Tuesday, March 02, 2010

தாம்பரம்

2004 ஆண்டு மே மாதம் நான் சென்னைக்கு வந்து முதலில் சென்றது எழும்பூர். அங்கிருந்து மாம்பலம், வில்லிவாக்கம், வடபழனி என்று பல இடங்கள்... நான் பேருந்து ஏறும் போது, தாம்பரம் பேருந்து ஏறுபவர்களை பார்த்து பாவபட்டதுண்டு. அதே போல் அவர்கள் பயண நேரத்தை பார்த்து பரிதாப பட்டதுண்டு.   என்னுடன் தங்கி இருந்தவர்கள், நண்பர்கள் அனைவரும் தாம்பரம் ஒரு கிராமம் என்றும், அது சென்னையில் இல்லை என்றும், ரயில்வே நிலையமே அதற்கு செங்கல்பட்டை போல் தனியாக உள்ளது என்றும் பல காரணங்கள் கூறுவார்.  2006 வரை அந்த பகுதி ஒரு கிராமம் தான்....

ஆனால் இன்றைய நிலைமை...

தாம்பரம் தான் சென்னையின் வாயிற்படி என்று சொல்ல ஆரம்பித்து விட்டனர்... அது மட்டும் இல்லாமல் தாம்பரம் தான் மைய பகுதி என்றும் கூறுகின்றனர். அதற்கான காரணங்களை சரியாக எடுத்து வைக்கின்றனர்.
  • தாம்பரத்தில் இருந்து சென்னைக்கு பேருந்து மற்றும் உள்ளூர் ரயில் வசதி.. 
  • காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டுக்கு சென்னையில் இருந்து செல்ல கஷ்டம்.. ஆனால் தாம்பரத்தில் இருந்து பக்கம்..
  • தாம்பரத்தில் இருந்து மென்பொருள் அலுவலகங்கள் அமைந்து உள்ள வேளசேரி மற்றும் சோழிங்கநல்லூர் பகுதிக்கு செல்லும் பாதை..
  • சென்னையில் நிதி நகரம் பெரும்பாக்கம் என்ற பகுதியில் அமைகிறது (இதுவும் தாம்பரம் அருகில் தான் உள்ளது).


இதை தவிர இரண்டு முக்கியமான காரணங்களை எடுத்து விடுகின்றனர்.

  1. தாம்பரம் ஒரு கார்ப்பிரேசன் ஆக போகிறது.
  2. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து  தென்மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் மட்டும், வேளசேரி ரயில் நிலையம் அருகில் அமைய இருக்கும் புது பேருந்து நிலையத்திற்கு மாற்றப்படுகிறது என்றும் (பேருந்துகள் பல்லாவரம் ரிங் ரோடு வழியாக தாம்பரத்தை பிடிக்கும்) என்றும் கூறுகின்றனர்...


இந்த இரண்டு விஷயத்தில் இரண்டாவது மட்டும் நம்பும் படியாக இல்லை..

இப்படியே செங்கல்பட்டு வரையில் உள்ள அனைத்து ஏரியாக்களையும் எதாவது ஒரு வளர்ச்சி பணி சொல்லி, அந்த பகுதிகளை வளர்த்து விடுகின்றனர்..ஆக மொத்தத்தில் சென்னை மற்றும் அதை ஒட்டிய பகுதிகள் நன்றாக வளர்ச்சி அடைகின்றன.

மற்ற தமிழக பகுதிகளுக்கு அரசு தருவது திருநெல்வேலி அல்வா தான். சென்னை மற்றும் தாம்பரம் மட்டுமே தமிழகம் இல்லை என்று அரசாங்கம் உணரும் வேளையில் மட்டும் தான் தென்தமிழக மக்களுக்கு நிஜ வெளிச்சம்

No comments: