Friday, March 20, 2009

வந்தார்கள் வென்றார்கள்

நமது நாட்டில் இப்போது உள்ள அரசியல், வாழ்க்கை, தீவிரவாதம், போர் முறைகள் ஆகியவற்றை பார்த்து சிலசமயம் வியப்படைகிறோம் மற்றும் பல நேரத்தில் வெறுப்பு அடைகிறோம். நாம் வாழுகின்ற வாழ்க்கை முறை, பண்பாடு, கலைநயம், ஆன்மிகம் ஆகியவை நான் தெரிந்து கொண்டு இருந்தாலும், பழைய மாமன்னர்கள் திரைக்காவியத்தை பார்க்கும் போது முன்னோர்களின் வாழ்க்கை முறையை அறிந்து கொள்ள முடியும்.

வருங்கால மன்னர்கள் என்று அழைக்கப்படும் இளைய சமுதாயம் மேற்கிந்திய நாடுகளின் வாழ்க்கை முறையை எடுத்து அதில் முழ்கி கொண்டு இருக்கின்றனர். அதில் நானும் ஒருவன் என்பதில் ஐயம் இல்லை. ஆனால் முன்னோர்கள் அப்படி என்ன தான் சொல்லி இருக்கின்றனர் என்பதை பார்க்கவும், நான் ரசித்த கண்ணதாசன் வரிகளின் ( "முறையாக வாழ்வோர்க்கு எது நாகரிகம், முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரிகம்") படியும் ஆராய தொடங்கிய காலம் நாம் அனைவரும் அறிந்ததே. ஆம் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படித்த மாமன்னர்கள் காலம். ஆரம்பிக்கும் போதே ஏன் இந்த வேண்டாத வேலை என்ற வசவு சொல் பல பேரிடம் இருந்து பெற்று கொண்டேன்.

சில எழுத்தாளர்களின் படைப்புகளை பார்க்கும் போது மாமன்னர்களின் ஆண்ட ஆண்டு பற்றியும், அதற்கு மேல் அவர்கள் செய்த நல் காரியங்கள் பற்றியும் தான் இருந்தன. கடைசியா நண்பர்கள் வாயிலாக "வந்தார்கள் வென்றார்கள்" என்ற புத்தகத்தை அறிந்து ஆராய தொடங்கினேன். நான் தேடிய அனைத்து விஷயங்களும் அதில் விரிவாக தெளிவாக கூறப்பட்டு உள்ளன. இப்புத்தகத்தை எழுதிய எழுத்தாளர் திரு. மதன் அவர்களுக்கு என் பாராட்டுக்கள். கி.பி. 1398 முதல் கி.பி.1858 வரை இந்த இடைப்பட்ட காலத்தில் இருந்த தைமூர் முதல் மொகலாய கடைசி சக்கரவர்த்தி ஆன பகதூர்ஷா வரை அலசி ஆராய்ந்து ஆச்சிரியத்து, பிரமித்து போனேன். பேரரசர்கள் ஆட்சியின் போது போருக்காக கொல்லப்பட்ட லட்சக்கணக்கான அப்பாவி பொது மக்கள், கலைக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம், புரட்சிகளை அடக்கிய விதம், சட்டத்திட்டங்கள் என பார்க்கும் போது மலைக்க வைக்கிறது. இந்தியா மண்ணில் பிறப்பு இல்லா மன்னர்கள் ஆண்டு இருந்தாலும், அவர்கள் ஆட்சி செய்த விதம், மலர்ந்த முகத்துடன் சாதாரண சாப்பாட்டை எப்படி விருந்தாக மாற்றுகிறதோ அது போல, ஆட்சியை பொற்கால ஆட்சியாக மாற்றியது.

ஆனால் தற்போது நடை பெறுகின்ற அரசியலை பார்த்தால் நான் என்னவென்று சொல்ல.

நேரம் இருந்தால் கண்டிப்பாக அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம்.

2 comments:

Anonymous said...

VIkram Prasanna says:
HI Nirmal,
I have read that book ( that too I read in Tamil)3 time back to back in day ..Such a nice book .

BadhriNath said...

Have read it some 7 years back i guess.. nice book