Thursday, January 14, 2010

மதுரை <--> சென்னை பயணம் - ஒரு அலசல்


சென்னைக்கு வந்த புதிதில் மதுரைக்கு அரசு பேருந்து மூலமாக சென்றால் குறைந்தது 13 முதல் 15 மணி நேரம் ஆகும். இரயிலில் சென்றால் மட்டும் தான் 9 மணி நேரத்தில் சென்று அடைய முடியும்.. அந்த லட்சணத்தில் ரோடுகள் இருந்தது.. ஆனால் இன்று நிலைமையோ வேறு...சென்னையில் இருந்து புறப்பட்டால் முதலில் வருவது பேருந்து தான்.. நம்ம தான் அடிக்கடி மதுரைக்கு வர்றோமே.. எது சூப்பர்ன்னு பார்த்த...

மதுரை <--> சென்னை - அரசு பேருந்து – 9 மணி நேரம்..
மதுரை <--> சென்னை - தனியார் பேருந்து – 8 மணி நேரம்..
சென்னை --> திருநெல்வேலி அல்லது தூத்துக்குடி அல்லது கன்னியாக்குமரி  அல்லது தென்காசி (வழி மதுரை) - தனியார் பேருந்து 6.45 மணி நேரம்...
சென்னை --> மதுரை - இரயில் 9:30 மணி நேரம்...

இராமேஸ்வரம் - சென்னை - இரயில் (வழி மானமதுரை) -
                                    
மதுரை - மானமதுரை 1 மணி நேரம்
                                    
மானமதுரை - சென்னை – 10:30 மணி நேரம்
மதுரை --> சென்னை - இரயில் 9 மணி நேரம்...

மேற்ப்படி பார்த்தல் இரயில் பயணம் மட்டுமே அதிக நேரம் எடுத்துக் கொள்வதாக தெரிகிறது...இன்று மட்டும் பாண்டியன் இரயில் மதுரைக்கு 10 மணி நேரத்தில் வந்து உள்ளது. பேருந்துகள் திடீர் என்று எப்படி இவ்வளவு வேகமாக வந்து சேருகிறது என்று பார்த்தல், தங்க நாற்சாலை  காரணம்.. ஏதாவது காரணத்தை சொல்லி இரயில்வே நிர்வாகம் மக்களை ஏமாற்றுகிறது. இருந்தாலும் மக்கள் இரயில் பயணத்தை நாடுவது பயண சீட்டின் செலவு தான் காரணம்... இரயிலில் மதுரைக்கு ரூ. 232 மட்டுமே.. ஆனால் பேருந்தில் நடந்துனர் சொல்வது தான் கட்டணம்.. உதாரணமாக நேற்று இரவு சென்னையில் இருந்து மதுரைக்கு தனியார் பேருந்தின் கட்டணம் ரூ. 1200  (கேட்டால் பொங்கல் என்று காரணம் சொல்வார்கள்).. மற்ற நேரத்தில் குறைந்தது ரூ.275 முதல் அதிக பட்சமாக ரூ.650. அரசு என்ன தான் புது புது சட்டம் போட்டாலும் அது எல்லாம் இங்கு எடுபடாது...  இதற்கு தான் பொங்கல், தீபாவளி என்றாலே பயண சீட்டு எடுக்க அதிகாலை 3 மணிக்கே சென்று பதிவு அலுவகத்தில் அமர்ந்து கொள்வது...

 
பாண்டியன் இரயில் சில காலத்திற்கு முன் வி.ஐ.பி வண்டி.. பாண்டியன் வருவது என்றால் அனைத்து இரயில்களும் வழி விட்டு விட்டு, இதற்கு பிறகு தான் செல்லும்.. ஆனால் இன்றோ பாண்டியனின் மதிப்பே போய்விட்டது.. சென்னை - மதுரை மட்டும் குறைந்தது 9:30 மணி நேரம் எடுத்துக் கொள்கிறது... காரணம் திருநெல்வேலி/தூத்துக்குடி/கன்னியாக்குமரி/தென்காசி என்று அனைத்து தென் மாவட்டங்களுக்கும் செல்ல கூடிய வண்டிகளை முன்னால் அனுப்பிவைத்து விட்டு தான் இந்த வண்டி புறப்படுகிறது. இதன் பின்னால் எந்த வண்டியும் இல்லாததால் மெதுவாக வர தொடக்கி விட்டது. என்ன தான் இரயில் மெதுவாக வந்தாலும் பயண சீட்டின் காரணமாக மக்கள் விரும்புவது இரயில் மட்டுமே..என்ன தான் மக்களுக்கு தார் ரோடு/தங்க நாற்சாலை போட்டு கொடுத்தாலும், பயண சீட்டு பேருந்துகளில் குறைக்காமல் இருந்தால் கஷ்டம் தான்...

No comments: