Thursday, October 02, 2008

சொர்க்கத்தில் இடம்

சினிமா என்பது மக்களின் இயல்பு வாழ்க்கையை பலநேரத்தில் பிரதிப்பலிக்கிறது. எடுத்துக்காட்டாக, மெட்ராஸ் 2 பாண்டிச்சேரி, 12பி மற்றும் பார்த்தேன் ரசித்தேன் போன்ற திரைபடங்களில் பேருத்தின் முக்கியத்துவத்தை காட்டப்படுகிறது (இந்த 3 திரைபடங்களும் சென்னை பேருத்தினை மையப்படுத்தியது). அன்றைய காலகட்டத்தில் பேருந்துப் பயணம் என்பது இன்பமாக இருந்தது. காரணம் பேருந்தில் பயணம் செய்வேர் எண்ணிக்கை குறைவு மற்றும் ஒட்டுனர், நடத்துனரின் பண்பு மதிக்கத்தக்கதாக இருந்தது. ஆனால் இன்றைய கால்கட்டத்தில் அதுவும் குறிப்பாக சென்னை மாநகரை எடுத்துக்கொண்டால், பேருந்துப் பயணம் என்பது நரகத்திற்கு சென்று வந்து உள்ளதாகவே கருதபடுகிறது. ஏன்! அவர்களுக்கு எமன் கூட சென்னை பேருந்துப் பயணித்தை கருத்தில் கொண்டு "சொர்க்கத்தில் இடம்" அளிக்க வாய்ப்புண்டு.

சென்னை தமிழகத்தின் தலைநகரமாக இருந்தபோதிலும் ஒட்டுனர், நடத்துனரின் பண்பு மிகவும் கண்டிக்கதக்கதாக உள்ளது. ஆனால் மற்ற மாநிலத்தை எடுத்துக்கொண்டால், இந்த அளவு மோசமானதாக இருப்பதில்லை. ஏன்? தமிழ்நாட்டிலேயே மற்ற மாநகரத்தை எடுத்து கொண்டால் (மதுரை, திருச்சி, சேலம், கோவை, நெல்லை) இந்த அளவு கேவலமாக் இருப்பதில்லை. மக்கள் செலுத்தும் வரிபணத்தை ஊதியமாக பெற்று கொள்ளும் அவர்கள், மக்களை சிறிதளவு கூட மதிப்பதில்லை. சொல்லபோனால் தீபாவளி ஊக்கத்தொகை முதலில் பெற்று கொள்ளுபவர்கள் அவர்களே. சென்னை போக்குவரத்துகழகம் நல்லமுறையில் இயங்க, ஒட்டுனர், நடத்துனரின் கையில் மட்டுமே உள்ளது. அவர்கள் அரசு ஊதியம் வாங்கும் வரை அவர்களை கட்டுபடுத்தவே முடியாது என்பது என் கருத்து. நல்ல முறையில் இத்துறையை இயக்க உங்களின் கருத்து?

1 comment:

BadhriNath said...

more bus freuency,
take offf political party specific unions,
take off the khakhi uniform and design a better friendly material dress.