைத்து கொண்டே இருந்தது. அமெரிக்காவை விட்டு போய் விட்டால் மீண்டும் வருவோமா என்ற கேள்விக்கு காலம் தான் பதில் சொல்லும் என்ற நிலையில், இன்னும் கிளம்புவதற்கு மூன்று வாரமே என்று இருந்தாலும், பொறியியல் கல்லூரி நண்பர்கள் மேனன் மற்றும் கார்த்திக் கட்டயபடுத்தியதலும், இரண்டு வாரங்கள் கழித்து நயாகரா செல்வதற்கு அனைத்து பணிகளும் முடிந்தது. நயாகரா சென்று வந்த பின், நான்கு நாட்களில் நான் அமெரிக்காவை விட்டு செல்கிறேன்.

நான் அந்த நீர்விழ்ச்சி செல்ல, எப்போதும் போல் பல இடங்களுக்கு சென்று செல்ல வேண்டிய சூழ்நிலை.

Bentonville, AR -> Little Rock, AR -> Memphsis, TN -> Cleveland, OH -> Buffalo, NY

Buffalo, NY -> Clevelan, OH -> Chicago, IL -> Little Rock, AR -> Bentonville, AR

நயாகராவை அடைந்த பின் தான், எனக்கு மீண்டும் ஒரு சந்தேகம் வந்து விட்டது. ஆம் நான் அடைந்த இடம் இந்தியாவில் இருக்கும் எதாவது ஒரு சுற்றுலா பகுதியா என்ற கேள்வி, என்னை மட்டும் இல்லாமல் என்னுடன் வந்து இரு நண்பர்களுக்கும் தான். எங்கு பார்த்தாலும் இந்திய மக்கள், இந்திய மக்கள் நடத்தும் கடைகள், உணவு கடைகள். ஆச்சிரியம் தான். நாங்கள் சென்ற முதல் அன்று 65  சதவீதம் இந்திய மக்கள். மிச்சம் இருந்தவர்கள் சீனா, அமெரிக்க, கொரிய மற்றும் மற்ற உலக மக்கள்.

நீர்வீழ்ச்சியை அடையும் போது "உலகம் எவ்வளவு அழகானது என்பதை அறிய சிறந்த இடம் நயாகரா" என்று கூறுவது மிகையல்ல. அந்த அழகிய பகுதியின் இயற்கை அழகை விவரிக்க வார்த்தைகள் இல்லை. என்னால் எடுக்கப்பட்ட சில இடங்கள்.









முதல் உச்சகட்டம்:

இதை பார்க்கும் போது, ஏற்பட்ட அனுபவங்கள் தவிர ஒரு கப்பலில் நயாகரா அருவின் பக்கத்தில் கொண்டு சென்றனர். இந்த பயணத்தில் முதலாவது உச்சகட்டம்




இரண்டாவது உச்சகட்டம்:

உலகமே பார்க்க துடிக்கும் இந்த அழகிய நீர்வீழ்ச்சியில்,  அருவின் ஒரு மூலையில் தண்ணீர் விழுந்து கொண்டு இருந்தது. அங்கே அருவியை கடந்து செல்ல முடியாது. அமெரிக்காவின் தொழில் நுட்பம் அங்கு தான் தெரிகிறது. அருவின் ஒரு புறத்தில் இருக்கும் மலையை குடைந்து,  மலைக்கு அடியில் வழியை அமைத்து, மெதுவாக தண்ணீர் விழும் இடத்தில் கொண்டு இறக்கி விடுகின்றனர்.  அந்த பாதையில் நடந்து சென்று, தண்ணீர் விழும் பகுதிக்கு சென்ற உடன், உலகின் மிக அழகிய நீர்வீழ்ச்சியில் நம்மை குளித்துக் கொள்ள முடிகிறது. 
  

நண்பர்கள் மேனன் மற்றும் கார்த்திக் மட்டும் கட்டாய படுத்தாமல் இருந்து இருந்தால், நான் கண்டிப்பாக இந்த பயணத்தை உதறி, வாழ்நாளில் மிக பெரிய தவறை செய்து இருப்பேன். அமெரிக்கா சென்று வரும் மக்கள், நான் நயாகரா போனேன் என்பதை ஏன் பெருமையாக செல்கிறார்கள் என்பது அப்போது தான் புரிந்தது. நயாகரா சென்று வந்ததினால் நானும் பெருமை கொள்கிறேன்.

இத்துடன் மீண்டும் மீண்டும் தொடர் நிறைவுபெறுகிறது

Saturday, December 17, 2011

வரவேற்கிறேன்

எனது தங்கை ஈன்றுடுத்த, எனக்கு தாய்மாமன் என்ற பெருமையை கொடுத்த சிங்கரவேலனான சிம்மக்குட்டியை இவ்வூலகிர்க்கு வரவேற்கிறேன். 

Thursday, December 15, 2011

மீண்டும்... மீண்டும்...V (NTSC/ PAL Signals)



இன்னொரு விஷயம் என்னவென்றால், DTH நிறுவனத்தினர் போடும் கேபிளின் அளவு 12மீ மட்டுமே. அதற்கு மேல் மீட்டருக்கு ரூ.ஆறு. எந்த வீட்டிற்கும் 12மீ கேபிள் பத்தவே பத்தாது. அதை தெரிந்து கொண்டு, அவர்கள் அரசாங்கத்திற்கு தெரியாமல் இவ்வாறு கொள்ள அடிக்கின்றனர். கேட்டால் இது தான் அந்த நிறுவனத்தின் சட்டம் என்கிறார்கள். அதற்கு மேல், எல்லா நிறுவனங்களும் இதே சட்டத்தை தான் அமல் படுத்தி உள்ளனர் என்று கூறி பணத்தை பிடுங்கி கொள்கின்றனர். இதற்காகவே நான், கேபிளை தவிர, மற்ற விஷயங்களுக்காக (சுவற்றில் துளை இடாமல் எடுத்து செல்லவது) அனைத்து நிறுவனத்தையும் கேட்டேன் (சன், டிஷ், டாட்டா மற்றும் வீடியோகான்). அவர்கள் கூறிய பதில்கள் எல்லாம் கேட்டும் போது, அனைவரும் மக்களை திருட தான் செய்கிறார்கள் என்று புரிந்தது. இதுவெல்லாம் பொது பிரச்சனை.


இப்போது என் பிரச்சனைக்கு வரும் போது, AIRTEL DTH சுவற்றில் துளை இடமால், வேறு விதமாக உள்ளே எடுத்து கொண்டு போனேன். ஒரு வழியாக கேபிளை தொலைக்காட்சியுடன் கொடுக்கும் போது தான் NTSC /PAL  விஷயம் வெளியே வருகிறது. ஆம் இந்தியாவில் வரும் சிக்னல் சிஸ்டம் PAL . தொலைகாட்சி 80 % மட்டுமே தெரிகிறது, அதுவும் புள்ளி புள்ளியாக. எந்த DTH போட்டாலும் கிடைக்கக் கூடிய சிக்னல் PAL தான் என்பது அப்போது  தான் புரிந்தது.  என்னடா போட்ட பணம் அவ்வளவு தான? என்ற கேள்வியுடன் பல வலைதளங்களில் தேடியும் எதுவும் புலப்படவில்லை. வேறு எந்த DTHல் தொலைகாட்சி தெரியும் என்று சுமார் ஒரு மாதத்திற்கு மேல் அலசி ஆராய்ந்து, பலன் இல்லாமல் போனது தான் மிச்சம். அனைத்து விஷயத்தையும் பார்க்கும் போது தான், இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் உள்ள வித்தியாசங்கள் புரிந்து கொள்ள முடிகிறது. நான் யோசிக்காமல் போன விஷயம் (இன்னுமும் கூட), ஏற்கனவே வெளிநாட்டு நண்பர்கள் இந்தியாவிற்கு எடுத்து வந்த வெளிநாட்டு தொலைகாட்சிகள் எப்படி அவர்கள் பயன்படுத்துகிறார்கள் என்பதை கேட்கவே இல்லை. அது கேட்டு இருந்தாலும் ஒரு அளவாவது விஷயம் தெரிந்து இருக்கும். AIRTEL DTH உடன் சண்டை போட்டு, பணத்தை மீண்டும் வாங்கி விட்டேன். இதுவே சன் DTH என்றால் வாய்ப்பே இல்லை. ஏனென்றால் சன் DTH மக்களை மதிக்கவே மாட்டார்கள் என்று ஏற்கனவே தெரியும். என் நண்பர்கள் கூட சொன்ன விஷயம் "AIRTEL  DTH என்பதால் பணம் திரும்ப கிடைத்தது. சன் DTH  என்பது கேடானது" .

ஏற்கனவே AIRTEL DTH எடுத்து செய்த தவறை மீண்டும் செய்யாமல், எந்த DTH எடுத்தால் என் தொலைகாட்சியில் உள்ளூர் சேனலை காணலாம் என்ற எண்ணம் ஓட தொடங்கியது. இப்படியே வலை தளங்களில் தேடிக் கொண்டே மற்றும் நண்பர்கள் உடன் தேடி கொண்டே சுமார் ஒரு மாத காலம் ஆகிவிட்டது. தீடிர் என்று ஒரு யோசனை. நண்பர் ராஜேந்திரன் தன்னுடைய கணிப்பொறியில் தான் உள்ளூர் சேனலை பார்த்துக் கொண்டு இருந்தார். அது எவ்வாறு என்று கேட்டு கொண்டு, அதே போல் என் தொலைகாட்சியில் அந்த முறை பொருந்துமா என்று பலருடன் கேட்டு, கடைசியாக PAL சிக்னல் முறையில் இருந்து VGA முறைக்கு மற்றும் convertor யை வாங்கி, சோதனை செயலாம் என்று முடிவெடுத்து, அதை தேட தொடங்கினேன். இந்த convertor கூட எனது பிரச்சனையை முடிக்குமா என்று தெரியாது. நான் கேள்வி பட்ட வரை 99 % பிரச்சனை முடியலாம் என்ற காரணத்திற்காக மட்டுமே தேட தொடங்கினேன்.  ஆம் சுமார் ஒரு வாரத்திற்கு பிறகு அதை பொருத்தி பார்க்கும் போது, உள்ளூர் சேனல் எனது தொலைகாட்சியில் தெரிந்தது. அதன் விலை ரூ. 1400 . இதில் என்ன பிரச்சனை என்றால், இது உள்ளூர் கேபிளை எடுத்து கொடுத்து இருந்தேன். மாதத்திற்கு என்னவோ ரூ. 100 மட்டுமே.ஆனால் இந்த தொலைகாட்சிக்கு பொருந்தாத ஒன்று. எதுவுமே தெரியாமல் இருந்த எனக்கு, இதுவே தேவலாம் என்ற நிலையில் இருந்தேன்.  இருந்தாலும் என்னுடைய தொலைகாட்சிக்கு இந்த முறை போதாது என்று, எனக்கு தெரியாமல் நான் NTSC /PAL பற்றி தேடி கொண்டு தான் இருந்தேன்.



VGA convertor பிரச்சனை என்னவென்றால், ஒலி தனியாகவும், ஒளி தனியாகவும் பிரித்து கொடுக்கும். அதனால் என்னவோ படம் ஒழுங்காக தெரிந்தாலும், சத்தம் கேட்கும் போது ஒரு வித இரைச்சல் இருந்து கொண்டே தான் இருந்தது. மேலும் ஒளியின் அளவு, சுமாராக தான் இருக்கும். இந்த சூழ்நிலையில் தான், உள்ளூர் கேபிளால் வரும் பிரச்சனை வந்தது. அனைத்து சேனல்களும் புள்ளி புள்ளியாக தெரிய, கேபிள் டிவி ஆப்பிரேட்டரை கொண்டு வந்து காட்ட, இந்த பெரிய தொலைகாட்சியில் இவ்வளவு தான் சேனல்கள் தெரியும். இது என் பிரச்சனை அல்ல. அதே கேபிளை அரசு தொலைகாட்சியில் கொடுத்தால், நன்றாக தெரியும் என்று கூறி, இந்த பிரச்சனை முடிவாக ஏன் சுமங்கலி setup பாக்ஸ் வாங்க கூடாது என்று கேட்டார். நான் AIRTEL  DTH ல் நடந்த அனைத்து விஷயத்தையும் கூறி, நீங்கள் DEMO கொடுங்கள், நன்றாக DIGITAL முறையில் தெரிந்தால் நான் வாங்கி கொள்கின்றேன் என்று கூற, உள்ளூர் கேபிள் ஆள் ஒத்து கொண்டார். ஒரு வாரத்திற்கு பிறகு அவர் setup பாக்ஸ் கொண்டு வந்து உபயோகபடுத்தி பார்த்தார். முதலில் நான் AIRTEL DTH பார்த்த பிரச்சனை இங்கும் வந்தது. அனைத்து DTH சும், கை விட்ட நிலையில் சுமங்கலி setup என்ன உதவ போகிறதா என்ற நினைத்து இருந்த நிலையில், setup பாக்ஸ்ன் உள்ளே சென்று அதனுடைய configuration யை பார்க்கும் போது, வீடியோ செட்டிங் க்குள் NTSC / PAL முறை என்று இரண்டு இருந்தது. அதை பார்த்த உடன் என்னுள் ஒரு சிறு நம்பிக்கை. ஆம் அந்த configuration மாற்றி அமைத்த உடன் என் வெளிநாட்டில் வாங்கி வந்த தொலைகாட்சியில் DIGITAL முறையில் நம்மூர் சேனலை பார்க்க முடிந்தது. அதுவும் மிக துல்லியத்துடன். ஆனால் நான் வாங்கிய அந்த VGA convertor ? இப்போது தேவையில்லை. பணம் போனது தான் மிச்சம். இன்னொரு விஷயம், இந்த சுமங்கலி setup பாக்ஸ் சென்னையில் மட்டுமே கிடைக்கும். சென்னை தவிர மற்ற (தமிழ்நாடு) நகரங்களில் உபயோகபடுத்த முடியாது. அவர்கள் DEMO கொடுக்கும் போது எடுத்த வந்த setup பாக்ஸ் பழையது. சென்னையில் சுமங்கலியை நிலைநிறுத்தி கொள்ள சன் நிறுவனம் இப்போது இலவச setup பாக்ஸ்யை தருகிறது. ஆனால் இந்த setup பாக்ஸ்ல் NTSC / PAL என்ற இரண்டு முறை இல்லை. இந்திய தொலைகாட்சிக்கு மட்டும் ஒத்துழைக்கும் PAL என்ற முறை மட்டுமே உள்ளது. அதனால் தான் நான் வாங்கும் போது கூட, என் தொலைகாட்சிக்கு எதுவாக பழைய setup பாக்ஸ்யை வாங்கி கொண்டேன். சுமங்கலி என்பது சன் நிறுவனத்தின் ஒரு பகுதி. சுமங்கலி setup பாக்ஸ்ல் NTSC / PAL முறை இருக்கும் போது, என் நினைப்பு படி SUN DTH ல்லும் இந்த முறை இருந்தாக வேண்டும். நான் என் தொலைக்காட்சிக்கு ஆராயும் போது, SUN DTH புதிதாக ஒரு setup பாக்ஸ் கொடுத்து உள்ளதாகவும், அதை பற்றி ஆராய வேண்டும் என்று கேள்வி பட்டேன். அது எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை. சென்னையில் உள்ள மக்கள் சன் DTH வாங்கி கொண்டு ஏமாந்து போவதற்கு பதிலாக, சுமங்கலியை வாங்கி கொண்டு போகலாம்.

நான் எனது பிரச்சனையை தீர்க்க தேடும் போது, விளக்கமாக ஒரு வலை தளத்திலும், இணைய தளத்திலும் இல்லை. அதனால் தான் இங்கு என்னுடைய அனுபவத்தை கொடுத்து உள்ளேன். படிக்கும் நபர் எந்த NTSC / PAL தொடர்ப என்ன கேள்விகள் இருந்தாலும், எனக்கு தெரிய படுத்துங்கள். என்னால் முடிந்த வரை உதவி செய்ய முயலுகிறேன்

Monday, December 12, 2011

மீண்டும்... மீண்டும்...IV


ஒரு வழியாக அமெரிக்காவில் வாங்கின தொலைக்காட்சி என் வீட்டில். இப்போது நாம் டெக்னிகலாய் சில விஷயங்களை பார்க்கலாம். அமெரிக்காவில்  மின்சாதன பொருட்கள் 110V தான் வேலை செய்யும்.  ஆனால் இந்தியாவில் 220V . வீட்டிற்க்கு வந்த உடன், முதலிலேயே வாங்கி வைத்து இருந்த power convertor வைத்து தொலைகாட்சியை switch on செய்தேன். வெறும் ஒரு வெள்ளை நிறம் மட்டும் வந்து, மீண்டும் கருப்பு நிறம் வருகிறது.  இந்த மாதிரியாக தொடரவே, நான் பயந்து தொலைகாட்சியை  நிறுத்தி விட்டேன். ஏற்கனவே நண்பர்கள் பலரது பிரச்சனைகளை நான் அறிந்த காரணத்தால், என் தொலைக்காட்சியும், விமானத்தில் எடுத்து வந்த காரணத்தால் உள்ளே உடைந்து போய் விட்டது என்று நினைத்து நானும் உடைந்து போனேன்.

நண்பர் பாலாஜி, இதே போல் ஒரு தொலைக்காட்சியை எடுத்து வந்து போது, ஆட்டோவில் ஏற்றி வந்த காரணமாக தொலைகாட்சி உடைந்து போகவே 35K செலவு செய்து அதை சரி செய்தார். அவர் insurance வைத்து இருக்கவே, உடைந்து போன தொலைகாட்சியை சரி செய்தார். செலவு செய்த பணத்தை insurance நிறுவனமே கொடுத்து விட்டது. ஆனால் என் நிலையில் insurance எனது தொலைகாட்சிக்கு இல்லை. என் நிலைமை நினைத்து, அழுகை வந்து விடும் போல் எனக்கு ஆகி விட்டது. வெளிநாட்டில் இருந்து பல பொருட்களை கொண்டு வந்து இருந்தாலும், எதையுமே காணும் நிலையில் நான் இல்லை.

நண்பர் கிஷோரின் நண்பரை அழைத்து காட்டவே, இது basic power convertor என்று கூறி, நல்ல power convertor குடுத்து விட்டு சென்றார். அவர் தொலைக்காட்சியை switch on செய்து காட்டும் போது தான் என் உயிர் மீண்டும் எனக்கு கிடைத்தது. ஆக மொத்தத்தில் LED,3D,SMART TV என் வீட்டில்.

எத்தனை நாளைக்கு தான், திரைப்படம் மட்டுமே பார்த்து கொண்டு இருப்பது. நம்மூர் லோக்கல் சேனல்கள் எப்போதுதான் பார்ப்பது என்ற எண்ணம் வரவே, அதற்கான முயற்சி எடுத்தேன். எதற்கு அந்த முயற்சி? ஆம் வெளிநாடுகளில் வாங்கும் தொலைகாட்சிகள் இந்தியாவின் உள்ள சிக்னல் சிஸ்டத்தை சப்போர்ட் செய்வது இல்லை. வெளிநாடுகளில் உள்ள நிகழ்சிகள் NTSC என்ற முறையில் ஒளிபரப்ப படுகிறது. ஆனால் இந்தியாவில் PAL என்ற முறையில் ஒளிபரப்ப படுகிறது. இந்த இரண்டு முறைக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. லோக்கல் கேபிள் முறை இந்த தொலைகாட்சிக்கு ஒத்துவராது என்பதால், நேரடி தொலை நிகழ்ச்சி (DTH) என்ற முறையில் செல்ல எண்ணினேன். சென்னையில் DTH முறையில் இருக்கும் அனைத்து விதமான நிறுவனங்களை தொடர்பு கொண்டு விளக்கினேன். ஆனால் யாருக்கும் என் நிலைமை புரியாததால், நானே RISK எடுக்க முடிவெடுத்து Airtel DTHயை  2K கொடுத்து  எடுத்து விட்டேன். இப்போது தான் அவர்கள் அனைத்து DTH  நிறுவனங்களும்  செய்யும்  தில்லு  முள்ளு  எனக்கு  தெரிந்தது.


வீடு கட்டும் போது கேபிள் எடுத்து செல்ல சுவற்றில் உள்ளேயே எதாவது ஒரு வழிமுறையை செய்து இருப்பார்கள். ஆனால் இந்த DTH நிறுவனத்தை சேர்ந்தவர்கள், அந்த வழிகளை உபயோகிக்காமல், அவர்கள் எந்த வழியாக சுலபமாக கேபிள் கொண்டு வர முடியுமோ (சுவற்றை துளைத்து அல்லது ஜன்னலை துளைத்து), கொண்டு வந்து அவர்கள் தன் வேலையை முடிப்பார்கள். இதில் பதிக்க படுவது நாம் தான். ஆம் தேவை இல்லாமல் சுவற்றில் துளை மற்றும் வெளியில் கேபிள்கள் எப்போதும் அசிங்கமாக தொங்கி கொண்டே இருக்கும். 

இன்னொரு விஷயம் என்னவென்றால்....

Friday, December 09, 2011

அனலாய்க் காயும் அம்புலிகள் - புத்தகம் – விமர்சனம் - 2005


சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, ஒரு முழு புத்தகத்தை படிக்கும் நேரமும், அதற்குரிய மன-அமைதியும் கிடைத்தது. தனிபட்ட கதாபாத்திரங்களின் பண்பு, கோபம், சோகம், மகிழ்ச்சி,  பொறமை,  நற்குணம்  என்று விவரிக்கக்கூடிய திரைப்படங்கள் ஆகட்டும், புத்தகங்கள் ஆகட்டும், அதில் எனக்கொரு தனி விருப்பம் உண்டு. திரைப்படத்தை எடுத்து கொண்டால் நாயகன், தவமாய் தவமிருந்து,  வெயில், ஆட்டோகிராப்  போன்ற படங்கள் தனிபட்ட மனிதனின் வாழ்க்கையை மிகசிறப்பாக கொடுக்கபட்டு இருக்கும். அதே போல் இயக்குனர் விசுவின் திரைப்படங்களை எடுத்துக் கொண்டால் தனிபட்ட கதாப்பாத்திரங்கள் இருந்தாலும், அதற்கு முன் ஒரு குடும்பத்தை காட்டி, அதில் உள்ள பற்பல மனிதர்களை சுட்டி காட்டி இருப்பார். அதனால் தான் என்னவோ விசுவின் திரைப்படங்களின் மேல் ஒரு தனிப்பட்ட விருப்பம் எப்போதும் இருக்க தான் செய்யும். சம்சாரம் அது மின்சாரம், மணல் கயிறு போன்ற படங்கள் நல்ல உதாரணம். அப்படிப்பட்ட இரண்டு குடும்பத்தில் இருக்கும் நான்கு கதாப்பாத்திரங்கள் மற்றும் இரண்டு தனி மனிதர்கள் என்று ஆறு பேரை மட்டுமே கொண்டு ஒரு குடும்ப நாவல் தான் "அனலாய்க் காயும் அம்புலிகள்".

கதை ஆசிரியர் இந்திரா சௌந்தரராஜன். அவர் பற்றி சொல்ல தேவையில்லை. இலக்கிய மற்றும் புத்தக உலகில் இவருக்கு என்று தனிப்பட்ட அடையாளம் உண்டு. திரில், காதல், குடும்ப கதைகள் என்று அனைத்து விதங்களிலும் தன்னுடைய திறமையை எடுத்துக் காட்டியவர். அக்கதையை படிக்கும் போது ஏற்படும் நிகழ்வுகள் நம் கண் முன் ஓடுகின்ற மாதிரி தனது எழுத்தை வைத்தது இல்லாமல், நம் குடும்பத்தில் நடக்கும் நிகழ்வை காணலாம்.

அரவிந்தன், ரம்யா, ராம்நாத், சரண்யா, ஞானசேகரன், குணசேகர் என்று மொத்தம் ஆறு நடமாடும் மனிதர்கள். ஒவ்வொருவருக்கும் தனிபட்ட பிரச்சனை என்று இருந்தாலும், அப்பிரச்சனை கூட குடும்பத்தை சார்ந்ததாக இருக்கும். அரவிந்துக்கும், ரம்யாவிற்கும் காதல் ஏற்படும் தருணம், அவர்கள் பேசி கொள்ளும் கருத்துக்கள், சரண்யா மற்றும் ராம்நாத்தின் உள்ளுர்வு பிரச்சனைகள் என்று ஒவ்வொரின் தனிப்பட்ட  கோபம், சோகம், மகிழ்ச்சி, பொறமை என்று இந்திராவின் வார்த்தை ஜாலங்கள் அதுவும் இலக்கிய நாயத்துடன்.

பெண்களுக்கு இறைவன் இரண்டு அஸ்திரங்களை கொடுத்திருக்கிறான். ஒன்று அவர்களது இளமை. இரண்டாவது அவர்களது சமையல். சமையலில் ஒரு பெண் ஆணை சாய்த்துவிட்டால் அதன் பின் அவனால் எந்த காலத்திலும் எழுந்திருக்கவே முடியாது.

ஒரு ஆண் கவனம் அவனோடு பணியில இருக்கணும். ஒரு பெண்ணோட கவனம் ஆணின் நலத்திலும் கெளரவத்திலும் இருக்கணும். அவள் அவனை உயர்த்திப் பிடிக்கணும். அப்படி பெண்ணால் தூக்கி நிறுத்தப்படர குடும்பம் தான் ஆலமரமா வளரும். குடும்ப உறவு தர்மம் சார்ந்தது. எப்பவும் வாழ்க்கை நியதிகள் ஆண், பெண் இயலபுகளை ஒட்டி இருக்கணும்.

இப்ப உடம்பில தெம்பு இருக்கு. எப்படி வென வாழ்ந்துடலாம். வயசாகிக் கண்பார்வை குறைஞ்சு ஒரு கவர்ச்சியும் இல்லாமக் கிடக்க நேரும் போது, பசங்களோ குட்டிகளோ இல்லைன்னா யாருடா வருவா?

இப்படி ஒவ்வொரு வார்த்தைகளும், கூர்மையான கத்திகள் போல் எங்கும் பரவி கிடைக்கின்றன. மொத்தத்தில் இந்த புத்தகத்தை முடிக்கும் போது விசுவின் படத்தை பார்த்த ஒரு மகிழ்ச்சி.

Thursday, December 08, 2011

ரமேஷ் அண்ணன் - அஞ்சலி



சென்ற வாரஇறுதியில் தான் எல்லோரும் ஒரு விழாவில் உறவினர்கள் அனைவரும் பார்த்து, பேசி ஜாலியாக இருந்தோம். அதில் ஒருவரான ரமேஷ் அண்ணன் அவர்களுக்கு  வயது 36 அல்லது 38 தான். நான்கு மற்றும் ஒரு வயது குழந்தைக்கு தகப்பனார். நேற்று இரவு உணவு சாப்பிட்டு அமர்ந்து இருக்கையில், இறைவனடி சேர்ந்தார். என்ன பிரச்சனை என்று இதுவரை தெரியவில்லை. அவரது ஆத்மா சாந்தி அடைய நான் வணங்குகின்றேன். 

நேற்று இருப்பவர்கள் இன்று இல்லை. சிறுவயதில் மரணம் என்பது யாதார்த்தம் தான்.ஆனாலும் அவரின் குடும்ப சூழ்நிலை நான் அறிவேன் என்பதால், இந்த நிகழ்வை சாதரணமாக எடுத்து கொள்ள முடியவில்லை. சொந்தங்கள் மற்றும் உறவினர்கள் அனைவரும் இருப்பதோ தென்தமிழகத்தில். நான் மட்டும் வடதமிழகத்தில். என்ன பொழப்பு டா சாமி. நல்ல விஷயங்களில் கலந்து கொள்கிறோமே இல்லையோ, இந்த மாதிரியான நிகழ்வுகளில் வேலை செய்கிறோமே இல்லையோ முடிந்தவரையில் தலையாவது காட்ட வேண்டும். அதற்கும் முடியாமல் இருக்கும் என்னை நினைத்து வருத்தம் அடைகிறேன்.

Wednesday, December 07, 2011

மீண்டும்...மீண்டும்... III



சென்னையில் இருந்து நேரடியாக நான் மதுரைக்கு வந்தாலும், என் நினைவெல்லாம் தொலைகாட்சியை பெட்டியை சுற்றி சுற்றி வந்தது. சாதரணமாகவே விமானத்தில் வரும் பெட்டிகளில் உள்ள பொருட்கள் உடைத்த நிலையிலும் அல்லது சோதனைக்கு உட்பட்ட நிலையிலும் தான் வரும். இவ்வாறான நிலையில், என் தொலைகாட்சியின் நிலை?

இரண்டு இரவு சென்ற நிலையில், பெட்டி கிடைத்தாக செய்தி. தொலைந்துபோன பொருட்கள் கிடைத்தால், விமான நிறுவனமே உரிமையாளரின் வீட்டில் போய் பொருட்களை கொடுத்துவிடும். ஆனால் என் நிலையில் தொலைகாட்சி உள்ளதால், நானே சென்று பெட்டியை எடுத்து, இறக்குமதி வரியை கட்டி விட்டு தான் வெளியே எடுத்து செல்ல வேண்டும். அதனால் மீண்டும் நான் விமான நிலையம் சென்று, சுரங்க அதிகாரி உதவியுடன் என் பொருட்களை எடுத்து வரியை போடும் இடத்தில் பார்த்தால், நான் மற்றும் பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள். நான் சென்ற கெட்ட நேரமா என்னவோ, வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்கள் எதுவும் வராததால், அனைத்து அதிகாரிகளும் என் தொலைகாட்சி பற்றி கேட்க, எனக்கு உதறல் ஆரம்பித்து விட்டது. அவர்கள் கேட்ட தொகை பத்துகி மேல் என்றாலும், பேசி பேசி குறைத்து விடலாம் என்ற எண்ணம் மெதுவாக குறைய ஆரம்பித்தது. ஒருவர் வரி தொகை குறைக்கும் நிலையில் வந்தாலும், மற்ற அதிகாரிகள் வரவே மீண்டும் அவர் நிலைக்கு வந்து விடுகிறார். ஒரு மணி நேரத்திற்கும் மேல் பேசி, ஒன்னும் வேலை நடந்த பாடு இல்லை. கடைசியில் ஒரு அதிகாரி கொடுக்க வேண்டிய தொகையை பிரித்து பேச, நான் சரி என்று ஒத்து கொண்டேன். எப்படி பணத்தை மற்றும் எங்கே  கொடுக்க/கட்ட வேண்டும் என்று கேட்டால், இங்கேயே மற்றும் இப்போதே கொடுக்க வேண்டும் என்று கூற, பக்கத்தில் உள்ள இயந்திரத்தில் இருந்து பணத்தை எடுத்து கொடுக்க வேண்டியவர்களுக்கு கொடுத்து, என்னுடைய இரண்டு பெட்டிகள் மற்றும் தொலைகாட்சியை வெளியே எடுத்து வந்தேன். இந்திய பணம் கையில் இல்லாமல் போனால், கதை முடித்தது என்று நினைக்கிறேன். அதற்கு என்று மீண்டும் மோதி சாக வேண்டும். ஏன் தேவை இல்லாத பிரச்சனை என்று யோசித்து முதலிலே நான் பணத்தை எடுத்து வைத்து கொண்டேன். எல்லாவிதமான பிரச்சனைகளை முடிக்க சுமார் மூன்று மணிநேரம் ஆனது என்பது நிதர்சனம்

விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த கையோடு, நேராக வீட்டிற்கு சென்று தொலைகாட்சி உடையாமல் இருக்கிறதா என்பதை தெரிந்து கொண்டேன். ஆம் அது உடையவில்லை. மூன்று நாட்களாக இல்லாத உயிர் மீண்டும் வந்தது. அதுசரி, அமெரிக்காவில் வாங்கி வந்த தொலைக்காட்சி இந்தியாவில் ஓடுமா என்ற கேள்வி இன்னும் விடை தெரியாமல் உள்ளது என்பதை நான் அறிவேன். அது பற்றி விவரிக்க இன்னொரு பதிவில்...