நான் சைதாப்பேட்டையில் தனியாக ஒரு வசந்தமாளிகையை வாடகைக்கு எடுத்து குடிபோன போது ஏற்பட்ட அனுபங்கள் பல. வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க தாயரித்த பட்டியல் கண்டு அதிர்ந்து போனேன். இதனை விட பெரியகொடுமை என்றென்றால் மின்சாதன பொருட்களை சரியாக மாட்டிவிடுவது. எனது தந்தை மின்சாரவாரியா ஊழியர் என்பதால், வீட்டிற்கு தேவையானவற்றை அவரது நண்பர்கள் பார்த்து கொள்வார்கள். இதனால் எனக்கு மின்சாதன பொருட்களை பற்றி தெரியாமல் போய்விட்டது. அதனால் இன்று வசந்தமாளிகையில் குடிபெயர்ந்த போது நான் பட்ட கஷ்டங்கள் வெளியில் சொல்லமுடியாது. இதில் நான் ஒரு கணிப்பொறி மென்பொருள் வல்லுநர் வேறு, மின்விசிறி கூட மாட்ட தெரியவில்லை.
இதை விளையாட்டு தனமாக நான் எடுத்துக்கொள்ளவில்லை. இதற்கு காரணமாக நான் கருதுவது, அடிப்படை கல்வி பயன்றவிதம். 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை, துளிஅளவு கூட தொழில் முறையான கல்விஅறிவு இல்லை என்பது எனது வாதம். 12ம் வகுப்பு படித்த மாணவனுக்கு/மாணவிக்கு, இச்சமூகம் ஒரு அங்கீகராம் அளிக்கிறது. ஆனால் அவர்களுக்கு ஒரு மிதிவண்டி வாகனம் பழுது அடைந்தால் என்ன பழுது என்று கூட அவர்களுக்கு கண்டுபிடிக்க முடியவில்லை மற்றும் மின்விசிறி கூட மாட்ட தெரியவில்லை. இப்படி வாழ்க்கைக்கு தேவையான சிறுசிறு விஷயங்களுக்கு கூட அடுத்தவரின் உதவியை நாட உள்ளது. இதை நினைத்து இச்சமூகம் வெட்கபட வேண்டும். நமது கல்வி முறை வாழ்க்கை நடைமுறையை பின்பற்ற வேண்டும். நமது நாடு இன்னும் வேகமாக வளர இது வழிவகுக்கும்.
வாழ்க வளமுடன்
No comments:
Post a Comment