இந்த படத்தை பார்க்க ஆவலை தூண்டியதே இரண்டு விஷயங்கள். ஒன்று கதாநாயகி திரிஷா மற்றொன்று இசைப்புயல். இரண்டு விஷயங்களும் என்னை ஏமாற்றவில்லை என்று தான் கூற வேண்டும். திரிஷாவை அவ்வளவு அழகாக காட்டி இருக்கிறார்கள்.. அதே போல் ஒரு நல்ல நடிகனை திரைப்பட உலகத்திற்கு அறிமுகபடுத்தி உள்ளது (தமிழ் படம் பாத்துட்டறு என்னவோ :)).
பொதுவாக கவுதம் மேனனின் கதாநாயர்கள் என்ன செய்வார்கள்? ஒரு பெண்ணை பார்த்ததும் "what a woman ?" என்று காதலில் விழுந்து துள்ளி குதிப்பார்கள். பக்கத்தில் இருக்கும் சுவர், கதவு எதிலாவது சாய்ந்து கொள்வார்கள். நெஞ்சில் குத்தி கொள்வார்கள். கவிதையாய் காதலை சொல்வார்கள். 'காதலிக்காக சாகலாம்' என்பார்கள். காதலி நினைவில் கண்ணீர் விட்டு கரைவார்கள். Foul language பேசுவார்கள்.
கதாநாயகி, தன்னிம்பிக்கையும் தெளிவுமாய் இருப்பாள். தனக்கு என்ன வேண்டும், எது பிடிக்கும் என்பதில் உறுதியாக இருப்பாள். இதிலும் அச்சு அசலாக தன்னுடைய hero/heroin பார்முலாவை மாற்ற வில்லை அவர். சொந்த கதை, சொந்த கதை என்று ஒரே மாதிரி பீலிங் விடுவதை கொஞ்சம் குறைங்க கவுதம்!
மின்னலே படத்தில், ரீமா சென் மாதவனை பார்த்து, "நீ அமெரிக்காவில் இருந்து அடுத்த வாரம் தானே வருவதாக சொன்னாய்? இப்போ எப்டி வந்த?" என்பார். அதற்கு மாதவன், "flight காலியா இருந்துச்சு, அதன் ஏறி வந்துட்டேன்" என்று சொல்வார். இந்த படத்திலும் இந்த மாதிரி மெல்லிய நகைச்சுவை வசனங்கள் உண்டு. -"அவனவன் காதலுக்காக America போறான்...நான் ஆலப்புழா போக மாட்டேனா??" என்று சிம்பு சொல்றார். "நம்ம friends ஆக இருக்கலாம்" என்று த்ரிஷா சொன்னதும், பின்னணியில் ரஹ்மான் 'முஸ்தபா முஸ்தபா' ட்யூன் போடறார்.

படத்தின் இன்னொரு கதாநாயகன் ஒளிப்பதிவாளர் மனோஜ் (ஈரம் படத்தின் ஒளிப்பதிவாளர்)... படத்தில் ஒரு இடத்தில் கூட வறட்சியான காட்சிகளை காண முடியாது. அனைத்து இடங்களும் கண்ணுக்கு குளிர்ச்சியான நிறங்கள் மற்றும் அமைப்புகள்.... பாரட்டபடவேண்டியவர். படத்தின் நிறைய காட்சிகள் கோவாவிலும் கேரளாவிலும் எடுக்க பட்டு இருப்பதால், குளிர்ச்சியாக இருக்கிறது.
1 comment:
இந்த படம் மட்டுமல்ல நிர்மல், கௌதமின் அனைத்து படங்களுமே A சென்டர் படங்களே.
Post a Comment