Monday, September 21, 2009

பசி - ஒரு கதை இரு முடிவு - சிறுகதை

இரவு 7 மணி, மேகம் பனி மூட்டத்துடனும், வானவில் உடனும் இருள் சூளும் நேரம் இரண்டு வயது குழந்தை அதன் கையில் இருக்கும் சிறிய பந்துடன் புகைவண்டி வழித்தடம் அருகில் இருக்கும் மின் அரைக்கம்பம் வெளிச்சத்தில் எந்த வித பயமும் இல்லாமல் விளையாடிக் கொண்டு இருந்தது. அவ்விடம் மதுரை சோழவந்தான் அருகில் என்பதால் கண்ணுக்கு எட்டும் தூரம் வரை ஒருவரும் இல்லை. மிக அமைதியான சூழலில் குழந்தையின் மழலை சிரிப்பு மட்டுமே காதுக்கு எட்டியது

அக்குழந்தைக்கு பசி ஏற்பட்டதும் பந்தை தள்ளிவிட்டு மெதுவாக அழ தொடங்கியது. யாருக்கும் தெரியாமல் அருகில் படுத்து இருக்கும் அக்குழந்தையின் அம்மா மெதுவாக எழுந்து குழந்தையை அனைத்து கொண்டாள். அந்த அணைப்பு குழந்தையின் மீதான பரிசுத்தமான வெள்ளை பாசத்தை காட்டியது. பசி தீர தன் உயிரை பாலாக ஊட்டினால். மீண்டும் குழந்தையை விளையாடும் இடத்தில் விட்டு விட்டு, கையில் பந்தை கொடுத்து விட்டு ரசித்து கொண்டே படுத்துக் கொண்டாள்.

இரவு 9 மணி... பல்வேறு தரப்பட்ட மக்களை,  வாழ்வில் முன்னேற அவர் அவர்களின் கற்பனை நதிகளோடு இருக்கும் அவர்களை கொண்டு மாநிலத்தின் தலைநகரை நோக்கி பாண்டியன் புகைவண்டி வேகமாக பயணித்து கொண்டு இருந்தது.  புகைவண்டியின் சத்தத்தை குழந்தை கேட்டு பயந்து அழ தொடங்கியது. ஆனால் அக்குழந்தையின் அம்மா மட்டும் இப்போது வரவில்லை.

முடிவு: ஒன்று

சிறிது நேரம் ஆகியும் தாய் வராததால், தாய் இருக்கும் இடத்தை நோக்கி குழந்தை ஊர்ந்தது. புகைவண்டி வெகு தூரம் போய் விட்டதால், குழந்தையின் அழு குரல் நெஞ்சை உலுக்கும் அளவுக்கு இருந்தது... குழந்தையின் கையில் அம்மாவின் தலைமுடி கிடைக்க மெதுவாக இழுக்க ஆரம்பித்தது. ஆனால் அந்த இழுப்புக்கே தாயின் தலை மட்டும் குழந்தையின் கைக்கு வர உடல் தண்டவாளத்தில்...

முடிவு: இரண்டு

குடிபோதையில் அவ்வழியில் செல்லும் காமகொடுரனால் சீரழிக்கப்பட்டு கொண்டு இருந்தாள். அவளின் முதல் சத்தம் புகைவண்டியின் சத்தத்தில் காணமல் போயிற்று.  சீரழிக்கப்படும் போது, அடுத்த வண்டியில் தற்கொலையை  நினைத்து கொண்டே குழந்தையை பார்க்க அவள் கண்ணில் கண்ணீர் வருது நின்று இரத்தம் வர தொடங்கியது...

No comments: