நேற்று முதல் வேலை செய்யும் இடம் கந்தன்சாவடியில் இருந்து தாம்பரம் சானிடோரியத்திற்கு மாற்றப்பட்டது. சைதையில் இருந்து நான் வேலை செய்யும் கட்டிடத்திற்கு வர அய்யோ! என்னவென்று நான் சொல்ல.
சைதை முதல் தாம்பரம் சானிடோரியம் - உள்ளூர் புகை வண்டி.
தாம்பரம் சானிடோரியம் முதல் தொழிற்பேட்டை நுழைவாயில் – நடந்து .5 கி.மீ.
தொழிற்பேட்டை நுழைவாயில் முதல் நான் வேலை செய்யும் கட்டிடம் - பேருந்து வண்டி.
வடிவேலு வடிவில் "இப்பவே கண்ண கட்டுதே!". எப்படி சமாளிக்க போகிறேன் என்று தெரியவில்லை.
1 comment:
சென்ற வாரம் பெங்களூர்-ல் இருந்து சென்னை-க்கு காரில் வர நேர்ந்தது.
நான் வேலை செய்யும் இடத்திலிருந்து பெங்களூர் நகர நுழைவு வாயில் வரை வர ஒன்றரை மணி நேரம் ஆனது. பின்பு அங்கிருந்து சென்னை மதுரவாயல் வரை வர மூன்று மணி நேரமே ஆனது, மதுரவாயலில்ருந்து அசோக்நகர் அருகில் உள்ள என் அண்ணன் வீட்டிற்கு வர ஒன்றரை மணி நேரம் ஆனது, இத்தைனைக்கும் நான் வந்து சேர்ந்த நேரம் இரவு பதினொரு மணிக்கும் மேல். நானும் சென்னை-ல் ஐந்து வருடம் இருந்துள்ளேன், இவ்வளவு நெரிசல் மிகுந்த சென்னை-யை பார்த்ததே இல்லை. சென்னை நேற்று போல் இல்லை. மீண்டும சென்னை வரவே பயமாக இருக்கிறது.
Post a Comment