Wednesday, October 29, 2008

நல்ல கேள்வி

73 வயதான என் தாத்தா ஈழ தமிழர்களின் செய்தியை பார்த்து கொண்டே, ஒரு பிரச்சனையை பற்றி கேள்வி எழுப்பினார். எனக்கு பதில் சொல்ல இயலவில்லை. அக்கேள்வி "உண்மையான தமிழன் யார்?". தமிழ் பேசுபவர்கள் அனைவரையும் தமிழன் என்று கூறமுடியாது. நீங்கள் இக்கருத்தை ஏற்றுகொள்வீர்கள் என நம்புகின்றேன். பின்னர் எதை வைத்து கொண்டு தமிழனை அடையாளம் காண்பது.

உதாரணமாக தமிழ் மொழியை வளர்த்தில் மதுரை மாநகருக்கு முக்கிய பங்கு உண்டு. மதுரையை ஆண்ட பாண்டிய மன்னருக்கு பிறகு திருமலை நாயக்க மன்னர்கள் ஆண்டு வந்தனர் என்பது வரலாறு. திருமலை நாயக்க மன்னர்கள் யார் என்று ஆராய்ந்து பார்த்தால், அவர்கள் தமிழர்கள் அல்ல. பின்பு யார் தமிழன்?

இன்று ஈழ தமிழர்களுக்காக என்று நாம் பொருள், உடை,உணவு என்று ஆகியவற்றை இப்போது தருகிறோம். நான் இவற்றை தருவது தவறு என்று கூறவில்லை. ஆனால் அவர்கள் தமிழர்களா?

3 comments:

Anonymous said...

மன்னர்கள் தானே மாறினார்கள் மக்கள் இல்லையே !! ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன்பு தமிழ் நாட்டையும் இலங்கையின் ஒரு பகுதியை ஆண்டு கொண்டு இருந்தவர்கள் தமிழ் மன்னர்கள்தான். இலங்கையின் வரலாற்றை சற்று புரட்டிப் பாருங்கள் விடை கிடைக்கும்....

BadhriNath said...

Thamizh pesaravan thamizhan ille.

thamizh kalacharathai madhikkaravan, adhaip padi nadappavan thamizhan

I feel bad when italian lady is called annai, And more so when i see banners like "vaarungaL RahulJI"

ivanungalaam thamizhanungalanu thonardhu.....

Mohan Dass said...

நண்பா நாம் தான் தமிழர்கள் ... நீ எங்கு சென்று நிரந்தரமாய் தங்கினாலும் தமிழ் நாடு என்று எங்காவது கேட்டவுடன் உனக்குள் ஒரு உணர்வு தோன்றுகிறதல்லவா ... அதுதான் அந்த உணர்வு தான் தமிழன்...மற்றபடி நாம் அனைவரும் மனிதர்களே ... உன் சகோதரனை உன் பக்கத்து வீட்டுக்காரன் அடிக்காதவரை அவன் உன் நண்பன் ஆனால் அவன் உன் சகோதரனை துன்பப்படுத்தும் போது அவன் உன் பகைவன் இதுதான் மனித இண குணம் ... துன்பபடுபவர்கள் தமிழர் அல்ல என்ற போதிலும் இரக்ககபடுவோம் அவர்களும் மனிதர்கள் தான். ...