Monday, January 04, 2010

காற்றில் மிதந்த படி - சிறுகதை

கணேஷ், குமரன் இருவரும் நெருங்கிய நண்பர்கள். எதிர் எதிர் வீடு, ஒரே கல்லுரி மற்றும் ஒரே வகுப்பு என்று இருந்ததால் இருவருக்கும் நெருக்கம் அதிகம். குமரனின் அம்மா அவனை நன்றாக கவனித்துக் கொண்டாலும், கணேஷ் உடன் வருவதை கண்டால் அவனுக்கு திட்டு விழும். காரணம் குமரனுக்கு பல விஷயங்களை சொல்லி கொடுத்தது தான்... இருந்தாலும் அவன் கண்டு கொள்வது இல்லை.

ஒரு நாள் இரவு மணி அளவில் இருவரும் குமரனின் வீட்டிற்கு குடித்து விட்டு பூனை போல் படி ஏறி வந்து கொண்டு இருந்தனர். கதவு திறந்து இருந்தது. அம்மாவின் கண்ணுக்கு புலபடாமல் செல்ல வேண்டும் என்று நினைத்து மெதுவாக குமரனின் அறைக்கு சென்றனர். ஆனால் அவர்களின் கெட்ட காலம் அம்மா அவர்களின் முன்னே நடந்து போக, அவர்களுக்கு வியர்த்து விட்டது....ஆனால் அவள் கண்டு கொள்ளவும் இல்லை, திட்டவும் இல்லை...அவர்கள் இருவருக்கும் ஒரே ஆச்சிரியம். இருவரும் அவர்களது அறைக்கு சென்று துணி மாற்றும் போது  யாரோ கதவு தட்டும் சத்தம் கேட்டது. யாரன்று பார்க்க அவர்கள் அந்த அறையின் ஜன்னல் வழியே பார்க்கும் போது குமரனின் அம்மா கதவை திறந்தாள்.

இரண்டு காவல் துறையினர் வாயிற்படியில்

காவல்துறையினர் சொன்ன வர்ர்த்தையைக் கேட்டு குமரனின் அம்மா தலையிற் அடித்தவாறு அழத் தொடங்கினர்.

குடிப்போதையில் வண்டியை ஒட்டி லாரியில் அடிப்பட்டு இறந்து போன குமரனின் சடலத்தை குமரனின் அறையின் முன்னால் காவல் துறையினர் வைக்க...

நண்பர்கள் இருவரும் தங்களது முகத்தை நேர் எதிரே பார்த்து அழத் தொடங்கிய போது அவர்கள் காற்றில் மிதந்த படி...

No comments: