Friday, December 26, 2008

சுனாமி

தமிழ்நாட்டையே உலுக்கி எடுத்த சம்பவம்... லட்சக்கணக்கில் மக்கள் உயிரை கடல் அன்னை எடுத்த நாள்.. நான்காம் நினைவு ஆண்டு இன்று.

இதே தினத்தன்று எனக்கும் ஏற்பட்ட அறிய ஒரு அனுபவம் இது...மழை பெய்யும் நேரத்தில்,மழை வெள்ளத்தில், மக்கள் வெள்ளத்தில் பொதுவாக நண்பர்கள் யாரும் போக விரும்ப படமாட்டர்கள். ஆனால் விதிவிலக்காக நான் மட்டும் அவ்விடத்திற்கு சென்று ஒரு அனுபவத்தை பெற்று கொள்ள விரும்புவேன். ஏன்னொன்றால் இது போன்ற பிரச்சினைகள் வந்தால் எப்படி சமாளிக்க வேண்டும் என்று தெரியும் என்ற எண்ணம் எனக்கு. அப்படிப்பட்ட சிந்தனைகளை கொண்ட நான், இதே நாள் 4ம் ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட நிகழ்ச்சியை மீண்டும் நான் சந்திக்க விருப்பவில்லை.

சென்னையில் முதல் முதலாக நான் தங்கிய இடம், வில்லிவாக்கத்தில் உள்ள ஆண்கள் விடுதி. அன்றைய தினத்தன்று இன்றைய புதுமாப்பிள்ளை கார்த்திக் ஷந்த், புதிய வீட்டின் முதலாளி ராஜேஷ் (50), மற்றும் நான் அதிகாலையில் நன்றாக உறக்கி கொண்டு இருந்தோம்...நேரம் சரியாக தெரியவில்லை என்றாலும் காலை 6:30 மணி அளவில் எனது கட்டில் குலுங்கியது. கட்டில் அருகில் சற்று குண்டான புதுமாப்பிள்ளை படுத்து இருந்ததால் நான் அரை உறக்கத்தில் அவர் கால் பட்டு தான் ஒருவேளை கட்டில் ஆடியதோ(வடிவேலுவை போன்று என்ன சின்னப்புள்ள தனமா இருக்கு, ரஷ்கல்) என்று நினைத்து மீண்டும் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றேன்.

சுமார் காலை 7:15மணி அளவில் எனது வீட்டிலிருந்து கைதொலைப்பேசியில் அழைத்து சென்னையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை பற்றி கூறி, பாதுகாப்பாக உள்ளமா என்று உறுதி செய்து கொண்டார்கள். அப்போது தான் தெரிந்தது கட்டில் ஆடியது புதுமாப்பிள்ளை உதைத்ததால் அல்ல உண்மையில் நிலநடுக்கத்தால் என்று. மற்ற இருவரும் தரையில் உறங்கி கொண்டு இருந்ததால் அவர்களுக்கு நிலநடுக்கத்தை பற்றி தெரியவில்லை. எங்களுக்கு தெரிந்து நிலநடுக்கம் என்றால் வீடுகள் இடிந்து, தரையில் பிளவு இருக்கும் என்று மூவரும் உடனடியாக வெளியில் சென்று பார்த்தோம். ஆனால் அப்படி எதுவும் இல்லை. அதனால் கவுண்டமணி போல் அரசியல்ல இதுஎல்லாம் சதாரணம் அப்ப என்று நினைத்து அன்று வேலைக்கு சென்ற போது சுமார் மதியம் 12:30 மணி அளவில் சுனாமியின் கொடூரதண்டவத்தையும், லட்சக்கணக்கில் மக்கள் உயிர் விட்டதையும் அறிந்து கொண்டேன். அதனுடைய தீவிரத்தை புரிந்து கொண்டேன்.

நிலநடுக்கம் என்ற அனுபவம் எனக்கு புதியதாக இருந்தாலும், இதை மீண்டும் ஏற்கும் எண்ணம் எனக்கு இல்லை. இது போன்ற அகோர சம்பவம் மீண்டும் நடக்காமல் இருக்க, உயிர் மாண்டவரின் ஆத்மாவுக்கும் சேர்த்து இறைவனை வணங்குகிறேன்.

No comments: