Wednesday, December 07, 2011

மீண்டும்...மீண்டும்... III



சென்னையில் இருந்து நேரடியாக நான் மதுரைக்கு வந்தாலும், என் நினைவெல்லாம் தொலைகாட்சியை பெட்டியை சுற்றி சுற்றி வந்தது. சாதரணமாகவே விமானத்தில் வரும் பெட்டிகளில் உள்ள பொருட்கள் உடைத்த நிலையிலும் அல்லது சோதனைக்கு உட்பட்ட நிலையிலும் தான் வரும். இவ்வாறான நிலையில், என் தொலைகாட்சியின் நிலை?

இரண்டு இரவு சென்ற நிலையில், பெட்டி கிடைத்தாக செய்தி. தொலைந்துபோன பொருட்கள் கிடைத்தால், விமான நிறுவனமே உரிமையாளரின் வீட்டில் போய் பொருட்களை கொடுத்துவிடும். ஆனால் என் நிலையில் தொலைகாட்சி உள்ளதால், நானே சென்று பெட்டியை எடுத்து, இறக்குமதி வரியை கட்டி விட்டு தான் வெளியே எடுத்து செல்ல வேண்டும். அதனால் மீண்டும் நான் விமான நிலையம் சென்று, சுரங்க அதிகாரி உதவியுடன் என் பொருட்களை எடுத்து வரியை போடும் இடத்தில் பார்த்தால், நான் மற்றும் பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள். நான் சென்ற கெட்ட நேரமா என்னவோ, வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்கள் எதுவும் வராததால், அனைத்து அதிகாரிகளும் என் தொலைகாட்சி பற்றி கேட்க, எனக்கு உதறல் ஆரம்பித்து விட்டது. அவர்கள் கேட்ட தொகை பத்துகி மேல் என்றாலும், பேசி பேசி குறைத்து விடலாம் என்ற எண்ணம் மெதுவாக குறைய ஆரம்பித்தது. ஒருவர் வரி தொகை குறைக்கும் நிலையில் வந்தாலும், மற்ற அதிகாரிகள் வரவே மீண்டும் அவர் நிலைக்கு வந்து விடுகிறார். ஒரு மணி நேரத்திற்கும் மேல் பேசி, ஒன்னும் வேலை நடந்த பாடு இல்லை. கடைசியில் ஒரு அதிகாரி கொடுக்க வேண்டிய தொகையை பிரித்து பேச, நான் சரி என்று ஒத்து கொண்டேன். எப்படி பணத்தை மற்றும் எங்கே  கொடுக்க/கட்ட வேண்டும் என்று கேட்டால், இங்கேயே மற்றும் இப்போதே கொடுக்க வேண்டும் என்று கூற, பக்கத்தில் உள்ள இயந்திரத்தில் இருந்து பணத்தை எடுத்து கொடுக்க வேண்டியவர்களுக்கு கொடுத்து, என்னுடைய இரண்டு பெட்டிகள் மற்றும் தொலைகாட்சியை வெளியே எடுத்து வந்தேன். இந்திய பணம் கையில் இல்லாமல் போனால், கதை முடித்தது என்று நினைக்கிறேன். அதற்கு என்று மீண்டும் மோதி சாக வேண்டும். ஏன் தேவை இல்லாத பிரச்சனை என்று யோசித்து முதலிலே நான் பணத்தை எடுத்து வைத்து கொண்டேன். எல்லாவிதமான பிரச்சனைகளை முடிக்க சுமார் மூன்று மணிநேரம் ஆனது என்பது நிதர்சனம்

விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த கையோடு, நேராக வீட்டிற்கு சென்று தொலைகாட்சி உடையாமல் இருக்கிறதா என்பதை தெரிந்து கொண்டேன். ஆம் அது உடையவில்லை. மூன்று நாட்களாக இல்லாத உயிர் மீண்டும் வந்தது. அதுசரி, அமெரிக்காவில் வாங்கி வந்த தொலைக்காட்சி இந்தியாவில் ஓடுமா என்ற கேள்வி இன்னும் விடை தெரியாமல் உள்ளது என்பதை நான் அறிவேன். அது பற்றி விவரிக்க இன்னொரு பதிவில்...

1 comment:

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
வாழ்த்துகள்.