Friday, December 09, 2011

அனலாய்க் காயும் அம்புலிகள் - புத்தகம் – விமர்சனம் - 2005


சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, ஒரு முழு புத்தகத்தை படிக்கும் நேரமும், அதற்குரிய மன-அமைதியும் கிடைத்தது. தனிபட்ட கதாபாத்திரங்களின் பண்பு, கோபம், சோகம், மகிழ்ச்சி,  பொறமை,  நற்குணம்  என்று விவரிக்கக்கூடிய திரைப்படங்கள் ஆகட்டும், புத்தகங்கள் ஆகட்டும், அதில் எனக்கொரு தனி விருப்பம் உண்டு. திரைப்படத்தை எடுத்து கொண்டால் நாயகன், தவமாய் தவமிருந்து,  வெயில், ஆட்டோகிராப்  போன்ற படங்கள் தனிபட்ட மனிதனின் வாழ்க்கையை மிகசிறப்பாக கொடுக்கபட்டு இருக்கும். அதே போல் இயக்குனர் விசுவின் திரைப்படங்களை எடுத்துக் கொண்டால் தனிபட்ட கதாப்பாத்திரங்கள் இருந்தாலும், அதற்கு முன் ஒரு குடும்பத்தை காட்டி, அதில் உள்ள பற்பல மனிதர்களை சுட்டி காட்டி இருப்பார். அதனால் தான் என்னவோ விசுவின் திரைப்படங்களின் மேல் ஒரு தனிப்பட்ட விருப்பம் எப்போதும் இருக்க தான் செய்யும். சம்சாரம் அது மின்சாரம், மணல் கயிறு போன்ற படங்கள் நல்ல உதாரணம். அப்படிப்பட்ட இரண்டு குடும்பத்தில் இருக்கும் நான்கு கதாப்பாத்திரங்கள் மற்றும் இரண்டு தனி மனிதர்கள் என்று ஆறு பேரை மட்டுமே கொண்டு ஒரு குடும்ப நாவல் தான் "அனலாய்க் காயும் அம்புலிகள்".

கதை ஆசிரியர் இந்திரா சௌந்தரராஜன். அவர் பற்றி சொல்ல தேவையில்லை. இலக்கிய மற்றும் புத்தக உலகில் இவருக்கு என்று தனிப்பட்ட அடையாளம் உண்டு. திரில், காதல், குடும்ப கதைகள் என்று அனைத்து விதங்களிலும் தன்னுடைய திறமையை எடுத்துக் காட்டியவர். அக்கதையை படிக்கும் போது ஏற்படும் நிகழ்வுகள் நம் கண் முன் ஓடுகின்ற மாதிரி தனது எழுத்தை வைத்தது இல்லாமல், நம் குடும்பத்தில் நடக்கும் நிகழ்வை காணலாம்.

அரவிந்தன், ரம்யா, ராம்நாத், சரண்யா, ஞானசேகரன், குணசேகர் என்று மொத்தம் ஆறு நடமாடும் மனிதர்கள். ஒவ்வொருவருக்கும் தனிபட்ட பிரச்சனை என்று இருந்தாலும், அப்பிரச்சனை கூட குடும்பத்தை சார்ந்ததாக இருக்கும். அரவிந்துக்கும், ரம்யாவிற்கும் காதல் ஏற்படும் தருணம், அவர்கள் பேசி கொள்ளும் கருத்துக்கள், சரண்யா மற்றும் ராம்நாத்தின் உள்ளுர்வு பிரச்சனைகள் என்று ஒவ்வொரின் தனிப்பட்ட  கோபம், சோகம், மகிழ்ச்சி, பொறமை என்று இந்திராவின் வார்த்தை ஜாலங்கள் அதுவும் இலக்கிய நாயத்துடன்.

பெண்களுக்கு இறைவன் இரண்டு அஸ்திரங்களை கொடுத்திருக்கிறான். ஒன்று அவர்களது இளமை. இரண்டாவது அவர்களது சமையல். சமையலில் ஒரு பெண் ஆணை சாய்த்துவிட்டால் அதன் பின் அவனால் எந்த காலத்திலும் எழுந்திருக்கவே முடியாது.

ஒரு ஆண் கவனம் அவனோடு பணியில இருக்கணும். ஒரு பெண்ணோட கவனம் ஆணின் நலத்திலும் கெளரவத்திலும் இருக்கணும். அவள் அவனை உயர்த்திப் பிடிக்கணும். அப்படி பெண்ணால் தூக்கி நிறுத்தப்படர குடும்பம் தான் ஆலமரமா வளரும். குடும்ப உறவு தர்மம் சார்ந்தது. எப்பவும் வாழ்க்கை நியதிகள் ஆண், பெண் இயலபுகளை ஒட்டி இருக்கணும்.

இப்ப உடம்பில தெம்பு இருக்கு. எப்படி வென வாழ்ந்துடலாம். வயசாகிக் கண்பார்வை குறைஞ்சு ஒரு கவர்ச்சியும் இல்லாமக் கிடக்க நேரும் போது, பசங்களோ குட்டிகளோ இல்லைன்னா யாருடா வருவா?

இப்படி ஒவ்வொரு வார்த்தைகளும், கூர்மையான கத்திகள் போல் எங்கும் பரவி கிடைக்கின்றன. மொத்தத்தில் இந்த புத்தகத்தை முடிக்கும் போது விசுவின் படத்தை பார்த்த ஒரு மகிழ்ச்சி.

4 comments:

mathumathi said...

can u share the pdf version if any

mathumathi said...

can u pls share the pdf version if any

வைகையின் சாரல் (Vaigaiyin Saral) said...

sorry! I bought this book in Chennai book festival... I don't have pdf version

வைகையின் சாரல் (Vaigaiyin Saral) said...

Anyway, thanks for visiting my blogspot