Wednesday, December 24, 2008
மார்கழி
சென்ற ஞாயிறுக்கிழமை திடீரென அதிகாலை 5:30 மணிக்கு தூக்கம் கலைந்து. மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலின் பிப்ரவரி மாத குளிர் அப்போது என்னை வருடி கொண்டு இருந்தது. ஏதோ ஒரு பாட்டு சத்தம் மட்டும் கேட்டது. நானும் அச்சத்தம் என்னவென்று பார்க்க வெளியில் சென்று பார்த்த போது தான் மார்கழி மாதம் என்றே நினைவுக்கு வந்தது. கோவிலில் ஆண்டாள் திருப்பாவை பாடுவதும், வெளியில் பஜனை பாடுவதும் மார்கழி மாத சிறப்பு அம்சம். ஒரே ஒரு வருடம் நான் மார்கழி மாதத்தில் கோவிலுக்கு சென்று உள்ளேன். இப்போது அதை நினைத்தால் நகைப்பு தான் வருகிறது, என்னென்றால் அது பத்தாவது படிக்கும் பருவம். நான் ஏன் சென்றேன் என்று இப்போது தெரியவில்லை. ஒருவேளை அதிக மதிப்பெண் வரவேண்டும் என்பதனாலோ அல்லது அங்கு தரப்படும் பொங்கலுக்குகாவோ அல்லது ஒரு அனுபவம் வேண்டும் என்பதற்க்குகாவோ அல்லது உண்மையிலே கோவிலுக்கு சென்றேனோ. வருடாவருடம் மிக சிறப்பாக இது நடக்கிறது. இந்த விழாவை ஆன்மிக வாதத்தில் மூலம் என்னால் அதன் பலன்களை விளக்க தெரியாது. ஆனால் கண்டிப்பாக பலன் மட்டும் இருக்கும் என்பது உறுதி. சந்தேகம் இருந்தால் நீங்களும் ஒரு மார்கழி மாதத்தில் விடியற்கால பொழுதில் கோவிலுக்கு சென்று பாருங்களேன்
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
எனது துணைவியாரை நான் மணந்து கொள்ள மிக முக்கிய காரணங்களில் ஒன்று அவர் ஒவ்வொரு வருட மார்கழி மாத காலை வேளைகளில் ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலிக்கு சென்று ஆண்டாள் திருப்பாவை பாடுவார் என்பதால். இதுவும் தமிழ் கலாச்சாரங்களில் ஒன்று தானே...
Post a Comment