Monday, September 21, 2009

உன்னை போல் ஒருவன் - திரைவிமர்சனம்

மும்பை போலீஸ் கமிஷனருக்கு ஒரு தொலைபேசியில்,  6  இடத்தில் வெடிக்குண்டு வைத்து இருப்பதாகவும், அதை வெடிக்க வைக்காமல் இருக்க  4 தீவிரவாதிகளை விடுவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்க படுகிறது. அரசு இதற்கு சம்மதிக்க இரண்டு போலீஸ் துணையுடன் அனுப்பி வைக்க படுகின்றனர். குறிப்பிட்ட இடத்திற்கு சென்ற உடன் போலீஸ் ஒரு தீவிரவாதியை மட்டும் வைத்து கொண்டு மூன்று தீவிரவாதிகளை மட்டும் அனுப்பி வைக்க மூவரும் கொல்ல படுகின்றனர். அந்த தொலைபேசி குரல் இதை தெரிந்து கொண்டு, கடைசி தீவிரவாதியையும் போலீஸே கொலை பண்ண சொல்ல அவர்கள் என்ன செய்தார்கள், ஏன் மற்ற மூன்று பேரும் கொலை செய்ய பட்டனர் என்பதும், கடைசி தீவிரவாதிக்கு என்ன கதி என்பதும் முடிவு.

இக்கதை ஹிந்தி திரைப்படமான "வேட்நேஸ்டே" கதை. இதையே கமல் மிக சில மாற்றங்கள் செய்து தனது பாணியில், தனது எழுத்தையும் சேர்த்து கொடுத்து உள்ள படம். இதற்காக இந்தியாவின் மிக சிறந்த நடிப்பு சிகரங்கள் ஆனா கமல்ஹசன், மோகன்லால் இணைந்து உள்ளனர்.

கமல்:

தசாவதாரம் படத்திற்கு பிறகு, தன்னுடைய சமூக எண்ணத்தை கதையின் மூலமாக சொல்வது மட்டும் இல்லாமல், வசனமாகவும் வைத்து அரசாங்கத்திற்கு தீவிரவாதத்தை பற்றி நெற்றியில் அடித்தார் போல் கூறி இருக்கிறார்.  தக்காளி வாங்குவதும், மடிக்கணினியை வைத்து போலீஸ் மிரட்டுவதும், ஓட்டு பதிவில் தன் பெயர் இல்லாத ஒரு சாதரண தனிநபர் என்று கூறுவதும், தீவிரவாதத்தை அழிக்க அவர் கடைசி நிமிட வசன காட்சிகள் ஆகட்டும் கமலுக்கு நிகர் கமல் மட்டும் தான் என்பதை மறுபடியும் காட்டி விடுகிறார்.

மோகன்லால்:

மீண்டும் ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்து, கமலுக்கு நானும் குறைந்தவன் இல்லை என்பதை நிரூபிக்கிறார். முடிவு காட்சியில் ஒரு சாதரண மனிதர் ஆக கமலை பார்த்து, வீட்டிற்கு போக உதவ வேண்டுமா என்று கூறும் போது மனதில் நிற்கிறார். இருவர் படத்திற்கு பிறகு இவர் இத்திரைப்படத்தில் என்பது தனி சிறப்பு தான்.. தமிழ் நாட்டு தாயரிப்பாளர்கள்/ இயக்குனர்கள் இவரை பயன்படுத்தி கொள்ளவில்லை என்று தான் கூற வேண்டும்.

தீவிரவாதம், பெண் கொடுமை, மதவெறி என்று பல விஷயங்களை யார் மனதும் புண் படாமல், எந்த ஒரு சமூகத்தையும் குறிப்பிடாமல் வசனத்தால் புரியவைத்து, ஒரு தனி மனித கோபம் என்பது எவ்வளவு அதிபயங்கர ஆனது என்பதை காட்டி  யோசிக்கவும் வைக்கிறார்...

படத்தோடு ஐயக்கியம் ஆகி விட்டதால் இசை வந்ததும்/ போவதும் தெரியவில்லை. படத்தின் இன்னொரு முக்கிய அம்சம் ஒளிப்பதிவு.

குறை இல்லாமல் நிறைவு இருக்காது என்பதற்காக, ஹிந்தி மொழியில் ரசித்து பார்த்து விட்டு இப்படத்தை காணும் போது, ஹிந்தி படத்தின் ஒரு சில காட்சிகள் மனதில் ஓடுவது நிதர்சன உண்மை.

ஓர குறிப்பு: சில வருடங்களுக்கு முன்பாக ஸ்ரீ மாணிக்க விநாயகர், ஸ்ரீ மாப்பிள்ளை விநாயகர் திரைஅரங்குகள் மதுரை மக்களின் மனதில் முதல் இடத்தில் இருந்தது. ஆனால் இன்றோ குப்பை கூளமாக தான் காண முடிகிறது.

1 comment:

Ramkumar said...

இப்படத்தின் வசனகர்த்தா எழுத்தாளர் திரு. இரா. முருகன் அவர்கள்.