Saturday, August 07, 2010

விமர்சனம்

ஆர்யா 2 – 2009 - தெலுகு


அல்லு அர்ஜுனும், நவ்தீப்பும் நண்பர்கள். அல்லு அர்ஜுன் நண்பனுக்காக எதையும் செய்யும் ஒரு வித குணம் உடையவன். ஆனால் நவ்தீப்போ அவனை நம்பாமல், அவனுடைய இம்சைகளை கோபத்துடன் பொறுத்து கொண்டு இருப்பவன். காஜல் அகர்வாலை இரண்டு பேரும் காதலிக்க யார் வெற்றி பெற்றனர் என்பதே கதை. 

தமிழில் இந்த மாதிரியான நாயகன் இல்லை என்பது ஒரு சின்ன குறை தான். ஸ்டைலிஷ் நாயகன் என்ற பட்டத்திற்கு உரிய நாயகன் தான். அருமையான நடனம் மற்றும் ஸ்டைல். 

தெலுகு அழகு தொழில்நூட்ப கலைஞர்களை பாராட்டியே ஆக வேண்டும். காஜல் அகர்வால் அவ்வளவு அழகு என்று அவர்களுக்கு மட்டுமே தெரிந்து இருக்கிறது. 

தமிழில் இந்த நாயகியை கூட்டி கொண்டு வாருங்கள். இப்போது கஜலை மகதீரவில் அருமையாக காட்டி தெலுகுவில் முதல் நாயகி பட்டத்தை கொடுத்து விட்டனர்.

எப்போதும் போல் பிரம்மானந்தம் இதிலும் கலக்கி இருப்பார். அவருடைய முகபாவனை தான் அவருடைய வெற்றியே. இவரையும் தமிழில் பயன்படுத்திக் கொள்ள மறுக்கின்றனர். 

சாதாரண கதை என்று பார்த்தாலும், அதை பொழுது போக்காக அதுவும் நகைசுவையுடன் கொடுத்த விதம் தான் படத்தின் வெற்றியே. கண்டிப்பாக ஒரு முறை காஜல் அகர்வால் மற்றும் நகைச்சுவைக்காக பார்க்கப்பட வேண்டியபடம் தான் 

Hot Fuzz – 2007 - ஆங்கிலம்


சட்டத்திற்கு கட்டுபட்டு தன் கடமையை சிறப்பாக செய்யும் காவல் அதிகாரியை (அதாவது நாம் நாயகனை) ஒரு கிராமத்திற்கு மாற்றம் ஆகி போகிறார். அங்கு உள்ள காவல் நிலையத்தில் ஒரு கைதியும் இல்லாமல், ஒரு விசாரணையும் இல்லாமல் இருக்கிறது. தற்கொலை செய்து கொண்டது போல் பல கொலைகள் வரிசையாக நடக்கிறது. நாயகன் கொலை என்று நினைத்து என்ன தான் கூறினாலும், அங்கு உள்ள இதர அதிகாரிகள் மறுத்து விடுகின்றனர். கொலை சென்று நினைத்து அலச பல உண்மைகள் வெளி வருகிறது. உண்மையான கொலையாளிகள் யார் மற்றும் அவர்களது நோக்கம் என்ன என்பதே மீதி கதை.

என்னடா கதையை கேட்டால் தமிழ் படம் கதை போல் இருக்கிறது என்று நினைக்க தோன்றும். ஆனால் இந்த மாதிரியான படத்தை மெல்லிய நகைச்சுவையுடன் கொடுத்து, அதே போல் கொலைக்கான காரணத்தை யாரும் யூகிக்க முடியாதது போல் வைத்தது தான் படத்தின் வெற்றி.  

எங்கிருந்து தான் இவர்கள் நடிகர்களை கண்டு பிடிக்கின்றனர் என்று தெரியவில்லை. நாயகன் மற்றும் அவனது நண்பன் பேசும் வசனங்கள் நச். கண்டிப்பாக ஒரு முறை இப்படத்தை பார்க்கலாம்


One flew over the cuckoo's nest – 1975 - ஆங்கிலம் 


30 வருடங்களுக்கு மேல் இன்றும் பேசபடுகின்ற படம் இது. நான் விமர்சனம் எழுதி உங்களுக்கு புரிய வைப்பதை விட நான் படித்த இப்படத்தின் ஒரு விமர்சனத்தை இங்கே கொடுக்கிறேன்.

ஜாக் நிகல்ஸன். உலகத் திரைப்பட வரலாற்றில், தலைசிறந்த நடிகர்களுக்குள் ஒருவர். பல வெற்றிப்படங்களைக் கொடுத்திருக்கும் இவர், ஒரு மொக்கைப் படமாக இருந்தாலும், தனது நடிப்பால் பிரமாதப்படுத்தி விடுவதில் ஜித்தர். எத்தகைய வேடத்தையும் அனுபவித்து நடிக்கக்கூடியவர். எனது ஃபேவரைட் நடிகர்களில் ஒருவர். தனது திரைவாழ்க்கையின் உச்சத்தில் இவர் இருந்தபோது நடித்த ஒரு படத்தைப் பற்றித்தான் இந்தப் பதிவு.
மனநல விடுதிகள் பற்றி நமது அபிப்ராயம் என்ன? நம் ஊரில், ஏர்வாடி போன்ற சித்ரவதைக் கூடங்கள் தான் பெரும்பாலும் உள்ளன. ஒரு மனநல விடுதியில் உள்ள மருத்துவர்களும் செவிலிகளும், அந்த மனநலம் குன்றியவர்களை (மாற்றுத்திறன் கொண்டவர்களை) எவ்வாறு நடத்துகிறார்கள்? இவர்களைப் பற்றிய அவர்கள் எண்ணம் எவ்வாறு உள்ளது? இத்தனை கேள்விகளுக்கும், நமக்குத் தெரிந்த பதிலையே சற்று நெகிழ்ச்சியாக சொல்லும் ஒரு படம் தான் இந்த ‘ One Flew Over the Cuckoo’s Nest ‘. ஹாலிவுட் சரித்திரத்திலேயே இதுவரை மூன்றே மூன்று படங்கள் தான், க்ராண்ட் ஸ்லாம் என்ற அனைத்து ஐந்து முக்கிய விருதுகளையும் (நடிப்பு ஆண்; பெண், இயக்கம், சிறந்த படம், தயாரிப்பு) ஆஸ்கரில் பெற்றிருக்கின்றன. அதில் ஒன்று இந்தப்படம் (மற்ற இரண்டும் – It Happened One Night – 1934 மற்றும் The Silence of the Lambs – 1991).

இருமுறை ஆஸ்கர் வென்ற இயக்குநர் மிலாஸ் ஃபோர்மேன் இயக்கத்தில் (இதுதான் அவருக்கு முதல் ஆஸ்கர்) 1976ல் வெளிவந்த இப்படம், பல நிஜமான மாற்றுத்திறன் கொண்டவர்களையே நடிக்கவைத்து உருவான ஒரு படமாகும்.

படம், ஒரு விடிகாலையில் தொடங்குகிறது. சிஸ்டர் ரேட்செட், ஒரு மனநல மருத்துவமனையின் தலைமை நர்ஸ். அந்த மருத்துவமனைக்கு, பேட்ரிக் மெக்மர்ஃபி என்ற ஒரு கிரிமினல் அழைத்து வரப்படுகிறான். ரேப் முயற்சிக்கும் வன்முறைக்கும் தண்டனை அனுபவித்து வரும் மெக்மர்ஃபி, அவன் செய்த வன்முறைகளுக்குக் காரணம், அவன் சற்று மனநலன் பாதிக்கப்பட்டவனாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் இந்த மருத்துவமனைக்கு அனுப்பப்படுகிறான். அங்கு தலைமை மருத்துவர் அவனிடம் பேசுகிறார். அவரிடம் மிகவும் சகஜமாகப் பேசும் மெக்மர்ஃபியிடம், சிலநாட்கள் அங்கு இருக்கச்சொல்லி மருத்துவர் கூறுகிறார். அப்போதுதான் அவன் மனநலன் பாதிக்கப்பட்டவனா அல்லது அவ்வாறு நடிக்கிறானா என்பது தெரியும் என்றும் சொல்கிறார்.

அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மனிதர்கள், பலவிதம். செவிட்டு ஊமையான ஒரு பிரம்மாண்ட செவ்விந்தியன், மனைவியைச் சந்தேகப்படும் ஒருவர், எப்போதும் சோர்வாகவே காணப்படும் ஒருவர், சதா திக்கித்திக்கிப் பேசும் ஒரு இளைஞன், சக்கர நாற்காலியில் இருக்கும் வயதான ராணுவ அதிகாரி, யார் எது செய்தாலும், அதைத் தானும் செய்ய வேண்டும் என்று அடம்பிடிக்கும் குழந்தையைப் போன்ற ஒரு மனிதன், எப்போதும் டென்ஷனாகும் ஒரு ஆள்.. இப்படிப் பல மனிதர்கள். அவர்களுக்கிடையே விடப்படும் மெக்மர்ஃபி ஒருவன் தான் தெளிவானவன் வேறு.

ஒவ்வொருவரிடமும் சிறுகச் சிறுக நெருக்கமாகிறான் மெக்மர்ஃபி. அவர்களுக்கும், எப்போது பார்த்தாலும் துறுதுறுவென்று இருக்கும் மெக்மர்ஃபியைப் பிடித்துப்போய் விடுகிறது. மெக்மர்ஃபிக்கு அங்குள்ள ஒரே பிரச்னை, சிஸ்டர் ரேட்சட் தான். அவள் ஒரு சர்வாதிகாரி. இரக்கமே இல்லாதவள். எப்பொழுது பார்த்தாலும் இறுக்கத்துடனே காணப்படுகிறவள். மெக்மர்ஃபி பேசும் நியாயத்தை அவள் ஏற்றுக்கொள்வதில்லை. அந்த விடுதியில் சற்று சந்தோஷத்தைக் கொண்டு வர மெக்மர்ஃபி செய்யும் செயல்கள் அவளுக்கு எரிச்சலை மூட்டுகின்றன.

அந்த விடுதியின் கடுமையான செயல்பாடுகளையும் விதிகளையும் மாற்றி, சற்று நெகிழ்வான சூழ்நிலையைக் கொண்டுவர மெக்மர்ஃபி முயல்கிறான். அந்த வருடத்திய பேஸ்பால் உலக ஸீரீஸ் மேட்சுகளைப் பார்க்கவேண்டும் என்றும், அது இரவில்தான் ஒளிபரப்பப்படுவதால், அந்த நேரத்தில் தாங்கள் படுக்கச் செல்லாமல், அந்தப் பந்தயங்களைப் பார்க்க விரும்புவதாகவும் சிஸ்டர் ரேட்சட்டிடம் சொல்கிறான். ஆனால், கல்நெஞ்சம் படைத்தவளான ரேட்சட், அவனுக்கு எந்த முக்கியத்துவமும் கிடைக்காமல், தான் சொல்வதே அங்கு நடக்கவேண்டும் என்பதால், எந்தக் கருணையும் இல்லாமல் அந்தக் கோரிக்கையை மறுத்து விடுகிறாள். மேலும், அங்கு இருக்கும் அனைவரும் விருப்பப்பட்டால், அது நடக்கும் என்றும் சொல்லி, ஒரு வோட்டெடுப்புக்கு ஆவன செய்கிறாள். ஆனால், மெக்மர்ஃபியையும் இன்னொருவரையும் தவிர, வெறு யாரும் இதற்குக் கையை உயர்த்தாததனால், கோரிக்கை நிராகரிக்கப்பட்டு விடுகிறது.

மறுநாளும் மெக்மர்ஃபியின் விடாப்பிடியான பிடிவாதத்தால், ஒரு வோட்டெடுப்பு நடக்கிறது. இதற்குள் அங்குள்ளவர்கள் மெக்மர்ஃபியைச் சற்றுப் புரிந்துகொண்டுவிட்டதனால், பாதிப்பேர் கையை உயர்த்திவிடுகிறார்கள். ஆனாலும், சரியாகப் பாதிப்பேரே வோட்டுப்போட்டதனால், இம்முறையும் அவனது கோரிக்கை ஒத்திவைக்கப்பட்டு விடுகிறது. கடுப்பாகும் மெக்மர்ஃபி, டி.வி முன்னர் சென்று அமர்ந்துகொண்டு, ஒரு பந்தயத்தைப் பார்ப்பது போல் வர்ணனை செய்ய ஆரம்பிக்கிறான். மெல்ல மெல்ல அங்கு ஒவ்வொருவராக வரத்தொடங்குகிறார்கள். அனைவருக்கும் அந்த உற்சாகம் தொற்றிக்கொள்ள, அந்த இடமே சந்தோஷத்தினால் மலருகிறது. அனைவரும் கொண்டாட்டத்தில் குதிக்க ஆரம்பிக்கிறார்கள். இது ரேட்சட்டுக்கு முதல் அடி.

இதுபோல் பல சம்பவங்கள் நடக்கின்றன. ஒருசமயம், மெக்மர்ஃபி அங்கிருக்கும் அனைவரும் வெளியே செல்லும் சமயம், பேருந்தைக் கடத்திக்கொண்டுபோய், அங்குள்ள ஒரு துறைமுகத்துக்குச் சென்று, ஒரு படகில் அனைவரையும் கடலுக்கு அழைத்துச் சென்றுவிடுகிறான். அந்த உலகம், அவர்களை வியப்பில் ஆழ்த்துகிறது. ஒவ்வொருவரும் குழந்தையைப் போல் உற்சாகத்தில் குதிக்கிறார்கள். அவர்களுக்கு மீன்பிடிக்கவும் சொல்லிக்கொடுக்கிறான் மெக்மர்ஃபி.
ஒருநாள், ஒரு சிறிய பிரச்னை, பெரியதாக உருவெடுக்கிறது. இதனைத் தூண்டிவிட்டதற்காக, மெக்மர்ஃபிக்கும் செவ்விந்தியனுக்கும், இன்னும் ஒருவருக்கும், கடுமையான மின்சார அதிர்ச்சி கொடுக்கப்படுகிறது.
இப்படிச் செல்கையில், மெக்மர்ஃபி அங்கிருந்து தப்பிக்கத் திட்டம் போடுகிறான். அங்குள்ள செவிட்டு ஊமையான செவ்விந்தியனைத் தன்னுடன் சேர்த்துக்கொண்டு, மெக்மர்ஃபியின் தோழியான ஒரு பெண் மூலமாக, அவளை விடுதிக்கு மதுபானங்களுடன் வரவழைத்து, விடுதியின் காப்பாளரைக் குடிக்க வைத்து, தப்பி விட முயல்கிறான். அங்குள்ள அனைவரும் குடிக்க, இவனும் அளவுக்கு மீறிக் குடித்து, தூங்கி விடுகிறான்.

மறுநாள் அங்கு வரும் சிஸ்டர் ரேட்சட், அலங்கோலமான அந்தச் சூழ்நிலையைக் கண்டு அதிர்ச்சியாகிறாள். கிட்டத்தட்ட இதுதான் கிளைமாக்ஸின் தொடக்கம்.
அப்போது என்ன நடந்தது? ரேட்சட்டின் கொடுமைகளுக்கு ஒரு தீர்வு கிடைத்ததா? மெக்மர்ஃபி தப்பித்தானா? கடைசியில் என்ன நடந்தது? விடைகாண இப்படத்தைப் பாருங்கள்.

வெகு நேர்த்தியாக எடுக்கப்பட்டுள்ள இப்படம், மனிதர்களின் இயல்பைப் பற்றிய கேள்வியை நம் முன் வைக்கிறது. ரேட்சட் ஏன் அவ்வளவு கல்நெஞ்சத்துடன் நடந்துகொள்ள வேண்டும்? இத்தனைக்கும் அவள் ஒரு செவிலி. ஆனால், கற்பழிப்பு முயற்சிக்காக அங்கு வந்துள்ள மெக்மர்ஃபி, அத்தனை பேருக்கும் நெருங்கிய நண்பனாக மாறி, அவர்களின் நன்மைக்காக முயல்கிறான். இது ஏன்? இக்கேள்விகளுக்கு விடைதேடி நம்மை சிந்திக்க வைப்பது இப்படத்தின் வெற்றி.
மெக்மர்ஃபியாக, நம்ம ஜாக் நிகல்ஸன். மனிதர், அவருடைய அந்த அலட்சிய சிரிப்பை வைத்துக்கொண்டு படம் நெடுகிலும் விளையாடி இருக்கிறார். அறிமுகக்காட்சியில், அவரை விட வரும் போலீஸ்காரரை, துள்ளிக்குதித்து முத்தமிடுவதில் இருந்து, படம் முழுக்க அமர்க்களப்படுத்தியிருக்கிறார். ரேட்சட்டைக் கவிழ்த்துக் காட்டுகிறேன் என்று அனைவரிடமும் சவால் விட்டு, பெட் கட்டி, நம்மைச் சிரிக்க வைக்கிறார். அவர் நடிப்பை நாள் முழுவதும் பார்த்துக்கொண்டே இருக்கலாம் என்பதால், ஒரு முழுமையான சந்தோஷம் நமக்குக் கிடைக்கிறது.
இதற்கு சற்றும் சளைக்காமல், ரேட்சட்டாக நடித்துள்ள லூயி ஃப்ளெட்சரும் பின்னி எடுத்திருக்கிறார். அவரைப் பார்த்தாலேயே, அறைய வேண்டும் போன்ற வெறுப்பு நமக்குக் கிளம்புவது, அவரது நடிப்பின் வெற்றி. அதுவும், மின்சார அதிர்ச்சி வாங்கி, அங்கு வரும் நிகல்ஸனை, எரித்துவிடுவதைப் போல் ஒரு பார்வை பார்ப்பார். வெறுப்பின் உச்சம் அது!

