Wednesday, January 20, 2010

3 இடியட்ஸ்: திரைவிமர்சனம்


இந்தி திரைப்படங்கள் மீது நம்பிக்கை குறைந்து கொண்டு இருக்கும் வேளையில், இன்னும் இந்தி திரைப்படங்கள் உயிரோடு தான் இருக்கிறது  என்று கூறும் வகையில், உள்நாட்டில் மட்டும் அல்லாமல், வெளிநாட்டு மக்களும் ரசிக்கும் விதத்திலும், இந்தியாவின் பள்ளி/கல்லூரியின் பயிற்விக்கும்/பயலும் விதத்தில் உள்ள குறைகளை நெற்றியில் அடித்தார் போல் கூறி, எவ்வாறு மாற்ற படலாம் என்று கூறி ஒரு வழியைக் காட்டி இருக்கும் படம்/பாடம்.



கதை அனைவரும் அறிந்ததே. கல்லூரி வாழ்க்கை, பல்வேறு வகையான் மாணவர்கள், நண்பர்கள், நண்பனின் தியாகம், காதல், மற்றும் இந்தியாவின் கல்வி முறை என்ன என்று வழக்கமாக இருந்தாலும் அதை கொடுத்த விதம்...திரைப்படம் முடிந்தாலும், மனதை விட்டு அகலாமல் நிற்கிறது...மற்ற திரை உலகத்தினர் கற்று கொள்ள வேண்டிய விஷயம் பல உண்டு..

சின்ன சின்ன விஷயங்களை கண்டுபிடிப்பதகட்டும், மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதும், பிரசவம் செய்து குழந்தை வெளியில் எடுப்பது ஆகட்டும், நண்பனின் தந்தையை மருத்துவ மனைக்கு கொண்டு செல்வது என்று பல வகையான காட்சிகளில் நம்மை காட்டி போடுகின்றனர். 



அமீர்கான், மாதவன், ஷர்மான், பொமன் இரானி, கரீனா கபூர், மற்றும் ஓமி வைத்யா என்று நடிகர்கள் பட்டாளம். ஒருவரின் நடிப்பை உயர்த்தி, மற்றொருவரின் நடிப்பை குறைக்க விரும்பவில்லை. அனைவரின் நடிப்பும் கச்சிதம், மனதில் நிற்கும் பாத்திரங்கள்... (சில மாஸ் நடிகர்கள் /இயக்குனர்கள் இந்த படத்தின் நடிகனை /இயக்குனரை பார்த்து பிச்சை எடுக்க வேண்டும்... பஞ்ச் வசனங்கள் கிடையாது..பறந்து பறந்து போடுகின்ற சண்டை கிடையாது.. 500 நடன மக்களுடன் ஒரு குத்து பாட்டு அல்லது அறிமுக பாட்டு அல்லது அயல் நாட்டு சாலைகளில் காதல் பாட்டு  கிடையாது)



இதை தவிர முக்கியமான மூவர் உண்டு... இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி, வசனகர்த்தா அபிஷித் ஜோஷி, கதை ஆசிரியர் சேடன் பாகத்.. இந்த மூவரில் ஒருவர் குறைந்து இருந்தாலும், படத்தின் ஜீவன் அம்சம் இல்லாமல் போய் இருக்கும்.  பாடல் சொல்லும் அளவுக்கு இல்லை என்றாலும், வந்தது போவது தெரியவில்லை.

படத்தை பற்றி ஒரு புத்தகம் அளவுக்கு எழுத வேண்டும் என்ற ஆசை தான்.. ஆனால் அதை விட மனதிற்கு ஒரு சந்தோசம் கண்டிப்பாக இப்படத்தை பார்க்கும் போது கிடைக்கும்.  தமிழில் இதை எடுக்கிறேன் என்ற பெயரில் கெடுக்காமல் இருந்தால் சரி. இந்த படத்தை தமிழில் அப்படியே கொடுக்க வேண்டும். அப்போது தான் அதனுடைய அம்சம் கிடைக்கும்.. இந்த படத்தை பார்த்து ஆவது (பதவில் இருப்பவர்கள்), இந்தியாவின் கல்வி கற்று தரும் அமைப்பில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்ததும்..



குறிப்பு: இந்த படம் முடிந்து வெளி வரும் போது, எதோ ஒரு மன ஓரத்தில் தமிழ் படமான "பசங்க" நியாபகம் வருகிறது...

No comments: