Sunday, November 16, 2008

மாற்றங்கள் 2: பெங்களூரு பயணம்

இதோ! மீண்டும் 2 நாள் கல்லூரி வாழ்க்கை. 4.5 வருடம் ஆகியும் தொடரும் ஒரு நட்பு பயணம். இதில் மனம் அறியா ஒரு மகிழ்ச்சி. அன்று கண்ட நண்பர்கள் இன்று காணும் போது இருந்த மாற்றங்களும், இச்சிறு சுற்றலா பற்றியும் வெளிபடுத்த நான் கண்ட ஒரு வழி இது. முதலில் இதை எழுத்து வடிவில் தொடங்கிய போது 20 பக்கத்துக்கும் மேல் சென்றது. ஆனால் இங்கு முக்கிய சம்பவங்களை மட்டும் தான் நீங்கள் காணுவீர்கள்.

உடல் நலகுறைவு என்று ஒரு வாரமாக இருந்தாலும், எங்களுடன் கலந்து கொள்ள, 2 புரோட்டாவும், அதனுடன் ஒரு கோழி குருமா, ஒரு கோழி தொடை கறி என்று சாப்பிட்டு, உடலை சரிசெய்து கொண்டு வந்த நண்பனும்,

நாங்கள் சாப்பிட்டாமல் மயக்கத்தில் இருக்கும் போது, அவரது தந்தை தொலைபேசியில் அழைத்து போது 2 தோசை சாப்பிட்டத்தாக கூறும் தோழனும்,

பல் வலியை சரி செய்ய ரூ. 700 செலவு செய்து, பெங்களூரில் பெரியவர் செய்த ஆட்டு மாமிசத்தை சாப்பிட வந்த நண்பனும்,

வெளிநாடு சென்றுவந்ததை, எங்களுக்கு காட்ட வேண்டும் என்றே எங்களுடன் சேர்ந்து வந்த தோழனும்,

நாங்கள் சாப்பிட்ட பணத்தை காட்ட சென்ன போது, சுருக்கு பையிலிருத்து ரூ.1 காட்டி (2 வருடங்களுக்கு முன்னால் அதே சுருக்கு பையிலிருத்து 25 பைசா காட்டியவர்... நல்ல முன்னேற்றம்.... காரணம் கேட்டால் பணவீக்கமாம்), வராத
தொலைபேசியை வந்ததாக கூறி கொண்டு வெளியில் ஓடும் தோழனையும் அழைத்து கொண்டு சனிக்கிழமை விடிவதற்கு முன்னால் சென்னையிலிருத்து கிழம்பினோம்.

பெங்களூரில் நாங்கள் சென்ற இடம் (பன்னர்கட்டா தேசிய பூங்கா, பந்தை உருட்டி விட்டு விளையாடும் இடம், நாகரீக மற்றும் பணக்காரக்களின் வியாபரா சந்தை) என்னவோ செல்லும்படியாக இல்லாவிட்டாலும், வானவில்லின் அனைத்து நிறத்தையும் எங்களால் காண முடிந்தது. நாங்களே எதிர் பார்க்கமால் அந்நகர நண்பர்கள் அனைவரும் கூடியது தான் எங்களுக்கு ஆச்சரியம். உதாரணமாக அந்நகரில் 1.5 ஆண்டுகளாக தொலைபேசியில் மட்டும் பேசிகொண்டு இருந்தவர்கள் எங்களுக்காக கூடியது போது நேரடியாக பார்த்து பேசியது அனைவருக்கும் ஆச்சரியம்.

பெங்களூரில் எங்களுக்கு சிறு சிரமம்கூட ஏற்படவில்லை. கல்யாண ஆன 2 பேர், அவர்களுக்கு அலுவலக பணிகள் இருந்தாலும் எங்களுடன் கூடி பிரம்மச்சாரியாக அவர்களும் சந்தோஷமாக இருந்ததும்,

கல்யாணத்திற்கு பெண் கிடைக்கவில்லை என்று கவலையுடன் இருந்தும், எங்களுடன் மகிழ்ச்சியாக இருந்துவிட்டு, கடைசியாக நிழற்படத்தை பார்த்தவுடன் சுயநினைவிற்கு வந்ததும் (நிழற்படம் வெளியாகி தனக்கு பெண் கிடைக்காமல் போய்விடும் என்ற பயத்தில்)...

2 பேரை செல்லமுடியாத வார்த்தைகளில் கேவலபடுத்திருந்தாலும் (பின்னர் எப்போதும் ஒருவர் பின்னால் ஒருவர் நிற்பது, அதோடு இல்லாமல் இருவர் மட்டுமே தனியாக பேசி கொள்வது), இதை நீங்கள் செல்லாமல் வேறு யார் என்னை கேவலபடுத்த முடியும் என்று செல்பவர்களும்,

கல்லூரியில் ஒரு பெண் பித்தனாக இருந்த கடலை மன்னன், அப்படியே இன்றும் ஒரு விளம்பர மாதிரியாக இருக்கும் ஆணழகனும்,

குரங்கு தனமாக கல்லூரியில் விளையாடி கொண்டிருந்த நண்பர், இன்று திடமான முடிவுகளை எடுப்பதை பார்க்கும் போதும்,

கேரளா மாநில தோழர்கள் 3பேர் இருந்தாலும், ஒருவர் தனது பங்களிப்பை கொடுத்தது மகிழ்ச்சியுற செய்தது.

இதைவிட ஆச்சரியம், வட இந்தியாவிலிருந்து அலுவலக வேலையாக ஒரு நண்பர் வந்து இருந்தாலும், என்னமோ! எங்களுடன் ஒன்று கூட வந்ததுபோலிருந்தது.

ஒரு முழுமையான குடும்ப வாழ்க்கை வாழும் ஒரு நண்பர் நாங்கள் புறப்படம் நேரத்தில் கூட ஒரு விருந்தினை வைத்து அனுப்புவது என்று சொல்ல முடியாத வார்த்தைகள்.

இதற்கு முன்னால் சென்ற கொடை, மூணாறு சுற்றலாதளத்தை விட, சிறப்பாக அமைந்தது இதன் சிறப்பு. இதை போல் இன்னொரு சுற்றலா எப்போது அமையும் என்ற கேள்வியுடன் சென்னைக்கு கிளம்ப புகைவண்டி ஏறினோம்.

4 comments:

Anonymous said...

Dei,

Idhu ellam thousands much !!!!!!

வெளிநாடு சென்றுவந்ததை, எங்களுக்கு காட்ட வேண்டும் என்றே எங்களுடன் சேர்ந்து வந்த தோழனும்,

Mohan Dass said...

மாமா சூப்பர் ... கலக்குற ... வயசானாலும் உன் அலும்பு பேச்சு மாறவே இல்ல..Keep it up.....

BY
P.Mohan Dass.

Unknown said...

super mama ....Cheranukku Assistanta join puneeru....

வைகையின் சாரல் (Vaigaiyin Saral) said...

Thanks a lot for you comments guys.