நாவலாக வந்து, பின்னர் படமாக எடுக்கப்பட்ட இப்படம், நம் ஐ.எம்.டி.பி யில், டாப் படங்களின் பட்டியலில், ஏழாவது இடத்தில் இருக்கிறது. ஆனாலும், எனக்கு இப்படத்தில் ஏதோ ஒன்று குறைவதைப் போன்ற ஒரு உணர்வு இருந்தது. நல்ல படம்தான் என்பதில் மறுப்பில்லை. இருப்பினும், ஐந்து முக்கிய ஆஸ்கர்கள், கிளாஸிக் என்ற ஒரு புகழ்இத்தனையும் இப்படத்துக்கு சற்று அதிகமோ என்ற எண்ணம், இப்படம் முடிந்தவுடன் எழும்பியது. இப்படத்தை விட, ஷஷாங்க் ரிடெம்ப்ஷன் எவ்வளவோ மேல். இருந்தாலும், ஆஸ்கரில் அது இருட்டடிப்பு செய்யப்பட்டு, ஃபாரஸ்ட் கம்ப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. என்னைப்பொறுத்தவரை, ஹாலிவுட்டில் எடுக்கப்பட்ட படங்களுக்கு சிகரம் என்று ஷஷாங்க்கைத்தான் நான் கருதுகிறேன். ஐ.எம்.டி.பியிலும், அதன்பின் எடுக்கப்பட்ட பல சர்வேக்களிலும், ஹாலிவுட் ரசிகர்கள் இப்படத்தையே இன்னமும் நம்பர் ஒன் என்று தேர்ந்தெடுத்து வருகின்றனர். இருப்பினும், ஆஸ்கரில் நிலவும் அரசியல் காரணமாக இப்படம், முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டது. இடைபோலத்தான் இந்தக் குக்கூ படத்துக்கும் அதிக முக்கியத்துவம் கிடைத்துவிட்டதோ என்று இப்படம் முடிந்தவுடன் எண்ணத்தோன்றியது (எனது கருத்து, தவறாகவும் இருக்கலாம்; உங்களுக்கு இப்படம் மிகவும் பிடித்தும் போகலாம்).
எப்படியோ, இது ஒரு நல்ல படம் என்பதில் சந்தேகமில்லை.

இப்படத்தின் டிரைலர் இங்கே.

பி. கு இப்படத்தில் நடித்த நிகல்ஸன் ஸ்காட்மேன் க்ரோதர்ஸ் ஜோடி, த ஷைனிங்கிலும் (1980) நடித்திருக்கும். அதில் அமானுஷ்ய சக்தி பெற்றவராக வரும் க்ரோதர்ஸ், இதில் ஒரு ஜொள்ளரான இளிச்சவாய்க் காப்பாளராக நடித்திருப்பார். அதிலும், அனைவரும் அவரது அறையில் ஒளிந்திருக்கும்போது, இருட்டில், அவரைத்தேடி, வெளியே இருந்து ஒரு நர்ஸ் கத்த, உள்ளே மயான அமைதியில், மெக்மர்ஃபி கடுப்பில் அவர் ஏன் பதிலளிக்க மறுக்கிறார் என்று கேட்க, அதற்கு திடீரென்று ஒரு குரல் மட்டும் டேபர் என்ற ஆள் கொடுத்த பதிலையும், அதற்கு நம் க்ரோதர்ஸின் உடனடி reactionஐயும் பார்த்து, விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டிருந்தேன். படத்திற்கு சம்மந்தமே இல்லாத ஒரு காமெடி பீஸ் அது. நம்ம சிவாஜி படம் வெகு சீரியஸாகப் போய்க்கொண்டிருக்கும்போது, ரஜினி குரலில் அனைவரும் மிமிக்ரி செய்வதைப் பார்த்து, சிரிப்பு வருமே.. அதைப்போன்றது இது. ஆனால், படத்தில் இந்த டயலாக், பத்தே செகண்டுகள் தான் வரும். இருப்பினும், மிஸ் பண்ணவே முடியாத ஒரு காமெடி இது. இதோ அந்த வசனங்கள். . படத்தைப் பார்த்து சிரித்துக்கொள்ளவும்.
Night Nurse: Mr. Turkle?
McMurphy: Where the fuck is he, why doesn’t he answer her?
Taber: He’s jerkin’ off somewhere.
Orderly Turkle: Ain’t no one jerkin’ off nowhere muthafucker!
McMurphy: Turkle what the fuck are you doing in here? Go out and talk to her.
Orderly Turkle: I’m doin’ the same fuckin’ thing your doin’- hidin’ ! s

1 comment:

sathishsangkavi.blogspot.com said...

நல்லாயிருக்க உங்க விமர்ச்சனம்...