Tuesday, August 17, 2010

Date Night – 2010 – ஆங்கிலம் - திரைவிமர்சனம்

அமெரிக்காவில் நகரத்திற்கு வெளியில் வசிக்கும் ஒரு சாதாரண குடும்பம். கணவன், மனைவி மற்றும் மூன்று குழந்தைகள். கணவனுக்கும், மனைவிக்கும் வாழ்க்கையில் ஒரு சந்தோசம்/பொழுது போகாமல் இருப்பதால் அதை சரி செய்ய இருவரும் முடிவு எடுக்கின்றனர். குழந்தைகளை வீட்டில் விட்டு, நகரத்திற்கு வெளியே ட்டே செய்ய வருகின்றனர். முதலில் இரவு உணவு அருந்த முடிவு செய்து ஒரு உணவகத்திற்கு செல்ல அங்கே அமருவதற்கு இடம் இல்லாமல் திண்டாடும் போது, ஏற்கனவே அங்கே யாரோ பதிவு செய்த இடத்தை பயன் படுத்தி உணவை முடிக்கின்றனர். பிரச்சனையே அங்கு தான் ஆரம்பிக்கிறது. இரண்டு பெரும் தலைவர்களுக்கு இடையே நடக்கும் பிரச்சனையில் முக்கிய புள்ளியாக இருக்கும் ஒருவன் தான் இந்த உணவகத்தில் பதிவு செய்து விட்டு, வாராமல் போனது. கணவன் மற்றும் மனைவி அங்கு அமர, ஒரு தலைவனுடைய அடியாட்கள் அவர்கள் இரண்டு பேரும் தான் அவர்கள் தேடும் நபர்கள் என்று நினைத்து விரட்ட ஆரம்பிக்கின்றனர். இரண்டு தலைவர்களின் பிரச்சனை என்ன, கணவன் மற்றும் மனைவி இரண்டு பேரும் எப்படி அவர்கள் இடம் இருந்து தப்பித்தனர் என்பதே இப்படத்தின் கதை. 

இரண்டு தலைவர்களுக்கு இடையில் நடக்கும் பிரச்சனை என்றால் பொதுவாக சீரியஸ் ஆக தான் இருக்கும். ஆனால் இப்படம் இரவு வேளையில் ஆரம்பிப்பதால் அமெரிக்காவின் இரவு விடுதியின் ஆட்டங்கள் மற்றும் அவர்களின் கலாச்சாரம் என்னவென்பதை காட்டி, படத்தை ஒரு நகைச்சுவை படமாக கொடுத்து உள்ளனர். படத்தினுடைய ஒவ்வொரு வசனத்தையும் அறிந்தோம் என்றால், தானாகவே சிரிப்பு வருவது உறுதி. படத்தை கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம்.

No comments: