Saturday, March 28, 2009

என்னவென்று சொல்ல

சென்றவார சனிக்கிழமை, வீட்டில் இருந்து என்ன செய்ய போகிறோம் என்று நினைத்து எனது பழைய அலுவக நண்பர்களை பார்க்க வடபழனிக்கு சென்றேன். நான் சென்ற நேரம் மதிய வேளை என்பதால் என் நண்பர் உடன் சாப்பிட வசந்தபவன் உணவுவிடுதிக்கு சென்றோம். நான் அந்த பழைய அலுவகத்தில் வேலை சேரும் போது ஒரு அளவு சாப்பாட்டின் விலை ரூ. 24. உணவு சொல்லும்படி இல்லை என்றாலும், வேறு வழி இல்லாமல் உண்ண வேண்டிய சூழ்நிலை. இரண்டு வருடத்தில் ரூ.10 வரை கூடியது. ஆனால் அன்று உணவுக்கான விலையைக் கேட்டால் ரூ.45 என்று அவர்கள் சென்ன போது சாப்பாடு சாப்பிடும் மனம் போய் விட்டது. இதற்க்கான காரணத்தை ஆராய்ந்து பார்த்தால், 18 முதல் 20 ரூபாய்க்கு விற்ற கிலோ அரிசி இன்று 40 ரூபாயை நெருங்கிக்கொண்டிருக்கிறது. காரணத்தைப் பார்த்தால் பணவீக்கம்.

சென்ற வார மத்திய அரசாங்கத்தின் ஆய்வுப்படி பணவீக்கம் 0.44 தான். இது வரை பணவீக்கம் 1க்கு கீழே சென்றது இல்லை என்று கேள்விப் பட்டு உள்ளேன். சுருக்கமா சொல்வதென்றால் இந்திய வரலாற்றிலேயே இன்றுவரை இல்லாத புள்ளி அளவு.

இத்தனைக்கும் உணவின் விலை ரூ.24 இருந்த போது பணவீக்கம் 3.xx அல்லது 4.xx. ஆனால் பணவீக்கம் 1க்கு கீழே இருந்தும் ஏன் இந்த அதிக விலை என்று புரியவில்லை.

இதை விட சென்னை எழும்பூர் இரயில் நிலையத்தில் அரசால் நடத்தப்படும் உணவகத்தில் ஒரு (மட்டமான) தோசையின் விலை ரூ 6. ஆனால் இன்று அதே தோசையின் விலை ரூ 8. இந்த விலை ஏற்றத்திற்க்கான கரணம் தெரியவில்லை.

இந்த விலை ஏற்றத்தை குறைக்க மத்திய அரசு பல லட்சம் கோடிகளை வெளியில் விடுகிறது. இதை தவிர பாரத ரிசர்வ் வங்கி எடுத்த பல நடவடிக்கைகள் மூலம் பணவீக்கம் மறைந்து (புள்ளிகளின் அளவிலேயே) இன்று பணவாட்டத்தை நோக்கி போகும் சூழ்நிலை உருவாகி உள்ளது. அதாவது உற்பத்தி இருக்கும் அளவு தேவைப்பாடு இல்லாமல் இருக்கும் சூழ்நிலை. அவ்வாறு நடந்தால் அந்த பொருட்களின் விலை சரியும். ஆனால் நம்னாட்டிலோ பண முதலைகள் அனைவரும் உற்பத்தி குறைப்பு என்ற அஸ்திரத்தை கையில் எடுத்து எந்த ஒரு பொருட்களின் விலையும் குறையாமல் பார்த்து வருகின்றனர்.

தீவிரவாதிகளின் கொலை விளையாட்டு, வேலை இழப்பு, சம்பள குறைப்பு, ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி, அளவுக்கு அதிகமான இலவசங்கள் என்று சீரழிந்து வரும் நம் நாட்டில் அணு ஆயுத ஒப்பந்தம், 20க்கு 20 மட்டைப் பந்து விளையாட்டு என்று மிளிர்கிறது இந்தியா, எரிகிறது ஏழைகளின் வயிர்.

இத்தனைக்கும் நடுவே தேர்தல் வந்து விட்டது.... இன்றைய வார பணவீக்கம் 0.27 இந்நிலையில் மத்திய அரசு பணவீக்கம் நாங்கள் கட்டுப்படுத்தி விட்டோம் என்று கூறி ஏழை மக்களின் வயிறு எரிந்து கொண்டு இருக்கும் நேரத்தில் வாக்கு கேட்டு வருகின்றனர்.

இந்த நிலை தொடர்ந்தால் இந்தியா, அடுத்த ஆப்கன் ஆகும் நிலை வெகு தொலைவில் இல்லை...

2 comments:

Unknown said...

Good Nirmal... I also felt the same till 2 weeks back. After that I saw one article regarding the inflation. That is, In India there is another factor i.e., food inflation. Still food inflation is high as nearly 8%. It is not related to India finance inflation as you mentioned in the blog. And I read in the article that there is no phenomena like decreasing the food price in India ever before and after also. So don’t dream to decrease the values in India.

BadhriNath said...

when politicians come asking for vote, they dole out 100s and people like beggars get it and vote them back to swindle. stupidity. than thalaila thaane manna vaari potukara jananga....

enna solla