Sunday, December 07, 2008

ஆர்.ஆர்.ஆர். இல்லம்

கல்லூரி வாழ்க்கை என்பது மாணவர்களின் கனவுகள் நிறைந்த சொர்க்கம். படிப்பு அறிவு, சில அனுபவ அறிவு பெற்றாலும், கிடைக்க கூடிய மற்றொரு மிக பெரிய சொத்து நண்பர்கள். பொதுவாக கல்லூரி வாழ்க்கை என்பது சிலருக்கு மூன்று வருடமும், மற்றும் சிலருக்கு நான்கு வருடமும் இருக்கும். இதில் எனக்கு விதிவிலக்காக மூன்று விதமான கல்லூரி வாழ்க்கை கண்டேன். முதலாவதாக தொழில்நூட்ப கல்லூரி, இரண்டவதாக பொறியியல் கல்லூரி. மூன்றவதாக நான் குறிப்பிடவது ஆர்.ஆர்.ஆர். இல்லத்தில் வாழ்ந்த வாழ்க்கை. எனது 2ம் பணியின் காரணமாக இருப்பிடத்தை வில்லிவாக்கத்தில் இருந்து மாற்ற வேண்டிய சூழ்நிலை ஆனது. தொழில்முறையாக நட்பு கிடைத்த "யோக ஆனந்த" மூலமாக ஆர்.ஆர்.ஆர். இல்லத்தில் ஐயக்கியமானேன். அதன் பிறகு அவரின் மூலமாக ஒன்றின் பின் ஒன்றாக “அலி”, “சக்திவேல்”, “செந்தில்”, “பிரபு”, “ஜெகரீன்” ஆகிய பறவைகள் ஒரே கூட்டில் வாழ தொடங்கினோம். சென்னையில் தனியாக பிழைக்க வந்த போது எனது குடும்பத்தை பிரிந்த ஆழ்ந்த சோகம் இக்கூட்டு பறவைகளால் காணமால் போனது. ஒவ்வொரு பறவைக்கும் ஒவ்வொரு பிரச்சினைகள் இருந்தாலும் வெளியில் காட்டி கொள்ளும் சந்தர்பம் கிடைக்கவில்லை. கல்லூரி வாழ்க்கை போல சந்தோஷமாக இளமையுடன் அனுபவித்து வாழ்ந்தோம். 3.5 ஆண்டுகளுக்கு (26-டிசம்-2004 to 30-மே-2008) பிறகு, சில பறவைகள் தனது வாழ்க்கையின் மூன்னேற்ற படிகளை கண்டு இக்கூட்டில் இருந்து பறந்து சென்றதை போல நானும் எனது 3ம் பணியின் நிமித்தமாக அக்கூட்டில் இருந்து பறந்து தனி இல்லத்தில் வாழ தொடங்கினேன். இந்த இல்ல நட்பு பயணம் 3.5 ஆண்டுகள் இருந்தாலும் எனது தொடரில் காலத்தில் மறக்க முடியாத நாட்கள்.

No comments: