Monday, October 27, 2008

எப்போது மாறும்

தேதி: 24-அக்டோபர்- 2008

இடம்: சென்னை

நேரம்: மதியம் 2:45 மணி முதல் மாலை 7:00 மணி வரை

இந்நேரத்தில்,
* ஈழத் தமிழர்களுக்காக தமிழ்நாடு முதல்வர் தலைமையில் மனித சங்கிலி
* வடகிழக்கு பருவமழை
* சென்னை மக்கள்: தீபாவளி வியாபாரம்

இக்காரணங்களால் சென்னை கிட்டதட்ட 5 மணி நேரம் முதல் 7 மணி நேரம் வரை ஸ்தம்பித்தது. இத்தேதி வெள்ளிகிழமை ஆனதால், தீபாவளிக்காக வெளியூர் செல்ல வேண்டிய பலாயிரம் மக்கள் அவதிப்பட்டதையும், வாகனங்களை ஓட்டி வந்த பெண்கள் பட்ட கஷ்டங்களையும், பேருந்தில் இருந்த பயணிகள் 6 முதல் 8 கி.மீ வரை நடந்து சென்ற கொடுமையும், மருத்துவமனை வாகனம் 30 நிமிடம் வெளியேற முடியாமல் சிக்ககொண்டதையும் வார்த்தைகளால் சொல்ல முடியாது. இதிலும் ஒரு 4 சக்கர சொகுசு வாகனத்தில் ஒருவர் மடிக்கணினியுடன் வலைதளத்தில் இருந்ததையும் பார்க்க முடிந்தது. முதல்வன் திரைப்படத்தில் நாம் பார்த்த திரைக்காட்சிகளை இங்கு நேரில் பார்த்த போது எனது இதயத்தில் இருந்து ரத்தம் வடிந்தது. இதற்கு முக்கியக் காரணமாக நான் கருதுவது, மனித சங்கிலி போரட்டம் தான்.

ஈழத்தமிழர்களுக்காக நடத்தப்பட்ட போரட்டத்தால், தமிழக மக்கள் அடைந்த துன்பத்தை வார்த்தைகளால் சொல்ல இயலாது. இதில் மனித சங்கிலி போரட்டம் வெற்றி என்ற பெருமை வேற இதற்கு. நான் எனது அலுவகத்தில் இருந்து வெளியில் நடந்து கொண்டிருப்பத்தை தெரியால் மாலை 5 மணிக்கு வீட்டிற்கு செல்ல தொடங்கும் போது... பட்ட கஷ்டம் கொஞ்சம் அல்ல. 11 கி.மீ தூரம் 2 மணி நேரத்தில் கடந்து(அண்ணா பல்கலைக்கழத்தின் நடைபாதையில் வண்டியை ஏற்றி, 2 முறை 4 சக்கர வாகனத்தை இடித்துவிட்டு, வாசவு சொற்களை கேட்டு கொண்டு), கடைசியாக எனது தொடர்வண்டியை அடைந்தேன். இதே போல் என்னுடன் வந்த நண்பர்கள் பட்ட கஷ்டம் கொஞ்சம் அல்ல. பல மக்கள் தொடர்வண்டியை பிடிக்க முடியாமல் விட்டுவிட்டனர் (அதில் என் நண்பனும் ஒருவன்). அரசாங்கம் இது போன்ற போராட்டங்களை அறிவிக்கப்போவதற்கு முன்னால் நடைமுறை சிக்கலை ஆராய வேண்டும். இல்லையென்றால் இக்கஷ்டம் நமக்கு தொடரும்.

2 comments:

BadhriNath said...

veliye payira menja enna panradhu....

if govt organises bandh, strikes, protests it is shameful and disgusting....

Ramkumar said...

முற்றிலும் சரி,
அவர்கள் செய்த மனித சங்கிலியால் இலங்கை தமிழர்களுக்கு நல்லது நேர்ததோ இல்லையோ, சென்னை தமிழர்கள் பட்ட அவதி சொல்லி மாளாது

எனது வீட்டிலிருந்து சைதை ரயில் நிலையத்திற்கு நடந்து சென்று பாண்டியன் எக்ஸ்பிரஸ்-ஐ பிடித்த எனக்கு புது அனுபவமாகவே இருந்தது.